Posts Tagged ‘மறுமகன்’

ஊழலை மறந்த அம்மா, ஊழலை மறைத்த மகன், ஊழல் புகாரில் சிக்கிய மைத்துனர், எல்லாவற்றையும் மறுக்கும் ஊடக நாடகங்கள்!

ஒக்ரோபர் 3, 2013

ஊழலை மறந்த அம்மா, ஊழலை மறைத்த மகன், ஊழல் புகாரில் சிக்கிய மைத்துனர், எல்லாவற்றையும் மறுக்கும் ஊடக நாடகங்கள்!

சோனியாவின் நாடகம் ஊடகங்கள் ஒத்தூத, கூட்டணி கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்க மறுபடியும் அரங்கேறியது!

“ஏய், என்னது, முட்டாள்தனமான சட்டம், பிரதமருக்கு என்ன மூளையில்லையா?”, என்பதுபோல, ராகுல் சொல்லிவிட்டதாக ஊடகங்கள் கூத்தடிக்கின்றன.

சோனியா ஆட்சியின் எல்லாவிதமான கோடி-கோடி ஊழல்களையெல்லாம் ஊடகங்கள் திடீரென்று மறந்து விட்டன போலும்!

2ஜி, காமன்வெல்த், நிலக்கரி……………………………என்று கோடி-கோடி-கோடி…………………..ஊழல்கள் தொடர்ந்தன, தொடர்கின்றன……………..

சம்பந்தப்பட்ட கோப்புகள், பைல்கள், ஆவணங்கள் மறைந்து போகின்றன!

அம்மா சட்டம் எடுத்து வந்தாராம், மகன் அதனை எதிர்த்தானாம், உடனே வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டனராம்!

போதாகுறைக்கு, பிரதம-மந்திரிக்கு வேறு, ஏதோ இழுக்கு ஏற்பட்டுவிட்டது போன்ற புலம்பல் வேறு!

இப்பொழுதுள்ள மன்மோஹனுக்கு என்றாவது சூடு-சொரணை, ரோசம்-மானம், சுயமரியாதை  இவையெல்லாம் இருந்தனவா இல்லையா என்று தெரியவில்லை.

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரதம மந்திரியாக இருந்த பெருமையைப் பெற்றுள்ளார், பத்து ஆண்டுகளையும் கழித்து விடுவார்.

ஆனால், சோனியாவின் கைப்பாவையாகத்தான் இருந்து வந்துள்ளார். மெட்த்தப் ப்பட்டித்த வல்லுனராக, அறிவாளியாக இருந்தாலும் அவர் அப்படி ஏன் இருந்தார் என்பது  அவருக்குத்தான் தெரியும்.

கிரிமினல் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களை (இப்பொழுதைய / முந்தைய மந்திரிகள், முதலமைச்சர்கள் என்றும் படிக்கலாம்) காப்பாற்ற மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றவாளிகள் என தண்டனை பெற்றால் அந்த எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் தகுதி இழப்பதுடன் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கடுமையான திர்ப்பு சுப்ரீம் கோர்ட் கொண்டு வந்தது.

இந்த தீர்ப்பை நீர்த்து போக செய்வதற்காக எம்.பி. – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற மத்திய அமைச்சரவை திருத்தங்களுடன் கூடிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மனுவை கோர்ட் ஏற்கவில்லை.

இதனையடுத்து காங்.கிரஸ் அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை சற்று தள்ளி வைத்தார்.

இந்நிலையில் இந்த அவசர சட்டம் தேவையற்றது, இந்த விஷயத்தில் மத்திய அரசு செய்த அனைத்து செயல்பாடுகளும் தவறானவை, இது முட்டாள் தனமானது, இந்த அவசர சட்டத்தை கிழித்து வீசி எறியப்பட வேண்டும் என ராகுல் பிரஸ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கடுமையாக சாடினார்.

பிரதம மந்திரிக்கு எதிராக இக்கருத்து இருந்தது. ராகுலின் இந்த பேச்சை கையிலெடுத்த எதிர்கட்சிகள் சுய மரியாதை இருக்கும் பட்சத்தில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறின.

இதற்கிடையில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொள்ளவில்லை.

ராஜ்காட்டில் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன், சோனியா, அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சோனியாவும், மன்மோஹனும் சற்று விலகியபடியே உட்கார்ந்து இருந்தது வேடிக்கையாக இருந்தது.

வேதபிரகாஷ்

© 03-10-2013