Posts Tagged ‘திரிபுவாதங்கள்’

லஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்!

ஓகஸ்ட் 31, 2011

லஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்!

வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது.  பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].

ஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள்? மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா? லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.

எவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].

இங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.

இதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.

பணம் மாற்றம் எதற்காக? சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது.  அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில்  ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
மினி பாரும், மருந்துக் கடையும்! ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.

இப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்!

அடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.

யாரந்த உத்தம்சந்த்? வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.

பெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன!  

அவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.

புண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா?

வேதபிரகாஷ்

31-08-2011

 


[2] http://www.everonn.com/about_everonn.html ; http://www.everonn.com/index.html

http://www.everonn.com/everonn_india_foundation.html

Everonn Education Limited
Registered Office:
No.82, IVth Avenue
Ashok Nagar
Chennai – 600083
Tamilnadu, India. 
Corporate Office & Correspondence Address:
“Everonn House”
Plot No # 96 – 99, Industrial Estate
Perungudi, Chennai – 600096
Tamilnadu, India.
Phone No: +91-44-23718202, 42968400
Fax No: +91-44-24962800

[2] http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=4224

[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304505

[7] Mr. P. Kishore – Managing Director – A first-generation entrepreneur and pioneer in building a business model around computer education at schools, Mr. Kishore has promoted IT-enabled education since 1987 and founded Everonn in 2000. Mr. Kishore is a visionary by nature with a passion to excel, a zeal he imparts to every Everonn employee. http://www.everonn.com/board_of_directors.html

[8] The Central Bureau of Investigation on Tuesday arrested P Kishore, managing director of Chennai-based tech-based education provider Everonn Education, on charges of bribing an Income Tax official with Rs 50 lakh. The Income Tax official – of an additional commissioner’s rank – was also arrested. http://economictimes.indiatimes.com/news/politics/nation/cbi-arrests-everonn-education-md-on-bribery-charges/articleshow/9804786.cms

http://www.thehindubusinessline.com/industry-and-economy/info-tech/article2412356.ece

[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.

[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.

Advertisements

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்!

ஜூன் 3, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்

ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம்[1], மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!

  1. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை[2] மூலம் குற்றச்சாட்டியுள்ளது! அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
  2. ராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது.
  3. அப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது.
  4. ஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம்! முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மன்மோஹன் சிங் ஊழலை மறைக்கும் மர்மம் என்ன? தூய்மையின் மறு உருவமான மன்மோஹன் சிங் சொல்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே, தான் நடந்து கொண்டதாக அமைச்சர் ராசா விளக்கினார். மேலும் 2003ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா கூறினார்”, என்றெல்லாம் சப்பைக் கொட்ட யார் உத்தரவு இட்டது?. திருடனிடத்தில் கேட்டால், அவனா சொல்வான்? சிங் என்ன அந்த அளவிற்கு ஒன்றும் தெரியாத ஆளா?

“பாஜக உருவாக்கிய விதிமுறைகளின்படி தான் ஊழல் நடந்தது”, எனும்போது காங்கிரஸின் வேசித்தனம் வெளிப்படுகின்றது: பொருளாதார மேதாவி தொடர்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, அந்த நேரத்து கொள்கைகள் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது முந்தைய பாஜக கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படி தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் ராஜா மீது எந்தத் தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்”.”, இதைவிட கேவலமான அரசியல் விபச்சாரத்தனம் தேவையில்லை. இப்படி, சோனியாவிடம், சூடு, சுரணை இல்லாத பொம்மை பிரதமராக இருப்பதைவிட, இந்த தூய்மையின் சின்னம், கசாப்புக்கு முன்னமே தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். ராஹுல் உடனடியாக வந்திடுவார் பிரதமராக!

கருணாநிதியை வெல்லும் தூய்மை: “ஊழல் இருக்கிறது ஆனால் சி.பி.ஐ விசாரணை நிலுவையில் உள்ளது”!: திருவாளர் தூய்மை தொடர்கிறது. ராஜா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர், “மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இந்த விஷயத்தில் (ராஜாவை நீக்குவது குறித்து) நான் ஒரு திட்டவட்டமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை அடையாளம் காண வேண்டியது அவசியம். ஆட்சியின் எந்த மட்டத்தில் ஊழல் நடந்ததாலும் அதற்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம்”, என்றார். கரு டில்லிக்குச் செல்லும்போதெல்லாம், இப்படி காங்கிரஸ்காரர்களுக்கு, ஊழலைப்பற்றியும், எப்படி இப்படியேல்லாம் பேசுவது என்பது பற்றியும் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருவார் போலும்!

மன்மோஹன் சிங் என்ன மட சாம்பிராணியா, பொருளாதார நிபுணாரா? ஆனால், ஸ்வான் டெலிகம் ரூ.1537 கோடிகளில் 13 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் பெற்றது. உடனே அந்த கம்பனி தன்னுடைய 45% சேர்களை எடிலாஸ்ட் என்ற கம்பெனிக்கு ரூ. 4200 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதேப்போல, யூனிடெக் நிறுவனத்திற்கு ரூ.1,658 கோடிகளில் 22 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் கொடுக்கப்படுகின்றன, ஆனால், அது தன்னுடைய 60% பங்குகளை டெலினார் என்ற கம்பெனிக்கு ரூ. 6,100 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதாவது, யூனிடெக் நிறுவனம், இந்தியாவில் ஒரு மொபை டவர் கூட வைக்காமல், ரூ 1,658 கோடிகள் கொடுத்து, ரூ.10,000 கோடிகள் என்று தன்னுடைய மூலதனத்தைப் பெறுக்கிக் கொண்டது. இப்படி வாங்கி அப்படி விற்றது, இந்த மன்மோஹன் சிங் போன்ற பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியாதா? அந்த அளவிற்கு மட சாம்பிராணி போல பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் யார் காரணம்? இதெல்லாம், இந்நாட்டுச் சட்டத்திட்டங்களுக்குட்பட்டதா? இல்லையென்றல், இதே மாதிரி சென்றால், நாளை இவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்களே?

ஊழல் நடந்தது எப்படி? இது தீவிரமாக, முன்னாலேயே தீர்மானித்து செய்யப்பட்ட ஊழல். ஆகவே, எல்லாமே ராஜா, மன்மோஹன் சிங், அவரை ஆட்டிவைக்குக் சோனியா, மற்ற அரசாங்கத்துறைகள், இவற்றின் ஒத்துழைப்புடன் தான் நடந்தேறியுள்ளது.
செப்டம்பர் 24, 2007:  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தன.

அக்டோபர் 1, 2007: விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள்.

ஜனவரி 10, 2008: விளம்பரத்திலோ ஒரு வாரம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 25 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் தாம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த தேதி வரை 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பலர் தகுதியை இழந்தனர்.

ஜனவரி 10, 2008 அன்று மதியம் 1.47: அளவில் தங்களுடைய விண்ணப்பங்களுடன் 3.30 ற்கு சஞ்சார் பவனில் வருமாறு பணிக்கப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறிது நேரம்தாம் தான் விண்ணப்பப்படிவம், பூர்த்தி செய்வது, வங்கியிலிருந்து குறிப்பிட்ட பணத்திற்கு டிடி பெறுவது, வங்கியின் பிணைப்பத்திரம் பெறுவது, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து அளிப்பது – முதலியவையெல்லாமே செய்வதற்காக ஒதுக்கப் பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகள், அவற்றிற்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தலால், தயாக இருந்தனவாம்.

சாதாரணமாக, டெண்டர் எடுக்கும் பையன்களுக்குக் கூட, இந்த விவகாரம் நன்றாகவே புரிந்திருக்கும்.

பரத்வாஜ் இந்த விவகாரம் எல்லாம் சரியில்லை என்று எச்சரித்தார்[3]: நவம்பர் 1, 2007 அன்றே, இந்த விவகாரம் சட்ட அமைச்சரவை அனுமதிக்கு அனுப்பப்பட்டபோது, பரத்வாஜ் ராஜாவின் நடவடிக்கையை எதிர்த்ததோடு அல்லாமல், Empowered Group of Ministers – EGoM இந்த விஷயத்தை ஆராயுமாறு பரிந்துரைத்தார்[4]. ஏலமில்லாது, ஒதுக்கீடு செய்வது சரியில்லை என்றும் எச்சரித்தார். ஆனால், வேண்டுமென்றே, 2001ல் அதுமாதிரி செய்யப்பட்டது, என்று நொண்டிசாக்குக் காட்டி, ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கினார்.

Nov 2, 2007, 8.30 இரவு: பரத்வாஜைக் கிண்டலடித்து, மன்மோஹனுக்கு, அவரது அறிவுரை “சட்டபடி இந்த விஷயத்திற்கு ஒவ்வாதது” என்று கடிதம் எழுதினார்.

Nov 2, 2007, 9.30 pm: மன்மோஹன் உடனே, இந்த ஒதுக்கீடு வேலையெல்லாம், உடனடியாக நிறுத்தச் சொல்லி ஆணையிட்டார். அக்கடிதம், ராஜாவின் இல்லத்தில் அன்று இரவே 9,30 அளவில் கொடுக்கப்பட்டது.

பிரச்சினையை சரிகட்ட, பரத்வாஜ் கர்நாடகத்தின் கவர்னராக மாற்றப்பட்டார்[5].

சி.பி.. விசாரணை சொல்வதென்ன? 3ஜியை ஒப்பிடும்போது, 2ஜியில் குறைந்தபட்சம் ரூ.22,000 கோடிகளுக்கு ஊழல் நடந்திருக்க வேண்டும் என்கின்றது. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, அறிக்கைக் கொடுத்துவிட்டாரே?  இதனால்தான் அந்த அதிகாரியே மாற்றப் பட்டார்.

சி.பி.ஐ

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நடத்தி வந்த சி.பி.ஐ அதிகாரி வினீத் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க.வின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக, ராசாவுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி, அவரது கூட்டாளிகள், பல புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததை சி.பி.ஐ. அடையாளம் கண்டிருக்கிறது. அமைச்சர் ராசாவுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் சி.பி.ஐ. விசாரணை மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொள்ள நேரிடும். இதுதான் கருணாநிதியின் மிரட்டல்[6].

திராவிடர்கள் தங்களது ஊழல்களை[7] மறைப்பதேன்? இப்படி திராவிடர்கள் ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்?

ராஜாவின் நண்பருடைய கம்பெனிகள்[8]:

1. WiExpert Communications,

2. SV Telecom Systems,

3. Digitelco Communications,

4. Spectrus Communications and

5. Technotial Infoways.

இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம்! ஆக, அவசர-அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப் பட்டு, இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப் பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் கருணாநிதியின் கீழுள்ள, திராவிட அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றூவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம். இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

ரஹ்மான் கானின் ரூ 105 கோடி வங்கி மோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

பெங்களுர் மர்மமும் மர்மமாகவே உள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”!

நெப்போலியனும் சொத்துக்களை வாங்கித் தள்ளுகிறாராம்! ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார்!  அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.

சி.பி.., தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[9]: தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.ராசா பதவி விலக தேவையில்லை: பிரதமர் ஒப்புதலுடன் நடந்தது: உண்மையை உரைக்கும் வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ’’மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா பதவி விலக வேண்டியது அவசியமில்லை[10]. 3ஜி அலைவரிசையில் அரசிற்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசிற்கு ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறமுடியாது. எனவே தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமருக்குத் தெரிந்துதான், அதாவது சோனியா காந்தியின் ஒப்பொதலுடன் தான் இநத விவகாரம் நடந்துள்ளது.

ஆக வீரமணிக்குத் தெரிந்திருப்பது மன்மோஹனுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே: ஊழல் நீதிபதி தினகரன் கர்நாடகத்தில் பதவி கொடுத்தது, வீரமணிக்கு முன்னமே தெரியும். கே. ஜி. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதும் தெரியும். இப்பொழுது, உறுதியாகச் சொல்கிறார்: “மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறமுடியாது.” ஆக, அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறது, பிறகு, மற்றவர்கள் என்ன, கொசுக்கள், புழுக்கள், அவஎர்களையா, இவர்கள் மதிக்கப் போகிறார்கள். சில ஊடகங்கள் வேண்டுமானால், கத்திக் கொண்டேயிருக்கும். பிறகு, எங்கேயாவது, இழுத்துவிட்டால், அடங்கிவிடும். அப்படியொரு போக்கில்தான் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது.

நாடகமாடும் பெரிய புள்ளிகள்[11]: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கருணாநிதியால் செல்லமாக அழைக்கப் படும் “தி ஹிந்து”வும் கருணநிதிக்கே ஆதரவாக செயல்பட்டது[12]. என்ன செய்வது, அந்த பிரியா – தயாநிதியின் மனைவியே, ஹிந்து ராமின் மச்சினி-முறையாயிற்றே? பிரியா ரங்கராஜன் சும்மாவா இருந்திருப்பார்? அதுமட்டுமல்லாது, அந்த செய்தியும் இணைத்தளத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது[13]. இப்படி ஒட்டுமொய்த்தமாக, கோடானுகோடி மெகா ஊழலை மறைக்க இந்த ப்நெரிய புள்ளிகள் எல்லாம் செயல்படுகிறார்கள். வெளியிலே “பார்ப்பனீயம்” ஒழிக என்று, இப்படி பார்ப்பன மனைவிகளை வைத்துக் கொண்டு வேடமிடவதும், இவர்களுக்கு வெட்கமாகப் படவில்லை. ஆனால், சமயம் பார்த்த கருணநிதிம் திடீரென்று, ராஜா ஒரு “தலித்” என்பதால்தான், அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கேவலமாகக் குற்றஞ்சாட்டினார். பிறகு அந்த பாப்பாத்திகளை விரட்டியடுத்துவிடுவதுதானே? மானங்கெட்ட கருணாநிதியே அந்த சாவியிடம், ஒரு பிராமண பெண்ணைப் பார்க்குமாறு சொன்னதை மக்கள் மறந்து விட்டிருப்பார்கள்[14].

ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதிI & II[15]: நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான்! மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது. சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன. அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்? அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது. முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிற்கு என்ன தொடர்பு?

நீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும் ஒப்பந்தக்காரரா? கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது[16]. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை. பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது. இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை. சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

http://www.scribd.com/doc/30674787/CBI-IT-Letters-on-Spectrum-Scam

மக்கள் பணமான – கோடிகளைத் திரும்பப் பெறுவது எப்படி? இப்பணம், இந்திய மக்களின் பணம். கோடானுக்க்கோடி மக்கள், தங்களது வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, செல்லுத்திய பணம். அப்படியிருக்கும்போது, அந்நியர்களோ, இந்த காங்கிரஸ்-திமுகக் கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கோ சொந்தமானது கிடையாது. ஆகவேம் அது, மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் படவேண்டியாதாகிறது. எப்படி, ஏமாற்றி பறித்தப் பணம், பறிமுதல் செய்யப் பட்டு, திரும்ப சொந்தக்காரர்களுக்குக் கொடூக்கப் படுகிறதோ, அதுபோல, இப்பணம் இந்த கூட்டுக்கொள்ளைக்காரர்களிடமிருந்து வசூலித்து மக்களுக்குக் கொடுக்கப் படவேண்டும்.

ராஜாவை மந்திரி பதவிலிருந்து நீக்கிவிட்டு வாயை மூடிவிடமுடியாது: ராஜா ராஜினாமா செய்வது அல்லது மன்மோஹன் ராஜாவின் இலாக்காவை மாற்றுவது என்ற நாடகத்தினால், ஊழல் பணம் கோடிகள் திரும்பி வராது. ஆகவே, ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த கோடிகள் பறிக்கப்படவேண்டும். சன்-தொலைகாட்சி முன்னமே தன்னுடைய குழுமம் “பொதுவாகிறது” என்று காட்டிக்கொண்டு, கோடிகளை அள்ளியது[17]. தயாளு அம்மாள் தன்னுடைய 20% பங்குகளை விட்டுத்தருவதாக கருணாநிதியே (Nov 08, 2005) அறிவித்தார்[18]. ஆனால், உண்மையில், தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவே, நாடகமாடி, கலைஞர் டிவி உருவாக்கப் பட்டது. வெளியில் சண்டைப் போட்டுக்க்கொள்வதுபோலக் காட்டிக் கொண்டு, கோடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. புதிய கம்பெனிகள் உருவாகின, புதிய வருமானங்களும் பெறுகின[19]. டிசம்பர் 2008ல் இந்த கோஷ்டிகள் ஒன்றக சேர்ந்துவிட்டன[20]. டிவி வியாபாரத்தில் எவ்வாறு இக்குடும்பங்கள் வலுவடைகின்றன, அரசியல் ஆதிக்கம் பெறுகின்றன என்று பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[21].

வேதபிரகாஷ்

03-06-2010.


[1] வேதபிரகாஷ், ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!, https://corruptioninindia.wordpress.com/2010/04/09/ராஜாவால்-ரூ-26685-கோடி-நஷ்டம்/

[2] அறிக்கை தேதி 31-03-2010. இணைதளத்திலும் காணலாம்.

[3] http://news.outlookindia.com/item.aspx?683037

[4] Raja defied PM’s writ on spectrum: Report 29 Oct 2009 A Raja dismissed a crucial suggestion by the then Law Minister HR Bharadwaj for an Empowered Group of Ministers (EGoM) to decide on licence expressbuzz.com/…/story.aspx?…Rajaraja

[5] H R Bharadwaj appointed Karnataka Governor: Rediff.com India News

24 Jun 2009 … HR Bharadwaj appointed Karnataka Governor| Rediff.com: India news … Former Law Minister Hans Raj Bhardwaj, who failed to make it to the … news.rediff.com/…/president-appoints-h-r-bharadwaj-as-karnataka-governor.htm

[6] தினமணி, 29 Apr 2010 02:34:23 AM ISThttp://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=234441&SectionID=129&MainSectionID=129&SEO=……..BF

[7] வேதபிரகாஷ், https://corruptioninindia.wordpress.com/2010/02/04/திராவிடர்கள்-தங்களது-ஊழல /

[8] WiMax Scam – another murky deal of Indian telecom industry,  (Reports appeared on ‘The Pioneer’ daily on the blatant corruptions in the WiMax franchise allotment of the state owned telecom company BSNL)         May 6, 2008 – The Pioneer.

[9] http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1543

[10] நக்கீரன், ஆ.ராசா பதவி விலக தேவையில்லை: கி. வீரமணி, ஞாயிற்றுக்கிழமை, 23, மே 2010 (22:17 IST) http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32663

[11] http://www.transcurrents.com/tamiliana/archives/321

[12] Thursday, Apr 29, 2010, Notice: A press release on the 2G scam was issued by AIADMK leader Jayalalithaa in Chennai on April 28, 2010. The Hindu is unable to verify the authenticity of a 14-page document purporting to be an official account of intercepted phone conversations and is, therefore, taking it off its website.

http://www.hindu.com/2010/04/29/stories/2010042989991000.htm

[13] The article you are looking for is no longer available in this website. http://beta.thehindu.com/news/resources/article414110.ece?homepage=true

[14] கலாநிதி மாறன் 1991ல் காவிரி என்ற பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார். சகோதரன் தயா, 1994ல் பிரியா என்ர ஐய்யங்காரை, தி ஹிந்து ராமின் சொந்தக்காரி பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார்.

[15] வேதபிரகாஷ், http://dravidianatheism.wordpress.com/2010/05/02/ராஜா-ஊழலிலும்-அழகான-பெண்/

[16] வேதபிரகாஷ், http://dravidianatheism.wordpress.com/2010/05/07/ராஜா-ஊழலிலும்-அழகான-பெண்/

[17] http://www.accessmylibrary.com/article-1G1-142233674/sun-raise-rs207-8.html

[18] Karunanidhi, the former chief minister of Tamil Nadu and the head of the DMK party, said: “My wife was holding 20% shares in Sun TV, Kumkumam and other Tamil magazines. She has very amicably relinquished her shares and received the proceeds. After allocating sufficient amount towards income tax, she has divided the total proceeds and given me a portion — Rs 10 crore — by way of cheque – Nov 08, 2005.

http://www.indianexpress.com/oldStory/81585/

http://www.dnaindia.com/money/report_karunanidhis-pull-out-of-sun-tv_8839

[19] http://www.sebi.gov.in/dp/suntv.pdf

[20] http://myiris.com/shares/research/ESL/SUNTV_20081202.pdf

[21] http://www.tribuneindia.com/2007/20070930/spectrum/main1.htm

300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

மே 31, 2010

300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

செம்மொழி மாநாட்டுப்பணியில் ஊழல்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7714

செம்மொழி ஊழல் செம்மையாக நடக்கிறதோ? கோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், கமிஷன் வழங்கிய கான்ட்ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தரத்தைப் பற்றி கவலைப் படாத அதிகாரிகள்: உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளா கத்தில் நடக்கிறது. இதையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள் இணைப்புச் சாலைகள், பூங்கா, சாலையோர பூங்கா, நடைபாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் அசுர வேகத்தில் நடக்கின்றன. இப்பணியில், தனியார் கான்ட் ராக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வேலைகள், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகளின் தரத் தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு போதிய நேரமில்லை; மாநாடு ஏற்பாடு பணிகளிலேயே முழு கவனமும் செலுத்தி வருகின்றனர்.

மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்: இந்நிலையில், வளர்ச்சிப் பணி கான்ட்ராக் டர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் தொகை வசூலித்து வருவதாக, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாய் மற்றும் கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “அலுவலக ஆவணங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது?’ என, மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கான்ட்ராக்டர்கள் கமிஷன்-இதெல்லாம் சகஜமில்லாயா: மாநகராட்சி எல்லைக்குள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு சாலை, சாக்கடை, பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகளை கான்ட்ராக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநகராட்சி துணைக் கமிஷனருக்கும், அதற்கும் மேற்பட்ட தொகையை அனுமதிக்கும் அதிகாரம் கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணி முடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்தே “செக்’ வழங்கப்படுகிறது. இவ்வாறான “செக்’ வழங் கும் போது குறிப்பிட்ட கமிஷன் தொகையை, அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கான்ட்ராக்டர்கள் கொடுத்துள்ளனர். அவ்வாறாக, ஒரே ஒரு நாளில் வசூலான தொகை தான், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 76 ஆயிரம் ரூபாய். இதை, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ரைடில் ஆவணங்கள் பறிமுதல்: மாநகராட்சி கணக்குப் பிரிவில் இருந்த கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கணக்குப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு யாரும் உரிமை கோர முன்வராததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) 102 பிரிவில் (உரிமை கோரப்படாத சொத்து), லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

கான்ட்ராக்டர்கள் கலக்கம்: லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், கான்ட் ராக்டர்கள் தொடர் பான விவரங்கள் உள்ளன. எவ்வளவு லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன, அப்பணிகளைச் செய்த கான்ட் ராக்டர்கள் யார், எந்த தேதியில் பணிகள் துவக்கப் பட்டன, அதற்காக மாநகராட்சியால் அனுமதித்து வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல்கள் ஆவணங்களில் உள்ளன. இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, “சம்மன்’ அனுப்பி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

மே 26, 2010

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

எந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது!

மன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி! சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே! பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்! அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது! இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்! ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன? இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது! இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்! பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது! ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா? இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

பிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்?

இக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்று பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.

ஸ்பெக்ட்ரம் ‌‌லைசென்ஸ் வழங்கியதில் 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை

ஒக்ரோபர் 28, 2009
ஸ்பெக்ட்ரம் ‌‌லைசென்ஸ் வழங்கியதில் 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை
அக்டோபர் 27,2009,23:57  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1543

கோடானுக் கோடி ஊழல், மெகா ஊழல், சோனியா-கருணாநிதி ஊழல் என்றெல்லாம் இனி பேசப்படப் போகின்ற ஊழல், இன்றும் தொடர்கிறது!

இப்பொழுது ஆயிரங்கள், லட்சங்களையும் மீறுகின்றதாம்!

ஆனால் எல்லாமே கோடிகள் தாம்!!

Top world news stories and headlines detailபுதுடில்லி (27-10-2009) : “தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில், அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டில்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர்.இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.