Posts Tagged ‘பக்தி மார்க்கத்தவர்’

ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், அல்லா ராக்கா ரஹ்மானும்!

நவம்பர் 2, 2010

ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், அல்லா ராக்கா ரஹ்மானும்!

தீவிரவாதிக்கு, மோசடி பேர்வழிக்கு, சினிமாக்காரனுக்கு பத்மஸ்ரீ / பத்மவிபூஷண் அளித்த அரசு: அரசாங்க விருதுகளை காங்கிரஸ்காரர்கள் எப்படி கேவலப்படுத்துவது என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தீவிரவாதிக்கு, மோசடி பேர்வழிக்கு, சினிமாக்காரனுக்கு, தன்னலமே இல்லாமல் எங்கோ சேவை செய்யும் மனிதருக்கு இப்படி எல்லொருக்குமே பத்மஸ்ரீ அளிக்க முடியுமா என்றால், அதையும் இந்த வெட்கங்கெட்ட காங்கிரஸ் சென்ற வருடம் செய்துள்ளது. குலாம் முஹம்மது மீர் என்ற காஷ்மீர தீவிரவாதிக்கு[1], சந்த் சிங் சத்வால்[2] என்ற பண மோசடி பேர்வழிக்கு பொதுநலசேவைக்காகவும், …………..விருதுகள் அளிக்கப்பட்டன! அதே விருதுகளை மற்றவர்களுக்கும் – அதாவது உண்மையில் அவற்றைப் பெறத் தகுதியுள்ளவர்கள் – கொடுத்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

பொறுத்தமற்ற ஆள் கையில் விருது பெறுவது: இந்திரா தேசிய விருது வழங்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது. 25வது ஆண்டு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காங்., தலைவர் சோனியா, சிறந்த கல்வி சேவையாற்றி வரும் நாராயண்பூரில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு விருது வழங்கினார். இந்த விருதை, ஆசிரம நிர்வாகி சுவாமி வியாப்தானந்தா பெற்றுக்கொண்டார்[3]. அதாவது, ஒரு நல்ல காரியத்தை செய்துவரும் நிருவனத்திற்கு சோனியா கையில் விருது! இது உண்மையில் அந்த நிறுவனத்தைக் கேவலப்படுத்தும் வகையில் தான் இருக்கிறது.

ஊழலுக்கு ஊழல் விருது: பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து இந்திரா விருதை திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார். விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “தேசிய ஒற்றுமையை பாதுகாக்க பலவழிகள் உண்டு. .ஆர்.ரஹ்மான், இசை மூலம் இந்த பணியை செய்கிறார்[4]. ரோஜா, பாம்பே, லகான் முதலிய படங்களில் வரும் பாலகளின் மூலம் நாட்டுப்பற்றை மனங்களில் ஊற்றி, நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை மரியாதை செய்யும் வகையில் அமைத்துயுள்ளார்[5]. வந்தே மாதரம் பாட்டு மூலம் எல்லா இந்தியர்களையும் – இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர், கிருத்துவர், பார்சி என அனைவரையும் கவர்ந்தீர்த்துள்ளார்………”, என்று அடுக்கிவிட்டு, “சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பின்தங்கிய மக்களிடம் கல்வியறிவை ஊட்டும் பணியை ராமகிருஷ்ணா மிஷன் சிறப்பாக செய்து வருகிறது…………. நாட்டின் தொலைதுரப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. காடுகளையும், மலைகளையும் கடந்து சென்று மருத்துவச் சேவை உள்ளிட்ட பணிகளைச் செய்துள்ளன[6]…………..’ என்றார்.

சினிமா இசையமைப்பாளருக்கு தேசிய ஒருமைப்பாடு விருது: முன்னர் சியாம் பெனகல், ஜாவித் அக்தர் போன்ற சினிமாக்காரர்களுக்கு கொடுத்தாலும், முதன் முதலில் சினிமா இசையமைப்பாளருக்கு தேசிய ஒருமைப்பாடு விருது கொடுக்கப்படுகிறது[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், முன்னமே, காமன்வெல்த் ஊழல் தொடர்பாக, மிகவும் ஊழல்காரர்களை ஆதரித்துப் பேசியுள்ளார்[8].  பிறகு, தனது பாட்டு எடுபடாமல் போகவே மன்னிப்பும் கேட்டுவிட்டார்[9]. இருப்பினும் அவருக்கு விருது கொடுக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்!

பாடலுக்காக ரூ. 5,55,00,000/- வாங்கிய ரஹ்மான்[10]: ஏதோ நாட்டுக்காக, மஹாத்மா காந்திக்காக இலவசமாக செய்கிறார் என்று நினைக்கவேண்டாம். இப்பாடலுக்காக ரூ. 5.55 கோடி ரூபாய் / 1.1 million அமெரிக்க டாலர்கள் (Rahman is being paid 55.5 million rupees ($1.1 million) for composing the song and for his appearance, inclusive of service tax.) கொடுக்கிறார்களாம்! மன்மோஹன் சிங்கின் அறிவுறையின்படி[11], கல்மாடி என்ற ஊழல் பேர்வழி, இத்தகைய “நல்ல பேரை வாங்க” வேஷங்களைப் போட்டு மக்களை ஏமாற்ற இறங்கிவிட்டார்கள் எனத்தெரிகிறது. அதே சிங்குதான், விருது கொடுத்து பாராட்டியும் பேசியுள்ளார்!

சர்தார் படேலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியும், பக்தி மார்க்கத்தவரும் தேசிய ஒருமைப்பாடும்! ஸ்ரீ ராமகிருஷ்ணமட சாமியார் பணத்திற்காக, புகழுக்காக சேவை செய்யவில்லை. ஆனால் ரஹ்மானுக்கு அத்தகைய ஆசைகள் உண்டு. ஆனால், இன்றைய நிலையில் ரஹ்மானிற்கு அவை தேவையில்லை எனலாம். பிறகு எதற்காக தேடிப் பிடித்து அவருக்கு விருது கொடுக்கிறார்கள்? இந்திய நாட்டை ஒன்று படுத்திய சர்தார் வல்லபாய் படேலின் நாளில் அவரை மறந்து விட்டு, குறிப்பாக அவர் பிறந்த நாளிலேயே, இவ்வாறு செய்வதே உண்மையினை மறைக்கும் திட்டமாகத்தான் தெரிகிறது. அந்த சர்தாருக்கே 1991ல்தான், திடீரென்று ஞாபகம் வந்து “பாரத் ரத்னா” விருதினைக் கொடுத்தார்களாம்!

“வந்தே மாதரம்” பாடலை இயற்றியவரை அவதூறு பேசுகிறார்கள், இந்துமதவாதி என்று திரிபுவவதம் செய்கிறார்கள், ஆனால், அதை, ராகம், மெட்டு மாற்றி பாடியவருக்கு தேசிய ஒருமைப்பாடு விருது கொடுக்கிறார்கள்.

சூர்தாஸ், கபீர்தாஸ், ராய்தாஸ், மீரா முதலியோர் பல ஊர்களுக்குச் சென்று பாடல்கள் பாடி பக்தி மார்க்கத்தினால் மக்களை ஒன்று கூட்டினார்கள், இந்தியாவைக் காத்தார்கள். அவர்களுடைய பாட்டுகளைவிட, இப்பொழுதுள்ள பாட்டுகள் சிறந்தவையாகி விட்டனவா?

இவர்களையெல்லாம் உயர்ந்தவர் ரஹ்மான் ஆகிவிட்டாரா? ஆக இவ்வாறு எல்லாவற்றையும் மறந்து எதற்கு ரஹ்மானிற்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது? ஒருவேளை கல்மாடி கையினால் அவ்விருது கொடுக்கப்பட்டிருக்குமேயானால், ஏற்றுக்கொள்ளலாம்!

வேதபிரகாஷ்

© 01-11-2010


[2] Chatwal, who is considered close to former US President Bill Clinton and his wife and US Secretary of State Hillary Clinton was earlier chargesheeted by the CBI for an alleged USD 9 million fraud case connected with the State Bank of India. He had allegedly defaulted on paying back the money he owed to the bank. The letter also mentions the CBI case against Chatwal in which he was even arrested in Mumbai but got bail and left the country. The hotelier was acquitted in one of the four cases in 2008 but since the Director of Prosecution opposed an appeal in the matter, the case was closed.

[6] தினமணி, .ஆர். ரஹ்மான், ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு இந்திரா காந்தி விருது, First Published : 01 Nov 2010 12:00:00 AM IST

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=326236&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE………………81

[8] வேதபிரகாஷ், காமன்வெல்த் ஊழலுக்குத் துணைப் போகும் அல்லா ராகா ரஹ்மான்!, http://evilsofcinema.wordpress.com/2010/08/17/காமன்வெல்த்-ஊழலுக்குத்-த/

[9] வேதபிரகாஷ், அல்லா ராகா ரஹ்மான் – “காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை, இதற்காக வருத்தப்படுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள், https://corruptioninindia.wordpress.com/2010/10/16/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9/