ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் நகராட்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஊழியர்கள் இருவருக்கு தலா மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிபதி தீர்ப்பளித்தார்.
விருதுநகர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தவர் ராஜபாண்டியன். இவர், 2003 மார்ச் 31 ல் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பணப்பயனை கேட்டு, நகராட்சி ஆணையரிடம் விண்ணப்பித்தார். இது தொடர்பான பைல் சுகாதார உதவியாளர் பாத்திமா வசம் இருந்தது. ராஜபாண்டியனுக்கு 26,516 ரூபாய் வரவேண்டியதுள்ளதால், பில் எழுத இரண்டாயிரம் ரூபாய் பாத்திமா லஞ்சமாக கேட்டுள்ளார். இது தொடர்பாக ராஜபாண்டியன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
2005 பிப்21ம் தேதி மதியம் நகராட்சிக்கு சென்ற ராஜபாண்டியனிடம், பாத்திமா பணத்தை கொடுத்தபோது அலுவலக உதவியாளர் சங்கரபாண்டியிடம் கொடுக்கும் படி கூறினார். அவர் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். ஸ்ரீவி., முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகாம்பாள், லஞ்சம் வாங்கிய பாத்திமா, சங்கரபாண்டிக்கு தலா மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
* இதேமாதிரி அரசியல்வாதிகளையும் பிடித்துத் தண்டித்தால் நன்றாக இருக்கும்!