ராஜா உளறுகிறாரா, உண்மையைக் கூறுகிறாரா? ஊழலும், உந்து சக்தியும்.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனது பணி சிறக்க வரும் உந்து சக்தி: மத்திய அமைச்சர் ராஜா சொல்கிறார்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18403

Latest indian and world political news information

ஊட்டி: ”என் மீது எழுப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாக அமைந்துள்ளன,” என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது 3 ஜி ஏலம் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட இதுவரை ஏலம் 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அரசு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்த்தது. ஆனால், இலக்கை தாண்டி ஏலம் செல்கிறது.

இந்நிலையில், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. பார்லிமென்டிலும், வெளியிலும் பல முறை விளக்கம் அளித்துவிட்டேன்; பிரதமரிடமும் விளக்கம் அளித்துள்ளேன். 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடுக்கு அடிப்படை தொகை நிர்ணயிக்கப்படவில்லை. 3 ஜி அலைவரிசை ஏலத்தின் அடிப்படை தொகை, 2 ஜி அலைவரிசைக்கு நிர்ணயிக்க டிராய் அமைப்பு கூறியுள்ளது. 3 ஜி அலைவரிசையை விட 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு மூன்று மடங்கு குறைவானதாகும்.

மத்திய அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளேன். ஐந்தாண்டுகளில் தொலைபேசி கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 2012ம் ஆண்டு 600 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால், 2009ம் ஆண்டே இந்த இலக்கு எட்டப்பட்டது. தேர்தலின் போது மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றியுள்ளேன். என் மீது எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாகவே அமைந்து வருகிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் கூறினால் தான் பணிகள் சிறக்கும் என்றால் என்ன அர்த்தம்? ஊழல் புரிந்து கொண்டே செல்வார், குற்றஞ்சாட்டிக் கொண்டே இருப்பர், பணிகள் சிறந்து கொண்டே இருக்குமா? இதென்ன கூத்து?

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக