Posts Tagged ‘மர்ம கார்’

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (2)

மார்ச் 18, 2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (2)

இதன் முதல் பகுதியை, இங்கு வாசிக்கவும்[1].

ரகசியமாக வந்த கார் – யார் வந்தனர்? முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவரது வீட்டிற்கு வந்த மர்ம கார் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்துகிறார்கள்[2]. அந்த மர்ம காரில் வந்த ஆசாமிகள் யார்? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக தான் சென்றதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி கூறி இருக்கிறார். ஆனால் அவர் வெளியே செல்வதற்கு முன்பு மர்ம கார் ஒன்று வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கார் வந்த பிறகுதான் சாதிக் பாட்ஷாவின் மனைவி வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. ரேகனா பானு வீட்டிற்கு திரும்பிய போது சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாக தெரிய வந்தது. ஆகவே இந்த இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் நடந்தது என்ன? காரில் வந்த மர்ம ஆசாமிகள் யார்? அவர்கள் சாதிக் பாட்ஷாவை தற்கொலைக்கு தூண்டினார்களா? என்பது குறித்து தீவிரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரே சாதிக் பாட்சாவின் உடலை பார்க்கவில்லையாம்! போலீஸார் யாருமே சாதிக் பாட்சாவின் உடலை பார்க்கவில்லையாம். உடலின் புகைப்படத்தையும் எடுக்கவில்லையாம். பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதிலும் காலம் தாழ்த்தப்பட்டதாம்[3]. 12.45க்கு முன் இறந்திருந்தாலும், மாலை 5.15க்கு தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாம். ரெஹனா பானு என்ன சொன்னாரோ அதைத்தான் அப்படியே பொலீஸார் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்! இப்படியெல்லலம் சொன்னது போலீஸ் கமிஷனர், டி. ராஜேந்திரன்[4]. இவையெல்லாம் போலீஸார் தமது கடமைகளை அறவே செய்யவில்லை என்று எடுத்துக் காட்டுகிறது. $ 40 பில்லியன் ஊழலில் சம்பந்தப் பட்ட சாவு என்பதனால், அயல்நாட்டு நாளிதழ்களே, இதை கூர்மையாக கவனித்து வருகிறது[5].

சாதிக்கின் உடலை யாரும் பார்க்கவில்லை[6]: சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் தொடர்பான சந்தேகங்கள் பல இருந்தாலும், அவர், இறந்த செய்தியை அறிந்தபின், பகல் 2:30 மணி வரை வீட்டில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் மாலை 5:10 மணிவரை எங்கு சென்றனர் என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. கணவனின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் உறவினர்கள் யாரும் உடன் இல்லை.மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிணவறையில் வைக்கப்பட்ட போதும் அங்கும் யாரும் இல்லை. பகல் 1:40 மணியில் இருந்து இதுவரை, சாதிக்கின் உடலை அவரது உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், திடீரென 5:10 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இடையில் அவர்கள், எங்கிருந்தனர்? அவர்கள் மறைத்து வைக்கப்பட்டார்களா? மிரட்டப் பட்டார்களா? இவை அனைத்தும், புரியாத புதிராக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிக்கின் உடல் பொதியப்பட்டது ஏன்?[7] தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் உடல், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், போலீசாருக்கு தகவல் தெரிந்து அங்கு வந்தனர். சாதிக்கின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்பு தான், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. பிற்பகல் 2:40க்கு உடல் மருத்துவமனையில் இருந்து, வெளியில் கொண்டுவரப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்கள் சாதிக்கின் உடலை போட்டோ எடுக்க முண்டியடித்தனர். போலீசார் தடுத்ததால், இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. வெளியில் கொண்டுவரப்பட்ட போது, சாதிக்கின் உடல் முழுமையாக வெள்ளை துணியால், பிரேத பரிசோதனைக்கு பின், பொதியப்படுவது போல் தயார் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முகமும் மூடப்பட்டிருந்ததால், திறந்து காட்டும்படி, போட்டோ கிராபர்கள் கூறினர்.இதையடுத்து, முகம் மட்டும் காட்டப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு முன், உடலை துணியைக் கொண்டு பொதிந்தது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சாதிக்கின் உடலில் வேறு ஏதேனும் காயங்கள் இருந்து மறைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா, கொண்டு செல்லப்பட்டது சாதிக்கின் உடல்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி[8]: அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார். கொலையா, தற்கொலையா என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது. உடலை இரண்டு தற்கொலை கேசுகளில் மணி நேரத்தில் பரிசோதனை செய்தால்தான், இறந்த காரணத்தைத் தெளிவாக கண்டறிந்து சொல்ல முடியும்[9]. ஆனால், இங்கு உடலை பரிசோதனைக்கு எடுத்துவருவது தாமதிக்கப் பட்டுள்ளது. இறுதி மருத்துவ அறிக்கை இரண்டு வாரங்களில் வரும். அப்பொழுதுதான் உறுதியாக சொல்லமுடியும் என்று டாக்டர் வி. டிகால் கூறியுள்ளார்[10] [“We cannot say now whether it was suicide or murder… The report will be ready in two weeks,” Dr V Dekal said. “The death was caused due to asphyxia but the cause of that cannot be confirmed till the forensic report is received,” he said here, adding, the entire autopsy was videographed]. தற்கொலை என்பதை இப்போது கூற முடியாது என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் கூறினார். சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில், சாதிக் பாட்சாவின் உடலை, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர் மற்றும் டாக்டர் டிகால், யோகலட்சுமி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி தடயவியல் இயக்குனர் டாக்டர் சாந்தகுமார் ஆய்வு செய்த பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

உயிரோடு இருந்த போது, தூக்கில் தொங்கினாரா அல்லது இறந்த பின் நடந்ததா என்பதை இப்போது கூற முடியாது: அதாவது சாதிக் பாட்சா தானே தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி உயிர் இழந்தாரா அல்லது யாராவது கழுத்தை நெறித்து அல்லது மூச்ச்டைக்கச் செய்து, இறக்கச் செய்து அதற்குப் பிறகு தூக்கில் தொங்கியது போல அல்லது தொங்க வைத்தால், அதை இப்பொழுது சொல்ல முடியாது. அதாவது, காலம் தாழ்த்தி பிணத்தை எடுத்து வந்துள்ளாதால்[11], பரிசோதனையால் அவ்வாறு சொல்லமுடியாது. பிரேத பரிசோதனைக்குப்பின் வெளியில் வந்த, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர், டாக்டர் டிகால் கூறியதாவது: “இறந்தவரின் உடலில், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட தழும்பு, சிராய்ப்பைத் தவிர, வேறு எந்த காயங்களும் இல்லை. அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு தான் இறந்திருக்கிறார் என்பதில் எந்த ஐயமும் இல்லை; நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூச்சுத் திணறலுக்கு காரணம் தூக்கு போட்டதால் தான் ஏற்பட்டதா என்பதை அறிய, கழுத்துப் பகுதியில் உள்ள சதைகளை, உடல் நோய்க்குறியாய்வு (பேத்தாலஜி), “டெஸ்ட்க்கு அனுப்பியுள்ளோம். அந்த முடிவு வந்த பின்பு தான் தீர்க்கமாக சொல்ல முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் செய்யப்படும் இந்த ஆய்வில், உயிரோடு இருந்த போது, தூக்கில் தொங்கினாரா அல்லது இறந்த பின் நடந்ததா என்பது தெரியும். சாதாரணமாக இறந்த பின், இரண்டு மணி நேரத்திற்குள் தூக்கில் தொங்க விடப்பட்டாலும், அதற்கான தடயங்கள் இருக்கும். இறுக்கப்பட்ட சதைகள், நல்ல நிலையில் உள்ள சதைகள் இரண்டையும், மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்க்கும் போது, உண்மை என்ன என்பது தெரிந்துவிடும். அதற்கு ஏதுவாக, நாங்கள், சிறு, சிறு துண்டுகளாக எடுத்து அனுப்பியுள்ளோம்”, இவ்வாறு டாக்டர் டிகால் கூறினார்.
தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

சாதிக்கின் இறப்பு எப்போது நேர்ந்துள்ளது? இவரது இறப்பு பிணவறையில் சேர்க்கப்பட்டதற்கு, முந்தைய 12 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம்.

அவர் விஷம் சாப்பிட்டுள்ளாரா? இறந்தவரின் மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும், ஆய்வுக்காக பேத்தாலஜி துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இல்லை. அவர் வயிற்றில், பாதியளவு செரிமானமான உணவு இருந்தது. அதில், எந்த வாசனையும் இல்லை.

இது தற்கொலை தான் என உறுதியாக கூற முடியுமா? ஆய்வு முடிவுகள் வரும் வரை, இது தற்கொலை தான் என, உறுதியாக கூற முடியாது. இவ்வாறு டாக்டர் டிகால் பதிலளித்தார்.

வேதபிரகாஷ்

18-03-2011


[1] வேதபிரகாஷ், சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (1), https://corruptioninindia.wordpress.com/2011/03/18/mysterious-death-of-sadiq-batcha-suicide-or-murder/#comment-110

[3] Fingers have been pointed at the police for failing to ensure the postmortem was held at the earliest. Though the body had reached the mortuary at 3.30pm on Wednesday, the police filed the FIR at 6pm. A letter to the forensic department was sent the next day.They police could have sought permission from the district collector or the police commissioner to carry out the procedure after 6 pm, but the possibility was never explored. A doctor commenced the autopsy at 10 am on Thursday, but was forced to stop as the director of medical services insisted it be carried out by a team of two experts, considering the sensitivity of the case.

[4] On 16 March, Chennai Police Commissioner T Rajendran told the media he had not seen the body of Batcha. Sources in the Chennai police told TEHELKA that no police officer has seen the body. The police did not photograph the body either. The only explanation they have is that they went by the word of Batcha’s wife.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

[8] தினமலர், தற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207598

[9] “In suicide cases, the cause of death can be confirmed only if the autopsy is carried out within two hours of death,” Dr V. Dekal, who was part of a medical team that performed the procedure on Thursday at the Royapettah General Hospital, said. ” The signs of asphyxia like bluish fingers and damage to internal organs were there,” he added.

http://indiatoday.intoday.in/site/Story/132720/latest-headlines/2g-scam-police-blamed-for-sadiq-batcha-autopsy-delay.html