கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

எந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது!

மன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி! சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே! பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்! அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது! இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்! ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன? இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது! இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்! பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது! ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா? இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

பிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்?

இக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்று பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?”

  1. vedaprakash Says:

    பார்ப்பனர் ஒப்பாரி!
    http://www.viduthalai.com/20100528/news05.html

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு குறைத்தது வரவேற்கத்தகுந்தது; இதன்மூலம் கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூடப் பொறியாளர் ஆகும் வாய்ப்பு ஏற்படும் என்பது சமூகநீதியாளர்களின் கண்ணோட்டமாகும்.

    நீண்ட ஆயிரம் ஆண்டுகாலமாக பிறப்பின் அடிப்-படையில் எல்லா வாய்ப்புகளையும் தின்று உப்பி-யது ஒரு கூட்டம்; பெரும்பாலான இந்த மண்-ணுக்குரிய மக்களோ, மதத்தின் பெயரால், ஆதிக்கக் கூட்டத்தால், மிதிக்கப்பட்டுக் கிடந்தனர்.

    இந்தக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு, மிதிபட்ட மக்கள் மேன்மை நிலையை அடைகிறார்கள் என்ற மனமகிழ்ச்சி _ நிறைவு ஏற்படும்.

    ஆனால், பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ன? இவ்வார துக்ளக் இதழில் (2.6.2010) பார்ப்-பனர்கள் தங்களுக்கே உரித்தான துவேஷ உணர்வை தகுதி _ திறமை என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட்டனர்.

    நுழைவுத் தேர்வை நீக்கியதைக்கூட கடுமையான சொற்களால் வெட்டிச் சாய்த்து விட்டனர் என்று ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வை இருந்த இடம் தெரியாமல் வேரோடு வெட்டிச் சாய்த்து, கல்வித் தரத்தை அதல-பாதாளத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு, கேவலம் இந்த கட் ஆஃப் மார்க்கை ஒழித்துக் கட்டவா வழி கிடைக்காது? என்று தனது மனப் புழுக்கத்தை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது துக்ளக்.

    பச்சைத் தமிழர் காமராசர் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது! பறையனைப் படிக்க வைத்தோம், டாக்டர் ஆனான்; அவன் ஊசிப் போட்டதால் எந்தக் குழந்தை செத்தது? பறையனைப் படிக்க வைத்தோம், என்ஜினீயர் ஆனான்; அவன் கட்டியதால் எந்தப் பாலம் இடிந்தது? என்று தந்தை பெரியார் பேசியதுபோல் பேசினாரே அதுதான் இந்தக் கூட்டத்துக்கு இப்போதும் பதில்.

    காமராசரை மதிப்பதுபோல துக்ளக் சோ ராமசாமி எழுதுவதுண்டு. அந்தக் காமராசர்தான் இப்படி வினாக்களையும் தொடுத்தார் என்பதை வசதியாக மறந்துவிடுகிறது மனுதர்மக் கூட்டம்.

    தகுதி மதிப்பெண் குறைக்கப்படுவதன் அடிப்-படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் படிக்கக் கஷ்டப்படுவார்களாம்; இதனால் தேர்வுகளில் தில்லு முல்லுகளில் இறங்க மாணவர்கள் முயற்சிப்-பார்களாம்.

    எவ்வளவு திமிர் எடுத்த விவாதம்? பார்ப்பன மேல்தட்டு மக்கள் மட்டும்தான் படித்துக் கொண்டு இருக்கவேண்டும்; கீழ்த்தட்டு மக்கள் படிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தால் அவர்களின் ஒழுக்கத்தையே கொச்சைப்படுத்தும் கொழுப்பினைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக்கூடாது.

    பார்ப்பனர்கள் கூறும் மார்க் தகுதி _ திறமை என்பது அவர்களுக்கு வசதியானது. பொட்டை நெட்டுருப் போட்டு மார்க் வாங்கும் அந்தத் திறமை என்பது அவர்களுக்குப் பரம்பரைப் பரம்பரையாக வந்த ஒன்று. சமஸ்கிருதங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் பண்ணிய, மரபு வழி வந்த தகுதி, திறமை அது.

    அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த-போது, ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது நேர்-முகத் தேர்வு உண்டு. ஒரு உயர்ஜாதி மாணவன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று கூறி நீதிமன்றம் சென்றார்.

    நேர்முகத் தேர்வின் குழுத் தலைவராக இருந்த ஜஸ்டிஸ் சோமசுந்தரம் அந்த வழக்கில் ஒரு பிரமாணப் பத்திரம் (அஃபிடவிட்) அளித்தார்.

    சம்பந்தப்பட்ட மாணவன் எழுத்துத் தேர்வில் பதில் எழுதி மதிப்பெண் பெற்ற அதே கேள்வியை நேர்முகத் தேர்வில் கேட்ட பொழுது பதில் சொல்ல-வில்லை என்ற குட்டை உடைத்தார். ஆச்சாரி-யார்கூட நம் நாட்டுக் கல்வியின் நிலை அப்படித்தான் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாரே!

    இதிலிருந்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் தகுதி _ திறமை என்னவென்று தெரியவில்லையா? நேர்முகத் தேர்வில்தான் மாணவனின் உண்மையான தகுதி_ திறமையைக் கண்டறிய முடியும். ஆனால், நேர்முகத் தேர்வு கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் எப்பொழுதும் ஒத்தக் கருத்திலேயே இருப்பார்கள்.

    பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி மதிப்-பெண்கள் குறைக்கப்பட்டதால், அது தி.மு.க.வுக்கு அரசியல் லாபமாம் _ பயன் அடைந்தவர்கள் தி.மு.க.-வுக்கு ஓட்டு போட்டு விடுவார்களாம்; பயன் அடைந்தவர்கள் ஓட்டுப்போடத்தான் செய்வார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது? தி.மு.க.வுக்கு இது சாதகமாகிவிட்டதே என்கிற ஆத்திரமும் இந்த அக்கிரகாரக் கூட்டத்துக்கு இருக்கிறது என்பதும் இதன்மூலம் அறிய முடிகிறது அல்லவா!

    பார்ப்பனர்களுக்கு இருக்கும் இந்த உணர்வை பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொண்டால் சரி!

  2. karuppaiah Says:

    சென்னை, ஏப்.16-

    திராவிட கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாக வும் ஆகிவிட்டது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன. விளை யாடுகின்ற விளையாட்டாளர் களையும் Òநல்ல விலை கொடுத்து வாங்கிÓயே வெற்றி-தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்.

    நம்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும் கூட இப்போது விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் உருவாகி ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடைபெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

    போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாம். சமீபத்தில் ஏலத்தின் மூலம் கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் ஐ.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம். இதில் கொச்சி அணி தேர்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம். இதனால் கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமை யாளர்கள் யார்? என்ற மர்மம் நீடிக்கிறது.

    காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய் மதிப்பு) இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

    சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக் கொண்ட சசிதரூர் என்கிற பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளு மன்றத்திலும் எதிர்க்கட்சி யான பா.ஜ.க., இடதுசாரி களாலும் பேசப்பட்டு வருகிறது.

    இந்த இலவச பங்கு பெற்றதாக கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து கொள்ள இருக் கிறாராம். இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி- திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது.//
    WHAT IS THE SPECIALITY WITH RAJA WITH THAROOR VEERAMANI SIR

  3. கடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது! « ஊ Says:

    […] [1] https://corruptioninindia.wordpress.com/2010/05/26/why-blacklisted-chancellor-should-support-raja/ […]

பின்னூட்டமொன்றை இடுக