ஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன?
அதிரடி ஆம்ஆத்மிகட்சியும், பிரபலங்களும்: ஆம் ஆத்மி கட்சி ஏதோ கொள்கை, ஊழல்-எதிப்பு, தூய்மை, நியாயம், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைத்துள்ளது. அதனால், திடீரென்று ஏகபட்ட மௌசும் கூடியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக ஊடகங்களில் தினமும் ஏகப்பட்ட தயாரிக்கப் பட்ட, திரிக்கப் பட்ட கிசுகிசுக்கள், யூகங்கள் எல்லாம் ஏதோ “செய்திகள்” நாளிதழ்கள் தாராளமாக “செய்திகள்” போல வெளியிட்டு வருகின்றன. நடிகர்-நடிகைகள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் கட்சியில் சேரப்போகிறார்கள், சேர்ந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். விஷால் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[1]; நமீதா சேரப் போகிறார்[2], சேர்ந்து விட்டார்; விஜய் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[3]; இப்படி வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன.
தொடங்கிய சில நாட்களிலேயே கோஷ்டி சண்டை: டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 30,000 பேர் சேர்ந்து விட்டனர், 42,000 சேர்ந்து விட்டனர்[4], என்று அதிரடியாக செய்திகள். இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் 07-01-2014 அன்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார். தொடங்கிய சில நாட்களிலேயே இப்படி திராவிடக் கட்சிகளை மிஞ்சும் வகையில் கோஷ்டி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது போலும்!
போட்டி பேட்டிகள் ஆரம்பித்து புகார்களில் முடிந்த கதை: இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது[5]: “இன்று காலை பத்திரிகையில் “எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்”, இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார். கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].
இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார்: அக்கட்சிக் காரர்கள் திடீரென்று ஒருவர் மீது ஒருவர் மோசடி புகார் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இரண்டு அணியினர் செயல்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அக்கட்சியில் ஒரு தரப்பினர் மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார்[7]. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடம் கிறிஸ்டினா நன்கொடை கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[8]. புகார்கள் குறித்து கேள்வி எழுப்புவர்களை கட்சியில் இருந்து கிறிஸ்டினா நீக்கி விடுவதாகவும் நிர்வாகிகள் கூறினார். கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வலியுறுத்தினர். வருகின்றனர்[9].
பதிலுக்கு கிறிஸ்டீனா சாமி புகார்: இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்[10]. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்[11]. எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது. அமைந்தகரை பகுதியில் அலுவலம் திறக்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் கீழ்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாராயணன் உட்பட பலர், அமைந்தகரையில் முன்பு செயல்பட்ட அலுவலகத்தை மீண்டும் திறந்து, ஆம் ஆத்மி கட்சி என்று கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்[12]. இதற்காக பணமும் வசூலிக்கின்றனர். போஸ்டர்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றனர். தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை. அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர்[13]. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்[14]. எங்களது புகார் குறித்து விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்[15].
பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்: கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, பெயர் தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர் என்றால் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி போன்ற கட்சிகள் சுவரொட்ர்டிகள் கூட ஒட்டுவதற்கு பணம் இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அந்நிலையில் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கில் நிதியை அளிப்பர் என்று தெரியவில்லை. அவர்களது பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்:
- ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் [அந்த அளவிற்க்ய் டெக்னிகலாக வசூல் செய்கின்றனரா?].
- மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம் [அதாவது வசூலித்தது வரை விட்டுவிடுவோம் என்கின்றனர் போலும்].
- ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார் [யார் இந்த கிறிஸ்டினா சாமி, எப்படி உடனடியாக இரண்டு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி இருக்க முடியும், எப்படி பணம் வந்திருக்க முடியும் என்றெல்லாம் மர்மமாக இருக்கின்றன].
- கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் [அந்த அளவிற்கு கோடிகளைக் கொட்டியவர்கள் யார்?].
- அவர்கள் (நாராயணன் முதலியோர்) போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர் [கிறிஸ்டினா சாமி, இப்படி சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.].
வேதபிரகாஷ்
© 13-01-2014
[1] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=dd7b6623-bd91-4a07-b17f-ebcd330107fb&CATEGORYNAME=TFILM
[2] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=e1a07a98-ca0e-43fa-b687-cd704953cd57&CATEGORYNAME=TFILM
[3] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=b08ed31f-af6d-451b-8f64-1f1f7d33a45f&CATEGORYNAME=TFILM
[6] மாலைமலர், சென்னையில் தொடங்கிய தமிழக ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2:11 PM IST.
[8] தினகரன், கட்சி நிர்வாகிகள்புகாரால்ஆம்ஆத்மியிலும்கோஷ்டிபூசல்வெடித்தது?, மாற்றம் செய்த நேரம்:1/11/2014 5:08:01 PM
[9] தினத்தந்தி, ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : Jan 13 | 09:56 pm
[11] தினகரன், ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார், 14-01-2014
[12] http://www.dinamani.com/tamilnadu/2014/01/14/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A/article1998962.ece
[14] http://www.dailythanthi.com/2014-01-13-Fraud-in-the-name-of-AAP%25253B-complaint-filed-in-police
[15] மாலை மலர், ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 15, 8:49 AM IST.