Posts Tagged ‘ஹாய் நீரா’

ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா?

நவம்பர் 23, 2010

ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா?

ஹாய் நீரா, ஹாய் பர்கா என்று அந்த பெண்கள் பேசுவது ஏனோ[1]? பர்கா தத்தும், நீரா ராடியாவும் “கருணாநிதி”, அவருடைய மனைவி, மகள், மகன், ……….என்றேல்லாம் உரிமையோடு பேசிக்கொள்கிறார்களே அது என்ன இஸம்? கனி, பாலு, ராஜா……….என்று செல்லமாக உரிமையோடு பெயர்களைக் குறிப்பிடுகிறார்களே அது என்ன பாசம்? அவர்களுக்கும் கருணாநிதிக்கும் அப்படி என்ன நெருக்கம், சம்பந்தம், பாசம்? நீராவும், கனிமொழியும் பேசிக்கொள்வது ஏனோ? அதே நீரா ராஜாவுடன் மந்திரி பதவிகள் பற்றி விளாவாரியாக பேசிக் கொண்டதோ என்ன இஸமோ? சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்றால் என்ன அர்த்தம்? மாமியாரை கொல்ல முயன்றதால், மறுமகளுக்கு இவர்மீது அத்தகைய அபிமானம் எற்பட்டுவிட்டதா? இல்லை, கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டுக் கொண்டதால், அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனரா? மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் கேள்வி. அப்பணம் எப்படி மறுபடியும் மக்களுக்கு / அரசாங்கத்திற்கு திரும்பப் பெறப்பட முடியும் என்பதுதான் கவலை.

ஸ்பெக்ட்ரம் விசாரணை அதிகாரி மாற்றத்துக்கு காரணம் யார்? கருணாநிதி[2]: “ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி மாற்றப்பட்டதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்ல தயாரா?’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று எல்லோருக்கும் தெரியும். இது விஷயமே இல்லை.

நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல: அதென்ன இப்படி, இப்படி தருமி போல பேசுவது? இல்லையென்றால், இல்லை என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கலாமே, விளக்கம் எதற்கு? அப்படியென்றால், ஊழல் கரைப்படிந்த பி.ஜே. தாமஸ் நியமனம் செவித்ததற்கு இவர் காரணமா? தாமஸும், ராஜாவும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று சொல்லமுடொயுமா?

அவரது, “கேள்விபதில்அறிக்கை: ஈ.வெ.ரா.வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.

கருணாநிதி விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுக்காததும் மக்களுக்குத் தெரிந்ததுதான்: மக்களை இப்படி நாத்திகம் பேசி, இந்து-விரோதம் பாராட்டினால் ஊழலை மறைக்க முடியாது. பர்கா தத், நீரா ராடியா, வீர் சிங்வி…………போன்ற ஏஜென்டுகள் இவரைப் பற்றி பேசி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளதை, யாரும் தடுக்கமுடியாது. அண்ணதுரை அல்லது திமுகவினர், “தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வத்துப் பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று பேசியுள்ளதையும் மக்கள் அறிவர். இந்த இஸங்களை வைத்துக் கொண்டு இனியும் ஏமாற்றமுடியாது, ஏனென்றால், “கருப்புக் காபாவையும், இத்தாலி செயின்ட் பீட்டர்ஸையும் பீரங்கி வத்துப் பிளப்பது எந்நாளோ” என்று கேட்க ஆரம்பித்துவிடுவர்.

இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா? மக்களுக்கு கரு-ஜெயா சண்டை முக்கியமல்ல, கோடி-கோடி ஊழல் நடந்துள்ளதுதான் முக்கியமான பிரச்சினை. விலைவாசி மறுபடியும் ஏறத்துவங்கியுள்ளது பிரச்சினை. அரசியல்வாதிகள் இப்படி கூட்டுக்கொள்ளை அடித்தால், பொருளாதாரம் ஏன் சிரழியாது, பாதிக்காது? இதற்கு மெத்தப் படித்த, பொருளாதார நுணுக்கம் அறிந்த மன்மோஹனுக்குத் தெரியாதா? பிறகு அமைதி காப்பது தான் விஷமாகத் தெரிகிறது.

உதட்டில் வெல்லம்; உள்ளத்தில் கள்ளம்: உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் கூட அல்ல; விஷத்தைக் கொண்டிருப்பவர் யார் என்பதை, மத்திய அரசு நன்றாக புரிந்து கொண்டு தான், தொடர்ந்து அவருடைய அறிக்கைகளுக்கெல்லாம் முகத்திலே அறைவதைப் போல, பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. “பதிபக்தி இல்லாதவர் சோனியா’ என்றும், “வெளிநாட்டுக்காரி சோனியா’ என்றும் பேசிவிட்டு, இப்போது, “நிபந்தனையற்ற ஆதரவுக்கு தயார்’ என அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்குத் தான், உதட்டில் வெல்லம்; உள்ளத்தில் கள்ளம். இது, மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, “ஒரு பிரதமர் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போவாரா’ என கேள்வி எழுப்பியவரும்; நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, “மத்திய அரசு செயல்படாத அரசாக இருக்கிறது’ எனக் கூறியவரும்; வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, “அவர் நடுநிலை தவறி நடப்பவர்; தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்’ என விமர்சித்தவரும் ஜெயலலிதா தான்.

அதிகாரிகளை மாற்றுவது அரசியல் விளையாட்டுதானே? ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. இதற்கு மேலும் உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்லத் தயாரா? மத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில், ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, “அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்’ என்றும், அவர்களுக்குப் பதிலாக, தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டும் என்றும் கோரியதை மறந்துவிட்டாரா? அவற்றை ஏற்க வாஜ்பாய் அரசு முன்வராத காரணத்தால், மத்திய அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது[3].

காங்கிரஸ்-திமுக ஊழலில் கூட்டணி: ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் தவறு நடந்திருக்கிறது என்றால், “தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை பார்லிமென்டில் வைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என பிரதமரும், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி போன்றவர்களும் மீண்டும் மீண்டும் உறுதியளித்த பிறகும், அதற்கு முன்வர பா.ஜ.,வும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்படி லோக்சபாவில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்கு குழுவின் முன் கொண்டு போகப்பட்டு, அந்தக் குழுவிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தானே. தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், முன்பெல்லாம் பொதுக் கணக்கு குழுவின் முன் தான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்[4].

திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[5]? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று இவர்கள் எல்லோரும் பேசிக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது.

In these conversations, “Baalu” refers to T.R. Baalu, who was roads minister in the Congress-run government’s first term. Unhappy with his performance, Congress replaced him with Kamal Nath in its second term. “Karunanidhi” refers to the chief of Congress’s Tamil Nadu ally, DMK, the party that former telecom minister A. Raja, who resigned Nov. 14, hails from. “Kani” refers to Kanimozhi, Mr. Karunanidhi’s daughter.

மாறன் ஒரு இடத்தில் கருணாநிதியின் மனைவிக்கு 600 கோடிகள் கொடுத்தார்? தயாநிதி மாறன் கருணாநிதியின் மனைவிக்கு 600 கோடிகள் கொடுத்தார் என்று கூட பேசுகிறார்கள். அதாவது, இவ்வளவு வெளிப்படையாக அவர்கள் பாலு, ராஜா, தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி முதலியோர்களுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று அவ்வளவு அக்கரையாக பேசுவது, அந்த பத்திரிக்கையாளர்கள் / ஊடகக்காரர்கள், ஏஜென்டுகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளனர் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. திமுகவினருக்கு மந்திரி பதவி கொடுத்து, கோடிகளை அள்ளவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக ஈடுபட்டதும் நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், மன்மோஹன் சிங் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், கண்டுகொள்ளமல் இருந்து வந்துள்ளார். இப்பொழுது உச்சநீதி மன்றத்தில், இப்படி யெல்லம் கேள்விகள் கேட்பதால், வேறு வழியில்லாமல், விஷயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

வேதபிரகாஷ்

© 23-11-2010


[2] தினமலர், ஸ்பெக்ட்ரம் விசாரணை அதிகாரி மாற்றத்துக்கு காரணம் யார்? கருணாநிதி, பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010,23:37 IST; மாற்றம் செய்த நாள் : நவம்பர் 23,2010,00:04 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131657