Posts Tagged ‘எவ்ரான்’

லஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்!

ஓகஸ்ட் 31, 2011

லஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்!

வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது.  பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].

ஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள்? மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா? லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.

எவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].

இங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.

இதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.

பணம் மாற்றம் எதற்காக? சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது.  அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில்  ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
மினி பாரும், மருந்துக் கடையும்! ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.

இப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்!

அடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.

யாரந்த உத்தம்சந்த்? வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.

பெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன!  

அவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.

புண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா?

வேதபிரகாஷ்

31-08-2011

 


[2] http://www.everonn.com/about_everonn.html ; http://www.everonn.com/index.html

http://www.everonn.com/everonn_india_foundation.html

Everonn Education Limited
Registered Office:
No.82, IVth Avenue
Ashok Nagar
Chennai – 600083
Tamilnadu, India. 
Corporate Office & Correspondence Address:
“Everonn House”
Plot No # 96 – 99, Industrial Estate
Perungudi, Chennai – 600096
Tamilnadu, India.
Phone No: +91-44-23718202, 42968400
Fax No: +91-44-24962800

[2] http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=4224

[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304505

[7] Mr. P. Kishore – Managing Director – A first-generation entrepreneur and pioneer in building a business model around computer education at schools, Mr. Kishore has promoted IT-enabled education since 1987 and founded Everonn in 2000. Mr. Kishore is a visionary by nature with a passion to excel, a zeal he imparts to every Everonn employee. http://www.everonn.com/board_of_directors.html

[8] The Central Bureau of Investigation on Tuesday arrested P Kishore, managing director of Chennai-based tech-based education provider Everonn Education, on charges of bribing an Income Tax official with Rs 50 lakh. The Income Tax official – of an additional commissioner’s rank – was also arrested. http://economictimes.indiatimes.com/news/politics/nation/cbi-arrests-everonn-education-md-on-bribery-charges/articleshow/9804786.cms

http://www.thehindubusinessline.com/industry-and-economy/info-tech/article2412356.ece

[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.

[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.