தினம்-தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (3)

மே 17, 2023

தினம்தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (3)

17-04-2023 – வீடு கட்ட அனுமதி: கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகதெரிகிதறது[1] . இதனால் மன உளைச்சலடைந்த பரணி கடலூர் லஞ்ச ஓழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்[2]. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை பரணியிடம் வழங்கி அதிகாரிளிடம் வழங்க கூறினார்கள். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த பரணி, ஊழியர் ரகோத்தமனிடம் பணத்தை கொடுத்தார். இதனை வாங்க மறுத்த ஊழியர், அருகில் உள்ள தனியார் கட்டுமான அலுவலக உரிமையாளரை பார்த்து அவரிடம் பணம் கொடுக்க கூறினார். தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்திடம் சென்ற பரணி, ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் ரகோத்தமனையும் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல துறைகளில் லஞ்சம் இருக்கிறது: இப்படியாக, ஒவ்வொரு நாளும் தாலுகா அலுவலகம், வட்டாட்சியாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ, பதிவாளர், மின்சாரம், கார்பொரேஷன், குடிநீர்-கழிவுநீர் துறை, ரேஷன் கார்ட், திருமணப் பதிவு என்று பல அலுவலகங்களில் தினம்-தினம் லஞ்சம் கேட்டு வாங்கப் படுகிறது. அரசு மருத்துவ மனை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியவையும் விதிவிலக்கல்ல. லஞ்சம் நிருவனப்படுத்தப் பட்ட நிலையில் செயல்பட்டு வருகிறது. இவையெல்லாம் தினமும் கோடிக் கணக்கில் பொது மக்கள் வந்து செல்லும் இடங்கள். இவற்றைத் தவிர பற்பல துறைகள், லுவலகங்கள் எல்லாம் இருக்கின்றன. அங்கெல்லாமும் லஞ்சம் சகஜமாக இருக்கிறது. லட்சத்தில் ஒருவர் யோக்கியவானாக இருக்கிறார். மற்றபடி 90% லஞ்சப் பேர்வழிகளாகத்தான் இருக்கிறார்கள். பல இடங்களில், மூஞ்சிகளைப் பார்த்தாலே, காசு கொடுக்காமல், இந்த ஆளிடம் எதுவும் நடக்காது எனூ தெரிந்து கொள்ளலாம். பிறகு அவர்கள் பேசும் பேச்சு, கேட்கு கேள்விகள் முதலியவற்றை வைத்தும் கண்டு கொள்ளலாம். ஏஜென்டுகள், அசிஸ்டென்டுகள் போன்றவர்களும் விவரங்களை சொல்வர். ஆக, தினம்-தினம் இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன.

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே: சமீபத்தில் தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே என்று வெளியிட்டு வருகிறது[3].

  • வரைபட அனுமதி (ச.அடி) – 60-100
  • வர்த்தக நிறுவனங்கள் (ச.அடி) – 80
  • அடுக்குமாடி குடியிருப்பு (ச.அடி) – 100
  • நில உபயோகம் வகைமாற்றம் (ஏக்கருக்கு) – 3 – 5 லட்சம் வரை
  • நில அளவை பதிவேடு நகல் பெற – 2,000 – 3,000
  • சர்வேயர் அறிக்கை – 10,000
  • பட்டா பெயர் மாறுதலுக்கு –
    • வி.ஏ.ஓ., அலுவலகம்; 5,000.
    • தாலுகா அலுவலகம்; 5,000-10,000.
  • மாநகராட்சியில் – வரைபட அனுமதி (ச.அடி); 20.
    • வர்த்தக நிறுவனம் (ச.அடி); 35.
  • சொத்து வரி (ச.அடி) – 50
  • சொத்து வரி பெயர் மாற்றம் – 5,000
  • லே-அவுட் அப்ரூவலுக்கு (ஏக்கருக்கு) – 6,00,000
  • குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு – 50,000
  • பிறப்பு, இறப்பு சான்று – 2,000
  • தொழில் உரிமம் – 2,000 – 5,000

இவற்றை மறுத்து எந்த துறை அதிகாரிகளோ, ஊழியர்களோ மறுக்கவில்லை. திரைப் படங்களில் கூட லஞ்சம் வாங்கும் முறைப் பற்றி விளக்கப் பட்டுள்ளது.

  1. சமீபத்தில் தினமலர் “லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே” என்று லஞ்சம் பற்றி தொடர்ச்சியாக விவரங்களை வெளியிட்டு வருகிறது!
  2. இதெல்லாமென்ன பெரிய ரகசியமா, விசயமா, இதையெல்லாம் போட்டு என்னவாகப் போகிறது, கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்குமா?
  3. பேஸ்புக்கில் இருப்பவர்களே கண்டுகொள்வதில்லை, ஏனெனில் அவர்களும் அத்தகைய நிலையில் அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க விடுகிறார்கள்!
  4. அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசமாட்டார்கள், யோக்கியவான்களாக ஜால்றா அடித்து பிழைப்பு நடத்துவர்!  விரும்பத்தான் செய்வார்கள்!
  5. வியாபாரக் கொள்ளை, வணிகத் திருட்டு, வாங்கல்-விற்கல் ஆதாயம், கொடுப்பது-எடுப்பது பலன், லாபம் என்றால் இனிக்கத்தான் செய்யும்.
  6. பரிசு கொடுத்தால், ஊசி போடும் டாக்டர் கூட முன்னுரிமைக் கொடுக்கிறார், காசு கொடுத்தால் அடிபட்டவர்களையும் விடுத்து அடித்தவனை முதலிலேயே அழைக்கிறார்!
  7. பணத்தை வேகமாக, இப்பொழுதே, எங்கு வேண்டுமானாலும், எப்படியாவது, சம்பாதித்து விடவேண்டும் என்கிறவன், எந்த தர்மத்தையும் பார்ப்பதில்லை!
  8. ஆனால் அவன் தான் யோக்கியன் போல கடவுள், தத்துவம், ஆசாரம், புனஸ்காரம், ஒழுக்கம் என்றெல்லாம் பேசுவான்!
  9. ஆக இத்தகைய கூட்டுக் கொள்ளை சித்தாந்தத்தை நியாயப் படுத்தும் போது, அதுவும் அரசியலால் இந்துத்துவம் ஆகிறது! அடுத்தவனும் உபயோகப் படுத்துகிறான்!
  10. “ஜெய் பஜரங்க பலி” கோஷத்தின் பிறழ்சியும் ஊழல்தான், வெற்றி-தோல்விகளை ஆதரிப்பவர் இந்துத்துவ-விரோதிகள் தான்! இந்துவிரோதிகளாகவும் மாறும் பொழுது விபரீதமாகிறது!

உண்மையான இந்து லஞ்சம் வாங்க மாட்டான்: ஆகவே, இந்துக்களுக்கு லஞ்சத்தை, ஊழலை ஒழிக்க வேண்டிய கடமை, தார்மீகம் உள்ளது. நிச்சமாக, ஒரு நல்ல இந்து லஞ்சம் வாங்க மாட்டான். தனது வேலையை, கடமையாக செய்து கொடுப்பான். இன்னும், ஒரு அல்லது பல படிகள் தாண்டியும் உதவி செய்வான். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வான். அத்தகையவன் ஒழுக்கமாக, கண்டிப்பாக இருப்பான். தனது குடும்பத்தவர், உற்றோர் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். “இவன் பிழைக்கத் தெரியாத ஆள்,” என்று ஏளனம் செய்வோரும் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், சமூகத்தில் நிச்சயமாக அவன் தான் யோக்கியன், நியாயவான், தர்மவான், ….இவனைப் போன்றவர்களும் 130 கோடி இந்துக்களில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்துமதம் நிலைத்து வாழ்கிறது. பலகோடி மற்ற இந்துக்களும் பலன் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது, By மாலை மலர், 18 ஏப்ரல் 2023 2:55 PM..

[2] https://www.maalaimalar.com/news/district/cuddalore-municipal-corporation-employee-arrested-for-taking-rs20-thousand-bribe-598217?infinitescroll=1

[3]  தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (24), பதிவு செய்த நாள்: மே 15,2023 10:10

https://m.dinamalar.com/detail.php?id=3321202

தினம்-தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (2)

மே 17, 2023

தினம்தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (2)

வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற லஞ்சம்: வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்[1]. திருச்சி மேல சிந்தாமணியைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் வெங்கடேசன். அவர் கம்பரசம்பேட்டை பகுதியில் பாலு என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்[2]. அந்த வீட்டை கடைகளுக்கு வாடகைக்கு விட வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாடு மின் இணைப்பாக மாற்ற உரிய ஆவணங்களுடன் திருச்சி தென்னுார் மின்வாரிய அலுவலகத்தில் வெங்கடேசன் விண்ணப்பித்தார். மூன்று மாதங்களாகியும் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்காததால் வெங்கடேசன் தென்னுார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் 40 என்பவரை அணுகினார். அவர் வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு 15 ஆயிரம் வேண்டும் என வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் நேற்று முன்தினம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதன்படி நேற்று காலை தென்னுார் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற வெங்கடேசன் ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை உதவி செயற்பொறியாளர் ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு சென்ற போலீசாரிடம் ராஜேஷ் கையும் களவுமாக சிக்கினார். இ.பி. காலனியில் உள்ள ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்[3]. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றியவர் குணசேகரன் (56)[4]. காடுபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்துக்கணேஷ். இவர், தனது தாய் பேச்சி பெயரிலுள்ள வீட்டுக்கான மின் இணைப்பை மாற்றம் கோரி 2 மாதத்திற்கு முன்பு குணசேகரனை அணுகினார். இதற்கு அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத முத்துக்கணேசன் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் யோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து குணசேகரனிடம் முத்துக்கணேஷ் கொடுத்தார். அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாரதிபிரியா அடங்கிய போலீஸார் குணசேகரன் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

20-04-2023 மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: வெங்கடேசன் என்பவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். பிறகு, அதை வியாபாரப் பயன்பாட்டிற்கு மாற்ற விஉம்பினார். அதன்படி, வீட்டு பயன்பாட்டிலிருந்து வியாபாரப் பயன்பாட்டிற்கு மாற்ற விண்ணப்பம் கொடுத்தார். ஆனால், மாற்றாமல் மின்வாரிஅத்தார் இழுத்தடித்தனர். ஒரு நிலையில் லஞ்சம் கேட்டதால், வெறுப்படைந்தவர் புகார் கொடுத்தார். வெங்கடேசனின் புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று (20.4.2023) காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம்இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் 15,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்[5]. திருச்சியில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].

விவரங்கள்: திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் வெங்கடேசன் வயது 45. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு குடியிருப்புக்கான மின் வசதியும் (Domestic) பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வியாபார தளங்களுக்கு வாடகைக்கு விட நினைத்து குடியிருப்புக்காகப் பெற்ற மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பேரில் காண்ட்ராக்டர் வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சி தென்னூர் EB அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார். ஆனால் விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17ம் தேதி அன்று காலை சந்தித்தார். அப்போது தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு உதவி பொறியாளர் ராஜேஷ் இருபதாயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் Tariff ஐ change செய்து தருவதாக கூறியுள்ளார். உண்மையில் டேரிஃப் சேஞ்ச் செய்வதற்கு அரசு கட்டணம் ரூபாய் 400 மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

19-04-2023 – பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னதுரை (வயது 70). இவரது வீடு நத்தம் கூட்டுப்பட்டாவில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் அந்த வீட்டை தனது மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்து கொடுத்து அந்த இடத்தையும் வீட்டையும் உட்பிரிவு செய்து தனி பட்டாவாக தனது மகன் லோகநாதன் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது மனு களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் (வயது 33) சென்றது. அவர் சின்னதுரை மனுவை சர்வே துறைக்கு பரிந்துரை செய்து அளவீடு செய்து தனி பட்டாவாக மாற்றம் செய்வதற்கு காலதாமதம் செய்து வந்துள்ளார். இதை அறிந்த சின்னதுரை கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் மனு அனுப்பினால் உடனே நாங்கள் பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடுவோமா என்ன. பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக 20,000 ரூபாய் பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கறாராக பேரம் பேசியுள்ளார்[7]. இதையடுத்து சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்[8].

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தல்: அவரது புகார் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் படி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனை சென்று சந்தித்து அவரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார் சின்னதுரை. கிராம நிர்வாக அலுவலருடன் கிராம உதவியாளர் ஈஸ்வரியும் (வயது 30) இதற்கு உடந்தையாக இருந்து லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் கிராம உதவியாளர் ஈஸ்வரி இருவரும் எண்ணிப் பார்க்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து துறையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வீட்டிலும் நத்தக்காடு கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ‘தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்து தர முறையாக மனு கொடுக்கும் பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் செய்து தராமல், லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை கூட மதிப்பது இல்லை’ என்று ஒரு வழக்கு விசாரணையின் போது வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் பட்டா மாற்றம் செய்ய பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், கிராம உதவியாளர் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] தினமலர், ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 01:56

[2] .https://m.dinamalar.com/detail.php?id=3299807

[3] தமிழ்.இந்து, மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது, என். சன்னாசி, Published : 30 Mar 2023 04:46 PM, Last Updated : 30 Mar 2023 04:46 PM.

[4] https://www.hindutamil.in/news/crime/968295-rs-2-500-to-change-the-name-of-the-connection-engineer-arrested-for-bribe.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Trichy: திருச்சியில் லஞ்சம் வாங்கி உதவி பொறியாளர் கைது!, Pandeeswari Gurusamy, 20 April 2023, 12:56 IST.

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/assistant-engineer-arrested-for-taking-bribe-in-trichy-131681974880107.html

[7] நக்கீரன், முதியவரிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, எஸ்.பி. சேகர், Published on 20/04/2023 (17:44) | Edited on 20/04/2023 (18:12).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/perambalur-kalathur-vao-and-village-assistant-bribe-issue-due-patta-name

தினம்-தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (1)

மே 17, 2023

தினம்தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (1)

தினம்தினம் லஞ்சக் கைத்துகள் ஏன்: தமிழக ஊடகங்கள் மாற்றி-மாற்றி செய்திகள் வெளியிட்டாலும்[1], திராவிட கட்சிகளோ, திராவிடத்துவ விசுவாசியான ஊழியர்களோ, அதிகாரிகளோ லஞ்சம் வாங்காமல் இருப்பதில்லை. லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு என்று முன்னமே எழுதியிருக்கிறேன். இவர்களை மாற்றவே முடியாது. கஷ்டபட்டு வேலை செய்து சம்பளம் வாங்கச் சென்றால், அங்கிருககும் குமாஸ்தா / கிளர்க் / அரசு ஊழியர் காசு கேட்கிறார். அதாவது, “என்னை கவனி,” என்கிறார். இல்லையென்றால், இன்றைக்குப் பதிலாக, நாளைக்கு சம்பளம் கொடுப்பார் அல்லது இழுத்தடிப்பார் போலும். கேஸுவல் / கான்ட்ராக்ட் ஊழியர்களின் கதி அதோகதிதான். லஞ்சம் / கமிஷன் பிடித்து தான் கொடுக்கப் படுகிறது, ஆனால், இவர்கள் முழுத் தொகையும் வாங்கினால் போல கையெழுத்துப் போடவேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக நடந்து வந்தாலும், அனைவருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும், கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் தினமும் லஞ்ச கைது [விடுமுரைகளைக் கழித்து] என்று ஊடகங்களில் சராசரியாக வந்து கொண்டிருக்கின்றன.

16-05-2023 – அரியர்ஸ் தொகை வாங்க லஞ்சம்: தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 50).  இவர் பராமரிப்பு மற்றும் திட்டப்பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர் தொகை ரூ.3,93,700/- -ஐ வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்[2].  லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் இதுகுறித்து ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண் ராஜா, ஏட்டுகள் பிரபு, வேணுகோபால், கணேசன் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் குற்றாலம் அலுவலகத்தில் மறைந்து நின்றனர். ராமசுப்பிரமணியன் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை சீனிவாசனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சீனிவாசனை மடக்கி பிடித்து கைது செய்தனர்[3]. பின்னர் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இத்தகைய கொடுமையான லஞ்சப்பேய்களை மாற்ற முடியாதா, விரட்டியடிக்க முடியாதா?: அதாவது, வேலை செய்யும் அரசு ஊழியர், இன்னொருவரின் தமக்கு சொந்தமான வருமானப் பணத்தைப் பெற லஞ்சம் கேட்டது, கொடுமையிலும் கொடுமைதான். ஆனால், அது திராவிடத்தில், திராவிட மாடலில் தான் நடக்கும் போலிருக்கிறது. இத்தகைய மனசாட்சி, மனிதாபிமானம், மனித நேயம், நியாயம், தர்மம், நேர்மை எதுவுமே இல்லாத இவன் எப்படி அரசு ஊழியனாக இருக்கிறான். இவனுக்கு யார், எப்படி வேலை கொடுத்தனர். எவ்வாறு பயிற்சி கொடுத்து, வேலைக்கு ஆர்டர் கொடுத்தனர் என்று ஆராய்ச்சியே செய்து விடலாம். இது நிச்சயமாக முதல்முறையாகவும் நடந்திருக்காது. பிறகு, தமிழக அரசு இத்தகைய ஊழல்காரர்களை என்ன செய்யும்? இவர்களை மாற்ற முடியுமா, இடம் மாற்றம் இல்லை, ஏனெனில், புதிய இடத்தில் உட்கார்ந்து கொண்டாலும், பழைய வேலை செய்ய ஆரம்பிப்பான். அதுதான் 70 ஆண்டு பயிற்சியாக ஆகிவிட்டது.

குடும்ப பஞ்சாயத்து புகார்; லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் கைது: காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி 13-05-2023 அன்று கைது செய்யப்பட்டார்[4]. திருவண்ணாமலை அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல். இவரது மனைவி பரிமளா[5]. இத் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது[6]. அதாவது புருஷன்–பெண்டாட்டி பிரச்சினை தான். இதனால், பூந்தமல்லியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு பரிமளா சென்றுள்ளார்[7]. சகோதரர் அல்லது அவளது / பெண்ணின் பெற்றோர் கொடுமை தாங்காமல் புகர் அளிக்க சொல்லியிருக்கலாம். மேலும் அவர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கணவர் வெற்றிவேலை அழைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி கடந்த மே11-ம் தேதி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதாவது புகார் கொடுக்கப் பட்டவர் மீது வழக்கு பதிவாகாமல் இருக்க லஞ்சம் கேட்கப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் கடந்த 12-ம் தேதி, வெற்றிவேல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர்களது அறிவுரையின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரிடம் லஞ்ச பணம் ரூ.3 ஆயிரத்தை வெற்றிவேல் 13-05-2023 அன்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர், காவல் நிலையத்திலேயே பரமேஸ்வரியை கையும், களவுமாக பிடித்தனர். சரி, இனி புருஷன் – பெண்டாட்டி சந்தோசமாக சேர்ந்து வாழலாமே?

வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கீழக்கோட்டையைச் சேர்ந்த மணிமுத்து மகன் பாலாஜி[8], 28. இவர் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, கல்லல் ஊராட்சி தலைவர் ராமநாச்சியப்பன், 52, என்பவரிடம் விண்ணப்பித்தார்[9]. அதற்கு வழக்கம் போல இழுத்தடித்தார்[10]. விசாரித்த பொழுது, காசு எதிர்பார்ப்பதாகத் தெரிந்து கொண்டார்[11]. அதற்கு ரூ.13,000-/ லஞ்சம் வேண்டும் என நாச்சியப்பன் கேட்டார்[12]. இதனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்[13]. அவர்கள் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை பாலாஜி 15-05-2023 அன்று கொடுத்த போது, நாச்சியப்பன் தன் வாகன டிரைவர் சங்கரிடம் கொடுக்கும் படி கூறினார்[14]. அதாவது, இதெல்லாம் வழக்கம் போல கைதேர்ந்த வேலை தான். அதன்படி, அந்த பணத்தை டிரைவர் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராமநாச்சியப்பன் மற்றும் டிரைவர் சங்கரை கைது செய்தனர்[15]. ஆனால், நாளைக்கு, பெயிலில் வெளியே வந்து விடுவார். சிறிது நாட்களில், பணியிடை மாற்றத்திற்குப் பிறகு, இன்னொரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு தனது வேலையை ஆரம்பித்து விடுவார்.

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] தினமலர், லஞ்சம் வாங்கிய அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது, மே 16, 2023 00:00 IST; https://m.dinamalar.com/video_detail.php?id=251901

[2] தினத்தந்தி, குற்றாலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது , மே 17, 2:08 am

[3] https://www.dailythanthi.com/News/State/drinking-water-drainage-board-took-a-bribe-of-rs10-thousand-in-courtalam-superintendent-arrested-966146

[4] தமிழ்.இந்து, காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக பெண் எஸ்.. கைது, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 07:06 AM;Last Updated : 14 May 2023 07:06 AM

[5] https://www.hindutamil.in/news/crime/989909-female-si-said-that-she-had-taken-a-bribe-of-rs-3-000-in-the-name-of-police-station-expenses.html

[6] நக்கீரன், குடும்ப பஞ்சாயத்து புகார்; லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் கைது, ராஜ்ப்ரியன், Published on 13/05/2023 (16:19) | Edited on 13/05/2023 (16:47).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sub-inspector-has-been-arrested-red-handed-while-accepting-bribe

[8] தினமலர், ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்., தலைவர், டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: மே 17,2023 01:16.

[9]  https://m.dinamalar.com/detail.php?id=3322749

[10] சமயம்.காம், சிவகங்கை; லஞ்சம் வாங்கிய கல்லல் ஊராட்சி மன்ற தலைவர்கையும் களவுமாக அதிரடியாக கைது…!, Ramya Subburaj | Samayam Tamil | Updated: 16 May 2023, 6:26 pm

[11] https://tamil.samayam.com/latest-news/sivagangai/panchayat-council-president-arrested-for-taking-bribe/articleshow/100281202.cms

[12] தமிழ்.இந்து, காரைக்குடி அருகே வீட்டு வரிக்கு ரூ.13,000 லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சித் தலைவர், ஓட்டுநர் கைது, இ.ஜெகநாதன், Published : 16 May 2023 06:50 PM, Last Updated : 16 May 2023 06:50 PM

[13] https://www.hindutamil.in/news/crime/991066-aiadmk-panchayat-leader-driver-arrested-for-taking-rs-13-000-bribe-for-house-tax.html

[14] தினத்தந்தி, வீட்டுவரி ரசீதுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி தலைவர்டிரைவர் கைது , மே 17, 12:15 am (Updated: மே 17, 12:16 am)

[15] https://www.dailythanthi.com/News/State/bribery-965885

தொடர்ந்து பெண் அதிகாரிகள் லஞ்சம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? அதிலும் பெண்கள் மீதே தமது வக்கிரத்தை காட்டுவது ஏன்?

திசெம்பர் 14, 2022

தொடர்ந்து பெண் அதிகாரிகள் லஞ்சம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? அதிலும் பெண்கள் மீதே தமது வக்கிரத்தை காட்டுவது ஏன்?

லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்குதமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது: சமீபகாலமாகவே, பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள்.. ஆனால், பெண் அதிகாரிகள் சிலரும் லஞ்சம் வாங்குவதும், அந்த லஞ்ச பணம் தராமல் போவதற்காக சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.  தமிழகத்தில் அதிகார வர்க்கத்தில் “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு” என்ற கொள்கை “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற பார்முலாவில் 1970களிலிருந்து செயல்பட்டு வருகிறது. ஊழல் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாக, லஞ்சம் வாங்குபவர்களின் நடத்தை அதிகாரத்திற்கான ஆசை, பயம், பொறாமை, மனச்சோர்வு, வெறி, ஒதுக்கப்பட்ட உணர்வு, தீவிர, ஒடுக்கப்பட்ட படைப்பாற்றலின் தேவை போன்ற உளவியல் கட்டமைப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். பொதுவாக, சமூகத்தில் ஆடம்பரமாக இருக்க வேண்டும், கண்டபடி செலவு செய்ய பணம் வேண்டும், போன்ற மனவெறி கொள்ளும் பொழுது, பணமும் அவ்வாறே வர வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, ஊக்கம் அதிகமாகி, வெறியாக,வன்மத்துடன் செயல்பட ஆரம்பிக்கிறது. விளைவு, ஏழைகளிடம் கூட ரூ 10/- என்றெல்லாம் வாங்கும் மனப்பாங்கில் வெளிப்படுகிறது.

திருச்சியில் கோவில் திருப்பணி அனுமதிக்கு, பெண் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதானது: திருச்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்ப ஒரு சம்பவம் நடந்தது.. இங்கு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்கள் ஒன்றுதான் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில். இங்கு என்ன ஸ்பெஷல் என்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இரண்டு வேளையிலும் மருந்தாக இங்கு தரப்படும்.. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.. இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது.. அதனால், ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த அளவுக்கு பொதுநலனுடன் செயல்பட்டு வரும் இந்த கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பெண் அதிகாரியை நியமித்துள்ளனர்.. தர்மகாரியம் ஆனால், இந்த அதிகாரிதான், லஞ்சத்தை வாங்கியிருக்கிறார்.. அவர் பெயர் மூர்த்தீஸ்வரி.. கோயில் திருப்பணி விஷயத்தில் லஞ்சம் கேட்டுள்ளார்.. அதுவும் 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.. அந்த லஞ்ச பணத்தை, இரவு நேரம் திருச்சி பஸ் ஸ்டாண்ட்டில் வந்து தர சொல்லி உள்ளார்.. ஒரு தர்ம காரியத்துக்காக கோயிலில் கமிட்டியில் இவரை நியமித்தால், இப்படியா செய்வது??? கடைசியில் இவர் கையும் களவுமாக சிக்கி கைதானார். இதோ இதே திருச்சியில் இன்னொரு பெண் அதிகாரி, லஞ்சம் வாங்கி இப்போது கைதாகி உள்ளார்..

சென்னை பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கி கைதானது: கோவையைச் சேர்ந்தவர் மோனிகா ஸ்ரீ. இவருக்கும் கொளத்தூரைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று மோனிகா ஸ்ரீயை அவரின் கணவர் வினோத்குமார் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் டாக்டர் வினோத்குமார் உட்பட எட்டுப் பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், டாக்டர் வினோத்குமார் கொடுத்த புகார் தொடர்பாக மோனிகா ஸ்ரீயிடம் விசாரணை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் அனுராதா, ரூ 50,000/- லஞ்சமாகக் கேட்டதால், பின்னர் பேரம் பேசி 20,000/- கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது[1]. இந்தச் சூழலில் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் அனுராதாவைச் சிக்கவைக்க மோனிகா ஸ்ரீ திட்டமிட்டு, அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விவரத்தைக் கூறினார். அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கொடுத்த அறிவுரையின்படி மோனிகா ஸ்ரீ 20,000 இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டர் அனுராதாவைக் கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தினர்[2]. லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வசமாகச் சிக்கிய இன்ஸ்பெக்டர் அனுராதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்டுகிறது.

இப்பொழுது மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. யுவராஜா வீட்டார் பெண்ணை தொந்தரவு ஜெகதீசன் செய்தார் போலும். போக்சோ சட்டம் என்பதால் விவரங்கள் மறைக்கப் பட்டது போலும்.  இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் போலீஸ் மீதே போலீஸாரிடம் புகார் கொடுத்தது: முதலில் எப்படி போலீஸ் மீதே போலீஸாரிடம் புகார் கொடுப்பது என்று யோசித்திருக்கலாம், தயங்யிருக்கலாம், ஆனால், மனிதர்கள் மூலைக்குத் தள்ளப் படும் பொழுது, வேறு வழியில்லாமல், தவிக்கும் பொழுது, அத்தகைய முடிவுகளை எடுக்க தையம் வரும். அதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது[3]. இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்[4]. அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், 13.12.2022 அன்று காலை 10 மணி அளவில்களவுமாக பிடித்தனர்[5]. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[6].

கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப் பட்டது: இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை கைப்பற்றிய போலீசார், மாலதியை கைது செய்து வேனில் ஏற்றி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை நடத்திய போலீசார், அதன்பிறகு அவரை திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மாலதியை திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன், மாலதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்[7]. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்[8]. மேலும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்[9]. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது போலீசாரே பொறி வைத்து பிடித்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[10].

பெண்கள் விவகாரங்களில் பெண்களே பெண்கள் மீது பெண்களே வக்கிரத்துடன் நடந்து கொல்வது ஆராயத் தக்கது: அன்றைய தினங்களில், சில ஆண்கள்தான் லஞ்சம் வாங்கி சிக்குவார்கள்.. ஆனால், இப்போதெல்லாம் சில பெண் அதிகாரிகளே லஞ்சம் கேட்டு, மிரட்டலும் விடுத்து அதிர வைத்துவிடுகிறார்கள், அத்துடன் அசிங்கப்பட்டும் போகிறார்கள்[11]. ஆனால், லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள், அதிகாரிகளை மட்டும் கைது செய்யும் போலீசார், லஞ்சம் கொடுத்து எப்படியாவது காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும் என்று, “வலிய” சென்று லஞ்சத்தை தருபவர்களை ஏன் எதுவுமே ஒன்றுமே செய்வதில்லை?[12] பெண்களிடம், பெண்களே லஞ்சம் கேட்பது, அதிலும் போக்சோ போன்ற விவகாரங்களிலும், மனசாட்சி இல்லாமல், வன்மத்துடன் லஞ்சம் கேட்பது,பெண்மையின் சீரழிவின் உச்சத்தைக் காட்டுகிறது எனலாம். பெண்மையைப் போற்றும் இந்நாட்டில், ஒரு பக்கம் ஆண்கள் பெண்களின் மீது வக்கிரத்துடன் தாக்கி வரும் பொழுது, குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில், பெண்கள், அதிலும், சட்டத்தை நடைபடுத்தி, நீதி கிடைக்க வழி செய்யும் காவலர்களாக இருக்க வேண்டியவர்களே, இத்தகைய சட்டமீறல்கள், குற்றங்களில் ஈடுபடுவது திகைப்பிலும், திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1] விகடன், சென்னை: குடும்பப் பிரச்னை; லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்! – விஜிலென்ஸில் சிக்கியது எப்படி?, எஸ்.மகேஷ், Published: 20 Oct 2022 6 PM; Updated: 20 Oct 2022 6 PM.

[2] https://www.vikatan.com/news/crime/vigilance-police-arrested-chennai-police-inspector-in-bribary-complaint

[3] நக்கீரன், ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக பிடிபட்ட இன்ஸ்பெக்டர், மகேஷ் Published on 13/12/2022 (11:30) | Edited on 13/12/2022 (11:53).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-inspector-who-asked-bribe-rs-5000-was-caught-red-handed-anti

[5] திருச்சி விஷன், 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது, Dec 13, 2022 – 11:26Updated: Dec 13, 2022 – 14:50; https://trichyvision.com/Female-inspector-arrested-for-taking-bribe-of-5-thousand

[6] https://trichyvision.com/Female-inspector-arrested-for-taking-bribe-of-5-thousand

[7] ரூ தினத்தந்தி,.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது,  டிசம்பர் 14, 2:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/female-inspector-arrested-for-accepting-bribe-of-rs5-thousand-857445

[9] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது, டிசம்பர் 14, 12:36 am

[10] https://www.dailythanthi.com/News/State/female-inspector-arrested-for-accepting-bribe-of-rs5-thousand-857337

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அசிங்கம் அசிங்கம்.. மானமே போச்சு.. அதுவும் அதிகாரிகளேகண்ணாலபார்த்துட்டாங்க.. சிக்கிய பெண் அதிகாரி, By Hemavandhana, Updated: Tuesday, December 13, 2022, 18:54 [IST]

[12] https://tamil.oneindia.com/news/trichirappalli/shame-shame-woman-police-inspector-arrested-for-bribe-case-near-trichy-what-happened-489461.html

சார்பதிவாளர்கள் ஊழலில் சிக்குவது, இடம்மாற்றம் செய்யப் படுவது – என்ன நடக்கிறது? ஊழலை ஊக்குவிக்கிறதா? வழக்குகள் நிலுவையில் இருப்பது ஏன்?(2)

ஓகஸ்ட் 22, 2022

சார்பதிவாளர்கள் ஊழலில் சிக்குவது, இடம் மாற்றம் செய்யப் படுவதுஎன்ன நடக்கிறது? ஊழலை ஊக்குவிக்கிறதா? வழக்குகள் நிலுவையில் இருப்பது ஏன்?(2)

கட்டப்பஞ்சாயத்து போலீஸ்: நில அபகரிப்பு தடுப்பு போலீசார் புகார் தருவோரையும் மோசடி செய்தவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசி நிலங்களை மீட்டு ஒப்படைக்கின்றனர். இதனால் நில மோசடியில் ஈடுபட்டவர் யார் என்று வெளி உலகத்துக்கு தெரியாமல் போகிறது. அவர்கள் இத்தகைய மோசடியை தொடர்கிறார்கள். நில மோசடியில் ஈடுபடுபவர்கள், துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை, தண்டனை கிடைக்காத பட்சத்தில் நில மோசடிகள் தொடரத்தான் செய்யும், என்று தினமலர் நிருபர் கவலையுடன் முடித்திருக்கிறார். ஆனால், இவையெல்லாம் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம், குறிப்பிட்ட திட்டத்துடன், உறுதியாக, குறிப்பிட்ட நபர்கள்- அதிகாரிகள் ஒப்புதல், துணையோடு, நடப்பது தெரிகிறது. இதனால், எத்தனை அப்பாவிகள், உண்மையான, நிலங்கல் மற்றும் ச்த்துக்களின் உரிமையாளர்கள் பாதிக்கப் படப் போகிறார்கள் என்பது, கொஞ்சம் வருடங்களில் வெளிவந்து விடும். ஆனால், அவை வழக்குகளாக மாறி, நீதிமன்றங்களில், கிடப்பில் போடப் படும் நிலைக்குத் தளளப்படலாம்.

ஜூலை 2022ல் 12 சார்பதிவாளர்கள் இடமாற்றம்: வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அறிக்கை[1]:

  1. திருச்சி வழிகாட்டி மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் சபாபதி, கோபிசெட்டிபாளையம் வழிகாட்டி மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. தென் சென்னை குன்றத்தூர் சார்பதிவாளர் நவீன், உதகமண்டலம் 2வது இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கும்,
  3. கோவை சூலூர் சார்பதிவளர் செல்வப்பாண்டி, சேலம் கிழக்கு பதிவு மாவட்டம் தலைவாசல் சார் பதிவாளராகவும்,
  4. கோவில்பட்டி சார்பதிவாளர் பாஸ்கரன், விருதுநகர் மாவட்டம் குன்னூர் சார்பதிவாளராகவும்,
  5. சேலம் மேற்கு சங்ககிரி சார்பதிவாளர் செல்வராஜ், ஈரோடு பதிவு மாவட்டம் நிர்வாக மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  6. திருப்பூர் 2ம் எண் இணை சார்பதிவாளர் பாஸ்கரன், கரூர் 1ம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கும்,
  7. சேலம் கிழக்கு வாழப்பாடி சார்பதிவாளர் செந்தில்குமார், சேலம் மேற்கு 2வது இணை சார்பதிவாளராகவும்,
  8. திண்டிவனம் அசல் பதிவு கண்காணிப்பாளர் கிரிதரன், செங்கல்பட்டு பதிவு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும்,
  9. திருப்பூர் அவினாசி சார்பதிவாளர் ரகோத்தமன், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சார்பதிவாளராகவும்,
  10. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சார்பதிவாளர் பீட்டர் மைக்கேல், திருப்பூர் பதிவு மாவட்டம் சீட்டு, சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[2].
  11. விருத்தாச்சலம் நிர்வாக மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் மணிகண்டன், திருவள்ளூர் மாவட்டம் சீட்டு, சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளராகவும்,
  12. ராமநாதபுரம் சீட்டு, சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் மஞ்சுளா, கோபிசெட்டிபாளையம் நிர்வாக மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் லஞ்சப் பணம் சிக்கியது: நாமக்கல், சிதம்பரம், செஞ்சி, குன்னூர், அரியலூர், செக்கானூரணி, ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையின்போது ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80 ஆயிரம் ரூபாய். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 70 ஆயிரம் ரூபாய் சிக்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சோதனையில் 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது

ஜூலை 2019ல் 48  சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப் பட்டனர்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய சார்பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து பதிவுத்துறை ஐ.ஜி பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்[3].  தமிழகத்தில் 48 சார்பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்[4]. அதன்படி,

  1. காஞ்சிபுரம் சார்பதிவாளர் பாண்டியன் செங்கல்பட்டு கண்காணிப்பாளர் (அசல் பதிவு பிரிவு),
  2. தென் சென்னை தற்காலிக இணை சார்பதிவாளர் ஸ்ரீதர் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளராகவும்,
  3. தென் சென்னை (சேலையூர் தாம்பரம்) சார்பதிவாளர் ஸ்ரீராம் வடசென்னை சார்பதிவாளராகவும் (சீட்டு மற்றும் சங்கம்),
  4. மாதவரம் சார்பதிவாளர் ஜார்ஜ் சேலையூர் சார்பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  5. அம்பத்தூர் சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி மாதவரம் சார்பதிவாளராகவும்,
  6. குன்றத்தூர் சார்பதிவாளர் காந்தி பதிவுத்துறை தலைவர் அலுவலக சார்பதிவாளராகவும்,
  7. கோவில்பட்டி சார்பதிவாளர் முத்துசாமி குன்றத்தூர் சார்பதிவாளராகவும் என மொத்தம் 48 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அம்பத்தூர், பல்லடம், கோவில்பட்டி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றியது.  இதை தொடர்ந்து அந்த சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பதிவுத்துறை ஐ.ஜிக்கு லஞ்ச ஒழிப்புதுறை கடிதம் எழுதியது. அந்த சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தற்போது அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய சார்பதிவாளர்கள் சிலர் பதிவில்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அவர்களுக்கு பதிவுப்பணி வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இணைதளத்திலிருந்து இருக்கும் புள்ளி விவரங்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை இணைதளத்திலிருந்து இருக்கும் புள்ளி விவரங்களின் படி, 2011-12 முதல் 2020-21 வரை மொத்தம் 5000க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் லஞ்சக் கைதுகள் – கையும் களவுமாக பிடிபட்டவர்கள் 2000க்கும் மேலாக இருக்கிறது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் – 1474

வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் – 3111

டிரிபூனல் விசாரணையில் சிக்கியுள்ள வழக்குகள் – 439

டிரிபூனல் விசாரணையில் சிக்கியுள்ளவர்கள் – 978

துறை மூலம் விசாரணை நிலுவையில் உள்ளவை – 737

துறை மூலம் விசாரணை நிலுவையில் உள்ள நபர்கள் – 4700

முதல் தகவலறிக்கை[5] மற்றும் ஊடகங்களுக்குக் கொடுக்கப் படும் செய்தி குறிப்புகளை[6]  ஒழிப்புத்துறை இணைதளத்திலிருந்து, பதிவிரக்கம் செய்து கொள்ளலாம், விவரங்களைப் பார்க்கலாம்.

© வேதபிரகாஷ்

22-08-2022

,


[1] தினகரன், 12 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம், 2022-07-28@ 02:09:05

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=786515

[3] தினகரன், லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய சார்பதிவாளர்கள் 48 பேர் இடமாற்றம், 2019-07-24@ 00:17:54

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512537

[5] https://www.dvac.tn.gov.in/pdf/FIR/2020/06-2020%20TAN.pdf

[6] https://www.dvac.tn.gov.in/Press_Release.html

சார்பதிவாளர்கள் ஊழலில் சிக்குவது, இடம்மாற்றம் செய்யப்படுவது – என்ன நடக்கிறது? ஊழலை ஊக்குவிக்கிறதா? (1)

ஓகஸ்ட் 22, 2022

சார்பதிவாளர்கள் ஊழலில் சிக்குவது, இடம் மாற்றம் செய்யப் படுவதுஎன்ன நடக்கிறது? ஊழலை ஊக்குவிக்கிறதா? (1)

ஊழல், ஊழல், ஊழல்…..: தமிழக தாலுகா ஆபீஸ், பதிவு அலுவலகம், தாசில்தார் ஆபீஸ் முதலியவை ஊழலுக்குப் பெயர் போன்னது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதில், தினம்-த்னம் லஞ்சம் வாங்குவதற்கு கைதாகிறார்கள்; ஜாமீனில் வெளி வருகிறார்கள்; இடம் மாற்றம் செய்யப் படுகிறார்கள், அத்துடன் அவை மறக்கப் படுகின்றன. தினம்-தினம் பிறப்பு-இறப்புகள், திருமணம், நிலம்-வீடு வாங்குவது-விற்பது,  சாஜி சான்றிதழ், வருமான சான்றிதழ், என்று வகைவகையாக பதிவுகள் – சாதாரண, ஏழை, படிக்காதவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை வந்து செல்ல வேண்டிய அவசியம்…..இதனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு எந்த இரக்கமும் இருப்பதில்லை.  ஏழைகளிடம் ரூ.10, 20, 50, 100 கூட வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஏதாவது கொடுத்துவிட்டு செல் என்றுதான் சொல்கிறார்கள். ஏழைப் பெண்கள், முந்தானையில் முடித்து வைத்திருக்கும் அத்தகைய சிறு பணத்தை கொடுத்தால், போடு என்று வாங்கிக் கொள்வதில் தயக்கம், வெட்கம், மானம், சூடு, சொரணை……எதுவும் இருப்பதில்லை…ஆனால், இப்படியும் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 50 வருடங்களாக லஞ்சம் வாங்காமல் இருந்தார்களா, லஞ்சம் கொடுக்க உடந்தையாக இல்லாமல் இருந்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை…

ஜூலை 2022ல் சார்பதிவாளர் ஆவண எழுத்தர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியது: முத்துசாமி குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம் 1972, ஜூலை 1ல் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 50 ஆண்டுகளாக ஆவண எழுத்தர்களாக சந்திரசேகரன், மதியழகன், சோமசுந்தரராஜன், இன்பநாதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணியை பாராட்டும் வகையில் சார்பதிவாளர் முத்துசாமி, இந்த நான்கு பேர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்[1]. அனைத்து ஆவண எழுத்தர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஆவண எழுத்தர்களை கவுரப்படுத்திய சார்பதிவாளர் முத்துசாமிக்கு ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்[2]. ஆனால், இந்த அதிகாரியை எதிர்த்து ஆர்பாட்டம் நடந்தது என்று நக்கீரன் குறிப்பிடுகிறது[3]. ஒருவேளை இதே பெயரில் இரண்டு, மூன்று சார்பதிவாளர்கள் இருக்கிறார்கள் போலும்.

ஜூலை 2022ல் சார்பதிவாளர்களின் ஊழல்: நீதிமன்ற தடையை மீறி பி.ஏ.சி.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய உதவியாக இருந்த தென்காசி, நெல்லை சார் பதிவாளர்கள் உள்ளிட்ட 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்[4]. நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பி.ஏ.சி.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்நிறுவனத்துக்கும், அதன் முதலீட்டாளர்களுக்கும் இடையே உள்ள வழக்கு காரணமாக அதன் சொத்துக்களை உச்சநீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது[5]. இதனிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, பி.ஏ.சி.எல். நிறுவனத்துக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட சார் பதிவாளர்கள், அவர்களது உதவி அலுவலர்களும் மோசடி செய்து ஆயிரத்து 500 ஏக்கர் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பி.ஏ.சி.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய உதவியாக இருந்த நெல்லை சார்பதிவாளர் பட்டமுத்து, அவரது உதவியாளர்கள் செந்தில்குமார், மகாலட்சுமி சிந்து உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர் விசாரணையை அடுத்து, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, ஊத்துமலை, சுரண்டை சார் பதிவாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்பாவிகளின் நிலங்களை மோசடியாக பத்திர பதிவு செய்ய துணை போகும் அதிகாரிகள்[6]: தண்டனை இன்றி தப்பி விடுகின்றனர். திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுகின்றன. இந்த தொழிலில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மொத்தமாக நிலம் பெறுவதற்கு இங்குள்ள புரோக்கர்களை நம்புகின்றனர். பல ஆண்டுகளாக எந்த பதிவும் இல்லாமல் இருக்கும் நிலங்களை குறிவைத்து சில புரோக்கர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். திருநெல்வேலியை சேர்ந்த 87 வயது முதியவர் செந்தில் ஆறுமுகம் தனது பூர்வீக இடம் எனக்கூறி 2500 ஏக்கரை கோவையை சேர்ந்தவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்தார். துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ் இதை பதிவு செய்தார்.இந்த தகவல் தெரியவந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சார்பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். செந்தில் ஆறுமுகம் பவர் பத்திரத்தை ரத்து செய்தார். ஏற்கனவே புதுக்கோட்டை பகுதி தளவாய்புரத்தில் 1300 ஏக்கர் நிலம் தமக்குச் சொந்தமானது என கூறி விளாத்திகுளம் அருகே புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கேரளாவைச் சேர்ந்த பென்னி, பாத்திமா சம்சுதீனுக்கு 2019ல் செந்தில் ஆறுமுகம் விற்பனை செய்தார். அந்த நிலமும் விவசாயிகளுக்கு சொந்தமானது. இதுகுறித்து தளவாய்புரம் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார் அப்போதைய அமைச்சர் வேலுமணியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது[7].

நில மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள்: அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் வருவதற்காக காத்திருக்கின்றனர். சார்பதிவாளராக மோகன்தாஸ் பொறுப்பேற்றதும் தற்போதைய மோசடியை நிறைவேற்றியுள்ளார் செந்தில் ஆறுமுகம்.தமது பூர்வீக நிலம் என அவர் கூறியதால் பதிவு செய்ததாக சார்பதிவாளர் தரப்பில் கூறப்படுகிறது. பூர்வீக நிலம் என்றால் ஏன் அவர் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பத்திரபதிவு நடந்தது வெளியே தெரியாமல் போயிருந்தால் இந்த நிலம் பல கைகள் மாற்றப்பட்டு வடமாநிலத்தவர்களுக்கு விற்கப்பட்டிருக்கும்.சேலத்தை பூர்வீகமாக கொண்ட சார்பதிவாளர் மோகன்தாஸ் கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம் கடையத்தில் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவில் நடத்திய சோதனையில் லஞ்சப்பணம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பிரச்னையில் மோகன்தாஸ் மீது டிரான்ஸ்பர் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. தற்போது 2300 ஏக்கர் பதிவுக்கு அவருக்கு ஒரு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தப்பிக்கும் அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: “பத்திரப்பதிவு துறையில் மோசடி அதிகாரிகள் தப்பிவிடுவது வழக்கமாக நடக்கிறது. துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த திடீர் சோதனையில் 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் இன்னமும் பணியில் தான் உள்ளார். அதேபோல் துாத்துக்குடியில் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கில் சிக்கியவர் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகிறார்”, என்றார். பிறகு, லஞ்சக் கைதுகள், பணம் சிக்குவது, என்பதெல்லாம் என்ன, செய்திகள் வருவது எதற்கு, ஏதோ, இவர்கள் எல்லோரும்ஈருக்கிறார்கள், வேலை செய்கிற்ரர்கள் என்பதனைக் காட்டிக் கொள்வதற்காகவா, அல்லது சட்டம்-நீதி படி லஞ்சம் வாங்கியவர், கைதானவர்கள் எல்லாம் புனிதமானவகளா, கைது செய்த அதிகாரிகள் தவறு செய்து விட்டார்களா என்று பல கேள்விகள் எழுகின்றன. சரி, பறிமுதல் செய்யப் பட்ட லட்சங்கள்-கோடிகள் பணம் எங்கே செல்கின்றன?

© வேதபிரகாஷ்

22-08-2022


[1]  இன்ஸ்டா.நியூஸ், 50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய சார்பதிவாளர், By K.S.Balakumaran, Reporter 2 July 2022 7:00 AM.

[2] https://www.instanews.city/tamil-nadu/namakkal/kumarapalayam/registrar-paid-tribute-clerks-served-for-50-years-1148656

[3] நக்கீரன், சார்பதிவாளர் வெர்சஸ் பத்திர எழுத்தாளர்கள் – லஞ்சம் பிரிப்பதில் தகராறு, ஆகஸ்ட்.20-23, 2022, பாக்கங்கள்.18-20.

[4] ஜெயா.நியூஸ்.லைவ், நீதிமன்ற தடையை மீறி தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய உதவிதென்காசி, நெல்லை சார் பதிவாளர்கள் உள்ளிட்ட 22 பேர் பணியிடை நீக்கம், Jul 28 2022 2:00PM.

[5] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_188189.html

[6] தினமலர், ஊழல் மயமாகும் பத்திரபதிவுத்துறை தண்டனையின்றி தப்பிக்கும் அதிகாரிகள், Added : மே 15, 2022  00:47.

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=3029884

கோடிகளை செலவழித்து, கோடிகளை அள்ளுவது தான் அரசியல் – அரசியல்-சினிமா-கிரிக்கெட்-வியாபாரம்-விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்!

ஒக்ரோபர் 7, 2021

கோடிகளை செலவழித்து, கோடிகளை அள்ளுவது தான் அரசியல்அரசியல்சினிமாகிரிக்கெட்வியாபாரம்விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்!

கோடிகளை செலவழித்து ஆட்சிக்கு வருவது எதைக் காட்டுகிறது?: 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு செலவழித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. அதில் அதிகபட்சமாக திமுக 114 கோடியே 11 லட்ச ரூபாயும், அதிமுக 57 கோடியே 5 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பிராதன கட்சிகளில் பாஜக மட்டும் தேர்தல் செலவு விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.

  • “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடி  செலவு செய்துள்ளது”
  • “திமுக ரூ.114.14கோடி  செலவு செய்துள்ளது”
  • “ஊடக விளம்பரங்களுக்கு ரூ.39.78கோடி”
  • “அதிமுக ரூ.57.33கோடி தேர்தல் செலவு செய்துள்ளது”
  • “காங்கிரஸ் கட்சி தேர்தல் செலவாக ரூ.84.93 கோடி”
  • “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13.19 கோடி  செலவு செய்துள்ளது”
  • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம்  வெளியிடவில்லை.

இப்படி கோடிகளை செலவழித்து ஆட்சிக்கு வருவது, ஆட்சியைப் பிடிப்பது, ஜனநாயகத்தில் எப்படி எடுத்துக் கொள்வது?

கட்சிகள் எதெதற்கு எவ்வளவு செலவழித்தது என்று ஆராய்ச்சி செய்யலாம், ஆனால், ஊழலை ஒழிக்க முடியுமா?: திருணமூல் காங்கிரஸ் 151 கோடிகள், திமுக 114 கோடிகள் என்று செலவழித்துள்ளன. அதிமுக சுமார் 58 கோடிகள், கேரள காங்கிரஸ் 37, சிபிஐ- 10 லட்சங்கள் ஒரு சீட்டிற்கு செலவழித்துள்ளன.

அதிமுக பெரும்பாலும் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தியுள்ளது. ஆனால், திமுக பிரச்சாரம் மற்றும் விளம்பரம் என்று செலவழித்துள்ளது. மற்ற கட்சிகள் – படத்தில் காட்டிய படி பிரச்சாரம் மற்றும் விளம்பரம் என்று செலவழித்துள்ளன.

  • சித்தாந்தம் என்று பேசினாலும், இப்படி விளம்பரம் மற்றும் பிரச்சாரம் என்று செலவழித்துள்ளதைக் கவனிக்கலாம்.
  • மேலும் பிரஷாந்த் கிஷோர் போன்ற ஆலோசகர்களை பயன்படுத்தி, நவீன யுக்திகளைக் கையாண்டுள்ளன.
  • வேட்பாளர்கள் கூட மேக்கப் போட்டுக் கொண்டு, உடைகளை மாற்றி, சூட்டிங்கிற்கு செல்வது போல கூட்டங்களுக்கு, பிரச்சாரங்களுக்கு வருகிறார்கள்.
  • தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் பற்றி கேட்க வேண்டும், சினிமா ஹீரோ ரேஞ்சில் வைத்து, விளம்பரங்கள் செய்யப் படுகின்றன.
  • முடியுமோ இல்லையோ கவர்ச்சிகர விளம்பரம் மூலம், ஆசையான அறிவுப்புக்களை வெளியிட்டு, மயக்கி ஓட்டுகளைப் பெற்றுள்ளன.
  • வாக்குறுதி என்று சொல்லி, அவற்றை நிறைவேற்றி விட்டோமென்பதற்கும் விளம்பரங்கள் செய்து வருகின்றன.

வகைவகையான செலவுகள் என்று பிரித்துக் காட்டுகிறார்கள்: முக்கிய, பிரபலமான, ஸ்டார் கேம்பைனர்-பிரச்சாரகருக்கான போக்குவரத்து, மற்ற தலைவர்களுக்கான போக்குவரத்து, விளம்பரப் பொருட்கள்-சாதனங்கள், கூட்டங்கள்-ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவது, மற்ற செலவுகள் என்று கோடிகளில் செலவழித்துள்ளன.

  • தவிர சாப்பாடு, கைசெலவு, பரிசுகள், ஊக்கத் தொகை முதலியவைகளும் உண்டு.
  • மின் மற்றும் அச்சு ஊடகங்கள், சிறு-குறுந்தகவல் அனுப்புதல், இணைதளம், வளைவுகள், பானர்கள், ஸ்டிக்கர்கள், கொடிகள், நோட்டிஸுகள். சுவரொட்டிகள், முதலிய செலவுக/ளும் உள்ளன.
  • டிவி-செனல்களில் திரும்ப-திரும்ப காட்டப் படும், சினிமா மாதிரி படங்கள், குறும்படங்கள் முதலியன.
  • மக்களைக் கவர, கூட்டம் சேர குத்தாட்டங்கள், நடனங்கள், பாடல்கள் போன்ற இத்யாதிகள்
  • பிரியாணி, குவாட்டர் போன்ற வாடிக்கையான சமாச்சாரங்கள்.
  • இத்தனையும் வைத்துக் கொண்டு, ஜனநாயகம் என்கிறார்கள்.

திமுக-அதிமுக தேர்தல் செலவு ஒப்பீடு: திராவிட கட்சிகள் எவையும் சளைத்தவை அல்ல. 1970களிலிருந்து பார்த்தால், மாறி-மாறித்தான் ஆட்சி செய்து வருகிறார்கள். வட்டம்-மாவட்டம்,எம்.எல்.சி. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், வாரியத் தலைவர், என்று எந்த பதவிக்கு வந்தாலும், குறைந்த பட்ச காலத்தில், கார்-பங்களா-சொத்துகள் என்று தான் வளர்ச்சி அடைகிறார்கள். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல..

  • 2016-2021 தேர்தல்களை ஒப்பிடும் போது, திமுக எல்லாவற்றிற்கும் அதிகமாக செலவழித்துள்ளது. செலவுகளும் கனிசமாக உயர்ந்துள்ளன.
  • ஆனால், அதிமுகவிற்கு, எல்லாமே குறைந்துள்ளன. போட்டியிட்ட சீட்டுகள் உட்பட குறைந்துள்ளன.
  • ஆகவே, திமுக மேலிடம்-திமுகவினர், எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பில், வெறியில் செலவழித்து வெற்றிப் பெற்றுள்ளனர்.
  • மேலும், அதிமுக உடைந்துள்ளதால், செலவும் குறைந்துள்ளது எனலாம். சசிகலா தனியாக செயல்படுகிறார்.
  • ஒருவேளை, அதிமுகவினர் எல்லோரும் ஒன்று சேர்ந்தால், பலம் பெற்று, திமுகவைக் கட்டுப் படுத்தலாம்.
  • இல்லையென்றால், இந்த ஐந்து ஆன்டுகளிலேயே அசுர வேகத்தில் வளர்ந்து விடுவார்கள்.

ஊழலை ஒழிக்க எந்த அரசிய-வீரனும், திராவிட-சித்தாந்தியும், தமிழின-ரோசமுள்ளவனும் இல்லை: நிதர்சனம் என்னவென்றால், எந்த கட்சியும் ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்வதே இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், எதிர்கட்சியினர் பெரிய ஊழல்வாதிகள் போன்று தினம்-தினம் ஏதோ நடவடிக்கை எடுக்கப் பட்டு பிம்பத்தை உண்டாக்க முயல்கின்றனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த அரசுத்துறையிலும் சுத்தம் இல்லை. எல்லாமே லஞ்சத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. கைதுகள் ஆனாலும், கவலைப் படாமல், ஜாமீனில் வெளியே வருவது, மறுபடியும் பணியில் அமர்வது, ஏன், அதே இடத்திற்கு வந்து உட்கார்வது, “பார், என்னை எவனும் ஆட்ட முடியாது,” என்பது போல நடந்து கொள்வதால், லஞ்சம் தொடர்கிறது. அவப்பொழுது, ஏதோ ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அதோடு சரி. வெட்கம்-மானம்-சூடு-சொரணை எல்லாம் யாருக்கும் கிடையாது.

அரசியல்சினிமாகிரிக்கெட்வியாபாரம்விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான்: இப்பொழுது, ஊடக பலத்தைப் பொறுத்த வரையில், திமுகவை யாராலும் மிஞ்ச முடியாது. ஆனானப் பட்ட, மோடியை தைரியமாக விமர்சித்து வருகின்றன என்றால், தமிழகத்தைப் பொறுத்த வரையில், அந்த அளவிற்கு ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகின்றனர். அதிமுகவிற்கு டிவி-செனல்கள் இருந்தாலும், சன் குழுமம் போன்ற மாநிலங்கள் ஆதிக்கம், தென்னிந்திய கவரேஜ், விளம்பரங்களைப் பெறும் சக்தி, சீரியல்களை உண்டாக்கி-பரப்பி மக்களை ஈர்த்து, அடிமையாக்கும் முறை, பெண்களைக் கவரும் யுக்திகள் மற்ற செனல்களிடம் இல்லை. அதனால் தான், விளம்பரங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன. இவையெல்லாம், ஒரு வட்டம் போன்ற, திரும்ப-திரும்ப நடப்பவை, ஒன்றையொன்று சார்ந்து நடப்பவை. அதனால், யாரும் இதில் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. எப்படியாகிலும், பொய்களைச் சொல்லி, ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், அதிரடி விளம்பரத்தால் பொருட்களை விற்க வேண்டும், பலன் கிடைக்கிறதா-இல்லையா என்பது பற்றி எல்லாம், எந்த ஒழுங்குமுறையும் இல்லை, தார்மீகமும் இல்லை. திராவிடத்துவ அரசியல், அரசியல்-சினிமா-கிரிக்கெட்-வியாபாரம்-விளம்பரம் எல்லாமே ஊழலின் சக்கிரம் தான் என்று மெய்ப்பிக்கிறது.

வெளியே திட்டு, உள்ளே கட்டிக் கொள் என்ற கொள்கைதான் பின்பற்றப் படுகிறது: வியாபாரிகள், வணிகர்கள், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் மற்ற முதலாளிகள் கட்சிகளுக்கு நிதியுதவி செய்கின்றன. அன்பளிப்பாக, தானமாக கோடிகளைக் கொட்டுகின்றன. சரி, பதிலுக்கு அவை என்ன எதிர்பார்க்கும்? வரிசலுகைகள் மற்றும் வரியேய்ப்புகள் தான். மேடைகளில் நியாயம், தர்மம், ஒழுக்கம், தூய்மை என்றெல்லாம் பேசலாம், அவர்களது வியாபார ஸ்தலங்கள் மின்னலாம், வணிக வளாகங்கள் பளிச்சென இருக்கலாம், தொழிற்சாலைகளில் ஐ.எஸ்.ஓ.9000 / 9002 என்றெல்லாம் இருக்கலாம். ஆனால், ஊழல் இருக்கத்தான் செய்கிறது. எங்கு தரம், தராதரம், முறை-விதிகள், ஏற்படுத்தப் பட்ட நிர்ணயங்கள் உள்ளனவோ, அங்கு வைத்துக் கொள், மற்ற இடங்களில் கொள்ளை அடி என்ற கொள்கை தான் பின்பற்றப் படுகிறது. வெளியே திட்டு, உள்ளே கட்டிக் கொள் என்ற கொள்கைதான் பின்பற்றப் படுகிறது.

© வேதபிரகாஷ்

07-10-2021

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை – லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

செப்ரெம்பர் 16, 2021

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லைலஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

02-09-2021 அன்று கலைச்செல்வி கைது: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் கலைச்செல்வி[1].  புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்து 2 வாகனங்களுக்கான ஆர்.சி., புக் 2 ஆயிரம் ரூபாய் என 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயனிடம் கேட்டார்[2]. இந்நிலையில், தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளா்கள் அருண், அந்தோணியாகப்பா ஆகிய இருவரும், தங்கள் நிறுவனத்தின் மூன்று வாகனங்களுக்கான ஆா்சி புத்தகம் பெறுவதற்கு இடைத்தரகா் கார்த்திகேயன் என்பவா் மூலமாக கலைச்செல்வி ரூ. 4,500 லஞ்சமாக கேட்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனா். போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயன பவுடா் தடவிய பணத்தை இடைத்தரகா் கார்த்திகேயனிடம் அருண், அந்தோணியாகப்பா ஆகிய இருவரும் வியாழக்கிழமை 02-09-2021 அன்று கொடுத்தனா்[3]. அந்தப் பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் அளித்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், கலைச்செல்வியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா்[4]. பணத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும், கார்த்திகேயனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5]. இவ்வாறு, இவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் வாகன பதிவுக்கு லஞ்சம் கேட்ட போது நிறுவன மேலாளர்கள் அளித்த புகாரின்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்[6].

15-09-2021 அன்று நீதிபதி ஜமின் மனுவை நிராகரித்தார்: இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் போலீசார் அவரை கைது செய்யும்போது அவரிடம் எந்த பணமும் இல்லை மேலும் ஆய்வாளர் ஒரு பெண்ணாக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார். இப்படி அரசு வக்கீல் லஞ்சம் பெற்றவருக்கு ஆதரவாக வாதித்தது, பிரதிவாத ஆவணங்கள் சமர்ப்பித்தது திகைப்பாக இருக்கிறது. திராவிட ஆட்சியில் இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கின்றனர் போலும். கடந்த 60-70 ஆண்டுகளாக, தமிழகத்தில் எப்படி லஞ்சம், மாமூல், துட்டு வெட்டு போன்றவை செயல்படுகிறது என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தாலுக்கா அலவலகங்களில் அவர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப் படுகின்றனர் என்பது தினம்-தினம் நடக்கும் விசயமாக இருக்கிறது.

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை: இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி[7], “அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை[8]. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது[9]. ஆண்டுக்கு நூறு கணக்கு, என்று வருடத்திற்கு நூறு வழக்குகள் என பதிவு செய்கின்றனர்[10]. முறையாக விசாரிப்பது கிடையாது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்றும் ஆய்வு செய்யவேண்டும்[11]. அவ்வாறெல்லாம் தற்போது செயல்படுவதில்லை, பெயரளவிலேயே லஞ்ச ஒழிப்பு துறையாக இருக்கிறது,”என்று நீதிபதி தெரிவித்தார்[12]. லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்,” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி தெரிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது[13]. மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தனர்[14].

ஊழல், லஞ்சம் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கிறது: தமிழகத்தைப் பொறுத்த வரையில், லஞ்சம் கொடுத்தால் தான், மாண்புமிகு அரசு ஊழியர்கள், செய்கின்ற-செய்ய வேண்டிய வேலைகளையே செய்வர் என்பது, பிரசித்திப் பெற்ற விசயமாகி விட்டது. லஞ்சக் கைதுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. சஸ்பென்ட், இடமாற்றம் என்று செய்திகள் வருகின்றன. 1000 பேர் கைது என்றால், தண்டனை பெறுவது 10 தான் இருக்கின்றன. மற்ற விவரங்கள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. இதில் பெண்-ஊழியர்கள் அதிகமாக ட்டுபடுவதும், சிக்கிக் கொள்வதும் திகைப்பாக இருக்கின்றது. அவர்கள் குங்குமம்-பொட்டு, பட்டுப்புடவை சகிதம், மங்கலகரமாக வந்து, அமங்கலகரமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், அங்குள்ள அனைவரும் தாம்புக்கயறு அளவுக்கு நகைகள், பிரேஸ்லெட் முதலியவைப் போட்டிருப்பது, ஒரு அடையாளமாகக் கருதப் படுகிறது. இவர்களால், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன, வீடு கட்ட முடியாமல் நின்றுள்ளன, கடனில் மூழ்கின போன்வற்றை ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே மனசாட்சி இல்லாமல் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?[15]: “இந்த கட்டுரை யாதோ கருணாநிதி, அவர் குடும்பம் முதலியவற்றைப் பற்றி விமச்சிக்கும் கட்டுரை அல்ல. அவர், அவர் குடும்ப அங்கத்தினர்கள் அரசியல், அரசியல் அதிகாரம், முதலியவற்றை உபயோகித்து தங்களது தனி நபர் வருமானங்களை அதிகமாக பெருக்குவதற்கு உபயோகித்த முறை, அவற்றால் தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டத் தான் எழுதப் படுகிறது. இந்த மாதிரி எந்த அரசியல்வாதியும் மற்றவரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை வதைத்தால் அவர்களுக்கும் இது பொருந்தும். 1970லிருந்து இப்போழுது வரை பரிணாம வளர்ச்சி எடுத்துள்ள நிலைதான் இது,” என்று 20-08-2010 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது இப்பொழுதும் பொருந்துகிறது[16]. நீதிபதி சுருக்கமாக, ஆனால், உள்ள நிலைமையைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-09-2021


[1] மாலைமலர், பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது, பதிவு: செப்டம்பர் 03, 2021 16:58 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/09/03165859/2974314/Tamil-News-bribe-case-woman-inspector-arrested-in.vpf

[3] தினமணி, லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளா் கைது, By DIN  |   Published on : 03rd September 2021 12:11 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/sep/03/bribery-motor-vehicle-inspector-arrested-3692048.html

[5] தமிழ்.இந்து, பட்டுக்கோட்டையில்ரூ.4,500 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது, Published : 03 Sep 2021 03:16 AM; Last Updated : 03 Sep 2021 03:16 AM.

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/711838-.html

[7] புதியதலைமுறை, “அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” – உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, தமிழ்நாடு,    Sinekadhara Published :15,Sep 2021 08:38 PM

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/115883/High-court-branch-said–Government-officials-are-not-shy-about-getting-bribes

[9] தினமணி, அரசு உயா் அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவது இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து, By DIN  |   Published on : 15th September 2021 11:26 PM.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/sep/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88–%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3699843.html

[11] தமிழ்.இந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூச்சப்படுவதில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி , கி.மகாராஜன், Published : 15 Sep 2021 06:47 PM; Last Updated : 15 Sep 2021 06:47 PM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/716090-officials-are-not-shy-about-taking-bribes-high-court-dissatisfied-~XPageIDX~.html

[13] தினத்தந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 16,  2021 01:53 AM

[14] https://www.dailythanthi.com/News/State/2021/09/16015331/Madurai-ICourt-judge-dissatisfied-with-anticorruption.vpf

[15] வேதபிரகாஷ், லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?, 20-08-2010.

[16]https://corruptioninindia.wordpress.com/2010/08/08/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது, அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டது-படுகிறது!

ஏப்ரல் 28, 2021

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது, அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டது-படுகிறது!

ஓட்டுக்குப் பணம் திட்டம், ஜனநாயகத்தை வெல்கிறது: ஐந்து மாநில பேரவைத் தோ்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1,000 கோடிக்கு ரொக்கம், மதுபானம், இலவச பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது[1]. இது கடந்த 2016-இல் பறிமுதல் செய்யப்பட்டதைவிட நான்கு மடங்கு அதிகமாகும்[2]. இவ்வாறு கொடிக் கணக்கில்  பணம் செலவழிக்க கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தயாராக இருக்கிறார்கள் எனும்போது, பணம் செலவழிக்கவும் தயார், பணமும் தயார் என்று தெரிகிறது. சில் கோடிகள் கொட்டினால், பல கோடிகள் அள்ளலாம் என்ற பார்முலா செயல்படும் போது, ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. ஒட்டுக்குப் பணம்-திட்டம் வேற்றிகரமாக செயல்பட்டால், ஓட்டுப்போடாதவர்கள் பற்றிக் கவலையில்லை. எத்த்னை பேர், காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்  போடுவார்கள் என்று உறுதியாகும் போது, மற்ற கட்சி விசுவாசம், வேட்பாளர் முக்கியத்துவம், ஜாதி, மதம், போன்றவையும் பின்னே தள்ளப் படுகின்றன.

2016 விட நான்கு மடங்கு உயர்ந்துள்ள நிலை: இப்பொழுது தேர்தல் நடக்கின்ற மாநிலங்கள் தொலைவில் இருந்தாலும், மக்கள் மாறவில்லை, அரசியல் ஊழலுடன் அவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்றே தெரிகிறது. இதில் தோ்தல் முடிவடைந்த தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.446.28 கோடியும், நான்கு கட்டத் தோ்தல் முடிவடைந்த மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும், அஸ்ஸாமில் ரூ.122.35 கோடியும், கேரளத்தில் ரூ.84.91 கோடியும், புதுச்சேரியில் ரூ.36.95 கோடியும் அடங்கும்[3]. சாதாரண மக்கள் ஆயிரங்களுக்குக் கஷ்டப் பட்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இவர்களுக்கோ, கோடிகளே, தண்ணீர் போல செலவழிக்கத் தயாராக உள்ளது. கருப்புப் பணம் அந்த அளவுக்கு உள்ளது என்றால், ஊழலும் அந்நிலையில் கள்ளத்தனமாக வேலைச் செய்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மொத்தம் ரூ.1001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016-இல் இது ரூ.225.77 கோடியாக இருந்ததாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது[4].

கோடிகளில் பணம் பிடிபட்டாலும், யாரும் தன்னுடையது என்று கேட்கவில்லை: வருமான வரித்துறை சோதனையிட்டதற்கு, அரசியல் கட்சிகள், ஏதோ எதிர்கட்சிகளைப் பழி வாங்கும் போக்கில், குறி வைக்கிறது என்றெல்லாம் விவாதங்கள் செய்ய பட்டன. ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. ஆனால், கோடிகள் எவ்வாறு கணக்கில் வராமல் வைத்துக் கொள்ளப் பட்டன, சிக்கினாலும், அப்பணம் என்னுடையது என்று யாரும் கேட்காமல், அமைதியாக இருக்கின்றனர் என்று நோக்கத் தக்கது. சாதாரண மனிதன், ரஒரு நூறு ரூபாய் நோட்டுக் காணவில்லை என்றால் தேடிக் கொண்டே இருப்பான். கிடைத்தால் நிம்மதியடைவான், கிடைக்காவிட்டால் வருத்தப் படுவான். ஆனால், இங்கோ, கோடிகள் போனாலும், கவலைப் படாமல் இருக்கின்றனர். தோ்தலில் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருள்கள், மதுபானப் பொருள்கள் ஆகியவை வழங்குவதைத் தடுக்க வாக்குப் பதிவு நடைபெறும் வரை தோ்தல் ஆணையம் காவல் துறை, வருமான வரித் துறையினருடன் சோ்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது[5]. வியாழக்கிழமை 14-04-2021 வரையில் பறிமுதல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது[6]. அதன்படி, தமிழகத்தில் பிடிபட்ட ரூ. 446.28 கோடி பணத்தில் ரூ.236.69 கோடி வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட இருந்தது[7].

மாநிலங்களுக்கு ஏற்ப, மக்களுக்கு ஏற்ப பணம்பொருள் தேர்ந்தெடுத்து விநியோகித்தது: பிரசாந்த் கிஷோர் போன்றோர் கோடிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு, தேர்தலில் வெற்றியடைவது எப்படி என்று ஆலோசனைக் கூறுகிறார்கள். அப்படியென்றால், இவ்வாறு கோடிகளில் பணத்தை அள்ளி வீசு, என்பதும் அத்தகைய யோசனை-திட்டங்களில் ஒன்றா என்று தெரியவில்லை,

  • தமிழகத்தில் பெரும்பாலும் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது.
  • புதுவையில் வாக்காளா்களைக் கவர விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36.95 கோடியில் ரூ.27.42 கோடியில் விலை உயா்ந்த பொருள்களாக உள்ளன[8].
  • மேற்கு வங்கத்தில் இதுவரை ரூ.118.33 கோடிக்கு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[9].
  • கேரளத்தில் வாக்காளா்களை கவர தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்கள் வழங்கப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 84.91 கோடியில் ரூ.50.86 கோடிக்கு விலை உயா்ந்த பொருள்களாகும்[10].
  • அஸ்ஸாமில் வாக்காளா்களுக்கு இலவசமாக மதுபானங்கள் வழங்கப்பட்டன. அதன்படி 41.97 கோடிக்கு மதுபானங்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த மாநிலங்களுக்கு, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, அரசியல் கட்சிகள், பொருட்களை-பணத்தைத் தேர்ந்தெடுத்து விநியோகித்தன என்றாகிறது. ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் ரூ. 1,000 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தோ்தல் ஆணையத்தின் வரலாற்றில் மைல்கல் என்றும், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சோ்ந்து நடத்திய சோதனையில்தான் இது சாத்தியமானது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் கோடிகள் பறிமுதல் செய்ததில் முன்னிலை வகிக்கிறது: தமிழகம், கேரளம், அஸ்ஸாம், புதுவை ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் முடிவடைந்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு இன்னும் மூன்றுகட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே- 2- ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் – ரூ.446.28 கோடி

மேற்கு வங்கம் – ரூ.300.11 கோடி

அஸ்ஸாம் – ரூ.122.35 கோடி

கேரளம் – ரூ.84.91 கோடி

புதுச்சேரி – ரூ.36.95 கோடி

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. மதுரையில் வாக்காளர் பட்டியலும் பணமுமாக இருந்த திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பல அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் வந்த சரக்குப் பெட்டக லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2,380 குக்கர்கள் கைப்பற்றப்பட்டன.  சென்னை நீலாங்கரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது விமர்சனத்துக்குள்ளாகியது. அதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதுபோன்று சோதனை நடத்துவதை தவறு என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ விமர்சிக்க முற்பட்டால் தங்கு தடையில்லாத பண விநியோகத்துக்கு அது வழிகோலும். 

© வேதபிரகாஷ்

28-04-2021


[1] தினமணி, 5 மாநிலத் தோ்தலில் ரூ. 1,000 கோடி பறிமுதல்: தமிழகம் முதலிடம், By DIN  |   Published on : 17th April 2021 07:15 AM.

[2] https://www.dinamani.com/india/2021/apr/17/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3605833.html

[3] தினமலர், 5 மாநில சட்டசபை தேர்தல் ரூ. 1,000 கோடி பறிமுதல், Updated : ஏப் 16, 2021  23:34 |  Added : ஏப் 16, 2021  22:33.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2751189

[5] நக்கீரன், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை 1,000 கோடி ரூபாய் பறிமுதல்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 16/04/2021 (21:15) | Edited on 16/04/2021 (21:30)

[6] https://nakkheeran.in/24-by-7-news/india/1000-crore-confiscated-so-far-states-where-elections-are-being-held

[7] ஏ.பி.பி.லைவ், 5 மாநில சட்டசபை தேர்தல் : ரூபாய் 1,000 கோடி பறிமுதல், By: சுகுமாறன்Updated: 16 April 2021, 11:23 PM (IST)

[8] https://tamil.abplive.com/news/india/election-commission-seized-1000-cr-1296

[9] தினகரன், 5 மாநில தேர்தல் வேட்டையில் 1,000 கோடி பணம், மதுபானம் பறிமுதல், 2021-04-17@ 01:29:32; https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671532

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671532\

ரூ 1.3 கோடிகள் லஞ்சம் பெற்று, மேலும் ரூ 3 கோடிகள் கேட்டு மாட்டிக் கொண்ட மெத்தப் படித்த பெண் இஞ்சினியர்!

ஏப்ரல் 27, 2021

ரூ 1.3 கோடிகள் லஞ்சம் பெற்று, மேலும் ரூ 3 கோடிகள் கேட்டு மாட்டிக் கொண்ட மெத்தப் படித்த பெண் இஞ்சினியர்!

கார்த்திகேயனி, இஞ்சினியர் மீது ஊழல் / லஞ்சம் புகார்: சமீபத்தில், இந்த வழக்கு, திகைப்படையச் செய்வதாக இருக்கிறது. ஏனெனில், ஒரு பெண், அதிலும், பொறியியல் படித்த பட்டதாரி பெண், உயர்ந்த இடத்தில் வேலைசெய்து கொண்டு, நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிற நிலையில், கோடிகளில் லஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்டு மாட்டிக் கொண்டது, அதிர்ச்சியாக உள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்ச பெற்றதற்கான 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளராக கார்த்திகேயினி [Joint Chief Engineer T Karthikeyani, working in office of Chief Engineer (planning, designs and investigation), State Highways, in Guindy] என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் விடுவதில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெற்றதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி மீது வழக்கு பதிவு செய்து [FIR No. 08 Date: 16-02-2021] விசாரணை நடத்தி வருகின்றனர்[1].

கார்த்திகேயனியின் வீட்டில் சோதனை: கார்த்திகேயனி எண்.6, பேவாட்ச் கிராஸ், பாண்டியன் நகர், வெட்டுவான்கேனி, சென்னை, என்ற இடத்தில் வசித்து வந்தார். அதாவது நல்ல வசதியான வீட்டில் தான் வசித்து வருகிறார். பிறகு, ஏனப்படி லஞ்சம் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் 23-02-2021 அன்று சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர்[2]. இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து லஞ்சம் பணம் பரிவர்த்தனை குறிப்புகள் அடங்கிய 6 டைரிகள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள், குத்தகை ஒப்பந்தம் ரசீதுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு சக்கர வாகனத்தின் ஆர்சி.புத்தகங்கள் மற்றும் சொத்துப் பட்டியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கு புத்தகங்களில் உள்ள பணம் குறித்து அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர்.

ரூ.1.30 கோடி லஞ்சம் கேட்டுப் பெற்றது: சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் கார்த்திகேயினி. மாநில நெடுஞ்சாலைத் துறையில் என்ஜினீயராக பணியாற்றும் இவர், தன் மீதான லஞ்ச வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:- “மனுதாரர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பிரண்டு என்ஜினீயராக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது, கோவில்களில் மின்விளக்கு பொருத்தும் ரூ.400 கோடி ஒப்பந்தப் பணியை டெல்லியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதாக கூறி, அதன் உரிமையாளர் அமன் கோயல்[3] என்பவரிடம் ரூ.1.30 கோடியை லஞ்சமாகப் பெற்றுள்ளார். கார்த்திகேயினி வீட்டுக்குச் சென்று ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை அமன் கோயல் கொடுக்கும்போது கேமராவை மறைத்து வைத்து வீடியோ படம் எடுத்துள்ளார். அதில் பணத்தை கார்த்திகேயினி பெறுவதும், அவரது மகள் வித்யாலட்சுமி பணத்தை எண்ணுவதும் இடம் பெற்றுள்ளன. மேலும் கூடுதலாக ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதால், அதை காசோலைகளாக அமன் கோயல் வழங்கியுள்ளார்[4]. அந்த காசோலைகளை கார்த்திகேயினி தன் மகள் வித்யாலட்சுமி, உதவியாளர் கேசவன் ஆகியோரது வங்கிக் கணக்குகளில் செலுத்தி பணத்தைப் பெற்றுள்ளார்[5]. கோடிகளில் லஞ்சம் கொடுக்கும் போது எச்சரிக்கையாகத்தான் இருப்பார்கள் போலும்.

கார்த்திகேயனி மேலும் ரூ 3 கோடிகள் கேட்டது: கார்த்திகேயனி நெடுஞ்சாலைத் துறையில், எல்.இ.டி விளக்குகள் பொறுத்த ரூ.400 கோடிகள் கான்ட்ராக்ட் வாங்கித் தருவதாக வாக்களித்து, அனன் கோயலிடமிருந்து இப்பணத்தைப் பெற்றுள்ளார். பிறகு, மறுபடியும் 30 லட்சம் கேட்டுப் பெற்றுள்ளார். ஆனால், எந்த வித ஆர்டரும் வரவில்லை என்றாதால், சென்னைக்கு வந்து சந்திக்க முடிவு கோயல் செய்தார். அதன் படியே, டெஸிடென்ஸி ஹோட்டலில் வந்து சந்தித்துள்ளார். அப்பொழுது, கொடுத்த பணம் மற்ற அதிகரிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டதாகவும், இதனால், மேலும் ரூ 3 கோடிகள் கொடுக்கவேண்டும் என்று கார்த்திகேயனி கேட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த கோயல், பிறகு சந்திக்கலாம் என்றார். அதற்குள் விசாரித்த போது, அத்தகைய டென்டரும் / ஒப்பந்தமும் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் தான், புகார் கொடுத்துள்ளார்.

சம்மனைப் பெறவில்லை, ஆஜராகவில்லை: பின்னர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால் அமன் கோயல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அதை கொடுக்கவில்லை. மேலும், அறநிலையத்துறை ரூ.400 கோடிக்கு ஒப்பந்த பணி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை எனத் தெரியவந்தது. அதாவது, போலியான ஒப்பந்தம் / டென்டர் போன்றதை வைத்து, லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. எனவே, எந்த நபரும், கோடிகளைக் கொடுத்து சும்மா இருக்க மாடார். இதுகுறித்து அமன் கோயல் கொடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. மனுவில் கூறப்பட்டுள்ள முகவரியில் கார்த்திகேயினி வசிக்கவில்லை. அதாவது, தப்பித்துக் கொள்ள, வேறு உடத்திற்கு சென்று விட்டார் என்று தெரிகிறது. மேலும், இதெல்லாம், வழக்கை இழுப்பதற்கு, கையாளும் முறையாக, குற்றவாளிகள் பின்பற்றி வர்கின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த முகவரியில் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் அனைத்தும் திரும்பி வந்துவிட்டது[7]. அதாவது, சம்மன் வந்ததே தனக்குத் தெரியாது என்றும் வாதிடுவர். ஆனால், வீட்டின் சுவரில், சாட்சிகளுடம் ஒட்டி விட்டு வருவர். அவ்வாறு செய்தாலே, சம்மன் கொடுக்கப் பட்டதாக பாவிக்கப் படும்.

கார்த்திகேயனி மீது பல புகார்கள்: கார்த்திகேயினி விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. அதாவது, யாருடைய ஆலோசனை பேரில் அவ்வாறு டபாய்த்து வருகிறார் என்று தெரிகிறது. அவர் மீது இதேபோல பல லஞ்சப் புகார்கள் உள்ளன. இந்த வழக்கில் கார்த்திகேயினி, இடைத்தரகர்கள் தட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், கேசவன் மற்றும் கார்த்திகேயினியின் மகள் வித்யாலட்சுமி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் ரூ 30 லட்சங்கள் காசோலைகளாக வாங்கி கொண்டு, வங்கிகளில் டெபாசிட் செய்து, கார்த்திகாயனியிடம் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது,” இவ்வாறு அதில் கூறியிருந்தனர்[8]. இவர் பாளையங்கோட்டையிலும் வேலை செய்துள்ளார் என்று அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன[9].

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது: இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் அரசு வக்கீல் சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, மனுதாரர் மீது லஞ்ச வழக்கு ஒன்று மதுரையில் நிலுவையில் இருப்பதாகவும், அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் வாதிட்டார். அதாவது செல்லும் இடங்களில் எல்லாம், லஞ்சம் பெறுவது, வழக்காமக் கொண்டுள்ளார் போலும். இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்[10].

© வேதபிரகாஷ்

26-04-2021


[1] தினகரன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் சோதனை: விஐபி பெயர் அடங்கிய 6 முக்கிய டைரிகள் சிக்கின, 2021-02-24@ 01:47:28.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=657607

[3] One Mr.Aman Goyal is C.E.O of M/s.Radianz Pvt.Ltd., having office at G/37, Sector-5, Bawanalndl. Area, Delhi – 110039. The Company has been in the business of rendering Electrical, Telecom and Civil Contract services including installation of LED lightings.

[4] குமரி எக்ஸ்பிரஸ், ரூ.1¼ கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: பெண் என்ஜினீயரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு,

[5] http://kumariexpress.com/rs-10-crore-bribery-case-court-dismisses-pre-bail-petition-of-female-engineer/

[6] தினமணி, லஞ்ச வழக்கு: பெண் பொறியாளா் முன்ஜாமீன் மனு தள்ளுபடி, By DIN  |   Published on : 27th April 2021 03:41 AM.

[7] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/apr/27/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3612354.html

[8] தினத்தந்தி, ரூ.1¼ கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: பெண் என்ஜினீயரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு , பதிவு: ஏப்ரல் 27,  2021 06:44 AM.

[9] Tmt. T. Karthikeyani, Assistant Divisional Engineer (Highways) (Additional Charge) Investigation Sub Division, VMS Kalyana Mandapam, Maharaja Nagar, Palayamkottai, Tirunelveli – 627 011.

[10] https://www.dailythanthi.com/News/State/2021/04/27064418/Rs-10-crore-bribery-case-Court-dismisses-prebail-petition.vpf