Posts Tagged ‘பண மோசடி’

வக்கீல் சிதம்பரம் வசமாக மாட்டிக் கொண்டாரா?

திசெம்பர் 15, 2011

வக்கீல் சிதம்பரம் வசமாக மாட்டிக் கொண்டாரா?

பயங்கரமான தினத்தில் உள்துறை அமைச்சரான சிதம்பரம்: உள்துறை அமைச்சர் சிதம்பரம் அப்பதவியை அடைந்ததே, ஒரு மிகவும் கோரமான, அக்கிரமமான, மனிதநேய விரோதமான தினமாகும் – அதுதான் 26/11!

 

ஹோட்டலுக்காக வாதாடிய வக்கீல் சிதம்பரம்: சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது தில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். இதற்கு வி.எல்.எஸ். பைனான்ஸ் லிமிடெட் கடன் வழங்கியுள்ளது. ஆனால், இரு கம்பெனிகளுக்கும் தகராறு ஏற்பட்டு கோர்ட் வரை சென்று விட்டது. அப்பொழுது தான், சிதம்பரம், ஒரு வழக்கில் ஹோட்டலுக்காக பரிந்து வாதாடியுள்ளார்[1]. வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் வேலையிலேயே, வி.எல்.எஸ். பைனான்ஸ் லிமிடெட், பண மோசடி செய்து விட்டது என்று சுனைர் ஹோடலுக்கு எதிராக மூன்று மோசடி புகார்களை தில்லி போலீஸ் கமிஷனரிடம் பதிவு செய்து எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளன[2].

 

உள்துறை அமச்சர் சிதம்பரம் வழக்குகளை கவனிக்கும் விதம்: சிதம்பரம் வக்கீலாக தொழில் நடத்தியபோது, தன்னுடைய “கிளையன்டுகளை” கவனித்த விதமே அலாதியானது. அவரது மனைவி நளினி சிதம்பரமும் கில்லாடிதான். 1999-2003 வருடங்களில், எம்.பியாக இருந்தாலும், ஐயா வக்கீல் தொழிலை ஜரூராக செய்து கொண்டிருந்தார். 26-11-2008 அன்று பதவி ஏற்றுக் கொண்டதும், தில்லி போலீஸ் கமிஷனருக்கு பல கடிதங்கள் உள்துறை அமைச்சகம் மூலம் அனுப்பப் பட்டு, வழக்குகளின் நிலையைக் கேட்டதுடன், அவற்றை சீக்கிரம் முடிக்குமாறு அறிவுரைத்தது. அதுமட்டுமல்லாது,வழக்குகளை வாபஸ் பெறுமாறும் கேட்டுக் கொண்டது[3]. தேஜிந்தர் கன்னா, தில்லியின் லெட்டினென்ட் கவர்னர்[4] அந்த ஹோட்டலின் மீது பதவி செய்யப்பட்ட வழக்குகளை வியாழக்கிழமை (08-12-2011) அன்று வாபஸ் வாங்கிக் கொண்டாரார்[5]. சிதம்பரம் பரிந்துரை பேரிலேயே அவ்வாறு நடந்திருக்கிறது, இதனால், அவர் தனது அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார், தமது அமைச்சர் அந்தஸ்தையும் சட்டரீதியில் பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளார்[6] என்று பூதாகாரமான விஷயம் வெளிப்பட்டுள்ளது[7].

 

2-ஜி, குப்தாஜி, சோனியாஜி: அந்த ஹோடல் முதலாளி குப்தா மிகவும் கில்லாடிதானாம். சோனியா லெட்டர் பேடிலேயே[8] புகார்களை போலீஸாருக்கு அனுப்பியுள்ளாராம்! அதாவது, போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்! மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது மேலும் ஒரு புதிய புகார் கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த அரசியல் கட்சியினர் இன்று பார்லி., இரு அவைகளிலும் எழுப்பியது. தொடர்ந்து ஏற்பட்ட அமளியில் பார்லி., ஒத்தி வைக்கப்பட்டு பணிகள் பாதித்தது. அமைச்சர் சிதம்பரம் கடந்த 2008ல் நிதி அமைச்சராக இருந்த போது தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது. இந்த ஊழலை தடுக்க தவறியதால் இதில் சிதம்பரமும் குற்றம் புரிந்துள்ளார் என குரல் எழுப்பி அவர் பதவி விலக வேண்டும் என கோரி வருகிறது[9]. ஆனால், காங்கிரஸ் என்ன இதற்கெல்லாம் சளைத்த கட்சியா? ஊழலில் ஊறி மரத்துப் போன கட்சியாயிற்றே? சிதம்பரத்திற்கும், இந்த விவகாரத்திற்கும் ஒன்றும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட்டது[10].

 

வேதபிரகாஷ்

15-12-2011

 

 

 


[1] Since 1999, the owners of five star Metropolitan Hotel, SP Gupta and his company Sunair Hotels, have been involved in a series of bitter legal disputes with VLS Finance Ltd, a company which claims to have funded the project. P Chidambaram, then an opposition MP, represented Sunair Hotels in the High Court for one the disputes.

http://ibnlive.in.com/news/chidambaram-case-mhas-decision-revoked/212237-37-64.html

[2] Even as the civil suits were being heard in courts, VLS Finance filed three FIRs in various Delhi Police stations against the owners of Metropolitan Hotel for defrauding them.

http://ibnlive.in.com/news/chidambaram-case-mhas-decision-revoked/212237-37-64.html

[3] Things took an interesting turn when Chidambaram became the Home Minister after the 26/11 Mumbai attacks. Documents available with CNN-IBN show that the Home Ministry started actively working on representations sent by Sunair, asking for withdrawal of the criminal cases. Several letters were then sent by the ministry to Delhi Police asking for clarifications and status reports so that a decision on withdrawing cases against Sunair Hotels could be taken.

http://ibnlive.in.com/news/chidambaram-case-mhas-decision-revoked/212237-37-64.html

[8] Promoter of Sunair Hotels has been accused of misuse of the name of Sonia Gandhi as well as forgery. The FIR also accuses the promoter of forging letters of MPs.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/bjp-ready-for-fresh-offensive-against-p-chidambaram/articleshow/11113820.cms

[10] Union Home Secretary RK Singh also claimed that the draft of a letter sent by the Home Ministry to the Delhi government for withdrawal of the FIRs had not been shown to the Home Minister or Home Secretary or the Joint Secretary concerned and it did not reflect the proper deliberations of the Home Ministry. He suggested it could be a fault of drafting.

http://zeenews.india.com/news/nation/chidambaram-had-no-role-in-withdrawal-of-firs_747039.html