கோடிகளை செலவழித்து, கோடிகளை அள்ளுவது தான் அரசியல் – அரசியல்-சினிமா-கிரிக்கெட்-வியாபாரம்-விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்!

ஒக்ரோபர் 7, 2021

கோடிகளை செலவழித்து, கோடிகளை அள்ளுவது தான் அரசியல்அரசியல்சினிமாகிரிக்கெட்வியாபாரம்விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்!

கோடிகளை செலவழித்து ஆட்சிக்கு வருவது எதைக் காட்டுகிறது?: 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு செலவழித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. அதில் அதிகபட்சமாக திமுக 114 கோடியே 11 லட்ச ரூபாயும், அதிமுக 57 கோடியே 5 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பிராதன கட்சிகளில் பாஜக மட்டும் தேர்தல் செலவு விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.

 • “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடி  செலவு செய்துள்ளது”
 • “திமுக ரூ.114.14கோடி  செலவு செய்துள்ளது”
 • “ஊடக விளம்பரங்களுக்கு ரூ.39.78கோடி”
 • “அதிமுக ரூ.57.33கோடி தேர்தல் செலவு செய்துள்ளது”
 • “காங்கிரஸ் கட்சி தேர்தல் செலவாக ரூ.84.93 கோடி”
 • “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13.19 கோடி  செலவு செய்துள்ளது”
 • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம்  வெளியிடவில்லை.

இப்படி கோடிகளை செலவழித்து ஆட்சிக்கு வருவது, ஆட்சியைப் பிடிப்பது, ஜனநாயகத்தில் எப்படி எடுத்துக் கொள்வது?

கட்சிகள் எதெதற்கு எவ்வளவு செலவழித்தது என்று ஆராய்ச்சி செய்யலாம், ஆனால், ஊழலை ஒழிக்க முடியுமா?: திருணமூல் காங்கிரஸ் 151 கோடிகள், திமுக 114 கோடிகள் என்று செலவழித்துள்ளன. அதிமுக சுமார் 58 கோடிகள், கேரள காங்கிரஸ் 37, சிபிஐ- 10 லட்சங்கள் ஒரு சீட்டிற்கு செலவழித்துள்ளன.

அதிமுக பெரும்பாலும் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தியுள்ளது. ஆனால், திமுக பிரச்சாரம் மற்றும் விளம்பரம் என்று செலவழித்துள்ளது. மற்ற கட்சிகள் – படத்தில் காட்டிய படி பிரச்சாரம் மற்றும் விளம்பரம் என்று செலவழித்துள்ளன.

 • சித்தாந்தம் என்று பேசினாலும், இப்படி விளம்பரம் மற்றும் பிரச்சாரம் என்று செலவழித்துள்ளதைக் கவனிக்கலாம்.
 • மேலும் பிரஷாந்த் கிஷோர் போன்ற ஆலோசகர்களை பயன்படுத்தி, நவீன யுக்திகளைக் கையாண்டுள்ளன.
 • வேட்பாளர்கள் கூட மேக்கப் போட்டுக் கொண்டு, உடைகளை மாற்றி, சூட்டிங்கிற்கு செல்வது போல கூட்டங்களுக்கு, பிரச்சாரங்களுக்கு வருகிறார்கள்.
 • தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் பற்றி கேட்க வேண்டும், சினிமா ஹீரோ ரேஞ்சில் வைத்து, விளம்பரங்கள் செய்யப் படுகின்றன.
 • முடியுமோ இல்லையோ கவர்ச்சிகர விளம்பரம் மூலம், ஆசையான அறிவுப்புக்களை வெளியிட்டு, மயக்கி ஓட்டுகளைப் பெற்றுள்ளன.
 • வாக்குறுதி என்று சொல்லி, அவற்றை நிறைவேற்றி விட்டோமென்பதற்கும் விளம்பரங்கள் செய்து வருகின்றன.

வகைவகையான செலவுகள் என்று பிரித்துக் காட்டுகிறார்கள்: முக்கிய, பிரபலமான, ஸ்டார் கேம்பைனர்-பிரச்சாரகருக்கான போக்குவரத்து, மற்ற தலைவர்களுக்கான போக்குவரத்து, விளம்பரப் பொருட்கள்-சாதனங்கள், கூட்டங்கள்-ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவது, மற்ற செலவுகள் என்று கோடிகளில் செலவழித்துள்ளன.

 • தவிர சாப்பாடு, கைசெலவு, பரிசுகள், ஊக்கத் தொகை முதலியவைகளும் உண்டு.
 • மின் மற்றும் அச்சு ஊடகங்கள், சிறு-குறுந்தகவல் அனுப்புதல், இணைதளம், வளைவுகள், பானர்கள், ஸ்டிக்கர்கள், கொடிகள், நோட்டிஸுகள். சுவரொட்டிகள், முதலிய செலவுக/ளும் உள்ளன.
 • டிவி-செனல்களில் திரும்ப-திரும்ப காட்டப் படும், சினிமா மாதிரி படங்கள், குறும்படங்கள் முதலியன.
 • மக்களைக் கவர, கூட்டம் சேர குத்தாட்டங்கள், நடனங்கள், பாடல்கள் போன்ற இத்யாதிகள்
 • பிரியாணி, குவாட்டர் போன்ற வாடிக்கையான சமாச்சாரங்கள்.
 • இத்தனையும் வைத்துக் கொண்டு, ஜனநாயகம் என்கிறார்கள்.

திமுக-அதிமுக தேர்தல் செலவு ஒப்பீடு: திராவிட கட்சிகள் எவையும் சளைத்தவை அல்ல. 1970களிலிருந்து பார்த்தால், மாறி-மாறித்தான் ஆட்சி செய்து வருகிறார்கள். வட்டம்-மாவட்டம்,எம்.எல்.சி. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், வாரியத் தலைவர், என்று எந்த பதவிக்கு வந்தாலும், குறைந்த பட்ச காலத்தில், கார்-பங்களா-சொத்துகள் என்று தான் வளர்ச்சி அடைகிறார்கள். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல..

 • 2016-2021 தேர்தல்களை ஒப்பிடும் போது, திமுக எல்லாவற்றிற்கும் அதிகமாக செலவழித்துள்ளது. செலவுகளும் கனிசமாக உயர்ந்துள்ளன.
 • ஆனால், அதிமுகவிற்கு, எல்லாமே குறைந்துள்ளன. போட்டியிட்ட சீட்டுகள் உட்பட குறைந்துள்ளன.
 • ஆகவே, திமுக மேலிடம்-திமுகவினர், எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பில், வெறியில் செலவழித்து வெற்றிப் பெற்றுள்ளனர்.
 • மேலும், அதிமுக உடைந்துள்ளதால், செலவும் குறைந்துள்ளது எனலாம். சசிகலா தனியாக செயல்படுகிறார்.
 • ஒருவேளை, அதிமுகவினர் எல்லோரும் ஒன்று சேர்ந்தால், பலம் பெற்று, திமுகவைக் கட்டுப் படுத்தலாம்.
 • இல்லையென்றால், இந்த ஐந்து ஆன்டுகளிலேயே அசுர வேகத்தில் வளர்ந்து விடுவார்கள்.

ஊழலை ஒழிக்க எந்த அரசிய-வீரனும், திராவிட-சித்தாந்தியும், தமிழின-ரோசமுள்ளவனும் இல்லை: நிதர்சனம் என்னவென்றால், எந்த கட்சியும் ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்வதே இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், எதிர்கட்சியினர் பெரிய ஊழல்வாதிகள் போன்று தினம்-தினம் ஏதோ நடவடிக்கை எடுக்கப் பட்டு பிம்பத்தை உண்டாக்க முயல்கின்றனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த அரசுத்துறையிலும் சுத்தம் இல்லை. எல்லாமே லஞ்சத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. கைதுகள் ஆனாலும், கவலைப் படாமல், ஜாமீனில் வெளியே வருவது, மறுபடியும் பணியில் அமர்வது, ஏன், அதே இடத்திற்கு வந்து உட்கார்வது, “பார், என்னை எவனும் ஆட்ட முடியாது,” என்பது போல நடந்து கொள்வதால், லஞ்சம் தொடர்கிறது. அவப்பொழுது, ஏதோ ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அதோடு சரி. வெட்கம்-மானம்-சூடு-சொரணை எல்லாம் யாருக்கும் கிடையாது.

அரசியல்சினிமாகிரிக்கெட்வியாபாரம்விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்: இப்பொழுது, ஊடக பலத்தைப் பொறுத்த வரையில், திமுகவை யாராலும் மிஞ்ச முடியாது. ஆனானப் பட்ட, மோடியை தைரியமாக விமர்சித்து வருகின்றன என்றால், தமிழகத்தைப் பொறுத்த வரையில், அந்த அளவிற்கு ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகின்றனர். அதிமுகவிற்கு டிவி-செனல்கள் இருந்தாலும், சன் குழுமம் போன்ற மாநிலங்கள் ஆதிக்கம், தென்னிந்திய கவரேஜ், விளம்பரங்களைப் பெறும் சக்தி, சீரியல்களை உண்டாக்கி-பரப்பி மக்களை ஈர்த்து, அடிமையாக்கும் முறை, பெண்களைக் கவரும் யுக்திகள் மற்ற செனல்களிடம் இல்லை. அதனால் தான், விளம்பரங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன. இவையெல்லாம், ஒரு வட்டம் போன்ற, திரும்ப-திரும்ப நடப்பவை, ஒன்றையொன்று சார்ந்து நடப்பவை. அதனால், யாரும் இதில் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. எப்படியாகிலும், பொய்களைச் சொல்லி, ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், அதிரடி விளம்பரத்தால் பொருட்களை விற்க வேண்டும், பலன் கிடைக்கிறதா-இல்லையா என்பது பற்றி எல்லாம், எந்த ஒழுங்குமுறையும் இல்லை, தார்மீகமும் இல்லை. திராவிடத்துவ அரசியல், அரசியல்-சினிமா-கிரிக்கெட்-வியாபாரம்-விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான் என்று மெய்ப்பிக்கிறது.

வெளியே திட்டு, உள்ளே கட்டிக் கொள் என்ற கொள்கைதான் பின்பற்றப் படுகிறது: வியாபாரிகள், வணிகர்கள், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் மற்ற முதலாளிகள் கட்சிகளுக்கு நிதியுதவி செய்கின்றன. அன்பளிப்பாக, தானமாக கோடிகளைக் கொட்டுகின்றன. சரி, பதிலுக்கு அவை என்ன எதிர்பார்க்கும்? வரிசலுகைகள் மற்றும் வரியேய்ப்புகள் தான். மேடைகளில் நியாயம், தர்மம், ஒழுக்கம், தூய்மை என்றெல்லாம் பேசலாம், அவர்களது வியாபார ஸ்தலங்கள் மின்னலாம், வணிக வளாகங்கள் பளிச்சென இருக்கலாம், தொழிற்சாலைகளில் ஐ.எஸ்.ஓ.9000 / 9002 என்றெல்லாம் இருக்கலாம். ஆனால், ஊழல் இருக்கத்தான் செய்கிறது. எங்கு தரம், தராதரம், முறை-விதிகள், ஏற்படுத்தப் பட்ட நிர்ணயங்கள் உள்ளனவோ, அங்கு வைத்துக் கொள், மற்ற இடங்களில் கொள்ளை அடி என்ற கொள்கை தான் பின்பற்றப் படுகிறது. வெளியே திட்டு, உள்ளே கட்டிக் கொள் என்ற கொள்கைதான் பின்பற்றப் படுகிறது.

© வேதபிரகாஷ்

07-10-2021

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை – லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

செப்ரெம்பர் 16, 2021

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லைலஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

02-09-2021 அன்று கலைச்செல்வி கைது: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் கலைச்செல்வி[1].  புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்து 2 வாகனங்களுக்கான ஆர்.சி., புக் 2 ஆயிரம் ரூபாய் என 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயனிடம் கேட்டார்[2]. இந்நிலையில், தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளா்கள் அருண், அந்தோணியாகப்பா ஆகிய இருவரும், தங்கள் நிறுவனத்தின் மூன்று வாகனங்களுக்கான ஆா்சி புத்தகம் பெறுவதற்கு இடைத்தரகா் கார்த்திகேயன் என்பவா் மூலமாக கலைச்செல்வி ரூ. 4,500 லஞ்சமாக கேட்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனா். போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயன பவுடா் தடவிய பணத்தை இடைத்தரகா் கார்த்திகேயனிடம் அருண், அந்தோணியாகப்பா ஆகிய இருவரும் வியாழக்கிழமை 02-09-2021 அன்று கொடுத்தனா்[3]. அந்தப் பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் அளித்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், கலைச்செல்வியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா்[4]. பணத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும், கார்த்திகேயனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5]. இவ்வாறு, இவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் வாகன பதிவுக்கு லஞ்சம் கேட்ட போது நிறுவன மேலாளர்கள் அளித்த புகாரின்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்[6].

15-09-2021 அன்று நீதிபதி ஜமின் மனுவை நிராகரித்தார்: இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் போலீசார் அவரை கைது செய்யும்போது அவரிடம் எந்த பணமும் இல்லை மேலும் ஆய்வாளர் ஒரு பெண்ணாக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார். இப்படி அரசு வக்கீல் லஞ்சம் பெற்றவருக்கு ஆதரவாக வாதித்தது, பிரதிவாத ஆவணங்கள் சமர்ப்பித்தது திகைப்பாக இருக்கிறது. திராவிட ஆட்சியில் இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கின்றனர் போலும். கடந்த 60-70 ஆண்டுகளாக, தமிழகத்தில் எப்படி லஞ்சம், மாமூல், துட்டு வெட்டு போன்றவை செயல்படுகிறது என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தாலுக்கா அலவலகங்களில் அவர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப் படுகின்றனர் என்பது தினம்-தினம் நடக்கும் விசயமாக இருக்கிறது.

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை: இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி[7], “அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை[8]. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது[9]. ஆண்டுக்கு நூறு கணக்கு, என்று வருடத்திற்கு நூறு வழக்குகள் என பதிவு செய்கின்றனர்[10]. முறையாக விசாரிப்பது கிடையாது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்றும் ஆய்வு செய்யவேண்டும்[11]. அவ்வாறெல்லாம் தற்போது செயல்படுவதில்லை, பெயரளவிலேயே லஞ்ச ஒழிப்பு துறையாக இருக்கிறது,”என்று நீதிபதி தெரிவித்தார்[12]. லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்,” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி தெரிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது[13]. மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தனர்[14].

ஊழல், லஞ்சம் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கிறது: தமிழகத்தைப் பொறுத்த வரையில், லஞ்சம் கொடுத்தால் தான், மாண்புமிகு அரசு ஊழியர்கள், செய்கின்ற-செய்ய வேண்டிய வேலைகளையே செய்வர் என்பது, பிரசித்திப் பெற்ற விசயமாகி விட்டது. லஞ்சக் கைதுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. சஸ்பென்ட், இடமாற்றம் என்று செய்திகள் வருகின்றன. 1000 பேர் கைது என்றால், தண்டனை பெறுவது 10 தான் இருக்கின்றன. மற்ற விவரங்கள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. இதில் பெண்-ஊழியர்கள் அதிகமாக ட்டுபடுவதும், சிக்கிக் கொள்வதும் திகைப்பாக இருக்கின்றது. அவர்கள் குங்குமம்-பொட்டு, பட்டுப்புடவை சகிதம், மங்கலகரமாக வந்து, அமங்கலகரமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், அங்குள்ள அனைவரும் தாம்புக்கயறு அளவுக்கு நகைகள், பிரேஸ்லெட் முதலியவைப் போட்டிருப்பது, ஒரு அடையாளமாகக் கருதப் படுகிறது. இவர்களால், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன, வீடு கட்ட முடியாமல் நின்றுள்ளன, கடனில் மூழ்கின போன்வற்றை ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே மனசாட்சி இல்லாமல் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?[15]: “இந்த கட்டுரை யாதோ கருணாநிதி, அவர் குடும்பம் முதலியவற்றைப் பற்றி விமச்சிக்கும் கட்டுரை அல்ல. அவர், அவர் குடும்ப அங்கத்தினர்கள் அரசியல், அரசியல் அதிகாரம், முதலியவற்றை உபயோகித்து தங்களது தனி நபர் வருமானங்களை அதிகமாக பெருக்குவதற்கு உபயோகித்த முறை, அவற்றால் தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டத் தான் எழுதப் படுகிறது. இந்த மாதிரி எந்த அரசியல்வாதியும் மற்றவரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை வதைத்தால் அவர்களுக்கும் இது பொருந்தும். 1970லிருந்து இப்போழுது வரை பரிணாம வளர்ச்சி எடுத்துள்ள நிலைதான் இது,” என்று 20-08-2010 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது இப்பொழுதும் பொருந்துகிறது[16]. நீதிபதி சுருக்கமாக, ஆனால், உள்ள நிலைமையைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-09-2021


[1] மாலைமலர், பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது, பதிவு: செப்டம்பர் 03, 2021 16:58 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/09/03165859/2974314/Tamil-News-bribe-case-woman-inspector-arrested-in.vpf

[3] தினமணி, லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளா் கைது, By DIN  |   Published on : 03rd September 2021 12:11 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/sep/03/bribery-motor-vehicle-inspector-arrested-3692048.html

[5] தமிழ்.இந்து, பட்டுக்கோட்டையில்ரூ.4,500 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது, Published : 03 Sep 2021 03:16 AM; Last Updated : 03 Sep 2021 03:16 AM.

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/711838-.html

[7] புதியதலைமுறை, “அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” – உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, தமிழ்நாடு,    Sinekadhara Published :15,Sep 2021 08:38 PM

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/115883/High-court-branch-said–Government-officials-are-not-shy-about-getting-bribes

[9] தினமணி, அரசு உயா் அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவது இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து, By DIN  |   Published on : 15th September 2021 11:26 PM.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/sep/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88–%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3699843.html

[11] தமிழ்.இந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூச்சப்படுவதில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி , கி.மகாராஜன், Published : 15 Sep 2021 06:47 PM; Last Updated : 15 Sep 2021 06:47 PM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/716090-officials-are-not-shy-about-taking-bribes-high-court-dissatisfied-~XPageIDX~.html

[13] தினத்தந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 16,  2021 01:53 AM

[14] https://www.dailythanthi.com/News/State/2021/09/16015331/Madurai-ICourt-judge-dissatisfied-with-anticorruption.vpf

[15] வேதபிரகாஷ், லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?, 20-08-2010.

[16]https://corruptioninindia.wordpress.com/2010/08/08/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது, அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டது-படுகிறது!

ஏப்ரல் 28, 2021

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது, அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டது-படுகிறது!

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது: ஐந்து மாநில பேரவைத் தோ்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1,000 கோடிக்கு ரொக்கம், மதுபானம், இலவச பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது[1]. இது கடந்த 2016-இல் பறிமுதல் செய்யப்பட்டதைவிட நான்கு மடங்கு அதிகமாகும்[2]. இவ்வாறு கொடிக் கணக்கில்  பணம் செலவழிக்க கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தயாராக இருக்கிறார்கள் எனும்போது, பணம் செலவழிக்கவும் தயார், பணமும் தயார் என்று தெரிகிறது. சில் கோடிகள் கொட்டினால், பல கோடிகள் அள்ளலாம் என்ற பார்முலா செயல்படும் போது, ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. ஒட்டுக்குப் பணம்-திட்டம் வேற்றிகரமாக செயல்பட்டால், ஓட்டுப்போடாதவர்கள் பற்றிக் கவலையில்லை. எத்த்னை பேர், காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்  போடுவார்கள் என்று உறுதியாகும் போது, மற்ற கட்சி விசுவாசம், வேட்பாளர் முக்கியத்துவம், ஜாதி, மதம், போன்றவையும் பின்னே தள்ளப் படுகின்றன.

2016 விட நான்கு மடங்கு உயர்ந்துள்ள நிலை: இப்பொழுது தேர்தல் நடக்கின்ற மாநிலங்கள் தொலைவில் இருந்தாலும், மக்கள் மாறவில்லை, அரசியல் ஊழலுடன் அவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்றே தெரிகிறது. இதில் தோ்தல் முடிவடைந்த தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.446.28 கோடியும், நான்கு கட்டத் தோ்தல் முடிவடைந்த மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும், அஸ்ஸாமில் ரூ.122.35 கோடியும், கேரளத்தில் ரூ.84.91 கோடியும், புதுச்சேரியில் ரூ.36.95 கோடியும் அடங்கும்[3]. சாதாரண மக்கள் ஆயிரங்களுக்குக் கஷ்டப் பட்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இவர்களுக்கோ, கோடிகளே, தண்ணீர் போல செலவழிக்கத் தயாராக உள்ளது. கருப்புப் பணம் அந்த அளவுக்கு உள்ளது என்றால், ஊழலும் அந்நிலையில் கள்ளத்தனமாக வேலைச் செய்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மொத்தம் ரூ.1001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016-இல் இது ரூ.225.77 கோடியாக இருந்ததாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது[4].

கோடிகளில் பணம் பிடிபட்டாலும், யாரும் தன்னுடையது என்று கேட்கவில்லை: வருமான வரித்துறை சோதனையிட்டதற்கு, அரசியல் கட்சிகள், ஏதோ எதிர்கட்சிகளைப் பழி வாங்கும் போக்கில், குறி வைக்கிறது என்றெல்லாம் விவாதங்கள் செய்ய பட்டன. ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. ஆனால், கோடிகள் எவ்வாறு கணக்கில் வராமல் வைத்துக் கொள்ளப் பட்டன, சிக்கினாலும், அப்பணம் என்னுடையது என்று யாரும் கேட்காமல், அமைதியாக இருக்கின்றனர் என்று நோக்கத் தக்கது. சாதாரண மனிதன், ரஒரு நூறு ரூபாய் நோட்டுக் காணவில்லை என்றால் தேடிக் கொண்டே இருப்பான். கிடைத்தால் நிம்மதியடைவான், கிடைக்காவிட்டால் வருத்தப் படுவான். ஆனால், இங்கோ, கோடிகள் போனாலும், கவலைப் படாமல் இருக்கின்றனர். தோ்தலில் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருள்கள், மதுபானப் பொருள்கள் ஆகியவை வழங்குவதைத் தடுக்க வாக்குப் பதிவு நடைபெறும் வரை தோ்தல் ஆணையம் காவல் துறை, வருமான வரித் துறையினருடன் சோ்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது[5]. வியாழக்கிழமை 14-04-2021 வரையில் பறிமுதல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது[6]. அதன்படி, தமிழகத்தில் பிடிபட்ட ரூ. 446.28 கோடி பணத்தில் ரூ.236.69 கோடி வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட இருந்தது[7].

மாநிலங்களுக்கு ஏற்ப, மக்களுக்கு ஏற்ப பணம்பொருள் தேர்ந்தெடுத்து விநியோகித்தது: பிரசாந்த் கிஷோர் போன்றோர் கோடிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு, தேர்தலில் வெற்றியடைவது எப்படி என்று ஆலோசனைக் கூறுகிறார்கள். அப்படியென்றால், இவ்வாறு கோடிகளில் பணத்தை அள்ளி வீசு, என்பதும் அத்தகைய யோசனை-திட்டங்களில் ஒன்றா என்று தெரியவில்லை,

 • தமிழகத்தில் பெரும்பாலும் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது.
 • புதுவையில் வாக்காளா்களைக் கவர விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36.95 கோடியில் ரூ.27.42 கோடியில் விலை உயா்ந்த பொருள்களாக உள்ளன[8].
 • மேற்கு வங்கத்தில் இதுவரை ரூ.118.33 கோடிக்கு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[9].
 • கேரளத்தில் வாக்காளா்களை கவர தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 84.91 கோடியில் ரூ.50.86 கோடிக்கு விலை உயா்ந்த பொருள்களாகும்[10].
 • அஸ்ஸாமில் வாக்காளா்களுக்கு இலவசமாக மதுபானங்கள் வழங்கப்பட்டன. அதன்படி 41.97 கோடிக்கு மதுபானங்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த மாநிலங்களுக்கு, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, அரசியல் கட்சிகள், பொருட்களை-பணத்தைத் தேர்ந்தெடுத்து விநியோகித்தன என்றாகிறது. ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் ரூ. 1,000 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தோ்தல் ஆணையத்தின் வரலாற்றில் மைல்கல் என்றும், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சோ்ந்து நடத்திய சோதனையில்தான் இது சாத்தியமானது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் கோடிகள் பறிமுதல் செய்ததில் முன்னிலை வகிக்கிறது: தமிழகம், கேரளம், அஸ்ஸாம், புதுவை ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் முடிவடைந்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு இன்னும் மூன்றுகட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே- 2- ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் – ரூ.446.28 கோடி

மேற்கு வங்கம் – ரூ.300.11 கோடி

அஸ்ஸாம் – ரூ.122.35 கோடி

கேரளம் – ரூ.84.91 கோடி

புதுச்சேரி – ரூ.36.95 கோடி

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. மதுரையில் வாக்காளர் பட்டியலும் பணமுமாக இருந்த திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பல அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் வந்த சரக்குப் பெட்டக லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2,380 குக்கர்கள் கைப்பற்றப்பட்டன.  சென்னை நீலாங்கரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது விமர்சனத்துக்குள்ளாகியது. அதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதுபோன்று சோதனை நடத்துவதை தவறு என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ விமர்சிக்க முற்பட்டால் தங்கு தடையில்லாத பண விநியோகத்துக்கு அது வழிகோலும். 

© வேதபிரகாஷ்

28-04-2021


[1] தினமணி, 5 மாநிலத் தோ்தலில் ரூ. 1,000 கோடி பறிமுதல்: தமிழகம் முதலிடம், By DIN  |   Published on : 17th April 2021 07:15 AM.

[2] https://www.dinamani.com/india/2021/apr/17/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3605833.html

[3] தினமலர், 5 மாநில சட்டசபை தேர்தல் ரூ. 1,000 கோடி பறிமுதல், Updated : ஏப் 16, 2021  23:34 |  Added : ஏப் 16, 2021  22:33.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2751189

[5] நக்கீரன், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை 1,000 கோடி ரூபாய் பறிமுதல்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 16/04/2021 (21:15) | Edited on 16/04/2021 (21:30)

[6] https://nakkheeran.in/24-by-7-news/india/1000-crore-confiscated-so-far-states-where-elections-are-being-held

[7] ஏ.பி.பி.லைவ், 5 மாநில சட்டசபை தேர்தல் : ரூபாய் 1,000 கோடி பறிமுதல், By: சுகுமாறன்Updated: 16 April 2021, 11:23 PM (IST)

[8] https://tamil.abplive.com/news/india/election-commission-seized-1000-cr-1296

[9] தினகரன், 5 மாநில தேர்தல் வேட்டையில் 1,000 கோடி பணம், மதுபானம் பறிமுதல், 2021-04-17@ 01:29:32; https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671532

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671532\

ரூ 1.3 கோடிகள் லஞ்சம் பெற்று, மேலும் ரூ 3 கோடிகள் கேட்டு மாட்டிக் கொண்ட மெத்தப் படித்த பெண் இஞ்சினியர்!

ஏப்ரல் 27, 2021

ரூ 1.3 கோடிகள் லஞ்சம் பெற்று, மேலும் ரூ 3 கோடிகள் கேட்டு மாட்டிக் கொண்ட மெத்தப் படித்த பெண் இஞ்சினியர்!

கார்த்திகேயனி, இஞ்சினியர் மீது ஊழல் / லஞ்சம் புகார்: சமீபத்தில், இந்த வழக்கு, திகைப்படையச் செய்வதாக இருக்கிறது. ஏனெனில், ஒரு பெண், அதிலும், பொறியியல் படித்த பட்டதாரி பெண், உயர்ந்த இடத்தில் வேலைசெய்து கொண்டு, நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிற நிலையில், கோடிகளில் லஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்டு மாட்டிக் கொண்டது, அதிர்ச்சியாக உள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்ச பெற்றதற்கான 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளராக கார்த்திகேயினி [Joint Chief Engineer T Karthikeyani, working in office of Chief Engineer (planning, designs and investigation), State Highways, in Guindy] என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் விடுவதில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெற்றதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி மீது வழக்கு பதிவு செய்து [FIR No. 08 Date: 16-02-2021] விசாரணை நடத்தி வருகின்றனர்[1].

கார்த்திகேயனியின் வீட்டில் சோதனை: கார்த்திகேயனி எண்.6, பேவாட்ச் கிராஸ், பாண்டியன் நகர், வெட்டுவான்கேனி, சென்னை, என்ற இடத்தில் வசித்து வந்தார். அதாவது நல்ல வசதியான வீட்டில் தான் வசித்து வருகிறார். பிறகு, ஏனப்படி லஞ்சம் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் 23-02-2021 அன்று சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர்[2]. இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து லஞ்சம் பணம் பரிவர்த்தனை குறிப்புகள் அடங்கிய 6 டைரிகள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள், குத்தகை ஒப்பந்தம் ரசீதுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு சக்கர வாகனத்தின் ஆர்சி.புத்தகங்கள் மற்றும் சொத்துப் பட்டியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கு புத்தகங்களில் உள்ள பணம் குறித்து அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர்.

ரூ.1.30 கோடி லஞ்சம் கேட்டுப் பெற்றது: சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் கார்த்திகேயினி. மாநில நெடுஞ்சாலைத் துறையில் என்ஜினீயராக பணியாற்றும் இவர், தன் மீதான லஞ்ச வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:- “மனுதாரர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பிரண்டு என்ஜினீயராக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது, கோவில்களில் மின்விளக்கு பொருத்தும் ரூ.400 கோடி ஒப்பந்தப் பணியை டெல்லியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதாக கூறி, அதன் உரிமையாளர் அமன் கோயல்[3] என்பவரிடம் ரூ.1.30 கோடியை லஞ்சமாகப் பெற்றுள்ளார். கார்த்திகேயினி வீட்டுக்குச் சென்று ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை அமன் கோயல் கொடுக்கும்போது கேமராவை மறைத்து வைத்து வீடியோ படம் எடுத்துள்ளார். அதில் பணத்தை கார்த்திகேயினி பெறுவதும், அவரது மகள் வித்யாலட்சுமி பணத்தை எண்ணுவதும் இடம் பெற்றுள்ளன. மேலும் கூடுதலாக ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதால், அதை காசோலைகளாக அமன் கோயல் வழங்கியுள்ளார்[4]. அந்த காசோலைகளை கார்த்திகேயினி தன் மகள் வித்யாலட்சுமி, உதவியாளர் கேசவன் ஆகியோரது வங்கிக் கணக்குகளில் செலுத்தி பணத்தைப் பெற்றுள்ளார்[5]. கோடிகளில் லஞ்சம் கொடுக்கும் போது எச்சரிக்கையாகத்தான் இருப்பார்கள் போலும்.

கார்த்திகேயனி மேலும் ரூ 3 கோடிகள் கேட்டது: கார்த்திகேயனி நெடுஞ்சாலைத் துறையில், எல்.இ.டி விளக்குகள் பொறுத்த ரூ.400 கோடிகள் கான்ட்ராக்ட் வாங்கித் தருவதாக வாக்களித்து, அனன் கோயலிடமிருந்து இப்பணத்தைப் பெற்றுள்ளார். பிறகு, மறுபடியும் 30 லட்சம் கேட்டுப் பெற்றுள்ளார். ஆனால், எந்த வித ஆர்டரும் வரவில்லை என்றாதால், சென்னைக்கு வந்து சந்திக்க முடிவு கோயல் செய்தார். அதன் படியே, டெஸிடென்ஸி ஹோட்டலில் வந்து சந்தித்துள்ளார். அப்பொழுது, கொடுத்த பணம் மற்ற அதிகரிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டதாகவும், இதனால், மேலும் ரூ 3 கோடிகள் கொடுக்கவேண்டும் என்று கார்த்திகேயனி கேட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த கோயல், பிறகு சந்திக்கலாம் என்றார். அதற்குள் விசாரித்த போது, அத்தகைய டென்டரும் / ஒப்பந்தமும் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் தான், புகார் கொடுத்துள்ளார்.

சம்மனைப் பெறவில்லை, ஆஜராகவில்லை: பின்னர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால் அமன் கோயல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அதை கொடுக்கவில்லை. மேலும், அறநிலையத்துறை ரூ.400 கோடிக்கு ஒப்பந்த பணி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை எனத் தெரியவந்தது. அதாவது, போலியான ஒப்பந்தம் / டென்டர் போன்றதை வைத்து, லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. எனவே, எந்த நபரும், கோடிகளைக் கொடுத்து சும்மா இருக்க மாடார். இதுகுறித்து அமன் கோயல் கொடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. மனுவில் கூறப்பட்டுள்ள முகவரியில் கார்த்திகேயினி வசிக்கவில்லை. அதாவது, தப்பித்துக் கொள்ள, வேறு உடத்திற்கு சென்று விட்டார் என்று தெரிகிறது. மேலும், இதெல்லாம், வழக்கை இழுப்பதற்கு, கையாளும் முறையாக, குற்றவாளிகள் பின்பற்றி வர்கின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த முகவரியில் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் அனைத்தும் திரும்பி வந்துவிட்டது[7]. அதாவது, சம்மன் வந்ததே தனக்குத் தெரியாது என்றும் வாதிடுவர். ஆனால், வீட்டின் சுவரில், சாட்சிகளுடம் ஒட்டி விட்டு வருவர். அவ்வாறு செய்தாலே, சம்மன் கொடுக்கப் பட்டதாக பாவிக்கப் படும்.

கார்த்திகேயனி மீது பல புகார்கள்: கார்த்திகேயினி விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. அதாவது, யாருடைய ஆலோசனை பேரில் அவ்வாறு டபாய்த்து வருகிறார் என்று தெரிகிறது. அவர் மீது இதேபோல பல லஞ்சப் புகார்கள் உள்ளன. இந்த வழக்கில் கார்த்திகேயினி, இடைத்தரகர்கள் தட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், கேசவன் மற்றும் கார்த்திகேயினியின் மகள் வித்யாலட்சுமி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் ரூ 30 லட்சங்கள் காசோலைகளாக வாங்கி கொண்டு, வங்கிகளில் டெபாசிட் செய்து, கார்த்திகாயனியிடம் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது,” இவ்வாறு அதில் கூறியிருந்தனர்[8]. இவர் பாளையங்கோட்டையிலும் வேலை செய்துள்ளார் என்று அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன[9].

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது: இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் அரசு வக்கீல் சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, மனுதாரர் மீது லஞ்ச வழக்கு ஒன்று மதுரையில் நிலுவையில் இருப்பதாகவும், அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் வாதிட்டார். அதாவது செல்லும் இடங்களில் எல்லாம், லஞ்சம் பெறுவது, வழக்காமக் கொண்டுள்ளார் போலும். இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்[10].

© வேதபிரகாஷ்

26-04-2021


[1] தினகரன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் சோதனை: விஐபி பெயர் அடங்கிய 6 முக்கிய டைரிகள் சிக்கின, 2021-02-24@ 01:47:28.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=657607

[3] One Mr.Aman Goyal is C.E.O of M/s.Radianz Pvt.Ltd., having office at G/37, Sector-5, Bawanalndl. Area, Delhi – 110039. The Company has been in the business of rendering Electrical, Telecom and Civil Contract services including installation of LED lightings.

[4] குமரி எக்ஸ்பிரஸ், ரூ.1¼ கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: பெண் என்ஜினீயரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு,

[5] http://kumariexpress.com/rs-10-crore-bribery-case-court-dismisses-pre-bail-petition-of-female-engineer/

[6] தினமணி, லஞ்ச வழக்கு: பெண் பொறியாளா் முன்ஜாமீன் மனு தள்ளுபடி, By DIN  |   Published on : 27th April 2021 03:41 AM.

[7] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/apr/27/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3612354.html

[8] தினத்தந்தி, ரூ.1¼ கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: பெண் என்ஜினீயரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு , பதிவு: ஏப்ரல் 27,  2021 06:44 AM.

[9] Tmt. T. Karthikeyani, Assistant Divisional Engineer (Highways) (Additional Charge) Investigation Sub Division, VMS Kalyana Mandapam, Maharaja Nagar, Palayamkottai, Tirunelveli – 627 011.

[10] https://www.dailythanthi.com/News/State/2021/04/27064418/Rs-10-crore-bribery-case-Court-dismisses-prebail-petition.vpf

TNPSC தேர்வுகள், மோசடிகள், கோடிகளில் பணம் பெற்றது, அரசு ஊழியர்-அதிரிகாரிகளின் தொடர்புகள், முதலியவை சாதாரண மாணவர்களின் நம்பிக்கையைக் கொன்றுள்ளது (2).

ஒக்ரோபர் 20, 2020

TNPSC தேர்வுகள், மோசடிகள், கோடிகளில் பணம் பெற்றது, அரசு ஊழியர்-அதிரிகாரிகளின் தொடர்புகள், முதலியவை சாதாரண மாணவர்களின் நம்பிக்கையைக் கொன்றுள்ளது (2).

இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக அரசின் உள்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணைக்கு பின்னர் முறைகேட்டில் தொடர்புடைய 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கைது செய்தனர். 40 பேருக்கு வலை இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முறைகேடுகள் தொடர்பாக மேலும் 40 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.. டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் என பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் மீண்டும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள், உதவியர்கள் என பலரும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

2015லிருந்து தொடரும் வழக்கு:கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, மோசடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்யக் கோரி திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோசடி புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடைபெற்று வருகின்றது. தேர்வில் 74 பேர் தேர்வு செய்யபட்டனர். தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் இருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்[1]. இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையத்தில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது. சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன[2]. இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும் இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ஆகியோர் மாணவரிடம் இருந்து 15 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடுகள் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் இந்த புகார் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

TNPSC உள்ளே பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்: குரூப்-4, குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். இந்த மோசடியை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன[3]. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்திக்குறிப்பு வெளியிட்டது[4].ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை[5].  மேலும் வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகளை இதுவரை மாற்றியுள்ளனர்[6]. திமுக வழக்குத் தொடர்ந்தது. குரூப் 2 ஏ, வேளாண்மை பொறியாளர்கள் நியமனம், குரூப் 1 என்று பல தேர்வுகளிலும் சந்தேகக் கணைகள் பாயத்துவங்கின[7]. டிஎன்பிஎஸ்சியே முன்வந்து, ‘ஏதோ நடந்திருக்கிறது’ என்று ஒப்புக்கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு கேட்டுக்கொண்டது[8]. ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட புரோக்கர்கள் மூலம் நடந்த மோசடி அல்ல இது; உள்ளே பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதை வெளியில் கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை, ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை தேவை என்ற குமுறல் கோரிக்கைகள் எல்லா முனைகளிலும் எழுந்துள்ளன. ஏதோ முறைகேடு நடந்தது என்பதால், டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை சந்தேகிக்க கூடாது என்று அரசு தரப்பில் நியாயப்படுத்தினாலும், பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய இந்த தமிழக வியாபம் ஊழல்களை வெளிக்கொணர வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்.

மோசடி எப்படி நடதிருக்கக் கூடும்?[9]: “தி இந்து” கொடுக்கும் விவரங்களிலிருந்தும்[10], மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்தும், கீழ்கண்டவாறு, விசயங்களை, வரிசையாகக் குறிப்பிடலாம்:

 1. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையமாக தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதியது. அதாவது, அவ்வாறு வலியுருத்தப் பட்டது.
 2. 39 பேர் பரீட்சை பாஸ் ஆகி, முதல் 100 பட்டியலில் வந்தது. ஆனால், மற்றவர்கள் தோல்வியுற்றது.
 3. இரண்டு மை கொண்ட பேனாக்களைக் கொடுத்து எழுதச் சொன்னது. சாதாரண பேனாவினால் பெயர், பதிவு எண் முதலியவை எழுதினார்கள், விடைகள் மாயமாகும் இங்க் கொண்ட பேனாவால் குறியிடப் பட்டது.
 4. விடைத் தாள்களை, வேன் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தது. சித்தன்டி-ஜெயகுமார் திட்டம்.
 5. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, விடைகள் மறைந்த பிறகு, வேறு பேனாவினால், சரியான விடைகள் குறியிடச் செய்தது. ஜெயகுமார் வீட்டில் லிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.
 6. ஏன் விடைத் தாள்களில் மறையும் மை கொண்ட பேனாவினால் குறியிடச் செய்ய வேண்டும் என்றால், மேற்பார்வையிடும் அதிகார்கள், குறந்தது, தேவையான விடைகளை குறியிட்டார்களா என்று சரிபார்த்து கையெத்திட வேண்டும், அதனால், குறியிடச் சொன்னார்கள்.
 7. அதாவது, மேலெழுதவாரியாகக் கவனித்தால், பரீட்சை முறையாக நடந்தது போலிருக்கும்.
 8. இந்த வழக்கை விசாரித்த ஜாபர் சேட் [Director-General of Police M.S Jaffar Sait] எளிதாகக் கண்டு பிடித்தார்.
 9. சந்தேகிக்கப் பட்ட, இரண்டு தாசில்தார்களும் சென்னைக்கு வரவழைக்கப் பட்டு, விசாரிக்கப் பட்டனர். ஏனனில், இவர்களுக்கு சரியான பதில்கள் கொண்ட, விடைத்தாள் கொடுக்கப் பட்டது.
 10. ஆக, இவையெல்லாம் திட்டமிட்டப் படித்தான் நடந்துள்ளன. அரசு பல விசயங்களை மறைக்கின்றன என்றும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

20-10-2020


[2] https://tamil.indianexpress.com/tamilnadu/tnpsc-group-1-exam-scam-dmk-seeks-cbi-inquiry-chennai-high-court-notice-cbi-172859/

[3] மாலைமலர், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள், பதிவு: பிப்ரவரி 15, 2020 11:49 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2020/02/15114958/1286086/TNPSC-exams-method-changes-after-exam-scam.vpf

[5] தமிழ்.நியூஸ்.18, டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் திமுக மனு!, NEWS18, LAST UPDATED: FEBRUARY 14, 2020, 5:50 PM IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-has-filed-a-petition-with-the-chief-secretary-demanding-the-cbi-investigation-in-tnpsc-scam-vin-vel-254517.html

[7] தினகரன், குரூப் 4…குரூப் 2 உட்பட பல தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு தமிழகத்தின் மெகா வியாபம் ஊழல்: டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மை கேள்விக்குறி, 2020-02-03@ 00:31:18.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=560906

[9] The Hindu, How to crack TNPSC Group-IV Services examination: use disappearing ink, re-marked answer sheets, CHENNAI , JANUARY 24, 2020 22:44 IST, UPDATED: FEBRUARY 09, 2020 01:11 IST.

[10] https://www.thehindu.com/news/national/tamil-nadu/how-to-crack-tnpsc-disappearing-ink-re-marked-answer-sheets/article30646660.ece

TNPSC தேர்வுகள், மோசடிகள், கோடிகளில் பணம் பெற்றது, முதலியவை சாதாரண மாணவர்களின் நம்பிக்கையைக் கொன்றுள்ளது (1).

ஒக்ரோபர் 20, 2020

TNPSC தேர்வுகள், மோசடிகள், கோடிகளில் பணம் பெற்றது, முதலியவை சாதாரண மாணவர்களின் நம்பிக்கையைக் கொன்றுள்ளது (1).

அப்பல்லோ படிப்பு மையம், சாம் ராஜேஸ்வரன், ஜாமீனில் வெளியே வருதல் 2017-18:  சாம் ராஜேஸ்வரன் (R. Sam Rajeswaran) நடத்தி வந்த, அப்பல்லோ படிப்பு மையம் (Apollo Study Centre) – என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிகமான குரூப்-1 (Group-1 officers) அதிகாரிகளாகத் தேர்வு பெற்றது பல கேள்விகளை எழுப்பியது. தேர்ந்தடுக்கப் பட்ட 74 பேர்களில், 62 அப்பல்லோ படிப்பு மையத்தில் தேர்வு பெற்றவர்கள்[1]. காசி ராம் குமார் TNPSCன் பிரிவு அதிகாரி 26-04-2018 அன்று கைது செய்யப் பட்டதில், தேர்ந்தெடுக்கப் பட்ட ஒவ்வொருவரும் சுமார், ரூ.1 கோடி இடைத்தரகர்கள், விடைதாள்களைத் திருத்துபவர்கள், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், TNPSC அதிகாரிகள் என்று எல்லோருக்கும் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது[2]. 18-07-2017 அன்று, சத்தியம் தொலைக்காட்சியில் இதைப் பற்றிய செய்தி வெளியானது. (Sathyam TV News Channel had telecasted a special news bulletin on 18.07.2017 after 03.00 p.m.,) இந்நிலையில், தான் கைது செய்யப் படலாம், என்றதால், சாம் ராஜேஸ்வரன் முன்பே ஒரு பெயில் மனுவை தாக்கல் செய்தார். அரசு தரப்பில் பதில்-மனு தாக்கல் செய்தாலும், XVவது செசன்ஸ் நீதிபதி, எஸ். புருஷோத்தமன் [The XV additional sessions judge (vacation judge)], சாம் ராஜேஸ்வரனனுக்கு பெயில் கொடுத்து, நீதிமன்ற அனுமதி இல்லாமல், வெளிநாடு செல்லக் கூடாது என்று ஆணையிட்டார்[3]. அவர் வெளியே வந்த பிறகு, அப்பல்லோ படிப்பு மையம் தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. ஆனால், கைதுகளோ 2020களிலும் தொடர்கின்றன.

பிப்ரவரி 2020க்குப் பிறகு அக்டோபரில் ஆரம்பித்த TNPSC லஞ்சக் கைதுகள்: தமிழகத்தையே அதிர வைத்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு (TNPSC Exam Scam Case) வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது[4]. தற்போது 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்[5]. மேலும் 40 பேரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் 2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 (2019 Group IV exam) மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ ( 2017 Group II-A exam.) தேர்வுகளில் முறைகேடாக ஒரு சில தேர்வு மையங்களை தேர்வு செய்து, பலர் முறைகேடாக பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இப்படி முறைகேடு செய்து சிலர் வெற்றிபெற்றது உண்மை தான் என டிஎன்பிஎஸ்சி அவர்கள் மீது புகார் அளித்தது. இந்த புகாரை ஏற்று சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி[6], டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளர்க் ஓம்காந்தன் முன்னரே கைது செய்யப் பட்டனர்.  இதுவரை, 67 பேரை  CB-CID கைது செய்துள்ளது[7]. 2020 பிப்ரவரிக்குப் பிறகு, கொரோனா காரணத்தை வைத்துக் கொண்டு, நீதிமன்றங்கள் முழுவதுமாக இயங்கவில்லை மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும் அதேபோல வேலைகளை குறைந்த அளவில் செய்து வந்தார்கள்[8] என்றும் செய்திகள் விவரித்தனர். ஆனால், கைது செய்யப் பட்டவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை.

தமிழக பலதுறை ஊழியர், அதிகாரிகள் இந்த வலையில் சேலை செய்தது: என். வெங்கடேஸ்வரன் (36), அசிஸ்டென்ட், வணிகவரித் துறை, புதுக்கோட்டை மற்றும் எம். விமல்குமார் (34), அசிஸ்டென்ட், நெடுஞ்சாலைத் துறை, முசிறி, திருச்சி கைது செய்யப் பட்டனர்[9]. இப்படி பலதுறை அரசு ஊழியர்களுக்கு என்ன சமந்தம், தொடர்பு அல்லது பிணைப்பு? வெங்கடேஸ்வரன், ஜெயகுமாருக்கு உத்திரமேரூர் வி.ஏ.ஓ மூலம் ரூ.12 லட்சம் கொடுத்து, Group 2A examல் 265.5 மதிப்பெண் பெற்று, 41வது இடத்தைப் பெற்றான். அதேபோல, விமல்குமார், ராதா மூலம் ரூ.8 லட்சம் கொடுத்து, 278 மதிப்பெண் பெற்று, 22வது இடத்தைப் பெற்றான்.வேலையைப் பெற்றான்[10].  இப்படி, இந்த ஊழல்வலை பெரிதாகிக் கொண்டு போகிறது. ஆனால், அரசு தரப்பில், இதைப் பற்றிய அறிக்கை எதுவும் வந்ததாகத் தெரியவில்லை, கைது-கைது என்று நடந்தாலும், பிறகு என்னவாயிற்று. விசாரணையில், என்ன வெளி வந்தது, போன்றவை மர்மமாகவே இருக்கின்றன.

ஜெயகுமாரின் ஆதிக்கம், அரசு அதிகாரிகள் தொடர்பு: எஸ். ஜெயகுமாரின் புகைப் படங்கள் முக்கிய ரெயில்வே-பேரூந்து-விமான நிலையங்களில் சுற்றில் விட்டு, வேறெங்கும், ஓடாதபடி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[11]. ஜெயகுமாரின் புகைப்படம்  ஏதோ சாமியாரின் படம் போல காணப்பட்டது. ஜெயகுமாரின் முகப்பேர் இல்லத்தில் சோதனையிட்டபோது, லேப்டாப், பென்டிரைவ் மற்றும் விசேசமான இங்க் கொண்ட 60 பேனாக்கள், ஆவணங்கள் கைப்பற்றப் பெற்றன[12]. இவனுக்கு, தமிழகம் முழுவதும், மற்ற பலதுறையில் வேலை செய்பவர்கள், ஏஜென்ட் போல இருந்து, பணத்தை வசூலித்து, இவனுக்குக் கொடுத்தனர். சீதன்டி என்ற போலீஸ்காரனிடமிருந்து, அவன் ரூ 82.5 லட்சங்களை, வேலைக்கு ஆசை பட்டவர்களிடமிருந்து வசூலித்தது தெரிந்தது[13]. அவன் சிவகங்கையில் கைது செய்யப் பட்டான்[14]. இவன் TNPSCன் உறுப்பினராக இருந்த ஒரு டி.ஜி.பிக்கு கார் டிரைவாக வேலைப் பார்த்து வந்தான். ஓம்காந்தன், TNPSC  வேலையாள் மாணிக்கவேலுக்கு(TNPSC staff Manickavel) உதவியாக செயல்பட்டான். ராமேஸ்வரத்திலிருந்து, விடைத்தாள்களை சென்னைக்கு வண்டியில் கொண்டு வந்தான். 01-09-2019 இரவு 8 மணிக்கு அவற்றை ஒரு வேனுக்கு மாற்றினர். வேனின் சாவியை ஓம்காந்தன் வைத்துக் கொண்டான். ஜெயகுமார் காரில் அந்த வேனைப் பிந்தொடர்ந்தான். இதற்குள் 2026ல் ரூ 15 லட்சம் ஜெயகுமாருக்குக் கொடுத்து சேர்ந்த ஒரு VAO மாட்டிக் கொண்டான்.

இடைத்தரகர்கள் முதல் பலதுறை ஊழியர்கள் கைது: இடைத்தரகர்கள், பணம் கொடுத்து வென்றவர்கள் உட்பட 32 பேரை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பலரும் வெற்றி பெற்றதாக தகவல் டிஎன்பிஎஸ்சி வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் பல முறை விசாரணை நடத்தினர். இதில் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி, ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி மிகப்பெரிய மோசடி நடத்தி 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 15 நாட்களில் பலர் கைது இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி எஸ். ஜெயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி, 2020 சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 23வது மெரோபோலிடன் மேஜிஸ்ட்ரேட் அவனை 07-02-2020 வரை ரிமேன்டில் வைக்க ஆணையிட்டார்[15]. போலீச்காரர் சீதன்டி மற்றும் ஜெயகுமார் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

© வேதபிரகாஷ்

20-10-2020


[1] The Times of India, TNPSC recruitment scam probe gathers steam, A Selvaraj | TNN | Updated: May 17, 2018, 08:59 IST.

[2] https://timesofindia.indiatimes.com/city/chennai/tnpsc-recruitment-scam-probe-gathers-steam/articleshow/64197048.cms

[3] The respondent apprehending arrest, filed an anticipatory bail petition before the Vacation Sessions Court, Chennai in Crl.M.P.No.7986 of 2018. The learned Judge was pleased to grant anticipatory bail to the respondent subject to the following conditions:

 (i) In the event of arrest or on his surrender before the learned Special Metropolitan Magistrate (CCB Court), Egmore (Allikulam), Chennai on or before 30.05.2018 failing which the order shall stand cancelled; the petitioner is ordered tobe released on bail on his executing a bond for Rs.10,000/- with two sureties for a like sum to the satisfaction of the said Magistrate.

https://indiankanoon.org/doc/58084654/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு.. மேலும் 26 பேர் கைது.. 40 பேருக்கு வலை, By Velmurugan P | Updated: Sunday, October 18, 2020, 15:07 [IST].

[5] https://tamil.oneindia.com/news/chennai/tnpsc-exam-fraud-case-26-people-have-been-arrested-by-the-cbcid-police/articlecontent-pf494668-400751.html

[6]  An Armed Reserve constable- Sithandi, a native of Periyakananoor in Sivaganga and an Armed Reserve police constable working in Chennai- a key suspect in the ongoing CB-CID probe into TNPSC examination scam. He worked as car driver for a retired police DGP, who has also served as the chairperson of TNPSC.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/feb/05/tnpsc-scam-armed-reserve-constable-arrested-2099197.html

[7] Indian Express, TNPSC scam: CB-CID arrests 15 more in a month, Published: 13th October 2020 03:43 AM  |   Last Updated: 13th October 2020 03:43 AM.

[8]  During the pandemic, the courts didn’t function at full swing, while the enforcement officials were also exercising their functions in a limited manner. The CB-CID has so far arrested 67 people in connection with the scam, including the latest arrests.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/oct/13/tnpsc-scam-cb-cid-arrests-15-more-in-a-month-2209466.html

[9] Indian Express, TNPSC scam: Two more officials arrested for bribing to clear Group 2A exams, Published: 09th February 2020 05:36 AM  |   Last Updated: 09th February 2020 05:37 AM.

[10] Officials say Venkateshwaran gave Rs 12 lakh bribe to Jayakumar through Uthiramerur Village Administrative Officer Vasanthakumar and cleared Group 2A exam with 265.5 marks. He secured 41st rank in the State. Vimalkumar paid Rs 7 lakh to Jayakumar through one Radha. He got 276 marks (22nd rank).

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/feb/09/tnpsc-scam-two-more-officials-arrested-for-bribing-to-clear-group-2a-exams-2100954.html

[11] Times of India, TNPSC scam: Key accused surrenders, TNN | Updated: Feb 7, 2020, 06:26 IST.

[12] Indian Express, Tamil Nadu CB-CID raids house of state PSC scam accused, Published: 31st January 2020 05:53 AM  |   Last Updated: 31st January 2020 05:53 AM.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/31/tamil-nadu-cb-cid-raids-house-of-state-psc-scam-accused-2096934.html

[13] Indian Express, TNPSC scam: Armed Reserve constable arrested, Published: 05th February 2020 05:34 AM  |   Last Updated: 05th February 2020 05:34 AM.

DTnext, TNPSC scam: CB-CID takes custody of key suspects again, Published: Mar 03,2020 02:55 AM.

[14] https://www.dtnext.in/News/City/2020/03/03025528/1218107/TNPSC-scam-CBCID-takes-custody-of-key-suspects-again.vpf

[15] The 23rd metropolitan magistrate court directed that Jayakumar be remanded till Friday and be produced before the CB-CID court in Egmore on that day. CB-CID investigators are expected to take him into custody for detailed questioning. Police constable Sithandi and Jayakumar are the main suspects in the scam.

https://timesofindia.indiatimes.com/city/chennai/tnpsc-scam-key-accused-surrenders/articleshow/73994070.cms

பதிவாளர் அலுவலங்களில் திடீர் ரெயிடுகள், சோதனைகள், லட்சங்களில் பணம் பறிமுதல்: சிலருக்கு பணியிட மாற்றம்! முடிவுகள் எப்படி இருக்கும்? (2)

ஒக்ரோபர் 19, 2020

பதிவாளர் அலுவலங்களில் திடீர் ரெயிடுகள், சோதனைகள், லட்சங்களில் பணம் பறிமுதல்: சிலருக்கு பணியிட மாற்றம்! முடிவுகள் எப்படி இருக்கும்? (2)

தமிழகத்தில் பதிவுத்துறை 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து 50 மாவட்ட பதிவு அலுவலகங்கள் பிரித்து, அதன் கீழ் 571 சார்பதிவு அலுவகங்கள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் சுமார் 10 முதல் 20 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம், பிளாட் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அந்தந்த சார்பதிவாளர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்போது தான் பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை என மூன்று பதிவுத்துறை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: இதன் கீழ் சுமார் 10க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரம் பதிவு செய்வதற்கு, வீடு, மனை, நிலம், தனியார் மற்றும் வங்கிகளுக்கு எம்ஒடி பதிவு செய்பவர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தினாலும், நிலமதிப்பிற்கேற்ப பதிவு கட்டணமும், பத்திர கட்டணம் வசூலிக்கப்படும். இதில், பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர பதிவு செய்பவர்கள், வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள், நிலத்தின் தன்மை பொறுத்து, அவர்களிடம் லஞ்சமாக பணம் வசூலிக்கப்பட்டு வருவது எழுதப்படாத சட்டமாக உள்ளது[1]. இது போன்ற அவலத்தால், தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகத்திலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. பட்டுக்கோட்டையில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும், பத்திரப்பதிவுக்குசார் பதிவாளர் அலுவலகம் அலகு 1, சார் பதிவாளர் அலுவலகம் அலகு 2 என இரண்டு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரம் பதிவு செய்வதற்கு, வீடு, மனை, நிலம் வாங்குபவர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தினாலும், நிலமதிப்பிற்கேற்ப லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது[2].

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது- லஞ்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கி வருவது: தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 20 முதல் 30 பத்திர பதிவுகள் நடைபெறுகின்றது. பதிவு செய்ய வருபவர்கள், பத்திர கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். ஆனால் அலுவலகத்திலுள்ள சார்பதிவாளர் முதல் அலுவலர்கள் வரை கவனிக்க வேண்டியிருப்பதால், இரண்டு கட்டணத்துடன், கூடுதலாக லஞ்சம் வசூலிக்கின்றனர். தினந்தோறும் நடைபெறும் பத்திர பதிவுகளை வைத்து, வாங்கப்படும் லஞ்ச பணத்தை, அவர்கள் சொல்லும் இடத்திலோ அல்லது மாலையில் பணி முடிந்து செல்லும் போதோ, கொடுத்து விடுகின்றனர். பதிவுத்துறைக்கு பணிக்கு வருபவர்கள், லட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு பணிக்கு வருகிறார்கள். அப்படி கொடுத்த பணத்தை வசூலிக்க வேண்டியிருப்பதால் இப்படி மக்களிடமிருந்து பணத்தை கறப்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தினமும் ஆயிரத்திலிருந்து லட்சம் வரை வசூல் ஆவதால், இந்த துறைக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். சில சார்பதிவாளர்கள், எந்த மாவட்டத்தில் வருவாய் அதிகமாக இருக்கிறதோ, அங்கு பணியாற்ற கூடுதலாக லஞ்சம் கொடுத்து பணி வாங்கி விடுவார்கள்.

பொது மக்களை சதாய்க்கும் விதங்கள்: இதெல்லாம், கூட்டாக செய்யும் வேலைகள் தான். தாசில்தார் ஒழுங்காக இருந்தாலே போதும், அவர் கீழிருக்கும் இவர்கள் எல்லாம், இவ்வாறு நடக்க முடியாது. ஆனால், அவரும் ஊழல் பேர்வழியாக இருப்ப்தால், கீழுள்ளவர்கள் பயப்படாமல், சதாய்க்கிறார்கள்.

 1. பத்திர பதிவுக்கு லஞ்சமாக பணம் வாங்கி தராவிட்டால், எழுத்தர் தரப்பிலிருந்து செல்லும் பத்திரங்களுக்கு பல்வேறு குறைகள் உள்ளது என தள்ளுபடி செய்து விடுவார்கள்.
 2. கொடுத்த விண்ணப்பம், ஆவண நகல்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவர், மறைத்து விடுவர். மறுபடியும் விண்ணப்பிக்கச் சொல்வர்.
 3. மறுபடியும் ஆர்.ஐ வருவது, சரி பார்ப்பது, வந்ததற்கு ஆட்டோ / கார் காசு கேட்பது என்று தொடரும்.
 4. கோபத்துடன் பேசுவார்களின் பத்திர பதிவை, பதிவுத்துறை அலுவலர்கள், தாமதப்படுத்துவார்கள்.
 5. காலையில் வந்தவர்களை மாலை வரை இழுத்தடித்தும், அதிகமாக கோபப் படுபவர்களை நாள் கணக்கிலும் அலைகழிக்கப்பதும் தொடர்ந்து வருகிறது.
 6. ஏதாவது, ஒரு நிலையில் கிடப்பில் போட்டு விடுவார்கள். கேட்டால், மேலே அனுப்பி விட்டேன், தாசில்தாரிடம் உள்ளது என்பார்கள்.
 7. சர்வேயரைக் கேளுங்கள், ஆரைக் கேளுங்கள் என்று அலைக்கழிப்பார்கள். வரச்சொல்லி விட்டு, வராமல் இருப்பார்கள். மறைந்து கொள்வார்கள். தாசில்தார் ரூமில் உட்கார்ந்து கொண்டு, “மீட்டிங்” என்பார்கள், பிறகு, “நாளைக்கு வாருங்கள்,” என்பர்கள்.
 8. இதற்கு பயந்து, பதிவு செய்ய வருபவர்கள், வேலை முடிந்தால் போதும் என நினைத்து கேட்டதை கொடுத்து விட்டு, பதிவு செய்து விட்டு சென்று விடுவார்கள்.

ரெயிடுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால், மாவட்டத்திலுள்ள சார்பதிவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து லஞ்சஒழிப்புதுறை போலீசாரிடம், புகாரளித்தாலும், கண்டுகொள்வதில்லை. அவர்கள், லஞ்சம் வாங்குபவர்களின் பேச்சினை செல்போனில் பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதால், நமக்கு ஏன் பிரச்னை என்று, லஞ்சமாக கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, பத்திர பதிவு செய்து விட்டு செல்கின்றனர். ₹12 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினை, பதிவு செய்ய வருபவர்களிடம் நாங்கள், 7 சதவீதம் ஸ்டாம்ப் கட்டணம், 4 சதவீதம் கட்டணம், ஸ்டாம்ப் மற்றும் பொது கட்டணம், சிடி, எஸ்டி, தனிப்பிரிதி, கணினி பதிவு கட்டணம், எழுத்தர், சர்வீஸ் கட்டணங்கள், அலுவலக செலவு மற்றும் இடஆய்வு என சுமார் ₹1,65,000 வசூல் செய்கிறார்கள். ஆனால் இதற்கான கட்டணம் ₹1,35,000 தான் செலவாகும். மீதமுள்ள ₹30,000 அதிகாரிக்கு வழங்க வேண்டும். பதிவு அலுவலகங்களில் வசூலிக்கப்படும் லஞ்ச பணம், உயரதிகாரிகள் வரை செல்வதால், யாரும் கண்டுகொள்ளவில்லை.

பதிவுத்துறையில் லஞ்சம் வழங்குவது என்பது எழுதப்படாத சட்டமாகும்: ஒவ்வொரு பதிவுத்துறை அலுவலக வாயிலிலுள்ள பத்திர எழுத்தர் தான் ராஜியம் செய்வார்கள். லஞ்ச ஒழிப்பை தடுக்கதான் தனித்துறை உள்ளது. ஆனால், அந்த துறையின் நம்பிக்கையை பெற நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான். என் பணத்தை கொள்ளையடிக்கிறாங்கனு புகார் கொடுக்க போனா இன்னும் இவங்க எங்கள் சுரண்டி எடுக்கிறாங்க. எப்படி உனக்கு இந்த சொத்து வாங்க பணம் வந்தது. எங்களுக்கு இவ்வளவு கொடு. இல்லை என்றால் ரெய்டு வருவேன் என மிரட்டுகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையின் பணியே சர்பரைஸ் ரெய்டு, புகாரின்பேரில் ரெய்டு அடிக்கடி சென்று லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதே. ஆனால், தஞ்சையில் மண்டலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு உயரதிகாரிகள் முதல் கீழ் நிலை காவலர்கள் வரை ‘ப’ வைட்டமின் மழையில் நனைக்கிறார்கள். இதனால், யாரையும் அவர்கள் பகைத்து கொள்ள விரும்பவில்லை. வருமானம் வந்தால் போதும் என்று விட்டு விடுகிறார்கள். தஞ்சை மண்டல பத்திரப்பதிவுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் மண்டலமாக உள்ளது. நிறைய இடங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய இடங்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையும் கவனித்து விடுகிறார்கள். இதனால், ஒவ்வொரு லட்சக்கணக்கில் சம்பாதித்து செழிப்பாக வளம் வருகின்றனர். இதற்கு முக்கியமாக ஒரு சில அதிகாரிகள் பல ஆண்டுகளாக அதே இடத்தில் உள்ளதுதான். இவ்வாறு அவர்கள் கூறினார். உயரதிகாரிகள் வரை லஞ்சம் பத்திர எழுத்தர் ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவுதுறையை பொறுத்தவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பெறுகின்ற லஞ்சம் உயரதிகாரிகள் வரை செல்கின்றது. இதனால் யாரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. பதிவுதுறையில் லஞ்சம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்றார்.

13-10-2020 –சம்பந்தப் பட்ட சார்பதிவாளர்கள் இடமாற்றம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 8 சார்பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து ஐஜி ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்[3]. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 8 சார்பதிவாளர்கள் நேற்று திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்[4]. அதன்படி,

 1. தலைவாசல் சார்பதிவாளர் (சேலம் கிழக்கு) ஆறுமுகம் ஆத்தூர் சார்பதிவாளராகவும்,
 2. காரியாபட்டி சார்பதிவாளர் பாலமுருகன் அய்யம்பாளையம் சார்பதிவாளராகவும்,
 3. தர்மபுரி 1ம் எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் தர்மபுரி 2ம் எண் இணை சார்பதிவாளராகவும்,
 4. பென்னாகரம் சார்பதிவாளர் லட்சுமி காந்தன் தர்மபுரி மேற்கு சார்பதிவாளராகவும்,
 5. நாமக்கல் சார்பதிவாளர் (நிர்வாகம்) லலிதா சேலம் மேற்கு சார்பதிவாளராகவும் (நிர்வாகம்),
 6. கடையநல்லூர் சார்பதிவாளர் கஸ்தூரி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராகவும்,
 7. கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் ஜெசிந்தா மேட்டுப்பாளையம் சார்பதிவாளராகவும்,
 8. கிருஷ்ணகிரி மாவட்ட சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்) ரமேஷ்குமார் நாட்றாம்பள்ளி சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடமாற்றம் தான் நடந்திருக்கிறது, ஆனால், அதே பணியைத் தான் மாற்றப் பட்ட இடங்களிலுன் செய்யப் போகிறார்கள். இனி என்னாகும் என்று பொது மக்கள் தான் பொறுத்துப்பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-10-2020


[1] தினகரன், வைட்டமின் மழையில் நனையும் அதிகாரிகள்: தஞ்சை மண்டல பத்திரப்பதிவு ஆபீஸ்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், 2020-10-08@ 21:54:26.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=622829

[3] தினகரன், 8 சார்பதிவாளர்கள் திடீர் பணியிடமாற்றம்: ஐஜி நடவடிக்கை, 2020-10-13@ 00:12:02.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623749

பதிவாளர் அலுவலங்களில் திடீர் ரெயிடுகள், சோதனைகள், லட்சங்களில் பணம் பறிமுதல்: முடிவுகள் எப்படி இருக்கும்? (1)

ஒக்ரோபர் 19, 2020

பதிவாளர் அலுவலங்களில் திடீர் ரெயிடுகள், சோதனைகள், லட்சங்களில் பணம் பறிமுதல்: முடிவுகள் எப்படி இருக்கும்? (1)

ஊழல்,லஞ்சம் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கிறது: தமிழகத்தைப் பொறுத்த வரையில், லஞ்சம் கொடுத்தால் தான், மாண்புமிகு அரசு ஊழியர்கள், செய்கின்ற-செய்ய வேண்டிய வேலைகளையே செய்வர் என்பது, பிரசித்திப் பெற்ற விசயமாகி விட்டது. லஞ்சக் கைதுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. சஸ்பென்ட், இடமாற்றம் என்று செய்திகள் வருகின்றன. 1000 பேர் கைது என்றால், தண்டனை பெறுவது 10 தான் இருக்கின்றன. மற்ற விவரங்கள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. இதில் பெண்-ஊழியர்கள் அதிகமாக ட்டுபடுவதும், சிக்கிக் கொள்வதும் திகைப்பாக இருக்கின்றது. அவர்கள் குங்குமம்-பொட்டு, பட்டுப்புடவை சகிதம், மங்கலகரமாக வந்து, அமங்கலகரமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், அங்குள்ள அனைவரும் தாம்புக்கயறு அளவுக்கு நகைகள், பிரேஸ்லெட் முதலியவைப் போட்டிருப்பது, ஒரு அடையாளமாகக் கருதப் படுகிறது. இவர்களால், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன, வீடு க்ட்ட முடியாமல் நின்றுள்ளன, கடனில் மூழ்கின போன்வற்றை ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே மனசாட்சி இல்லாமல் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

16-10-2020 அன்று சென்னையில் ரெயிட்: சென்னை நீலாங்கரை, பம்மல், குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்பட 7 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பல புரோக்கர்கள் போலீசைப் பார்த்ததும் லட்சக்கணக்கான பணத்துடன் தப்பினர்[2]. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில், கஜுரா கார்டன், 2வது தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக கண்ணன் உள்ளார். இந்த அலுவலகத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நிலம் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம்,  லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயரதிகாரிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் 16-10-2020 அன்று பிற்பகல் 2 மணியிலிருந்து, டிஎஸ்பி தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் இருந்து 2.4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதிகாரிகளுக்கு புரோக்கராக செயல்பட்ட பிரபு என்பவர் ₹10 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள், அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தி இருந்த புரோக்கர் பிரபுவிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வசூலாகும் லஞ்சப் பணத்தை கொடுத்து வைப்பார்களாம். அலுவலகத்தில் இருந்தால் சிக்கிக் கொள்ளும் என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தது தெரிந்ததும் பணத்துடன் புரோக்கர் ஓடிவிட்டார்.

16-10-2020 அன்று பல்லாவரம் அடுத்த பம்மல், திருநீர்மலை செல்லும் பிரதான சாலை காமராஜர்புரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை[3]: இதுபோல, பல்லாவரம் அடுத்த பம்மல், திருநீர்மலை செல்லும் பிரதான சாலை காமராஜர்புரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. சார்பதிவாளராக தினேஷ் பணியாற்றி வருகிறார். இங்கு நேற்று டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் 8க்கும் மேற்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென வந்தனர். கதவுகளை பூட்டி ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் உள்ளே இருந்து ஊழியர்கள் வெளியேறவும், வெளியில் இருந்து பொதுமக்கள் அலுவலகத்தின் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இரவு வரை சுமார் 5 மணி நேரம் நடந்த சோதனையில், கணக்கில் வராத 12 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதேபோல், தமிழகத்தில் அதிக வருவாய் தரக்கூடிய சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒன்றான குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் நேற்று விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து சென்று, ஒரே நேரத்தில் பம்மல் மற்றும் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய 2 சார்பதிவாளர்களும் அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றிருந்தனர். அவர்கள் இல்லாத நேரத்தில் இந்த சோதனை நடந்துள்ளது.


16-10-2020 அன்று சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது[4]. இது தொடர்பாக சார்பதிவாளர் உள்பட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் 16-10-2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் சென்று கண்காணித்தனர். அப்போது, அலுவலகத்தில் சில அதிகாரிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது பத்திர பதிவு செய்த ஆவணங்கள் இடையில் கட்டு கட்டாக பணம் இருந்தது. கணக்கில் வராத பணம். கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 53 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 17-10-2020 அன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது சோதனையை முடித்துக் கொண்டு சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகம் சென்று தொடர் விசாரணை செய்கின்றனர்.

16-10-2020 வெள்ளிக்கிழமை மாலை அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெயிட்:  அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கத்தையும் பொருட்படுத்தாமல், சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டு வந்தது. இந்நிலையில் 16-10-2020 வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல, அலுவலகம் திறக்கப்பட்டு, பணி நடைபெற்று வந்தது[6]. இதற்கிடையில் 16-10-2020 மாலை 5 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தட்சணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்தனர்[7]. தொடர்ந்து அலுவலகப் பதிவேடுகள், கணக்கில் வாரா பணம் உள்ளிட்டவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 முறை லஞ்ச ஒழிப்புத் துறை காவலதுறையினர் ஆய்வு மேற்கொண்டு 2 சார்பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகப் பகுதி வழக்கம் போல பரபரப்பாகக் காணப்படுகிறது.

12-10-2020 அன்று கும்பகோணம் மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் ரெயிட்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கச்சேரி சாலையில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் 12-10-2020 அன்று மாலை 6 மணி அளவில் மாறுவேடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்[8].

ஜன்னல் வழியாக பணத்தை வீசினர் -12-10-2020 அன்று கும்பகோணம் மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் ரெயிட்:. பின்னர் இரவு 7 மணி அளவில் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அந்த அலுவலகத்தின் கதவுகள் திடீரென மூடப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த பணியாளர்கள் ரூ.23 ஆயிரத்து 380-ஐ அலுவலகத்தின் ஜன்னலுக்கு வெளியே திடீரென எடுத்து வீசினர்[9]. இந்த பணத்தை எடுத்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அந்த பணம் தொடர்பாக அங்கிருந்த பணியாளர்களிடமும், இணை சார்பதிவாளர் ஆசைதம்பியிடமும் 4 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விடிய, விடிய நடந்தது. மேலும் அலுவலகத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் 28 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆவணங்களை பதிவு செய்ய இந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதவிர இந்த அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை தனித்தனியே சோதனை செய்தனர். இதில் ஊழியர்கள் வைத்திருந்த பணம் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவிர அலுவலகத்துக்கு வந்து செல்லும் வெளிநபர்கள், புரோக்கராக செயல்படுபவர்களின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கவனமாக குறிப்பு எடுத்து பதிவு செய்து கொண்டனர். கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று விடிய, விடிய அதிரடியாக சோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© வேதபிரகாஷ்

18-10-2020[1] தினகரன், சென்னையில் 3 இடங்கள் உள்பட 7 சார்பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல், 2020-10-17@ 00:29:00. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624780

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624780

[3] தினகரன், சென்னையில் 3 இடங்கள் உள்பட 7 சார்பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல், 2020-10-17@ 00:29:00. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624780

[4] தினமணி, சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, By DIN | Published on : 17th October 2020 02:31 PM .

[5] https://www.dinamani.com/tamilnadu/2020/oct/17/anti-corruption-police-raid-salem-registrar-office-3486962.html

[6] தினமணி, அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை, By DIN | Published on : 16th October 2020 08:29 PM.

[7] https://www.dinamani.com/latest-news/2020/oct/16/anti-corruption-check-in-the-office-of-the-indestructible-dependent-3486363.html

[8] தினத்தந்தி, கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை, பதிவு: அக்டோபர் 13,  2020 05:33 AM.

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/13053320/Anticorruption-police-raid-Kumbakonam-affiliate-office.vpf

ராணிப்பேட்டை மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஊழல், கோடிகளில் பணம் தங்க முதலியன பறிமுதல் எல்லாம் ஒரு துளி வெள்ளம் தான்! ஊழலை ஒழிப்பது, தூய்மைப் படுத்துவது எப்படி? (3)

ஒக்ரோபர் 17, 2020

ராணிப்பேட்டை மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஊழல், கோடிகளில் பணம் தங்க முதலியன பறிமுதல் எல்லாம் ஒரு துளி வெள்ளம் தான்! ஊழலை ஒழிப்பது, தூய்மைப் படுத்துவது எப்படி? (3)

பன்னீர் செல்வம் சிக்கியது எப்படி?: பன்னீர்செல்வத்திடம் தனிப்பட்ட முறையில், 20க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர். அதில் ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு, 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதனால் அவரை, வேலையிலிருந்து பன்னீர்செல்வம் நிறுத்தி விட்டார். அவர் தான் பன்னீர்செல்வத்தை சிக்க வைத்தவர் என தகவல் பரவி வருகிறது. விருதம்பட்டில் சோதனை நடத்திய பிறகு, அதிரடியாக பாரதி நகரில் உள்ள அவரது மற்றொரு பங்களா வீட்டில் சோதனை செய்ய போலீசார் சென்றனர். இது தெரியாமல், பன்னீர்செல்வம் விருதம்பட்டிலேயே இருந்துள்ளார். சோதனை நடந்து, இரண்டு மணி நேரத்துக்கு பிறகு தான், அவர் அங்கு சென்றுள்ளார். இவ்வளவு பணம் வந்தது குறித்து, பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் சொல்லாமல், என் கணவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். சிறிது நேரத்தில், மயக்கம் போட்டு விழுந்த அவரை, மகளிர் போலீசார், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்து அழைத்து வந்தனர்.

விசாரணை வளையத்தில் உதவியாளர்கள்: ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்ய வேண்டும் என்றால், தமிழகத்திற்கு வந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்குவதற்கு, தனியான வாடகை வீடு என்றால், பன்னீர்செல்வம், லஞ்சம் வாங்குவதற்கு என்றே தனிப்பட்ட முறையில், 20 பேரை வேலைக்கு வைத்திருந்தார். அதாவது, நிறுவனமாக்கப் பட்ட லஞ்ச லாவண்யம், அவ்வாறு வேலைக்கு ஆட்கள் நியமிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இனி அதற்கு பயிற்சியும் அளிப்பார்கள் போலிருக்கிறது. அவர்களிடம், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள், நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். எம்.டெக்., படித்துள்ள பன்னீர்செல்வத்துக்கு, மனைவி புஷ்பா, 45. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரு மகள் கணவருடன் வசிக்கிறார். மற்றொரு மகள், சென்னையில் அரசு அதிகாரியாக உள்ளார். மகன் முதுநிலை படிப்பு முடித்து விட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இப்படி பட்டவர்கள், படித்தும் என்ன பிரயோஜனம்? நியாமான பிள்ளைகள் என்றால், “அப்பா, இப்படி லஞ்சம் வாங்காதே, எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது,” என்று சொல்லியிருப்பார்களே?


இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது[1]: பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எத்தனை வங்கிகளில் லாக்கர் வசதி உள்ளது என்பதை விசாரித்த பிறகு அதை திறந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வத்தை விரைவில் விசாரணைக்கு அழைப்போம். அதேபோல், வேலூர் மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களையும் அழைத்து விசாரிப்போம். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அரசின் அனுமதியுடன் பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பதிவு செய்யப்படும். அப்போது, மீண்டும் ஒரு சோதனை நடத்தப்படும். பன்னீர்செல்வத்திடம் இருந்து அதிகபட்ச அளவு பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேவைப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக பரிந்துரை செய்யவும் வாய்ப்புள்ளது,’’ என தெரிவித்தனர்[2].

உண்மையில் மாசு, கசடு, கும்பி, சகதி, சாக்கடை, நச்சு துகள்கள், கழிவுகள் முதலியவை பல வழிகளில்முறைகளில் உருவாகி வருகிறது:  மேலே குறிப்பிட்டப் படி, மனிதனின் தேவைகள் அதிகமாக-அதிகமாக பஞ்சபூதங்களை அசுத்தமாக்கும் வேலைகள், விஞ்ஞானம்-தொழிற்நுட்ப ரீதியில் அதிகமாகவே நடந்து வருகின்றன.

 1. மேலே பலவித மாசு உருவாகும் தொழிற்சாலைகள், வேலைகள் முதலியன குறிப்பிடப்பட்டன. இனி சில குறிப்பிடப்படுகின்றன.
 2. உலோகப் பூச்சு செயல்பாட்டினால் [metal plating, anodizing etc] அதிக அளவு மாசு காற்றில் மற்றும் நீரில் கலக்கின்றன. யாரும் தடுக்கவில்லையே?
 3. உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் மீறி, தோல் தொழிற்சாலைகளில் [leather processing and goods manufacture] அதிக அளவு மாசு காற்றில் மற்றும் நீரில் கலக்கின்றன. யாரும் தடுக்கவில்லை. அயல்நாட்டவருக்கு வேண்டிய பொருட்களைத் தாம் இங்கு உற்பத்தி செய்து, ஏற்றுபதி செய்கிறார்கள்.
 4. புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் [asbestos] தடை செய்யப் பட்டுள்ளது, ஆனால், தொழிற்சாலைகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சைனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் $ 2 பில்லியன் மதிப்பில், 3,50,000 டன் ஆஸ்பெஸ்டாஸை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.
 5. சுரங்கம் [mining], ரசாயன [chemical of all sorts], மின்சாரம் [electricity production through thermal, nuclear etc], மருந்து, துணி, காகிதம், வாகனங்கள் என்றிருக்கும் மற்ற தொழிற்சாலைகளும் சளைத்தவை அல்ல!
 6. சக்கரை, உரம், வண்ணம், பூச்சி மருந்து, பெட்ரோலியம், இவை எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.
 7. சர்க்கரை என்றால், “மொலேசஸ்” [molasses] முதலியனவும் வரும். அதுதான் மது [beer, rum etc] உற்பத்தி செய்ய உதவுகின்ற மூலப்பொருள். “ஹுக்கா”விலும் உபயோகப்படுத்தப் படுகிறது.
 8. ஏர்-கன்டிஷனர், ரெப்ரிஜிரேடர்கள் இயங்குவதாலும், சுற்றுப்புறசூழ்நிலை பாதிக்கப் படுகிறது, ஓஸோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் உற்பத்தி-உபயோகம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
 9. இந்த தொழிற்சாலைகளை அறிந்து கொண்ட பிறகு, அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் அந்த நகரங்களை நினைத்துப் பாருங்கள், உண்மை விளங்கும்!
 10. அவற்றில் யார் முதலீடு செய்திருக்கிறார்கள், அவர்களின் யோக்கியதை, அந்தஸ்து என்பதை எல்லாம் விவரங்களை சொன்னால், ஏன் அவை ஊக்கப் படுத்தப் படுகின்றன, ஆதரிக்கப் படுகின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ஊழல் என்பது என்ன, அது லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல: உடல் சுத்தம் மட்டுமல்ல, உள்ளமும், சிந்தனைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

1. ஊழல் என்பது, தீய எண்ணங்களின் வெளிப்பாடு, அதர்ம காரியம், நன்னடத்தை இல்லாத வேலை, மிக்க ஒழிங்கீனமான செயல், என்றெல்லா விவரிக்கலாம்.

2. மனம் தீய எண்ணங்களால், ஆக்கரமித்து, உடனடியாக எதையாவது அடைய வேண்டும், கவர வேண்டும் என்று தயாராகும் மனப்பாங்கு.

3. வஞ்சகத்துடன், குரூர எண்ணங்களுடன் செயல்பட்டு, யாரிடமிருந்தாவது, அதையாவது, எப்படியாது பறிக்க திட்டமிடும் குணமாகிறது.

4. செய்வது அநீதி, பாவம், அதர்மம், திருட்டு, என்றெல்லாம் தெரிந்தும், தீர்மானமாக செய்யத் தாயாராகி அக்கிரமத்துடன் கவர்வது.

5. செய்கின்ற வேலைக்கு அரசு சம்பளம் கொடுத்தாலும், இவ்வாறு மாமூல், கையூட்டு, லஞ்சம், கவனிப்பு இல்லாமல் செரிக்காது.

6. வேலைக்கு வருவதற்கே லஞ்சம் கொடுப்பவன், “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு,” என்ற சித்தாந்தத்தையே உருவாக்கி விட்டான்.

7. தெரியாமல் திருடுவதற்கும் தெரிந்து லஞ்சம் வாங்குவதும் ஒன்றேயாகும், பலிக்காடா ஆவது, அப்பாவி அல்லது வெறுத்துப் போன மனிதனாக இருப்பான்.

8. விபச்சாரி எப்படி தனது தொழிலுக்காக அலங்கரித்து, ஆசை வார்த்தைப் பேசி, படுக்க அழைக்கிறாளோ, அதுப்போலத்தான், லஞ்சம்வாங்குவதும்.

9. திராவிடத்துவ ஆட்சியில், லஞ்சம் வாங்குவது என்பது, ஒரு ஏற்படுத்தப் பட்ட, நிறுவனத்துவ திறமைகளுடன் செயல் பட்டு வருகிறது.

10. பிறப்பு முதல் இறப்பு வரை எந்த காரியத்திற்கும் தம்மிடம் வரவேண்டும், என்று புலிகள் போல இறைக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன.

70 வருட ஊறிப் போனப் பழக்கத்தை மாற்ற காலம் ஆகலாம், ஆனால் மாற்ற வேண்டும்: ஆகவே, இவர்களை முதலில் மாற்ற வேண்டும். 70 ஆண்டுகளில் வளர்ந்து / வளர்த்து விட்ட இவர்களை, திரும்ப பழைய நிலைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் காலம் ஆகலாம். சட்டம்-நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், வக்கீல்கள் முதலியோர் கட்சிகளால் நியமிக்கப் படுவதால், அவர்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளனர் / இருக்கின்றனர். எல்லாவற்றையும் அனுபவித்து விட்ட அவர்கள், திடீரென்று அவற்றையெல்லாம் விட்டுவிடு என்றால் அப்படியே துறந்து, புத்தனாகி விடமாட்டான். “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல……..,” என்று சொல்லி நியாப் படுத்தியவர் தான், முதன் முதலாக, காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். குறுகிய காலத்தில் அவர் காலமாகி விட்டதால், கருணாநிதி முதல்வர் ஆனால், ஊழல் பற்றிய அவரது அணுகுமுறையை, சர்க்காரியா கமிஷனே விளக்கி விட்டது.

எப்படி படிப்படியாக கட்டுப்படுத்துவது, குறைப்பது மற்றும் முடிவாக நீக்குவது:

 1. கல்வித்துறை, TNPSC, பல்வேறு அரசுத் துறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் போன்றவர் / போன்றவை ஒழுங்காக செயல் படவேண்டும்.
 2. சட்டக் கல்லூரி, தேர்வு பெற்று வருபவர், வக்கீல், நீதிபதி, நீதிமன்றம், இவையும் ஒழுங்காக, சட்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
 3. அதேபோல, குறிப்பாக போலீஸ் துறை, போலீஸ் அதிகாரிகள், போலீஸ் காரர்கள், மிக ஒழுக்கமாக, ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.
 4. கருத்துவாக்கம் செய்பவர் மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும் நியாமாக, தார்மீகத்துடன் இருக்க வேண்டும்.
 5. “கடமை, கண்ணியம், கட்டுப் பாடு” என்று பேசினால் மட்டும் போதாது. வேலை செயும் போது, செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
 6. அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பள கொடுக்கிறது. வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக, கண்ணியமாக வேலை செய்ய வேண்டும்.
 7. சட்டமீறல்களை ஊக்குவிக்கக் கூடாது, அதற்குத் துணை போகக் கூடாது. அதையே தொழிலாக வைத்து, லஞ்சம் வாங்கும் போக்கை மாற்ற வேண்டும்.
 8. குறிப்பிட்ட வேலைகள் நியமனம், இடம் / வேலை மாற்றம் போன்றவற்றில், ஊழல் அறவே இருக்கக் கூடாது.
 9. IAS, போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், வக்கீல்கள், அரசு/ அரசியல் சார்புடையவர்களாக நியமிக்க-இருக்கக் கூடாது.
 10. அரசு அனுமதி, லைசென்ஸ், சான்றிதழ், நிதியுதவி போன்றவற்றில் உள்ளவர்களும் அதே போல அரசு/ அரசியல் சார்புடையவர்களாக நியமிக்க-இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

17-10-2020


[1] தினமலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 19 மணி நேர சோதனையில் ரூ.3.25 கோடி பறிமுதல், Added : அக் 16, 2020 10:29.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2634257

ராணிப்பேட்டை மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஊழல், கோடிகளில் பணம் தங்க முதலியன பறிமுதல் எல்லாம் ஒரு துளி வெள்ளம் தான்! நிறுவனத்துவ ஊழல் விஞ்ஞான ரீதியில் செயல்பட்டு வருகிறது (2)

ஒக்ரோபர் 17, 2020

ராணிப்பேட்டை மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஊழல், கோடிகளில் பணம் தங்க முதலியன பறிமுதல் எல்லாம் ஒரு துளி வெள்ளம் தான்! நிறுவனத்துவ ஊழல் விஞ்ஞான ரீதியில் செயல்பட்டு வருகிறது (2)

பன்னீர் செல்வம் வீடுகளில் 19 மணி நேர ரெய்டு: தினமலர் விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளது[1]. லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அங்கு செல்வதற்குள் கூட்டம் முடிந்து, பன்னீர்செல்வம், லஞ்சப்பணம் மற்றும் கோப்புக்களுடன் விருதம்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு, அரசு காரில் சென்று விட்டார். உடனடியாக அங்கு செனற, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், அதிரடியாக கார் மற்றும் வீடு முழுவதும் சோதனையிட்டு, கணக்கில் வராத, 33.73 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்[2]. பன்னீர்செல்வத்தின், மற்றொரு சொகுசு பங்களா, ராணிப்பேட்டை, பாரதி நகர் வளையாபதி தெருவில் உள்ளது. டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான, 14 போலீசார் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணி முதல், நேற்று காலை, 6:00 வரை, தொடர்ந்து, 19 மணி நேரம் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்த ஆறு இரும்பு பெட்டிகளை திறக்கும்படி கூறியபோது, தன்னிடம் சாவி இல்லை என, முதலில் மறுத்த அவரது மனைவி புஷ்பா, 45, பின்னர் சாவிகளை கொடுத்துள்ளார். பெட்டிகளை திறந்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணமும், நகையும் இருந்தன. இதனால், ராணிப்பேட்டையில் உள்ள, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, 11 பணம் எண்ணும் இயந்திரங்களை வரவழைத்து, பணத்தை எண்ணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதேபோல, நகைகளை அளவிட, நான்கு நகை எடை போடும் கருவிகள், நகை மதிப்பிட இரண்டு பேரை வரவழைத்தனர். குப்பை கூடையில் பண குவியல்: வீட்டிலிருந்த குப்பைக்கூடை, வாசிங் மிஷன், அழுக்கு துணி போடும் கூடைகள், பிரிஜ், கழிவறை, ‘ஏசி’ மிஷின் ஆகியவற்றிலும், கட்டுக்கட்டாக பணத்தை போட்டு வைத்திருந்தை கண்டு போலீசார் அதிர்ந்தனர். போலீசார் விடிய, விடிய பணத்தை எண்ணியதில், கணக்கில் வராத, மூன்று கோடியே, 25 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. மேலும், 3.6 கிலோ தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும், 90 சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

20 லாக்கர்கள் முடக்கம்: வேலூர், அரக்கோணம், சென்னை, ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி என, பல்வேறு இடங்களில், வாங்கிக்குவித்த வீடு, நிலங்கள் அடங்கிய, 90 சொத்து பத்திரங்களின் மதிப்பு, 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என, போலீசார் கூறினர்[3]. இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டத்தில், பன்னீர்செல்வத்தின் மீது, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[4]. பன்னீர்செல்வத்தின் மீது, துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளது[5]. கைப்பற்றப்பட்ட பணம், நகை, வெள்ளிப்பொருட்கள், வேலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன[6]. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட பணம் குறித்த எந்த கேள்விக்கும், பன்னீர்செல்வம் பதில் கூறவில்லை’ என்றனர். பன்னீர்செல்வத்தின், பெயரில் பல்வேறு வங்கிகளில் இருந்த, 20 லாக்கர், 12 கணக்குகள் முடக்கப்பட்டன[7]. இன்னும் என்னவெல்லாம் விவகாரங்கள் வெளிவரும் என்று பார்க்க வேண்டியுள்ளது[8].


கை மாறிய பல கோடி ரூபாய்: கடந்த, 2015ம் ஆண்டு, ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில், கழிவுநீர் தொட்டி உடைந்து, 10 பேர் பலியாகினர். இதையடுத்து, அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும், பராமரிப்பில்லாத, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதற்கு, விசாரணை அதிகாரியாக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். மூன்று மாதத்துக்கு பின், அனைத்து தொழிற்சாலைகளும் திறக்க, அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் கை மாறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 8,000க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலை, ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள், ரசாயனம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு உத்தரவின்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்து, மாசு இல்லை என, சான்று அளிக்க வேண்டும். இதிலும் பலத்த வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.ரூ.100 கோடி சொத்து?: தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், கழிவு நீரை சுத்திரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த, மத்திய அரசு, 50 சதவீதம் மானியம் அளிக்கிறது. இதிலும், பன்னீர்செல்வம் கணிசமாக லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை, தோல் தொழிற்சாலையை ஆய்வு செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறுகிய காலத்தில் பன்னீர்செல்வம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. பலமுறை, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. ஒரு முறை மட்டும் அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மற்றபடி அவர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அளவுக்கு மீறி, அதிகமாக, வேகமாகச் சென்றதால் தான், புகார்கள் எழுந்துள்ளன என்பது புரிகிறது. ஏனெனில், கடந்த 70 ஆண்டுகளாக, லஞ்சம் வாங்குவது என்பது, தெரிந்த விசயமே ஆகும்,


கூட்டாகக் கொள்ளையடுக்கும் சுறாக்கள், திமிங்கிலம் சிக்குமா?: லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 1. மாசுகட்டுப்பாட்டு வாரியம் என்றாலே லஞ்சம் விளையாடும் இடம் என்று தான் நாங்கள் கூறுவோம்.
 2. ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகம் இருந்தாலும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, மதுரை, தூத்துக்குடி என, வளம் கொழிக்கும் இடங்களில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியவே அதிகாரிகளிடையே பலத்த போட்டியிருக்கும்.
 3. அந்த பணியிடங்களை இடங்களை பிடிக்கவே மேலிடத்துக்கு, பல கோடி ரூபாய் கப்பம் கட்டிய பின்னர் தான், அதற்கான உத்தரவு கிடைக்கும்.
 4. அப்படி பணம் கொடுத்து போஸ்டிங் வாங்கி வரும் அதிகாரிகள், எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள். தான் கொடுத்த பணத்தை விட பல மடங்கு சம்பாதிக்க தங்கள் ஆட்டத்தை ஆடுவர்.
 5. சிறிய பணி முடித்து கொடுக்க வேண்டும் என்றாலும் பணம் இல்லாமல் எதுவும் நடக்காது.
 6. தற்போது சிக்கியுள்ள பன்னீர்செல்வம், ஆறு ஆண்டுகளாக, ஏழு மாவட்டங்களுக்கு பொறுப்பாளர். ஏழு மாவட்டங்களில், தர்மபுரியை தவிர பிற மாவட்டங்கள் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம். அங்கு வசூல் தூள் பறந்துள்ளது.
 7. புகாரின் அடிப்படையில் தான் வலை வரித்தோம். அதில் சிக்கிய பன்னீர் செல்வம் முதலை தான்.
 8. அதற்கு பாதுகாப்பு அரண் அமைத்து கொடுத்த திமிங்கிலங்கள் தப்பி விட்டன.
 9. பன்னீர் செல்வம் மாசுகட்டுப்பாட்டு வாரியதின் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் நல்ல முறையில் கனவித்துள்ளதால், ஒரே இடத்தில் பணியில் இருந்து வருகிறார்.
 10. எங்களுடைய விசாரணை எந்த அழுத்தமும் இல்லாமல் நியாயமாக நடந்தால், சென்னையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் இதில் சிக்குவர்,” இவ்வாறு அவர் கூறினார்.

© வேதபிரகாஷ்

17-10-2020


[1] தினமலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 19 மணி நேர சோதனையில் ரூ.3.25 கோடி பறிமுதல், Added : அக் 16, 2020 10:29.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2634257

[3] Indian Express, Huge stash of cash and gold seized from TN Pollution Control Board officer in Vellore, By R Sivakumar, Published: 15th October 2020 07:58 PM  |   Last Updated: 15th October 2020 08:31 PM.

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/oct/15/huge-stash-of-cash-and-gold-seized-from-tn-pollution-control-board-officer-in-vellore-2210714.html

[5] Times of India, Uncounted money seized from TNPCB official  in Vellore, Karal Marx, Oct 14, 2020, 16:59 IST.

[6] https://timesofindia.indiatimes.com/city/chennai/uncounted-money-seized-from-tnpcb-official-in-vellore/articleshow/78660683.cms

[7] The Hindu, 33.73 lakh seized from TNPCB official’s premises in Vellore, Special Correspondent, Vellore, OCTOBER 14, 2020 15:25 IST; UPDATED: OCTOBER 14, 2020 15:25 IST.

[8] https://www.thehindu.com/news/national/tamil-nadu/3373-lakh-seized-from-tnpcb-officials-premises-in-vellore/article32852543.ece