Posts Tagged ‘ஹசன் அலி’

ஹசன் அலி: அமுல்பேபிக்களும், ஊழலும், கருபுபணமும்!

ஏப்ரல் 18, 2011

ஹசன் அலி: அமுல்பேபிக்களும், ஊழலும், கருபுபணமும்!

விஜய பாஸ்கர ரெட்டியிலிருந்து இக்பால் சிங் வரை: ஹசன் அலி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்களாக இருப்பதன் மகத்துவனம் என்ன என்று ஆராயவேண்டியுள்ளது. முதலில் இக்பால் சிங் யாரென்றே எனக்குத் தெரியாது என்றார். ஆனால், இப்பொழுதோ, ஹசன் அலிக்கு உடனடியாக பாஸ்போர்ட் கொடுக்க ஆவண செய்யுமாறு, முந்தைய வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜராலுக்கு கடிதம் எழுதியுள்ளார். குஜராலும் பதிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்பே, தபூரியா இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் சௌத்ரி – தனக்கு அறிமுகம் படுத்திவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது அமலேந்து பாண்டே என்ற காங்கிரஸ் தலைவரும் சேர்ந்துள்ளார். இவர் ஹசன் அலிக்கூட சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். போதாகுறைக்கு, இக்பால் சிங் வேறு. அமுலாக்கப் பிரிவு, தபூரியய மற்றும் அமலேந்து பாண்டே இவர்களை ஒன்றாக வைத்து விசாரிக்க ஏற்பாடுகள் செய்கிறாற்கள்[1].

 

ஹசன்அலிக்குமிகவும்மோசமானஉடல்நலம்இருப்பதாகதெரிவிக்கப்பட்டதால், பரிந்துரைசெய்தேன்: ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் இருக்கும் தொழிலதிபரும், குதிரைப் பண்ணை உரிமையாளருமான ஹசன் அலி, பாஸ்போர்ட் வாங்குவதற்கு, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் இக்பால் சிங் மற்றும் உ.பி., முதன்மை செயலர் விஜய்சங்கர் பாண்டே ஆகியோர் உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, கவர்னர் இக்பால் சிங், கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “பாஸ்போர்ட்டிற்காக ஹசன் அலியின் பெயரை நான் பரிந்துரை செய்தேன். பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான அமலேந்து பாண்டேயின் வேண்டுகோளின்படி, 1997, ஏப்ரல் 4ம் தேதி இதைச் செய்தேன்.”ஹசன் அலிக்கு மிகவும் மோசமான உடல் நலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், பரிந்துரை செய்தேன். ஹசன் அலியை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை ஒரு போதும் நான் சந்தித்ததில்லை. ஹசன்அலியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் நான் சரிபார்க்கவில்லை‘ என, தெரிவித்திருந்தார்[2].

சோனியா காந்தி ஆலோசித்த பிறகு, தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு இக்பால் சிங் கேட்டுக்கொள்ளப்படலாம்: ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் பெற பரிந்துரைக் கடிதம் அளித்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை – 17-04-2011 நேரில் சந்தித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பின்போது ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் பெற பரிந்துரைக் கடிதம் அளித்த சூழ்நிலை குறித்து சிதம்பரத்திடம் அவர் விளக்கினார். எனினும் இக்பால் சிங்கின் விளக்கம் போதுமானதாக இல்லாததால் அதை ஏற்க இயலாது என்றும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்றும் சிதம்பரம் அவரிடம் கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசித்த பிறகு, தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு இக்பால் சிங் கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது[3].

எனது பதவியை ராஜிநாமா செய்யும்படி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால், உடனே பதவி விலகத்தயார்: நாட்டையே உலுக்கும் கறுப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதால், இக்பால் சிங் விவகாரத்தில் சிக்கிக்கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவே காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகத் தெரியவருகிறது. இதையடுத்து தில்லி புதுச்சேரி இல்லத்தில் தங்கியிருக்கும் இக்பால் சிங் சோனியா காந்தியை சந்தித்தப் பிறகு தனது ராஜிநாமா கடிதத்தை உள்துறை அமைச்சருக்கு அனுப்பிவைப்பார் என்று காங்கிரஸ் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவி விலகத் தயார்: இதற்கிடையில் சிதம்பரத்தைச் சந்தித்த பிறகு புதுச்சேரி இல்லத்தில் செய்தியாளர்களிடம் இக்பால் சிங் பேசினார். அவர் கூறியது: ஹசன் அலி கான் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக எனது நிலை குறித்து உள்துறை அமைச்சரிடம் இன்று விளக்கினேன். இந்த பின்னணியில் பதவி விலகுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம் எனது பதவியை ராஜிநாமா செய்யும்படி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால், உடனே பதவி விலகத்தயார்[4].

இக்பால் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சம்மன் வரவில்லை என துணை நிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரி ஜே.பி.சிங் மறுத்துள்ளார்: அந்த பரிந்துரைக் கடிதம் 1997-ம் ஆண்டு ஐ.கே.குஜ்ரால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அளிக்கப்பட்டதாகும். ஹசன் அலி கான் யார் என்பதே எனக்குத் தெரியாது. இப்பிரச்னை தொடர்பாக எந்தவொரு விசாரணை அமைப்பும் என்னை அணுகவில்லை. அவ்வாறு அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரத் தயார். இது விஷயத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது எனது மனசாட்சிக்குத் தெரியும் என்று அவர் கூறினார்[5]. இதுதொடர்பாக இக்பால் சிங்கிடம் விசாரிக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் அமலாக்கப் பிரிவினர் அனுமதி கோரியுள்ளனர். இதற்கிடையே இக்பால் சிங்குக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சம்மன் வரவில்லை என துணை நிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரி ஜே.பி.சிங் மறுத்துள்ளார்[6].

அமலேந்து பாண்டே, இக்பால் சிங், தொடரும் கட்சிக்காரர்கள்: வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பது, ரூ.75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததையடுத்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்குக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஹசன் அலி கானும் அவரது கூட்டாளியான காசிநாத் தபூரியாவும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் பிகார் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது ஹசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற பரிந்துரைக் கடிதம் தந்ததாக இக்பால் சிங் மீது அமலாக்கப் பிரிவு புகார் தெரிவித்திருந்தது. பிகாரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் அமலேந்து பாண்டே மூலம் ஹசன் அலிக்கு இக்பால் சிங் உதவியதாக அமலாக்கப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வேதபிரகாஷ்

19-04-2011


காசிநாத் தபூரியா – ஹசன் அலி கூட்டாளி கைது!

மார்ச் 24, 2011

காசிநாத் தபூரியா – ஹசன் அலி கூட்டாளி கைது!

காசிநாத் தபூரியா – ஹசன் அலி கூட்டாளி முதலியோரின் வீடுகளில் ரெய்ட்: காசிநாத் தபூரியா மற்றும் அவரது மனைவி சந்திரிகா, பல அந்நிய வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு, ஹசன் அலிக்காக, பண பட்டுவாடா செய்துள்ளதாக, அமுலாக்கப் பிரிவினர் வியாழன் அன்று – 24-03-2011 அன்று கைது செய்துள்ளனர்[1]. காசிநாத் தபூரியா, ஹசன் அலி கான், பிலிப் ஆனந்த் ராஜ் முதலியோருடைய தொடர்பு முதலியவை ஏற்கெனவே எடுத்துக் கட்டப்பட்டுள்ளது[2]. 07-03-2011 அன்று இவர்களது வீடுகளில் ரெர்ட் நடந்தது[3]. புதன் கிழமை அன்று ஹசன் அலியின் கணக்காளர் சுனில் சிண்டேயின் வீட்டில் ரெய்ட் நடத்தப் பட்டது. இவர் 2007லிருந்து, ஹசன் அலியின் கணக்கு-வழக்குகளை பார்த்து வருகிறார்[4].

காங்கிரஸ் கட்சிக்காரரும் கூட்டளியாக உள்ளார்: பீஹாரைச் சேர்ந்த, அமலேந்துரு குமார் பாண்டே என்ற காங்கிரஸ் கட்சிக்காரரின், தில்லியில் உள்ள வீட்டிலும் ரெய்ட் நடந்தது[5]. இவர்களது வீடுகளினின்று, அவர்கள் சட்டங்களுக்குப் புறம்பாக நடந்து கொண்டதற்கு அத்தாட்சியாக உள்ள ஆவணங்கள் கண்டெடுக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டன. குறிப்பாக, பாட்னாவில் இருந்து போலி பாஸ்போர்ட் பெற்று, அதன் மூலம், அயல்நாடுகளுக்குச் சென்று, கருப்புப்பணம் முதலீடு செய்ததில், இந்த காங்கிரஸ் கட்சிக்காரர் உதவியிருக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே, இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களின் பெயர்கள் அடிப்பட்டன. காசிநாத் தபூரியா அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் இதில் சம்பந்தப் பட்டுள்ளதால் தான், இவிஷயம் அடக்கி வாசிக்கப் பட்டது, மேலும், இத்தனை ஆண்டுகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தூங்கிக் கொண்டிருந்தது..

கைது வாரண்ட் கேன்சல் மற்றும் அமுலாக்கம்: மும்பை நீதி மன்றம், அலியின் கைதை நிராகரித்தது. ஆனால், சென்ற வாரம், உச்சநீதி மன்றம், அந்த தீர்ப்பை நிராகரித்தது. இதனால், அலி போலீஸாரிடம் சரண்டர் ஆனான். அமுலாக்கப் பிரிவினரரின், நடவடிக்கையின் பிறகு, வருமானவரித்துறை தபூரியா மற்றும் அவரது மனைவிக்கு ரூ. 591 கோடி மற்றும் ரூ. 20, 540 கோடிகள் வரி பாக்கிக் கேட்டு நோடிட்டீஸ் அனுப்பியுள்ளது[6] [The I-T department has raised a tax demand of Rs 591 crore against Mr Tapuria and Rs 20,540 crore against his wife Ms Chandrika.]. அலிக்கு ஏற்கெனெவே ரூ. 70,000 கோடிகளுக்கு வருமானவரித்துறை வரி பாக்கிக் கேட்டு நோடிட்டீஸ் அனுப்பியுள்ளது.

காசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:

  1. 1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.
  2. பிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
  3. ஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.
  4. கசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.
  5. அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.
  6. அலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.

வேதபிரகாஷ்

24-03-2011


[2] வேதபிரகாஷ், ஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்! (2), https://corruptioninindia.wordpress.com/2011/03/08/mysteries-around-billionaire-evader-and-indian-politics/

[3] வேதபிரகாஷ், ஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்! (1), https://corruptioninindia.wordpress.com/2011/03/08/284-hasan-ali-khan-mysterious-evasive-billionaire/