Posts Tagged ‘அந்நிய செலாவணி’

காணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு!

செப்ரெம்பர் 1, 2011

காணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு!

அன்னாவிற்குப் பிறகு மறுபடியும் ராம்தேவ்: ராம்தேவை மிரட்டியது போலவே, அன்னனவையும் முதலில் மிரட்டிப் பார்த்தது அரசு. பிறகு ஒருவழியாக அன்னா உண்ணாவிரதம் இருந்து சென் று விட்டார். அன்னா ஹஸாரே வீட்டிற்குச் சென்றவுடன், ஊடகங்கள் அடங்கி விட்டன. ஆனால் மெல்வதற்கு ஏதாவது வேண்டுமே? காங்கிரஸாலும் சும்மயிருக்க முடியாது தான். இதோ அவர்களின் குறை தீர்க்க பாபா ராம்தேவ் மாட்டிக் ஒண்டு விட்டார்.

பாபா ராம்தேவ் டிரஸ்ட்டுகள் மீது நடவடிக்கை: பாபா ராம்தேவின் டிரஸ்ட்டுகள் – பதஞ்சலி யோகபீடம், திவ்யா யூக மந்திர், பாரத் ஸ்வபிமான் முதலியவை[1] அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பணம் பற்றுள்ளதாக அமுலாக்கப் பிரிவு துறையினரால் வழக்குப் போடப்பட்டுள்ளது[2]. ரூ.7 கோடி இங்கிலாந்திலிருந்து பெற்றதாக, அயல்நாட்டு செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், லிட்டில் கும்ப்ரே தீவைப் பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது[3]. பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். முன்னர் அவரது சீடர் சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சானிதழ் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக சி.பி.ஐ கண்டு பிடித்துள்ளது.

டிரஸ்ட்டுகளின் தரப்பில் கூறப்படுவது: டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், சட்டப்படி தங்கள் நிறுவனங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது, என்றார்[4]. “அரசிற்கு முன்னமே இவ்விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் கேள்வி கேட்டார்[5].

திடீர்-திடீர் நடவடிக்கைகள் ஏன்: இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்படி எடுக்கப்படுகின்றனவா இல்லை, பாபா ராம்தேவை மிரட்டுவதற்காகவா, இல்லை அன்னா ஹசாரேவை மறைமுகமாக மிரட்டாவா என்பது கூடிய சீக்கிரத்தில் தெரிய வரும். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை சட்டரீதியாக செய்யப் பட்டுள்ளன. ஆகையால் அவற்றை அந்த டிரஸ்ட்டுகள் எதிர்கொள்ளும். ஆகவே சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருவது ஒன்றும் புதியது அல்ல. ஏனெனில் கம்பனிகள் பதிவு செய்யும் பொழுது அவ்விவரங்கள் கொடுத்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, திடீர்-திடீரென்று குறிப்பிட்ட நாட்களில் விழித்துக் கொண்டு, ஏதோ வேகமாக வேலை செய்வது போல அரசு துறை நிறுவனங்கள் முடுக்கிவிடப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.

வேதபிரகாஷ்

01-09-2011