Posts Tagged ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’

துள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி!

நவம்பர் 29, 2010

துள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி!

துள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

கூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போதுஸ்பெக்ட்ரம்என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.

துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.

கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்புமுந்திராஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திராஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? “ஸ்பெக்ட்ரம்ஊழலை நிரூபிக்க தயாரா? பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்

அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]:  ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது? கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது? நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா? முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.

திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3]? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்?

வேதபிரகாஷ்

© 29-11-2010


[1] “The Kalkis and Dinamanis did not bother to write anything about the Mundra scandal after that. But, even after Mr. Raja resigned over the spectrum issue, the Opposition and certain sections of the press continue to harp on the need for a JPC probe just because Mr. Raja is a Dalit.”

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article917996.ece

[2] He accused those sections of the press as being partisan, as reflected in their “failure” to write about the attitude of Jayalalithaa, former Chief Minister, in dragging her feet over the assets case before a Bangalore court. He urged people to prepare themselves for a “battle between the Aryas and Dravidas.”

http://www.deccanchronicle.com/chennai/karuna-plays-dalit-again-raja-row-253

Advertisements