Archive for the ‘Uncategorized’ Category

ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)

நவம்பர் 1, 2017

ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)

Corruption -Mylapore Tashildar office-opposite- -fake certicates

பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.

Corruption -TN-fake birth certicate

10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.

முதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].

போலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன

வக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.

 மோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

ரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.

Kovai Hitech fake certificate centre

ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]:   இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© வேதபிரகாஷ்

31-10-2017

[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM

[2]http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=609207

[3] Monday, 24 Jul, 5.46 am

https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/boli+sanrithazh+moolam+kootturavuthuraiyil+baniburibavar+meethu+nadavadikkai+edukkappaduma-newsid-70773309

[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]

[5] https://tamil.oneindia.com/news/tamilnadu/shanmugasundari-issued-bogus-law-certificate-within-three-months-224653-pg1.html

Advertisements

மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்!

ஏப்ரல் 12, 2016

மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்!

அசோக்ராஜ் வீட்டில் சிபிஐ ரெய்டு தினமலர் 12-04-2016

போலீஸார் சொல்வது: சிபிஐயின் விசாரணையின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கவில்லை. பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மறைந்துள்ளதாக கூறுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் இருவர் கலால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மற்ற காணாமல் தப்பியோடியவர்களைப் பற்றி விசாரித்துத் தேடி வருவதாக கூறினர். அசோக் ராஜ் வீட்டிற்கு சென்று, அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அசோக் ராஜ் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை[1]. பொதுவாக சிபிஐ தனது விசாரணை, புலன் விசாரணை, தகவல் திரட்டல் முதலியவற்றை ரகசியமாகவே வைத்திருக்கும். மேலும், அரசு அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் விசாரணையில் அத்தகைய வன்முறைகள் இதுவரை ஏற்பட்டதில்லை. ஏனெனில், “அரசு ஊழியர்” என்ற ரீதியில் அவர்கள் கட்டுப்பட்டே நடந்து கொள்வர். பிறகு சட்டப்படி எதிர்த்து நீதிமன்றத்தில் வக்கீலை வைத்து போராடுவர். ஆனால், வேலை செய்யும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதில்லை. இது ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

The Changing faces of R Raja Climaxசி.பி.., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?[2]: தினமலர் இதைப் பற்றிய சில விவரங்களைக் கொடுக்கிறது. சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, அசோக்ராஜை, கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்த விசாரணையில், அசோக்ராஜை கடத்தியவர்கள், மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும், பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என, தெரியவந்தது. மேலும், அந்த சங்க நிர்வாகிகளில் ஒருவரான அசோக்ராஜ், சி.பி.ஐ., அதிகாரிகள், தன்னை கைது செய்வர் எனக் கருதி, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகளை தாக்கிவிட்டு, வேனில் சென்றது தெரியவந்தது. பொதுவாக சிபிஐ விசாரணையின் போது செல்போன்கள் முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள், வரும் அழைப்புகளை அவர்களே கேட்டு பதில் சொல்வார்கள். அந்நிலையில் அசோக்ராஜ் சங்க நிர்வாகிகளுக்கு எப்படி தகவல் கொடுத்தார் என்பது தெரியவில்லை. அசோக் ராஜ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[3]. இவ்வாறு அரசு அதிகாரிகள் நடத்தும் பள்ளி நிர்வாகம், சங்கம், ஓய்வு பெற்ற அதிகாரி என்று எல்லோரும் இத்தகைய சட்டமீறல்களில் ஈடுப்பட்டிருப்பது பற்பல கேள்விகளை எழுப்புகிறது.

Raja Climax -left- and ashok Raj -right- together in a function

பிடிபட்ட அதிகாரிகள் மறைவது, மறைந்து வாழ்வது சரியில்லை: முன்னமே குறிப்பிட்டது போல, இந்நிகழ்ச்சிகள் ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது, உண்டாக்கியுள்ளது. இது அரசுதுறை அதிகாரிகளுக்கு இடையே சுமூகமான உறவுகளை பாதிக்கும். தேவையற்ற சந்தேகங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் முறையில், சேற்றை வாரியிரைக்கும் போக்கிற்கும் வழி வகுக்கும். ஏற்கெனவே, பொது மக்களிடையே, சட்டம், நீதி, ஒழுங்குமுறை, நீதிமன்றம், முதலிவற்றைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக செயல்படுவதில்லை, மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன, அல்லது காலதாமதங்களினால் அத்தன்மையே சீரழிகிறது அல்லது சட்டத்தன்மை-பலன் முதலியவை பயனற்றதாகி விடுகின்றன போன்ற எண்ணங்கள் உருவாகியுள்ளன. அந்நிலையில் சட்டதிட்டங்களை அமூல் படுத்தும் அரசு அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் வரும்-ஏற்படும் விதத்தில் செயல்படக்கூடாது, நிகழ்வுகளும் நடக்கக் கூடாது. அதனால், நீதி வெற்றிப்பெற வேண்டும், வெற்றிப் பெற்றது போன்று காட்டப்பட வேண்டும் [Not only justice should be done, but also appears to have been done] என்று கூறியுள்ளார்கள்.

Raja Climax -right- and ashok Raj -left- together in a function

பள்ளி நிர்வாகத்துக்குத் தொடர்பு[4]: பிடிபட்ட அசோக்ராஜ் சுங்கவரித் துறை அலுவலர்கள் சங்கம் நடத்தும் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாராம், அப்பள்ளியின் முக்கிய நிர்வாகி தலைமையில், பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலின் போது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  அதாவது, அவர்கள் எல்லோருமே அந்த அலுவகத்திற்கு சாதாரணமாக வந்து போகின்றவர்கள் மற்றும் எல்லா விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் என்று தெரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் படி[5], ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலல்துறை சூப்பிரென்டென்ட், இப்பொழுது சென்ட்ரெல் எக்சைஸ் சங்கம் நடத்தும் பள்ளியின் தாளாரராக உள்ள “கிளைமாக்ஸ் ராஜா” என்பரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக சிபிஐ அதிகாரி கூறுகிறார். போலீஸ் விசாரணையில், அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு அலுவலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்[6]. அசோக் ராஜ் மற்றும் கிளைமாக்ஸ் ராஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் மேலே குறிப்பிட்டபடி, இருவருமே, அப்பள்ளி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், இவ்விசயத்தில் எப்படி சம்பந்தப்பட்டார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மேலும், வேலியே பயிரை மேய்ந்த நிலை உருவாகி, பள்ளி நிர்வாகத்தினரே இத்தகையே சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், மாணவி-மாணவர்கள், பெற்றோர், மற்றோர் எல்லோருமே இனிமேல் யோசிக்க ஆரம்பிப்பர். இச்செயல்களினால், பள்ளிக்குள்ள பெயரும் கெடக்கூடிய நிலை உருவாகியுள்ளது[7].

M Raja Climaxயார் இந்தராஜா கிளைமாக்ஸ்”?: உண்மையில் இவரது பெயர் எம். ராஜா கிளைமாக்ஸ் [M. Raja Climax] என்று தெரிய வருகிறது. மதுரை சுங்கம் மற்றும் கலால் வரிதுறையில் ஆய்வாளர் மற்றும் மேலதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். 2013ல் ரூ.2.23 கோடி வரியேப்பு செய்ததை கண்டுபிடித்தவர் என்றும் செய்தியுள்ளது[8]. அக்காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் என்சிகியூட்டிவ் அசோசியன் [Central Excise Executive Officers Association] என்ற சங்கத்தில் தீவிரமாக் இருந்து, அதன் சார்பில் ஒரு பள்ளியைத் துவக்கியதில் பங்கு வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு சில மாற்றங்கள் தெரிகின்றன. அப்பள்ளி இணைதளத்தில் காணப்படும் புகைப்படங்களிலிருந்து அவரது முகம் மாறியிருக்கிறது. புகழுக்காக ஆசைப்படுவது தெரிகிறது. பாராட்டு விழா முதலியவை நடந்துள்ளன. அந்நிலையில் இத்தகைய செயலில் ஏன் சம்பந்தப் பாட்டர், ஈடுபட்டார் என்பது புதிராக இருக்கிறது. அதிகாரம் மனிதனைக் கெடுக்கிறது, அதிகமான / அளவற்ற அதிகாரமோ அவனை அவ்வாறே எல்லைகள் இல்லாத அளவுக்கு கெடுக்கிறது [Power corrupts, abosolute power corrupts absolutely] என்பது போல இத்தலைய செயல்கள் நடப்பது தெரிகிறது.

ராஜா கிளைமாக்ஸ், அசோக் ராஜுடன்சுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல் (11-04-2016): தல்லாகுளம் போலீசார் கலால் துறை, குறிப்பிட்ட பள்ளி முதலியோரிடம் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்[9].
அசோக் ராஜ் எங்கு போனார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர்[10]. அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது[11]. அசோக் ராஜ் வீட்டில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றிய விவரங்களு தெரியவில்லை. இவ்வாறு பிடிபட்ட அதிகாரிகள் தப்பித்து தலைமறைவானது மேலும் சட்டப் பிரச்சினை மற்றும் பலவித சதேகங்களை எழுப்பியுள்ளன.  அதிகாரிகள் வழக்கைச் சிக்கலாக்கப் பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வழக்கை முடித்துக் கொள்வது அனைவருக்க்ம் நலம்.

© வேதபிரகாஷ்

12-04-2016

[1] Absconding – The police said that a key management person of the school was absconding.

The city police said that the Central investigation team had not sought police security during the “trap”. The accused include two employees of Central Excise Department.

The Hindu, 9 booked for attack on CBI sleuths, Madurai, April 10, 2016; Updated: April 10, 2016 05:45 IST

[2] தினமலர், சி.பி.., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?, ஏப்ரல் 9. 2016.23.36.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1498056

[4]http://www.dinamani.com/edition_madurai/madurai/2016/04/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article3372288.ece

[5] “They also tried to destroy the evidence collected against the official, but we were able to secure some of it. We believe that the attackers could have links with ‘Climax’ Raja, a retired Central Excise officer who is associated with the Central Excise Officers Association,” alleged a CBI official. According to CBI personnel, the attack seems to have been orchestrated by a former Central Excise official, now correspondent of a private school in Madurai, for whom the bribe was being paid. The local police, which are looking into the incident, believe that a private school is linked to the case as CBI officials have apprehended one of the school management-level officials. A total of 15 members have been picked up for interrogation, said police sources.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Thugs-Attack-CBI-Men-to-Save-Tainted-Babu/2016/04/10/article3372496.ece

[6] The New Indian Express, Thugs Attack CBI Men to Save Tainted Babu, By Express News Service, Published: 10th April 2016 03:08 AM, Last Updated: 10th April 2016 03:20.

[7] http://ceoaepapers.blogspot.in/2014/02/photos.html

[8] http://www.thehindu.com/news/cities/Madurai/rs263crore-tax-evasion-detected-in-tuticorin-fertilizer-company/article5320103.ece

[9] தீக்கதிர், சுங்க இலாகா அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல், ஏப்ரல்.11, 2016.

[10]  தினகரன், மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு, ஏப்ரல் 12, செவ்வாய்கிழமை,01.51.25.

[11] http://theekkathir.in/2016/04/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=209402

சிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ?

ஏப்ரல் 11, 2016

சிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ?

Ashok Raja, the Sperintendent of Central Excise, who was caught by the CBI officers on April 8, 2016 night around 8 pm at Madurai.சேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் தாக்குதல் - அசோக் ராஜ் வீடு பாதுகாப்புதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.

CBI attacked in Madurai - Ashok Rajசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன்  இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

CBI attacked in Madurai - Ashok Raj house - 10_04_2016_112_025அதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்?: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உடனே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்தனர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.

CBI, Central Excise, tax cut, corruptionதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].

9 booked for attack on CBI sleuths The Hindu 10 April 2016சிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் என்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது, திருட்டு, மிரட்டுதல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].

© வேதபிரகாஷ்

11-04-2016

[1] http://www.koodal.com/news/tamilnadu.asp?id=74304&title=cbi-officers-attacked-in-madurai-tamilnadu-news-headlines-in-tamil

[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/gang-attack-on-cbi-officers-in-madurai-116040900011_1.html

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/09102715/1003971/mystery-

[5] The Hindu, Gang attacks CBI officials, frees ‘detained’ excise superintendent, Madurai, April.9, 2016, Updated: April 9, 2016 05:44 IST.

[6] In a filmi style, an armed gang attacked a team of CBI officials and rescued a Central Excise official who was reportedly trapped in a bribery charge at the Customs office in Madurai on Friday night. The CBI sleuths, including Inspector Murugan, sustained bleeding injuries. The incident is said to have happened at around 8 p.m. at the office of the Commissioner of Customs Central Excise and Service Tax located at Bibikulam. According to police sources, the team of five CBI officials trapped the Superintendent at around 5 p.m. Even as the central investigating officials were recording the statements an armed gang barged into the office and started attacking the officials. The gang also destroyed some of the papers and whisked away the excise official. The injured CBI officials were taken to a private hospital in the vicinity. A team of Madurai city police officials, led by Deputy Commissioner of Police (Law and Order) Bandi Gangadhar was probing the incident.

http://www.thehindu.com/news/cities/Madurai/gang-attacks-cbi-officials-frees-detained-excise-superintendent/article8453508.ece

[7] http://www.koodal.com/news/tamilnadu.asp?id=74304&title=cbi-officers-attacked-in-madurai-tamilnadu-news-headlines-in-tamil

[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.

[9] மாலைமலர், மதுரையில் சி.பி.. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04

[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/gang-attacks-cbi-officials-madurai-250845.html

[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/gang-attacks-cbi-officials-madurai-250845.html

[13] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/17425/mob-attack-cbi-in-madurai

[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.

[15] Based on a complaint lodged by Mr. Murugan, the Tallakulam police had registered a case of rioting, criminal trespass, assaulting government official to deter him from discharging his duty, attempt to murder, dacoity and criminal intimidation.

http://www.thehindu.com/news/cities/Madurai/nine-booked-for-attack-on-cbi-sleuths/article8456657.ece

கனிமொழி கைது!

மே 20, 2011

கனிமொழி கைது!

கனிமொழி சாட்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது: இன்று 20-05-2011, ஓ.பி.சைனி, நீதிபதி தனது 144 பக்க தீர்ப்பில், குற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் சாட்சிகளின் நிலமை, அதாவது அவர்களில் பெரும்பாலோர், கலைஞர் டிவியில் வேலைப்பார்ப்பவர்களாக இருப்பதால், அவர்கள் தாக்கத்திற்குள்ளாவார்கள் என்று கருதுவதாகக் கூறினார். மேலும் இருவரும் பெயிலில் விடுவித்தால் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் தங்களது பெயிலை ஏன் நிராகிக்கக் கூடாதுஎன்பதற்கு அவர்கள் வலுவான முகாந்திரத்தை எடுத்துக் காட்டவில்லை, ஆகையால் அவர்களது பிணை விண்ணப்பங்களை தள்ளுபடி செய்வதாகக் கூறினார்[1].

ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம்  விவகாரத்தில்  தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.  ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது[2]. பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார்.   ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

12, 1, 2.30 என்று நேரம் போய்கொண்டெ இருந்து தீர்ப்பு வந்தே விட்டது: இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார். தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.  2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.   கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.

கனிமொழி கைதினால் திமுக கலக்கம்: கனிமொழி கைதாவார் என்று ஏற்கெனெவே தெரிந்த விஷயமாகத்தான், திமுகவிற்கு இருந்தது. ஏற்கெனெவே, ஒன்று திமுக அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வது அல்லது தங்களது ஆதரவை வாபஸ் பெறுவது என்ற முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், அமைச்சர்களக இருப்பவர்களுக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்பதும் தெரிகிறது. முடிவு சோனியா கையில் உள்ளது என்று தெரிகிறது.

ரீய்டர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது: இந்த ஊழல் ஆசியாவிலேயே நடந்துள்ள பிகப்பெரிய ஊழலாகும். 39 பில்லியன் டாலர்கள் அளவில் நடந்துள்ள ஊழல் அந்நாட்டு பட்ஜெட்டிற்கு சமமானதாகும். இதச்னால் தமிழகத்தில் திமுக தோற்றுவிட்டது என்று கணிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்[3]. (The scandal may have costAsia’s third-largest economy $39 billion in lost revenues, equivalent to the defence budget, sparking outrage against the government. Analysts say the scandal cost the DMK the election in Tamil Nadu.). நார்வேயின் பிரதம மந்திரி டெலிநாருக்கு ஆதரவாக, இந்தியாவில் உள்ளவர்கள் செய்த பிழைகளுக்காக அக்கம்பெனியை தண்டிப்படு கூடாது என்று மன்மோஹன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளாராம்!Norway’s prime minister has written to Singh seeking “fair treatment” for Telenor, saying the firm should not be penalised for “errors others have committed inIndia.”


நீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்!

ஏப்ரல் 15, 2011

நீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்!

நீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.

பால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.

மணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.

கனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

சுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.

வேதபிரகாஷ்

15-04-2011


[2] Controversial corporate lobbyist Niira Radia in her statement recorded under Section 161 of the Criminal Procedure Code has linked Union Agriculture Minister Sharad Pawar to DB Realty but adds that she did not have any evidence to prove that Mr. Pawar or his family members had any stake in Swan Telecom. “I state that as per the general perception in Mumbai as well as outside, DB Realty is directly or indirectly controlled by Mr. Sharad Pawar and his family members,” Ms. Radia’s statement said.

http://www.hindu.com/2011/04/15/stories/2011041565401600.htm

[3] “I am not associated with Swan Telecom in any way. Neither had I recommended anybody for issuance of license. I deal with agriculture ministry and have nothing to do with other departments,” Pawar told HT on phone from Baramati. But Pawar acknowledged close family ties with KM Goenka, father of Vinod Goenka, who is a partner of Shahid Balwa, a director of DB Realty and a promoter of Swan Telecom.

http://www.hindustantimes.com/Pawar-denies-DB-Realty-link/Article1-685089.aspx

[4] Supriya is now the Lok Sabha MP from Baramati. Supriya and Kanimozhi’s long chats — in their leisure time, or even in Parliament’s Central Hall — have now acquired an ominous  subtext, with their friendship now being seen in the context of the spectrum scam: specifically, the Baramati-based DB Realty’s money channel leading to Kalaignar TV.

http://expressbuzz.com/magazine/friends-in-need/253041.html

மூன்று கோடி முறைகேடு பிஷப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு?

ஜனவரி 20, 2010

தலைமறைவான பிஷப்புக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு
ஜனவரி 20,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15551

கல்வி நிறுவனங்களைப் பற்றி தேடும்போது, இச்செய்தியும் உள்ளது! சேலம் : கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் பிஷப் மாணிக்கம் துரை, சேலத்தில் உயர் பதவி வகிக்கும் இரு போலீசாரின் ஆதரவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் பிஷப்பாக இருப்பவர் மாணிக்கம் துரை. கோவை, தர்மபுரி, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சி.எஸ்.ஐ., பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்விக் கூடங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட இந்த எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள், சொத்துக்களின் பராமரிப்பு, நிர்வாகப்பணிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கண்காணித்த போதிலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், கோவை திருமண்டலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் பிஷப்பையே சார்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், பிஷப் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. “அவரிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோடிகணக்கில் ஊழல் என்றால் அத்தகையோரின் தலமையில் நடக்கும் கல்வி என்னாவது? கடந்த 10ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிஷப் மாணிக்கம் துரை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணிக்கம் துரை தலைமறைவானார். சேலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு போலீசாரே ராஜமரியாதை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் தான், மாணிக்கம் துரையை சி.பி.சி.ஐ.டி.,யின் வலையில் இருந்து பாதுகாத்து, நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற வக்கீல்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னையிலுள்ள உயர்அதிகாரிகள் வரை புகார் சென்றுள்ளது. மாணிக்கம் துரை ஏற்கனவே கோவை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

உள்நாட்டு / வீட்டுப் பிரச்சினை போல பேசி மழுப்புவது! இந்த பிரச்சினை தொடர்பாக சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட் டம் ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அலுவலகத்தில் நடைபெற்றது.திருமண்டல செயலாளர் ரிட்சர்டு துரை தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளரும், கல்விக்குழு தலைவருமான அமிர்தம் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமிர்தம் மற்றும் வக்கீல் சாக்ரடீஸ் ஆகியோர் கூறியதாவது:- “பிஷப் மாணிக்கம் துரை தலைமறைவாக இல்லை. இறைப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அவரை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிறகு மாற்றுக் கருத்து வருவது பொய்யைத்தான் காட்டுகிறது! இந்த நிலையில் தென் இந்திய திருச்சபை முதன்மை பேராயர் கிளன் ஸ்டோன் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு வந்து பிஷப் மாணிக்கம் துரை குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பேராயர் நிலையில் இருப்பவர்கள் திருச்சபையின் நிதியை பாதுகாப்பது முக்கியமாகும். இறை பணி செய்வதையே கடமையாக கொண்டவர்கள் மீது இது போன்ற புகார்கள் எழுவது இறைமக்களை புண்படுத்துவது போல் ஆகும். இந்த மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துபேசி எடுக்கப்படும்.

பிஷப்புக்கு கருப்புக் கொடி: சர்ச் வளாகத்தில் பரபரப்பு (செப்டம்பர் 29,2008,00:00  IST) : கோவை மண்டல பிஷப் மாணிக்கம் துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டப்பட்டதால் சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மண்டல பேராயராக இருப்பவர் மாணிக்கம் துரை. இவர் தனது அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ மக்களின் பொதுப்பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 7ம் தேதி சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து, இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நியாயம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.கூட்டத்தில் இருந்து மாணிக்கம் துரை வெளியேறி விட்டார். இதுகுறித்து விவாதிக்க, அடுத்த நாளே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஆலயத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது; இதுவரை கூட்டம் கூட்டப்படவில்லை. அதிருப்தி அடைந்த சி.எஸ்.ஐ., ஆலய உறுப்பினர்கள் நேற்று திடீரென சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்துக்கு வெளியில் கூடினர். அப்போது சர்ச்சுக்கு வந்த பிஷப்பின் கார் வழிமறிக்கப்பட்டு, கருப்புக் கொடி காட்டப்பட்டது. மேலும், பிஷப்பைக் கண்டித்தும், பண மோசடி குறித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால், சர்ச் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பூமியிலிருந்து சந்தனக்கட்டைகள் கிடைக்குமா?

நவம்பர் 27, 2009
தோண்ட… தோண்ட… சந்தனக் கட்டை * உடுமலையில் 3 டன்கள் மீட்பு
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14326

Important incidents and happenings in and around the worldஉடுமலை:உடுமலை வனப்பகுதியில், தோண்ட, தோண்ட, டன் கணக்கில் சந்தனக் கட்டைகள் சிக்குகின்றன. நேற்று மூன்று டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, நாரைக்கல் சரகம் ஆகிய பகுதிகளில், 250 சதுர கி.மீ., பரப்பளவில், லட்சக்கணக்கான சந்தன மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

பலனுக்கு தயாராக பல ஆயிரம் மரங்கள் உள்ளன. மரங்கள் முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தனக் கட்டைகள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்தன.சந்தன மரங்களை வெட்டி கடத்துவது வனத்துறையினர் என மலை வாழ் மக்களும், அவர்கள் தான் காரணம் என வனத்துறையினரும் மாறி, மாறி புகார் தெரிவித்து வந்தனர்.

வனத்துறை மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் அடிக்கடி, சந்தனக் கட்டை கடத்தும் கும்பல், வாகனங்கள் சிக்கி வந்தன. வனத்துறை உயர் அதிகாரிகள் சந்தனச்சோலையில் ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தனர். 559 சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம், அதிரடிப்படை பாதுகாப்பு, வனத்துறை அமைச்சர் ஆய்வு என அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

சந்தனக் கட்டைகள் பறிமுதல்: ஆய்வில், அக்., 25ம் தேதி, 620 கிலோ சந்தனக் கட்டைகளும், 28ம் தேதி, 3,910 கிலோ சந்தனக் கட்டைகளும், 29ல், 110 கிலோ சந்தனக் கட்டைகளும், 30ம் தேதி, 2,701 கிலோ சந்தனக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நவ., 2ம் தேதி, கடத்தல் கும்பலால் வெட்டி கடத்துவதற்காக, வனப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,430 கிலோ சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.

சந்தனக் கட்டை கடத்தும் கும்பலால், வனப்பகுதியில் வெட்டி, கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.77 டன் சந்தனக் கட்டைகள் சிக்கின. மூன்றாண்டில், 35 டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

மூன்று டன்கள் மீட்பு: மேலும், வனப்பகுதி முழுவதும் சந்தனக் கட்டைகள் வெட்டி, கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது என்பதால், தலா 10 பேர் கொண்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர், 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியிலுள்ள கள்ளிமரத்துப்பட்டி, ஆனைமுடங்கி, கதவடி ஆகிய பகுதிகளில், கடத்துவதற்காக புதர்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.

உதவி வன பாதுகாவலர் தியாகராஜன், வனச்சரகர் ஜெயராமன், வனவர் சுப்புராஜ், பீமன் குழுவினர், சந்தனக் கட்டைகளை மீட்டு நேற்று உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். சந்தனக் கட்டைகள் தரம் பிரிக்கப்பட்டு, எடை போடப்பட்டு வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சுங்க அதிகாரிகள் கைது: இறக்குமதியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு!

நவம்பர் 25, 2009
சென்னை விமான நிலைய ‘கார்கோ’வில் அதிரடி : 11 பேர் கைது : தங்கம் 2 கிலோ பிடிபட்டது
நவம்பர் 25,2009,00:00  IST

Important incidents and happenings in and around the worldசென்னை: சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும், ஏர் – கார்கோ பிரிவில், சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்ட 22 மணி நேர அதிரடி சோதனை நடந்தது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒன்பது பேரும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த வெளியாட்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பணமும், தங்கம் இரண்டு கிலோவும் பிடிபட்டது.

சென்னை விமான நிலையத்தில், ஏர் – கார்கோ காம்ப்ளக்ஸ் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களும், சுங்க இலாகாவினர் சோதனைக்கு பின்னரே வெளியேற்றப்படும். சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 55 முதல் 60 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. பொருட்களின் மதிப்பு அடிப்படையில், சுங்க வரி விதிக்கப்படும்.

இந்நிலையில், பொருட்களின் மதிப்பை குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்வதாகவும், ஏர் – கார்கோ கஸ்டம்ஸ் பிரிவில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அறிந்த சி.பி.ஐ., அதிகாரிகள், மொத்தம் ஐந்து குழுக்களாக பிரிந்து, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்கு அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் போது, கார்கோ பிரிவில் இருந்த ஊழியர்களின் மொபைல்போன்கள் “ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டன. தொலைபேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டன. யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. பின், கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்கள், இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், அதற்கு விதிக்கப்பட்ட வரி, சலுகைகள் மற்றும் லஞ்சம் ஏதும் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

இதில், பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அதிரடிச் சோதனையின் போது, கணக்கில் வராத 16 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்கம் இரண்டு கிலோவும் பிடிப்படது. கார்கோ பிரிவில் பணியில் இருந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒன்பது பேரும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த வெளியாட்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி இஷாத் அலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 8ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை, நேற்று மாலை 4 மணிவரை நீடித்தது. தொடர்ந்து 22 மணிநேரம் விமான நிலைய கார்கோ பிரிவில் சி.பி.ஐ., சோதனை நடந்ததால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கெடுபிடி: கார்கோ பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, பன்னாட்டு முனைய பயணிகளிடம் கஸ்டம்ஸ் சோதனை கடுமையாக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து “குருவி’கள் எடுத்து வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த வகையில் நேற்று ஒரே நாளில் 75 லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“டப்பர்வாலா’ தம்பதி சிக்கினர்! சென்னை விமான நிலைய கார்கோ காம்ப்ளக்ஸ் கஸ்டம்ஸ் பிரிவில் நடந்துள்ள ஊழல்களுக்கு, அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் தம்பதியும் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள், சரக்கு அனுப்பும் பார்ட்டிகளிடம் பேரம் பேசுவதையும், அவர்கள் தரும் கமிஷன் பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுப்பதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனையின் போது, இந்த தம்பதியும் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்கள் தவிர, மேலும் சில வெளியாட்களும் சிக்கியுள்ளனர். தற்போது சி.பி.ஐ., அதிகாரிகளின் பிடியில் உள்ள அவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கார் புகைந்தது தான் காரணம்? கார்கோ பிரிவு சி.பி.ஐ.,சோதனைக்கு, ஒரு சம்பவம் பின்னணியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை ஏற்றுமதி செய்வதற்காக விலை உயர்ந்த “பெராரி’ கார் ஒன்று கார்கோ பிரிவிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. காரில் பெட்ரோல் இருந்ததால் அதை விமானத்தில் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்த காரை “ஸ்டார்ட்’ செய்து, பெட்ரோல் தீரும் வரை இன்ஜின் இயக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக காரில் தீ பிடித்தது. இது குறித்த விசாரணையில், கார்கோ பிரிவில் முறைகேடுகள் நடப்பது தெரிய வந்ததுள்ளளது. இதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ., சோதனை நடந்ததாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் விவரம்:

கண்காணிப்பாளர்கள்

1.பாஸ்கர்
2. அறிவுடைநம்பி
3.நாகேஸ்வரி
4.பழனியப்பன்

“பிரிவென்டிவ்’ அதிகாரிகள்

1. ஜெக்மோகன் மீனா
2.ஆசைத் தம்பி
3.மஞ்சுளா
4.பெஞ்சமின்

வரிவிதிப்பு அதிகாரி

1.கண்ணன்

வெளியாட்கள்

1.குமார் (மீனம்பாக்கம்)
2.ராஜ்குமார் (சென்னை)

சி.பி.ஐ., லஞ்ச வேட்டையில் சிக்கிய சுங்க அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்
நவம்பர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14306

Important incidents and happenings in and around the worldசென்னை : சென்னை விமான நிலைய, “ஏர் கார்கோ’ பிரிவில் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ., சோதனையில் சிக்கிய கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒன்பது பேர், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏர்-கார்கோ காம்ப்ளக்ஸ் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சரக்குகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து, சுங்கவரி வசூலித்து பொருட்களை ஒப்படைப்பது வழக்கம்.சுங்க வரி வசூலிக்காமலும், குறைந்த அளவு வரி மட்டும் கட்டச் செய்தும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 23ம் தேதி மாலை சென்னை விமான நிலைய ஏர்-கார்கோ காம்பளக்சில் அதிரடி சோதனையைத் துவக்கினர்.தொடர்ந்து 22 மணி நேர சோதனை நடந்தது. சோதனையில் இடைத் தரகர் களை வைத்துக் கொண்டு, அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இது தொடர்பாக கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர்கள் பாஸ்கர், அறிவுடைநம்பி, நாகேஸ் வரி, பழனியப்பன், “பிரிவென்டிவ்’ அதிகாரிகள் ஜெக்மோகன் மீனா, ஆசைத்தம்பி, மஞ்சுளா, பெஞ்சமின், வரிவிதிப்பு அதிகாரி கண்ணன் உள் ளிட்ட ஒன்பது பேர் சிக்கினர். அவர்களுக்கு உடந் தையாக செயல்பட்ட சுங்கத் துறை அல்லாத வெளியாட்கள் குமார், ராஜ்குமார் இருவரும் சிக்கினர்.சுங்கத்துறை அதிகாரிகள், சிக்கிய வெளியாட்கள் இருவரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. இதில், 17 லட்சம் ரூபாய் ரொக்கம், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் டில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், லஞ்ச வழக்கில் சிக்கிய ஒன்பது பேரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் பிறப்பித்துள்ளார். சி.பி.ஐ., விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் பல கோடி மோசடி : சி.பி.ஐ., சோதனை தொடர்கிறது
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5761

Front page news and headlines todayசென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.

வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைக்கு இரண்டு “புல்’ லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, “குருவி’கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், “குருவி’களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, “குருவி’யும் தலா இரண்டு “ஜானிவாக்கர்’ பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்!

நவம்பர் 5, 2009
நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13820

வத்திராயிருப்பு: நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர் மீது, நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் உத்தரவிட்டனர். தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும், பிரசவம், பொதுநல வார்டுகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.

பெண் நோயாளிகளிடம் டாக்டர்கள் வருகை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டனர். அறுவை சிகிச்சை அரங்குக்கு வந்த குழுவினர் அங்கிருந்த ஏழு “ஆட்டோ கிளேவ்’ இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை கண்டித்தனர். பின், மாத்திரை வழங்கும் பிரிவிலிருந்து வெளியேறிய நோயாளியிடம் மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்தனர். மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விவரங்களுடன் எழுதிய கவரை வழங்காததால் மருந்தாளுனர்களை எச்சரிக்கை செய்தனர். வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஊனமுற்றவர்கள், ஏழைகளுக்கான நலநிதிக்கு உண்டியல் வசூல் மட்டுமே செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.

விதிமுறைகளை அமல்படுத்தி ஊழலை ஒழிக்கலாம்: முன்னாள் தேர்தல் கமிஷனர் கருத்து

நவம்பர் 5, 2009

விதிமுறைகளை அமல்படுத்தி ஊழலை ஒழிக்கலாம்: முன்னாள் தேர்தல் கமிஷனர் கருத்து

நவம்பர் 04,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18508

சென்னை: “”விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம்,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று துவங்கி வரும் 7ம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் உள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நடக்கவுள்ளது.

இதில், ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டங்களும் நடக்க உள்ளன. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜெயந்த் தலைமை வகித்து பேசும்போது, “”ரயில்வேயில் நவீன தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால் பணிகள் அனைத்தும் விரைவாக நடப்பதற்கு உதவியாக உள்ளது. ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு, இ – டிக்கெட் வசதிகள் என, பயணிகள் வசதிக்கான மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டபடி செய்யப்பட்டு வருகிறது.

பண்டிகை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதை பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கும் இடைத்தரர்கள் விஜிலன்ஸ் பிரிவினரின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் பிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசும் போது,”” ஊழல் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ரயில்வேயில் நவீன தொழில் நுட்பத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும். விதிமுறைகளை கண்டிப்புடன் அமல் படுத்த வேண்டும். இதெல்லாம் ஊழலை ஒழிப்பதற்கு வழி வகுக்கும். நல்லபடியாக நிர்வாகத்தை நடத்துவதில் ரயில்வே அதிகாரிகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் குப்தா மற்றும் விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.