Posts Tagged ‘ருஸ்தம் சோரப் நகர்வாலா’

ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்கள் மீது ஐ.பி.சி 120 (b), 409 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன!

ஒக்ரோபர் 22, 2011

ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் .பி.சி 409, 420 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன!

 

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்-யார்: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 120(b), 409 பிரிவுகளில் ( Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409) குற்றஞ்சாட்டனர்[1], இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது[2].

  1. ஏ. ராஜா – முந்தைய டெலிகாம் அமைச்சர் [A. Raja]
  2. கனிமொழி, ராஜ்ய சபை அங்கத்தினர்  [A.  Kanimozhi]
  3. ஆர். கே. சந்தோலியா முந்தைய டெலிகாம் அமைச்சரின் காரியதரிசி [R K Chandolia, the minister’s former Private Secretary ],
  4. சித்தார்த் பெருஹா [Siddhartha Behura ,former Telecom Secretary] ,
  5. சரத் குமார் [DMK-run Kalaignar TV’s MD Sharad Kumar],
  6. கரீம் மொரானி [Bollywood filmmaker Karim Morani]
  7. கௌதம் தோஷி [Reliance Anil Dhirubhai Ambani group’s executives Gautam Doshi],
  8. ஹரி நாயர் [Hari Nair (Reliance)]
  9. சுரேந்திர பிபரா [Surendra Pipara].
  10. ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் [telecom firm Reliance Telecom Ltd],
  11. ஸ்வான் டெலிகாம் [Swan Telecom]
  12. யூனிடெக் (தமிழ்நாடு) [Unitech (Tamil Nadu) Wireless Ltd],
  13. சாஹித் உஸ்மான் பல்வா [Swan Telecom promoter Shahid Usman Balwa],
  14. ஆசிஃப் பல்வா [Asif Balwa]
  15. ராஜிவ் அகர்வால் [Rajeev Agarwal],
  16. சஞ்சய் சந்திரா [Unitech Ltd’s MD Sanjay Chandra] மற்றும்
  17. வினோத் கோயங்கா [DB Realty MD Vinod Goenka].

 

நீதிபதி சி.பி.ஐ பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்: தில்லி பாட்டியாலா ந் ஈதிமன்றத்தின் நீதிபதி, ஓ.பி.சைனி மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதே குற்றம் நடந்துள்ளது நன்றாகவே தெரிகிறது என்று சி.பி.ஐ 17 நபர்களின் மீது பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்[3]. ராஜா மற்றும் காரியதரிசி சித்தர்த் பெருஹா ஐ.பி.கோ பிரிவு 409ன் கீழ், அரசாங்க ஊழியர்களக இருந்து கொண்டு ஏமாற்றியதாக – “நம்பிக்கைதுரோகம்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, 420 (ஏமாற்றுதல், மோசத்தனமாக சொத்தை விற்க / கொடுக்கத் தூண்டுதல்),  120(B), 468 (ஏமாற்றுவதற்காக கள்ள ஆவணங்களை உருவாக்குவது), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11 பிரிவுகளில் அவர்கள் செய்துள்ள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[4]. இக்குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால், ஆயுள் தண்டனையிலிருந்து ஏழாண்டுகள் சிறைதண்டனை, அபராதம் முதலியவை செல்லுத்த வேண்டியிருக்கும்[5].

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவகாசம் கேட்டனர்: 700 பக்கங்களுக்கும் மேலாக உள்ள குற்றப்பதிவு ஆணையில், குற்றம் எவ்வாறு நடந்தது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை எவ்வாறு செய்தார்கள், தங்களது பதவிகளை-அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தனர், கள்ள ஆவணங்களை உருவாக்கினர், லஞ்சம் / ஆதாயம் கொடுத்தனர் – வாங்கினர் என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ கொடுத்து பதிவு செய்துள்ளது. நீதிபதி அதை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரியபோது, 700 பக்கங்கள் உள்ள குற்றச்சாட்டு ஆணையை முதலில் படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என்று கோரினர்[6]. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அந்த குற்றங்களை மறுக்கவில்லை, மாறாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளனர்.

கருணாநிதி சோனியாவுடன் பேசியது என்ன? இத்தனை நாட்கள் ஆகியும் பைல் கொடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனல், ஏற்கெனெவே உச்சநீதி மன்றம் சொல்லியுள்ள படி, அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். கோர்ட்டில் ராஜாத்தி அம்மாள் இருக்கிறார். கனிமொழியின் கணவர், மகன் முதலியோரும் இருக்கின்றனர். நேற்று கருணாநிதி, சோனியாவைப் பார்த்து பேசிய்ருக்கிறார். ஆனால், இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியாது அல்லது வேண்டாம் என்று முடிவு செய்திருப்பர் போலத் தோன்றுகிறது. சாஹித் பல்வா, கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால், ஆர்.கே. சந்தோலியா, சரத்குமார், சித்தார்த்த பெருஹா முதலியோரும் கம்பெனி அதிகாரிகளும் பிரிவு 192ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்[7]. எனவே ரிலையன்ஸ் போன்ற கம்பெனி தனது அரசியல்-பணம்-அதிகாரங்களை வைத்துக் கொண்டு சும்மாயிருப்பார்களா என்று தெரியவில்லை.

சட்ட அமைச்சரின் மறுப்பு, கட்சிகளின் நம்பிக்கையின்மை: குஷித் ஆலம் கான் என்ற சட்ட அமைச்சரை, குற்றாச்சாட்டு டீர்ப்பைப் பற்றி கேட்டபோது, அதைப் பற்றி தான் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, சட்டப்படி நடக்கும், என்று சொல்லி நழுவி விட்டார். இவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு இழுக்குதானே என்று அவர்கள் வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. பி.ஜே.பி நீதிமன்றம் வேகமாக செடல்பட வேண்டும், குற்றங்கள் மெய்ப்பிக்கப் பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றது. காலந்தாழ்த்தினால், நிச்சயமாக என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆதர்ஷ வழக்கில் ஆவணங்களே காணாமல் போய்விட்டன[8]. காங்கிரஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று மக்களுக்குத் தெரிந்ததே. சமீபத்தில் வரை குட்ரோச்சியைப் பிடிக்காது தூங்கி, அவனைத் தப்பிக்க வைத்து, போஃபோர்ஸ் வழக்கை சாகடித்து சமாதி கட்டி விட்டனர். முன்பு, நகர்வாலாவை மர்மமான முறையில் சாகடித்து “நகர்வால வழக்கை” மூடிவிட்டனர்[9], மக்களும் மறந்து விட்டனர். அதுபோல, இதனையும் இழுத்தடித்தால், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், ஏற்கெனெவே 4-5-6 ஆண்டுகள் இருந்துவிட்டனர், என்று வழக்கைத் திசைத் திருப்பி முடித்து விட்டால், கோடிகணக்கில் சுருட்டியதை வைத்துக் கொண்டு சாகும் வரை சுக-போகத்துடன் வாழ்வர். ஆனால், மக்கள் தாம் ஏமாளிகள் ஆவார்கள்.

வேதபிரகாஷ்

22-10-2011


[1] All the other 14 accused that have charged under Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409.

[4] Raja and Behura have been charged not only under Section 409 but also Sections 420 (cheating and dishonestly inducing delivery of property), 120(B), 468 (forgery for purpose of cheating), Sections 7 and 11 of Prevention of Corruption Act.

[7] The corporate executives and bunisess tycoons have been slapped with Indian Penal Code Section 192 (falsification of charges) as well.

[8] Even as the CBI registered an FIR against 13 people involved in the Adarsh society dispute on Saturday, the crime branch proposed to conduct a narco-analysis on four urban development department clerks, including a woman, to trace the important papers that went missing from the Adarsh file in November, 2010.

http://articles.timesofindia.indiatimes.com/2011-01-30/mumbai/28368189_1_crime-branch-narco-test-clerks

[9] Nagarwala case was involved with some 60-65 lakhs, but now the 2G corruption reportedly involves 1,75,000 crores and so on!

http://www.indianexpress.com/news/nagarwala-case-mystery-returns-after-three/400972/


சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)

மார்ச் 18, 2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)

மிகவும் மனதிடமுள்ள சாதி பாட்சா தற்கொலை செய்து கொண்டதை அவருக்கு வேண்டியவர்களில், நெருக்கமாக இருந்தவர்கள் நம்பவேயில்லை[1]. மேலும் இவ்விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. போலீஸாருடைய காலந்தாழ்த்திய விதம், மருத்துவர்களின் சந்தேகம் முதலியனவும், பல கேள்விகளுக்கு விடை காணமுடியாத அளவிகு உள்ளது[3].

மூன்றாவது முறை தில்லிக்குக் கூப்பிட்டதால் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தில்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதன் பின்னர் 2 முறை சாதிக் பாட்சாவை தில்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை (16-06-2011) பிற்பகலில் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு செல்ல சாதிக் பாட்சா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[4].

தில்லிக்கு போவது உண்மையா-பொய்யா? குடும்பத்தினர் 16ம் தேதி தில்லிக்குச் செல்வதாக கூறிவந்தனர்[5]. ஆனால், பாட்சா தில்லிக்குச் செல்லும் இரண்டு விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முறையே 12.50 மற்றும் 1.35 அளவில் சென்னையிலிருந்து பறந்து சென்றன. ஆனால், அவற்றில் சாதிக் பாட்சா செல்லவில்லை. இதை தெஹல்கா பத்திரிக்கை சரிபார்த்து உறுதி செய்துள்ளது[6]. சென்னை போலீஸாரும் இதைப் பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை[7]. பிறகு ஏன் அத்தகைய கருத்தை உருவாக்க முயன்றனர் என்ரு தெரியவில்லை.

மனைவி இல்லாத நேரத்தில் தற்கொலை எப்படி செய்து கொண்டார்? இந்த நிலையில், மனைவி ரஹானா, குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலையில் சென்றிருந்தாராம். அப்போது, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாதிக்பாட்சா காலை 9 மணி அளவில் குளிப்பதற்காக தனது படுக்கை அறைக்கு சென்றாராம். சுமார் 12 மணி அளவில் ரஹானா குழந்தைகளுடன் வீடு திரும்பினராம். குளிப்பதற்குச் சென்ற சாதிக்பாட்சா நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், வீட்டில் இருந்த அனைவரும் சந்தேகமடைந்தனர். ரஹானாவும், சாதிக் பாட்சாவின் தாயாரும் வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனராம். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் சாதிக்பாட்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு கார் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மதியம் 1.20 மணிக்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள், சாதிக்பாட்சா ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்[8].

போலீஸாரால் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி[9]டிக்… டிக்… நடந்தது என்ன[10]? காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.
11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.

பிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

12:45 – 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்
கதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.

1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ
மனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.

1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.

2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்
பாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு
வரப்பட்டு, விசாரணை நடந்தது.

5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு
அழைத்துச் செல்லப்பட்டனர்.

5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்
உறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.

6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.

7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.

சாதிக் பாட்சா தனது துபாய் தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும்? சாஹித் பல்வா ஏற்கெனவே சாதிக் பாட்சா மற்றும் ராஜாவின் தொடர்ப்பு மற்றும் சம்பந்தங்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்து விட்டான். ஹவாலா பரிமாற்றங்களைப் பற்றி கேட்டபோது, மஹேஷ் ஜெயின் மற்றும் அவனது சகோதரன் பாபி பற்றிக் குறிப்பிட்டான். இந்த இருவருமே துபாயிலுள்ள ஹவாலா பரிமற்றக்காரர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்[11]. ஏற்கெனவே கீழக்கரையிலுள்ள ஒரு வியாபாரியை விசாரித்தபோது, சில விவரங்கள் தெரியவந்தன. சாஹித் பல்வா அடிக்கடி துபாயிக்குச் சென்று வருவதால் அந்த தொடர்புகளைப் பற்றி நன்றாக அறிவான். இப்பொழுது சாதிக் பாட்சாவிற்கும் அவர்களைத் தெரியும் என்பதால், அவன் இறந்தது, அந்த தொடர்புகளின் மகத்துவத்தை மறைப்பதாக இருக்கிறது.

இதேபோன்ற நடந்துள்ள முந்தைய தற்கொலைகள்!: (1). கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது[12].

(2). 1994ல் ராஜீவ் கொலை விசாரணைக் காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டதும், பின் அது மறக்கபட்டது 

(3). மே 24, 1971 அன்று ருஸ்தம் சோரப் நகர்வாலா [Rustom Sohrab Nagarwala] என்ற முந்தைய இந்திய ராணுவ தளபதி இந்திரா காந்தி பேசுவது போல, தொலைபேசியில் பேசி, ரூ. 60 லட்சம், பார்லிமென்டு தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெற்றான். நகர்வாலா என்ற நகர்வாலா மோசடி வழக்கில், அதனை விசாரித்த டி.கே. காஷ்யப் என்ற விசாரணை அதிகாரி மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் கொலை செய்யப் பட்டார். நகர்வாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டடன், ஆனால், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படாததால், பிப்ரவரி 1973ல் சிறையிலேயே மரணமடைந்தான்.

சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு[13]: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரதே பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது[14]:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, “அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்’ என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், “தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது’ என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், “உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு[15]: சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.

மரணம் அல்ல… ஒரு படுகொலை[16] : “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,” என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்மை. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

வேதபிரகாஷ்

18-03-2011


[1] வேதபிரகாஷ், ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!, https://corruptioninindia.wordpress.com/2011/03/17/sudden-mysterious-suicide-of-rajas-aide-sadiq-basha/

[2] வேதபிரகாஷ், சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா பதிலில்லாத பல கேள்விகள் (1), https://corruptioninindia.wordpress.com/2011/03/18/mysterious-death-of-sadiq-batcha-suicide-or-murder/

[3] வேதபிரகாஷ், சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா பதிலில்லாத பல கேள்விகள் (2), https://corruptioninindia.wordpress.com/2011/03/18/sadiq-batcha-mysterious-death-unanswered-questions/

[5] Family members are also believed to have said that Batcha was preparing to leave for New Delhi on 16 March and that he had already booked an air ticket for that afternoon. But Batcha did not book tickets on the two direct flights that took off from Chennai for New Delhi on the afternoon of 16 March—at least not in his name. The passenger lists of the two flights from Chennai to New Delhi on 16 March afternoon have nobody by the name of Sadiq Batcha listed.

[6] Air India flight number AI438 left Chennai at 12.50 pm while the Jet Airways flight number 9W2256 left at 1.35 pm. Officials from both the organisations confirmed this to TEHELKA on the condition of anonymity.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

[7] Do the Chennai police know about it? “No,” said Commissioner T Rajendran.

[9] The chronology of events, as told to TEHELKA by a senior officer of the Chennai police, is:

11.15 am – Batcha goes for a bath in the bathroom connected to his bedroom on the first floor of the house. Four other people were present in the premises—his mother-in-law, wife Rehana Banu, one-and-half year old son Hashim, and the driver who was waiting outside. That is when Rehana said she left the house to pick up their three-year-old son from the Chettinad Vidyashram School in the car. She returned around noon.

12.45 pm – After knocking on the door of the bedroom for five minutes, she took help of the driver to break open the door and found Batcha hanging from the ceiling. She told the police that the ‘cloth-cradle of Hashim’, which had a spring attached to it, was used by Batcha to hang himself. She took the driver’s help to pull his body down.

1.00-1.30 pm – The family rushes to the Apollo hospital 4-5 km away, where Batcha is declared brought dead by 1.40 pm.

2.10 pm – Teynampet Police receive an anonymous call. The caller says that Batcha is dead. The house is only a five-minute drive from the police station but the police did not seal the house or collect evidence. A team reaches the Apollo Hospital. The body was wrapped in a white cloth and nobody photographed it.

2.30 pm – The family came back home. They locked the house and left without waiting for the police or informing them. They also refused to speak to the media that had gathered outside the house.

2.50 pm – The Royapettah general hospital received a body wrapped in white cloth said to be that of Batcha, for postmortem. The police were yet to start investigating.

5.10 pm – The Teynampet police registered an FIR, filed by his wife. They reach the house, where two male relatives of Batcha were present.

5.30 pm – Chennai Police Commissioner T Rajendran says the house has finally been sealed. He tells the media the investigations are on.

8.30 pm (approx) – Family members ‘discovered’ a suicide note said to be that of Batcha, in which he praised Raja and said ‘it is unfortunate that he has been jailed’. It also echoed his wife’s earlier statement and says that he had been ‘embarrassed because of the CBI investigations’ against him. The suicide note is dated 15 March and blames nobody for his death.

[12] In mid-July 2001, Ramesh alias ‘Anna Nagar’ Ramesh, a civil contractor better known in political circles as the “lucky mascot” of DMK heir-apparent M K Stalin, was found dead along with his wife and three children, including an 11-month-old baby, at his bungalow in Chennai.

Remnants of a soft drink bottle and an insecticide container found inside the house in Anna Nagar suggested that it was a ‘family suicide’. What is intriguing is the striking similarities in the circumstances surrounding the deaths of Batcha and Ramesh, except that in the latter case an entire family had perished.

http://expressbuzz.com/states/tamilnadu/batcha%E2%80%99s-death-focus-back-on-10-year-old-case/257496.html

[13] சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207505

[15] மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207599

[16] மரணம் அல்ல… ஒரு படுகொலை‘, மார்ச் 17,2 011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207600