Posts Tagged ‘ரேஷன் அரிசி’

அரிசியும், அரசியலும், ஊழலும் – II

ஜனவரி 26, 2010

அரிசியும், அரசியலும், ஊழலும் – II

© வேதபிரகாஷ்

ரேஷன் அரிசியும், ஊழலும், ஏற்றுமதியும்: முன்னமே, இத்தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளேன்[1]. ஆனால், இது விஷயம் இந்த அளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை, அதாவது, ரேஷன் அரிசியை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தமிழர்களின் தார்மீகம் வளர்ந்திருப்பது, பெருமைப்ப்டக்கூடிய விஷயமா என்று பொறுப்புள்ள தமிழரஞர்கள், வித்தகர்கள், வார்த்தை சித்தர்கள், மறவன்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர்தாம் பதில் சொல்லவேண்டும், ஏனெனில், நமக்குத் தகுதி இல்லை. இப்பொழுதெல்லாம், இப்படி சொன்னாலே, பல நண்பர்களுக்குக் கோபம் வருகின்றது.

கேரளாவில் பெரிய வியாபாரம்: 100 முதல் 1000% லாபம்[2]: தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், கன்யாகுமரி, சிவகங்கை, திண்டுகல் முதலிய மாவட்டங்களிலிருந்து, குமுளி, கம்பம், போடிமேட்டு முதலிய (செக்-போஸ்டுகள்?) வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது சகஜமான விஷயமாக உள்ளது போலும். இடுக்கி மாவட்டத்திலுள்ள அரிசி மில் முதலாளிகள் ரூ.8-9/- கொடுத்து இந்த அரிசியை வாங்குகின்றனர். இதற்கென மொத்தவிலை ஏஜென்டுக்கள் இருக்கிறார்கள். ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கமிஷன் கொடுத்து அரிசி வாங்கப்படுகிறது – அதாவது விற்பவருக்கு 100% லாபம்! இதை மனிதர்கள் தாமாகவோ, சைக்கிள், இருசக்கர வாகனம், அட்டோ, வேன் என்று வைத்துக் கொண்டு கடத்துகின்றனர். ரேஷன்கடைக்காரர்களே இதில் ஈடுபட்டுள்ளார்கள். கேரள மில் சொந்தக்காரர்கள் அதை கொஞ்சம் சுத்தப்படுத்தி (பாலிஸ் செய்து) 75, 50 மற்றும் 25 கில்ப்ப் மூட்டைகளாகக் கட்டி சில்லரை வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு இதில் 100 முதல் 1000% லாபம் கிடைப்பதால், எல்லொரும் மகிழ்ச்சியாக கொள்ளையடிக்கின்றனர். இதெல்லாம் அரசுக்குத் தெரியாமல் போகாது, இருக்காது.

ஆந்திரப் பெண்களை வைத்துக் கொண்டு அரிசி கடத்தல்: ஆந்திர பெண்களை இதற்காகவே அழைத்துக் கொண்டு வந்து அரிசி கடத்தல் வேலையில் மில்-முதலாளிகள் பயன்படுத்துகின்றனர். கைது செய்யப்படுவது என்கத்தம்மா, ஏகத்தம்மா, கிருஷ்ணம்மா, பொன்னம்மா என்றுதான் உள்ளனர்! அந்த பெண்கள் யார், எவ்வாறு தமிழகத்திற்லு வரவழைக்கப்படுகின்றனர், யார் அழைத்துவருவது, இந்த அரிசி கடத்தலில் ஈடுபடுத்துவது? இதையெல்லாம் “நிஜங்கள்”, “பூத கண்ணாடிகள்” முதலியன பார்க்காது போலும். மில்லதிபர்கள் ஒரு ரூபாய் அரிசி அறிமுகப்படுத்தியதிலிருந்து சுலபமாக தமது லாபம் நான்கு மடங்கு ஏறியுள்ளதாக ஒப்புக்கொள்கின்றனர்[3]. மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் பேசும் எல்லொரும் இதனைப் பற்றி பேசுவதில்லை, எழுதுவதில்ல, ஏனனில் அரசியல்வாதிகளின் சம்பந்தம் தொடர்பு உள்ளதால். கேவலம், சில இடங்களில் தமது நண்பர்களே அதில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளபோது, மௌனம்தான் சாதிக்கின்றனர்!

திமுகவினரின் தொடர்பு: 2005லிருந்து நூற்றுக்கணக்கான பிடிபட்டவர்களின் வாக்குமூலங்கள், விசாரணைகள் முதலியன மூலம் தெரியவந்துள்ளது, திமுகவினர் இதை ஒரு கவர்ச்சிகர-நவீன-லாபகரமான ரீதியில் மிக நுட்பத்துடன் செயல்படுத்திவருவது தெரிகின்றது. நாளுக்கு நாள் புகார்கள் குவிய-குவிய தகவல் அறியும் சட்டத்தில் வேறு விண்ணப்பங்கள் வருவது கண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2008ல்தான், கீழ்கண்ட தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டன[4].

Complaints cell: Regarding procurement of paddy, complaints, if any, can be lodged by farmers in the following telephone numbers:

E. V. Velu – Food Minister’s office fax: 044-25670204,

K. Shanmugham, Secretary, Food Department, Tamil Nadu Government,

Head Office control room: 044-26424512,

Managing Director of TNCSC: 044-26421662,

K. Phanindra Reddy, Managing Director of Tamil Nadu Civil Supplies Corporation,

Vigilance office: 94440 84560,

Rajaram, Commissioner of Civil Supplies,

Senior Manager, Quality control: 94440 23119, and

Senior Manager control room: 044-26424512.

அரிசி கடத்துபவர்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பப்போது கலெக்டர்கள், அதிகாரிகள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பர். அரிசி கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்படும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் கோஷம் இருக்கும். முன்பு திண்டுக்கல் கலெக்டர் ஆர். வாசுகி அவ்வாறு குறியிருந்தார்[5]. திருப்பத்தூரில் ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த அரிசி பறிமுதல்[6]; அரிசி கடத்திய ஆறு பேர் கைது[7]; ஒரு ரூபாய் அரிசி கேரளவில் ரூ.17-18ற்கு விற்கப்படுகிறது[8];……………….இப்படி எங்கப்பன் குதிருக்குள் இல்லை பாணியில் செயல்படவேந்திய அவசியம் இல்லை. நியாயமாக உள்லனர் என்றால், ஒரே நாளில் எல்லாவற்ரையும் அடக்கிவிடலாம். ஆனால், திசைத் திருப்பதான், எதைப் பற்றியெல்லாம் பேசுகின்றனர் போலும்!

“சுங்க தினத்தில்” ரூபாய் நான்கு கோடி மதிப்புள்ள 22,12,000 கிலோ அரிசி பறிமுதல்[9]: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவிற்கு கப்பலில் கடத்தவிருந்த, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு செல்ல இருந்த எம்.வி.போந்தே 2 என்ற கப்பலில், தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அந்த கப்பலில் ஏற்றப்பட்ட 1,750 டன் அரிசியும், தூத்துக்குடி சத்யாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவன குடோனில் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் கடத்த இருந்த ரேஷன் அரிசி 2,212 டன் ஆகும். ரேஷன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டாலும் அதன் வெளிச்சந்தை மதிப்பு ஒரு கிலோ 18 ரூபாய். எனவே கடத்தப்பட இருந்த அரிசின் மதிப்பு  நான்கு கோடி ரூபாய். தமிழக அத்தியாவசிய பொருட்களை கடத்திய குற்றத்திற்காக அரிசி ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.

Important incidents and happenings in and around the world

மாலத்திவு அதிபர் வரும்போது மாலத்தீவுக்கு அரிசி கடத்தல்! கடத்தல் தடுப்பு குறித்து, சென்னை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் கூறியதாவது: தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம், இதை ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஐ.ஆர்.64 அரிசி (“IR64 boiled non-basmati sortex rice,” valued at Rs.3.89 crore, in 44,240 bags) எனக்கூறி, மாலத்தீவின் மாநில வணிக கார்ப்பரேஷன் என்ற அமைப்பிற்கு (the State Trading Organisation, Maldives), எம்.வி.போந்தே 2 (M.V. Bonthi II) என்ற கப்பலில் அனுப்ப இருந்தனர். கப்பலில் அரிசி ஏற்ற பயன்படுத்தப்பட்ட 19 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சிவில் சப்ளை அதிகாரிகள், கடத்தல் அரிசியை சோதித்ததில் அவை, தமிழக ரேஷன் அரிசிதான் என்பதை உறுதி செய்தனர். ஏற்றுமதி நிறுவனம் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராஜன் தெரிவித்தார்[10]. சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது[11].

Swine Flu

மாலத்தீவுக்கு கடத்தப்படவிருந்த 250 டன் அரிசி பிடிபட்டது! : தூத்துக்குடியில் உள்ள தனியார் கொடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[12].  தூத்துக்குடி சத்யா நகரில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை அதிகாரிகள் அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷிப்பிங் ஏஜன்சி கொடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு 250 டன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கொடோனில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அரிசி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து இந்த அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். டி.ஆர்.ஓ. துரை ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலமாக மாலத்தீவுக்கு கடத்துவற்காக அரிசி, கொடோனில் வைக்கப்பட்டிருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து பறக்கும் படை உயர்திகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர். துறைமுகத்திற்கு அரிசி ஏற்றி செல்லும் லாரிகளில் அவர்கள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள் அங்குள்ள கொடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதை மாபெரும் ஊழல் என்றே சொல்லலாம்: செய்யப்பட்ட காரியங்கள் விவரமாகச் செய்யப்பட்டுள்ளன. முனியம்மா, ராமம்ம, கிருஷ்ணம்மா முதலியோரை வௌத்துக் கொண்டு கடத்திய விவகாரம், இப்பொழுது ஆயிர டன் கணக்கில் “மாலத்தீவின் மாநில வணிக கார்ப்பரேஷன் என்ற அமைப்பிற்கு (the State Trading Organisation, Maldives)”, என்று அரசாங்க நிறுவனத்திற்கே அனுப்பும் அளவிற்கு இந்த ஊழல், சீர்கேடு, மனிதவிரோத-அக்கிரமம் அதிநவீன சாதனங்கள்-நூதனங்களுடன் அரங்கேறியிருப்பது சாதாரணமான நிகழ்ச்சியல்ல! சுங்கத்துறையைப் பொறுத்தவரைக்கும் தவறான அறிவிப்புடன் ஏற்றுமதி ஆவணங்கள் சமர்பிப்பு என்று சுருக்கி எதோ ஒரு அபராதம் என்று போட்டு வழக்கை அமுக்கிவிடலாம். ஆனால் அவ்வாறு 22,12,000 கிலோ அரிசி கட்டப்பட்டு 44,240 மூட்டைகள் வந்தன என்பதன் பின்னணியில்தான் அந்த ஊழல் அகப்பட்டுள்ளது. “ஆண்டவனே வந்தாலும் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்றா முடியாது”!

26-01-2010 செவ்வாய்கிழமை: இந்தி எதிர்க்கும் தமிழ் மொழிப்போராளிகளுக்கு இந்நாள் ஒரு துக்கத்தினம், கருப்புநாள்! கருணாநிதி நேற்றே ஞாபகப்படுத்திவிட்டார். இந்நாள் அனைத்துலக சுங்கதினமாகவும் கொண்டாடப் படுகிறது! அதனால் போலும், நேற்றே சுங்கத்துறையினர் இந்த ஒரு ரூபாய் அரிசியைப் பிடித்துவிட்டார்கள் போலும்! எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று இன்னுமோர் விடுமுறை, டிவிக்களில் தாராளமாக திரைப்படங்கள். பாவம், விஜய் டிவிதான் “காந்தி படம்” காட்டிக்கொண்டிருக்கிறது!

© வேதபிரகாஷ்

26-01-2010


[1]வேதபிரகாஷ், அரிசியும், அரசியலும், ஊழலும், விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்,  https://corruptioninindia.wordpress.com/2009/11/14/20/

[2] Business standard dated May 8, 2005

http://www.business-standard.com/india/news/pds-rice-smuggled-at-rs-17-18kg/36832/on

[3]Times of India dated  18 September 2008

http://timesofindia.indiatimes.com/city/chennai/Re-1-rice-get-smugglers-going/articleshow/3496136.cms

[4] The Hinu dated Thursday, Jan 10, 2008,

http://www.hinduonnet.com/2008/01/10/stories/2008011055350600.htm

[5] The Hindu, Stern action against ration rice smuggling, dated  Wednesday, Jan 07, 2009, for details, see at:  http://www.thehindu.com/2009/01/07/stories/2009010756290200.htm

[6] The Hindu, Ration rice seized, Monday, Sep 21, 2009

http://www.hindu.com/2009/09/21/stories/2009092153290300.htm

[7] The Hindu, Six arrested for rice smmugling, Wednesday, Jul 20, 2005

http://www.hindu.com/2005/07/20/stories/2005072003370300.htm

[8] http://www.business-standard.com/india/news/pds-rice-smuggled-at-rs-17-18kg/36832/on

[9] தினமலர், மாலத்தீவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ. 4 கோடி ரேஷன் அரிசி பறிமுதல், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15694

[10] http://www.hindu.com/2010/01/26/stories/2010012653170400.htm

[11] http://www.ptinews.com/news/485594_PDS-rice-about-to-be-exported-to-Maldives-seized மற்றும்

http://indiatoday.intoday.in/site/Story/80971/LATEST%20HEADLINES/PDS+rice+about+to+be+exported+to+Maldives+seized.html

[12] தினகரன், தூத்துக்குடி குடோனில் பதுக்கிய 250 டன் அரிசி பறிமுதல் , பதிவு செய்த நாள் 1/25/2010 1:00:48 AM  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=4514 . இதே செய்தி, இங்கேயும்:

http://www.inneram.com/201001246238/maldives-rice-sized-by-officers