Posts Tagged ‘நோயாளிகளிடம் லஞ்சம்’

தினம்-தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (3)

மே 17, 2023

தினம்தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (3)

17-04-2023 – வீடு கட்ட அனுமதி: கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகதெரிகிதறது[1] . இதனால் மன உளைச்சலடைந்த பரணி கடலூர் லஞ்ச ஓழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்[2]. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை பரணியிடம் வழங்கி அதிகாரிளிடம் வழங்க கூறினார்கள். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த பரணி, ஊழியர் ரகோத்தமனிடம் பணத்தை கொடுத்தார். இதனை வாங்க மறுத்த ஊழியர், அருகில் உள்ள தனியார் கட்டுமான அலுவலக உரிமையாளரை பார்த்து அவரிடம் பணம் கொடுக்க கூறினார். தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்திடம் சென்ற பரணி, ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் ரகோத்தமனையும் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல துறைகளில் லஞ்சம் இருக்கிறது: இப்படியாக, ஒவ்வொரு நாளும் தாலுகா அலுவலகம், வட்டாட்சியாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ, பதிவாளர், மின்சாரம், கார்பொரேஷன், குடிநீர்-கழிவுநீர் துறை, ரேஷன் கார்ட், திருமணப் பதிவு என்று பல அலுவலகங்களில் தினம்-தினம் லஞ்சம் கேட்டு வாங்கப் படுகிறது. அரசு மருத்துவ மனை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியவையும் விதிவிலக்கல்ல. லஞ்சம் நிருவனப்படுத்தப் பட்ட நிலையில் செயல்பட்டு வருகிறது. இவையெல்லாம் தினமும் கோடிக் கணக்கில் பொது மக்கள் வந்து செல்லும் இடங்கள். இவற்றைத் தவிர பற்பல துறைகள், லுவலகங்கள் எல்லாம் இருக்கின்றன. அங்கெல்லாமும் லஞ்சம் சகஜமாக இருக்கிறது. லட்சத்தில் ஒருவர் யோக்கியவானாக இருக்கிறார். மற்றபடி 90% லஞ்சப் பேர்வழிகளாகத்தான் இருக்கிறார்கள். பல இடங்களில், மூஞ்சிகளைப் பார்த்தாலே, காசு கொடுக்காமல், இந்த ஆளிடம் எதுவும் நடக்காது எனூ தெரிந்து கொள்ளலாம். பிறகு அவர்கள் பேசும் பேச்சு, கேட்கு கேள்விகள் முதலியவற்றை வைத்தும் கண்டு கொள்ளலாம். ஏஜென்டுகள், அசிஸ்டென்டுகள் போன்றவர்களும் விவரங்களை சொல்வர். ஆக, தினம்-தினம் இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன.

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே: சமீபத்தில் தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே என்று வெளியிட்டு வருகிறது[3].

  • வரைபட அனுமதி (ச.அடி) – 60-100
  • வர்த்தக நிறுவனங்கள் (ச.அடி) – 80
  • அடுக்குமாடி குடியிருப்பு (ச.அடி) – 100
  • நில உபயோகம் வகைமாற்றம் (ஏக்கருக்கு) – 3 – 5 லட்சம் வரை
  • நில அளவை பதிவேடு நகல் பெற – 2,000 – 3,000
  • சர்வேயர் அறிக்கை – 10,000
  • பட்டா பெயர் மாறுதலுக்கு –
    • வி.ஏ.ஓ., அலுவலகம்; 5,000.
    • தாலுகா அலுவலகம்; 5,000-10,000.
  • மாநகராட்சியில் – வரைபட அனுமதி (ச.அடி); 20.
    • வர்த்தக நிறுவனம் (ச.அடி); 35.
  • சொத்து வரி (ச.அடி) – 50
  • சொத்து வரி பெயர் மாற்றம் – 5,000
  • லே-அவுட் அப்ரூவலுக்கு (ஏக்கருக்கு) – 6,00,000
  • குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு – 50,000
  • பிறப்பு, இறப்பு சான்று – 2,000
  • தொழில் உரிமம் – 2,000 – 5,000

இவற்றை மறுத்து எந்த துறை அதிகாரிகளோ, ஊழியர்களோ மறுக்கவில்லை. திரைப் படங்களில் கூட லஞ்சம் வாங்கும் முறைப் பற்றி விளக்கப் பட்டுள்ளது.

  1. சமீபத்தில் தினமலர் “லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே” என்று லஞ்சம் பற்றி தொடர்ச்சியாக விவரங்களை வெளியிட்டு வருகிறது!
  2. இதெல்லாமென்ன பெரிய ரகசியமா, விசயமா, இதையெல்லாம் போட்டு என்னவாகப் போகிறது, கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்குமா?
  3. பேஸ்புக்கில் இருப்பவர்களே கண்டுகொள்வதில்லை, ஏனெனில் அவர்களும் அத்தகைய நிலையில் அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க விடுகிறார்கள்!
  4. அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசமாட்டார்கள், யோக்கியவான்களாக ஜால்றா அடித்து பிழைப்பு நடத்துவர்!  விரும்பத்தான் செய்வார்கள்!
  5. வியாபாரக் கொள்ளை, வணிகத் திருட்டு, வாங்கல்-விற்கல் ஆதாயம், கொடுப்பது-எடுப்பது பலன், லாபம் என்றால் இனிக்கத்தான் செய்யும்.
  6. பரிசு கொடுத்தால், ஊசி போடும் டாக்டர் கூட முன்னுரிமைக் கொடுக்கிறார், காசு கொடுத்தால் அடிபட்டவர்களையும் விடுத்து அடித்தவனை முதலிலேயே அழைக்கிறார்!
  7. பணத்தை வேகமாக, இப்பொழுதே, எங்கு வேண்டுமானாலும், எப்படியாவது, சம்பாதித்து விடவேண்டும் என்கிறவன், எந்த தர்மத்தையும் பார்ப்பதில்லை!
  8. ஆனால் அவன் தான் யோக்கியன் போல கடவுள், தத்துவம், ஆசாரம், புனஸ்காரம், ஒழுக்கம் என்றெல்லாம் பேசுவான்!
  9. ஆக இத்தகைய கூட்டுக் கொள்ளை சித்தாந்தத்தை நியாயப் படுத்தும் போது, அதுவும் அரசியலால் இந்துத்துவம் ஆகிறது! அடுத்தவனும் உபயோகப் படுத்துகிறான்!
  10. “ஜெய் பஜரங்க பலி” கோஷத்தின் பிறழ்சியும் ஊழல்தான், வெற்றி-தோல்விகளை ஆதரிப்பவர் இந்துத்துவ-விரோதிகள் தான்! இந்துவிரோதிகளாகவும் மாறும் பொழுது விபரீதமாகிறது!

உண்மையான இந்து லஞ்சம் வாங்க மாட்டான்: ஆகவே, இந்துக்களுக்கு லஞ்சத்தை, ஊழலை ஒழிக்க வேண்டிய கடமை, தார்மீகம் உள்ளது. நிச்சமாக, ஒரு நல்ல இந்து லஞ்சம் வாங்க மாட்டான். தனது வேலையை, கடமையாக செய்து கொடுப்பான். இன்னும், ஒரு அல்லது பல படிகள் தாண்டியும் உதவி செய்வான். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வான். அத்தகையவன் ஒழுக்கமாக, கண்டிப்பாக இருப்பான். தனது குடும்பத்தவர், உற்றோர் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். “இவன் பிழைக்கத் தெரியாத ஆள்,” என்று ஏளனம் செய்வோரும் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், சமூகத்தில் நிச்சயமாக அவன் தான் யோக்கியன், நியாயவான், தர்மவான், ….இவனைப் போன்றவர்களும் 130 கோடி இந்துக்களில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்துமதம் நிலைத்து வாழ்கிறது. பலகோடி மற்ற இந்துக்களும் பலன் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது, By மாலை மலர், 18 ஏப்ரல் 2023 2:55 PM..

[2] https://www.maalaimalar.com/news/district/cuddalore-municipal-corporation-employee-arrested-for-taking-rs20-thousand-bribe-598217?infinitescroll=1

[3]  தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (24), பதிவு செய்த நாள்: மே 15,2023 10:10

https://m.dinamalar.com/detail.php?id=3321202

தினம்-தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (2)

மே 17, 2023

தினம்தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (2)

வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற லஞ்சம்: வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்[1]. திருச்சி மேல சிந்தாமணியைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் வெங்கடேசன். அவர் கம்பரசம்பேட்டை பகுதியில் பாலு என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்[2]. அந்த வீட்டை கடைகளுக்கு வாடகைக்கு விட வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற உரிய ஆவணங்களுடன் திருச்சி தென்னுார் மின்வாரிய அலுவலகத்தில் வெங்கடேசன் விண்ணப்பித்தார். மூன்று மாதங்களாகியும் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்காததால் வெங்கடேசன் தென்னுார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் 40 என்பவரை அணுகினார். அவர் வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு 15 ஆயிரம் வேண்டும் என வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் நேற்று முன்தினம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதன்படி நேற்று காலை தென்னுார் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற வெங்கடேசன் ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை உதவி செயற்பொறியாளர் ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு சென்ற போலீசாரிடம் ராஜேஷ் கையும் களவுமாக சிக்கினார். இ.பி. காலனியில் உள்ள ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்[3]. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றியவர் குணசேகரன் (56)[4]. காடுபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்துக்கணேஷ். இவர், தனது தாய் பேச்சி பெயரிலுள்ள வீட்டுக்கான மின் இணைப்பை மாற்றம் கோரி 2 மாதத்திற்கு முன்பு குணசேகரனை அணுகினார். இதற்கு அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத முத்துக்கணேசன் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் யோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து குணசேகரனிடம் முத்துக்கணேஷ் கொடுத்தார். அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாரதிபிரியா அடங்கிய போலீஸார் குணசேகரன் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

20-04-2023 மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: வெங்கடேசன் என்பவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். பிறகு, அதை வியாபாரப் பயன்பாட்டிற்கு மாற்ற விஉம்பினார். அதன்படி, வீட்டு பயன்பாட்டிலிருந்து வியாபாரப் பயன்பாட்டிற்கு மாற்ற விண்ணப்பம் கொடுத்தார். ஆனால், மாற்றாமல் மின்வாரிஅத்தார் இழுத்தடித்தனர். ஒரு நிலையில் லஞ்சம் கேட்டதால், வெறுப்படைந்தவர் புகார் கொடுத்தார். வெங்கடேசனின் புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று (20.4.2023) காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம்இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் 15,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்[5]. திருச்சியில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].

விவரங்கள்: திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் வெங்கடேசன் வயது 45. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு குடியிருப்புக்கான மின் வசதியும் (Domestic) பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வியாபார தளங்களுக்கு வாடகைக்கு விட நினைத்து குடியிருப்புக்காகப் பெற்ற மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பேரில் காண்ட்ராக்டர் வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சி தென்னூர் EB அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார். ஆனால் விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17ம் தேதி அன்று காலை சந்தித்தார். அப்போது தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு உதவி பொறியாளர் ராஜேஷ் இருபதாயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் Tariff ஐ change செய்து தருவதாக கூறியுள்ளார். உண்மையில் டேரிஃப் சேஞ்ச் செய்வதற்கு அரசு கட்டணம் ரூபாய் 400 மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

19-04-2023 – பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னதுரை (வயது 70). இவரது வீடு நத்தம் கூட்டுப்பட்டாவில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் அந்த வீட்டை தனது மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்து கொடுத்து அந்த இடத்தையும் வீட்டையும் உட்பிரிவு செய்து தனி பட்டாவாக தனது மகன் லோகநாதன் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது மனு களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் (வயது 33) சென்றது. அவர் சின்னதுரை மனுவை சர்வே துறைக்கு பரிந்துரை செய்து அளவீடு செய்து தனி பட்டாவாக மாற்றம் செய்வதற்கு காலதாமதம் செய்து வந்துள்ளார். இதை அறிந்த சின்னதுரை கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் மனு அனுப்பினால் உடனே நாங்கள் பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடுவோமா என்ன. பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக 20,000 ரூபாய் பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கறாராக பேரம் பேசியுள்ளார்[7]. இதையடுத்து சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்[8].

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தல்: அவரது புகார் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் படி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனை சென்று சந்தித்து அவரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார் சின்னதுரை. கிராம நிர்வாக அலுவலருடன் கிராம உதவியாளர் ஈஸ்வரியும் (வயது 30) இதற்கு உடந்தையாக இருந்து லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் கிராம உதவியாளர் ஈஸ்வரி இருவரும் எண்ணிப் பார்க்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து துறையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வீட்டிலும் நத்தக்காடு கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ‘தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்து தர முறையாக மனு கொடுக்கும் பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் செய்து தராமல், லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை கூட மதிப்பது இல்லை’ என்று ஒரு வழக்கு விசாரணையின் போது வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் பட்டா மாற்றம் செய்ய பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், கிராம உதவியாளர் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] தினமலர், ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 01:56

[2] .https://m.dinamalar.com/detail.php?id=3299807

[3] தமிழ்.இந்து, மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது, என். சன்னாசி, Published : 30 Mar 2023 04:46 PM, Last Updated : 30 Mar 2023 04:46 PM.

[4] https://www.hindutamil.in/news/crime/968295-rs-2-500-to-change-the-name-of-the-connection-engineer-arrested-for-bribe.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Trichy: திருச்சியில் லஞ்சம் வாங்கி உதவி பொறியாளர் கைது!, Pandeeswari Gurusamy, 20 April 2023, 12:56 IST.

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/assistant-engineer-arrested-for-taking-bribe-in-trichy-131681974880107.html

[7] நக்கீரன், முதியவரிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, எஸ்.பி. சேகர், Published on 20/04/2023 (17:44) | Edited on 20/04/2023 (18:12).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/perambalur-kalathur-vao-and-village-assistant-bribe-issue-due-patta-name

தொடர்ந்து பெண் அதிகாரிகள் லஞ்சம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? அதிலும் பெண்கள் மீதே தமது வக்கிரத்தை காட்டுவது ஏன்?

திசெம்பர் 14, 2022

தொடர்ந்து பெண் அதிகாரிகள் லஞ்சம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? அதிலும் பெண்கள் மீதே தமது வக்கிரத்தை காட்டுவது ஏன்?

லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்குதமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது: சமீபகாலமாகவே, பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள்.. ஆனால், பெண் அதிகாரிகள் சிலரும் லஞ்சம் வாங்குவதும், அந்த லஞ்ச பணம் தராமல் போவதற்காக சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.  தமிழகத்தில் அதிகார வர்க்கத்தில் “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு” என்ற கொள்கை “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற பார்முலாவில் 1970களிலிருந்து செயல்பட்டு வருகிறது. ஊழல் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாக, லஞ்சம் வாங்குபவர்களின் நடத்தை அதிகாரத்திற்கான ஆசை, பயம், பொறாமை, மனச்சோர்வு, வெறி, ஒதுக்கப்பட்ட உணர்வு, தீவிர, ஒடுக்கப்பட்ட படைப்பாற்றலின் தேவை போன்ற உளவியல் கட்டமைப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். பொதுவாக, சமூகத்தில் ஆடம்பரமாக இருக்க வேண்டும், கண்டபடி செலவு செய்ய பணம் வேண்டும், போன்ற மனவெறி கொள்ளும் பொழுது, பணமும் அவ்வாறே வர வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, ஊக்கம் அதிகமாகி, வெறியாக,வன்மத்துடன் செயல்பட ஆரம்பிக்கிறது. விளைவு, ஏழைகளிடம் கூட ரூ 10/- என்றெல்லாம் வாங்கும் மனப்பாங்கில் வெளிப்படுகிறது.

திருச்சியில் கோவில் திருப்பணி அனுமதிக்கு, பெண் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதானது: திருச்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்ப ஒரு சம்பவம் நடந்தது.. இங்கு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்கள் ஒன்றுதான் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில். இங்கு என்ன ஸ்பெஷல் என்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இரண்டு வேளையிலும் மருந்தாக இங்கு தரப்படும்.. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.. இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது.. அதனால், ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த அளவுக்கு பொதுநலனுடன் செயல்பட்டு வரும் இந்த கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பெண் அதிகாரியை நியமித்துள்ளனர்.. தர்மகாரியம் ஆனால், இந்த அதிகாரிதான், லஞ்சத்தை வாங்கியிருக்கிறார்.. அவர் பெயர் மூர்த்தீஸ்வரி.. கோயில் திருப்பணி விஷயத்தில் லஞ்சம் கேட்டுள்ளார்.. அதுவும் 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.. அந்த லஞ்ச பணத்தை, இரவு நேரம் திருச்சி பஸ் ஸ்டாண்ட்டில் வந்து தர சொல்லி உள்ளார்.. ஒரு தர்ம காரியத்துக்காக கோயிலில் கமிட்டியில் இவரை நியமித்தால், இப்படியா செய்வது??? கடைசியில் இவர் கையும் களவுமாக சிக்கி கைதானார். இதோ இதே திருச்சியில் இன்னொரு பெண் அதிகாரி, லஞ்சம் வாங்கி இப்போது கைதாகி உள்ளார்..

சென்னை பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கி கைதானது: கோவையைச் சேர்ந்தவர் மோனிகா ஸ்ரீ. இவருக்கும் கொளத்தூரைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று மோனிகா ஸ்ரீயை அவரின் கணவர் வினோத்குமார் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் டாக்டர் வினோத்குமார் உட்பட எட்டுப் பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், டாக்டர் வினோத்குமார் கொடுத்த புகார் தொடர்பாக மோனிகா ஸ்ரீயிடம் விசாரணை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் அனுராதா, ரூ 50,000/- லஞ்சமாகக் கேட்டதால், பின்னர் பேரம் பேசி 20,000/- கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது[1]. இந்தச் சூழலில் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் அனுராதாவைச் சிக்கவைக்க மோனிகா ஸ்ரீ திட்டமிட்டு, அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விவரத்தைக் கூறினார். அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கொடுத்த அறிவுரையின்படி மோனிகா ஸ்ரீ 20,000 இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டர் அனுராதாவைக் கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தினர்[2]. லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வசமாகச் சிக்கிய இன்ஸ்பெக்டர் அனுராதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்டுகிறது.

இப்பொழுது மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. யுவராஜா வீட்டார் பெண்ணை தொந்தரவு ஜெகதீசன் செய்தார் போலும். போக்சோ சட்டம் என்பதால் விவரங்கள் மறைக்கப் பட்டது போலும்.  இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் போலீஸ் மீதே போலீஸாரிடம் புகார் கொடுத்தது: முதலில் எப்படி போலீஸ் மீதே போலீஸாரிடம் புகார் கொடுப்பது என்று யோசித்திருக்கலாம், தயங்யிருக்கலாம், ஆனால், மனிதர்கள் மூலைக்குத் தள்ளப் படும் பொழுது, வேறு வழியில்லாமல், தவிக்கும் பொழுது, அத்தகைய முடிவுகளை எடுக்க தையம் வரும். அதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது[3]. இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்[4]. அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், 13.12.2022 அன்று காலை 10 மணி அளவில்களவுமாக பிடித்தனர்[5]. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[6].

கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப் பட்டது: இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை கைப்பற்றிய போலீசார், மாலதியை கைது செய்து வேனில் ஏற்றி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை நடத்திய போலீசார், அதன்பிறகு அவரை திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மாலதியை திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன், மாலதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்[7]. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்[8]. மேலும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்[9]. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது போலீசாரே பொறி வைத்து பிடித்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[10].

பெண்கள் விவகாரங்களில் பெண்களே பெண்கள் மீது பெண்களே வக்கிரத்துடன் நடந்து கொல்வது ஆராயத் தக்கது: அன்றைய தினங்களில், சில ஆண்கள்தான் லஞ்சம் வாங்கி சிக்குவார்கள்.. ஆனால், இப்போதெல்லாம் சில பெண் அதிகாரிகளே லஞ்சம் கேட்டு, மிரட்டலும் விடுத்து அதிர வைத்துவிடுகிறார்கள், அத்துடன் அசிங்கப்பட்டும் போகிறார்கள்[11]. ஆனால், லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள், அதிகாரிகளை மட்டும் கைது செய்யும் போலீசார், லஞ்சம் கொடுத்து எப்படியாவது காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும் என்று, “வலிய” சென்று லஞ்சத்தை தருபவர்களை ஏன் எதுவுமே ஒன்றுமே செய்வதில்லை?[12] பெண்களிடம், பெண்களே லஞ்சம் கேட்பது, அதிலும் போக்சோ போன்ற விவகாரங்களிலும், மனசாட்சி இல்லாமல், வன்மத்துடன் லஞ்சம் கேட்பது,பெண்மையின் சீரழிவின் உச்சத்தைக் காட்டுகிறது எனலாம். பெண்மையைப் போற்றும் இந்நாட்டில், ஒரு பக்கம் ஆண்கள் பெண்களின் மீது வக்கிரத்துடன் தாக்கி வரும் பொழுது, குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில், பெண்கள், அதிலும், சட்டத்தை நடைபடுத்தி, நீதி கிடைக்க வழி செய்யும் காவலர்களாக இருக்க வேண்டியவர்களே, இத்தகைய சட்டமீறல்கள், குற்றங்களில் ஈடுபடுவது திகைப்பிலும், திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1] விகடன், சென்னை: குடும்பப் பிரச்னை; லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்! – விஜிலென்ஸில் சிக்கியது எப்படி?, எஸ்.மகேஷ், Published: 20 Oct 2022 6 PM; Updated: 20 Oct 2022 6 PM.

[2] https://www.vikatan.com/news/crime/vigilance-police-arrested-chennai-police-inspector-in-bribary-complaint

[3] நக்கீரன், ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக பிடிபட்ட இன்ஸ்பெக்டர், மகேஷ் Published on 13/12/2022 (11:30) | Edited on 13/12/2022 (11:53).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-inspector-who-asked-bribe-rs-5000-was-caught-red-handed-anti

[5] திருச்சி விஷன், 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது, Dec 13, 2022 – 11:26Updated: Dec 13, 2022 – 14:50; https://trichyvision.com/Female-inspector-arrested-for-taking-bribe-of-5-thousand

[6] https://trichyvision.com/Female-inspector-arrested-for-taking-bribe-of-5-thousand

[7] ரூ தினத்தந்தி,.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது,  டிசம்பர் 14, 2:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/female-inspector-arrested-for-accepting-bribe-of-rs5-thousand-857445

[9] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது, டிசம்பர் 14, 12:36 am

[10] https://www.dailythanthi.com/News/State/female-inspector-arrested-for-accepting-bribe-of-rs5-thousand-857337

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அசிங்கம் அசிங்கம்.. மானமே போச்சு.. அதுவும் அதிகாரிகளேகண்ணாலபார்த்துட்டாங்க.. சிக்கிய பெண் அதிகாரி, By Hemavandhana, Updated: Tuesday, December 13, 2022, 18:54 [IST]

[12] https://tamil.oneindia.com/news/trichirappalli/shame-shame-woman-police-inspector-arrested-for-bribe-case-near-trichy-what-happened-489461.html

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்!

நவம்பர் 5, 2009
நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13820

வத்திராயிருப்பு: நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர் மீது, நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் உத்தரவிட்டனர். தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும், பிரசவம், பொதுநல வார்டுகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.

பெண் நோயாளிகளிடம் டாக்டர்கள் வருகை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டனர். அறுவை சிகிச்சை அரங்குக்கு வந்த குழுவினர் அங்கிருந்த ஏழு “ஆட்டோ கிளேவ்’ இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை கண்டித்தனர். பின், மாத்திரை வழங்கும் பிரிவிலிருந்து வெளியேறிய நோயாளியிடம் மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்தனர். மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விவரங்களுடன் எழுதிய கவரை வழங்காததால் மருந்தாளுனர்களை எச்சரிக்கை செய்தனர். வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஊனமுற்றவர்கள், ஏழைகளுக்கான நலநிதிக்கு உண்டியல் வசூல் மட்டுமே செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.