ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கள்ளக்குறிச்சி தாசில்தார் அன்பரசனிடம் சிவபாலன் மனு அளித்தார். இதற்காக, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதுடன், முன் பணமாக 25 ஆயிரம் தருமாறு தாசில்தார் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு சிவபாலன் தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுரையின்படி, தாசில்தார் குடியிருப்புக்கு நேற்று காலை சென்ற சிவபாலன், அவரது உதவியாளர் வில்லிஸ் என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். வில்லிஸ் அப்பணத்தை தாசில்தாரிடம் தர முயன்றபோது, அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதற்காக வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக 1,000 ரூபாயை வாங்கிக் கொண்டார். நேற்று காலை வணிக வரித்துறை அலுவலகத்திற்கு வந்த அரவிந்தன், சான்றிதழ்களை கேட்டார். அதற்கு துரைராஜ், மீதிப்பணம் ரூ. நான்காயிரத்தை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என கூறியுள்ளார். பின், மூன்றாயிரம் ரூபாய்க்கு துரைராஜ் சம்மதித்துள்ளார்.
இது குறித்து அரவிந்தன், மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை அரவிந்தனிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் வைத்து துரைராஜிடம் கொடுத்தார். அதை வாங்கிய துரைராஜை போலீசார் கைது செய்தனர்.