Posts Tagged ‘கணவன்’

கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை!

மே 25, 2011

கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை!

சோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].

கனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.


ஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].

மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].

சோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா? கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு  ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.

ஜாமின் எப்போது? நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].

 இந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.

சென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].

கனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.


[2]  Karunanidhi is said to have plainly put it across that he feels that the Congress has not done enough for either the DMK or his daughter.

http://ibnlive.in.com/news/mk-makes-no-attempt-to-hide-displeasure/154115-60-118.html

[10] “If you have a daughter and if she is punished for no mistake, how will you feel? That’s the way I feel,” he told reporters, a tinge of sadness evident on his face.