Posts Tagged ‘தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்’

நீரா-திமுக உரையாடல்கள்: ராஜா / கனியைத் தொடர்ந்து பூங்கோதையும் மாட்டிக் கொண்டார்!

திசெம்பர் 14, 2010

நீரா-திமுக உரையாடல்கள்: ராஜா / கனியைத் தொடர்ந்து பூங்கோதையும் மாட்டிக் கொண்டார்!

ராஜாவைப் போலவே பூங்கோதை: தொலைபேசிக்கும் பூங்கோதைக்கும் ஒத்துவராது போல இருக்கிறது. ஜூலை 2008ல் இவரும் ஊழல் ஒழிப்பு அதிகாரியும் தொலைபேசியில் பேசியதை சு.சுவாமி வெளியிட்டதால், மந்திரி பதவி போயிற்று. இருப்பினும் பிப்ரவரி 26, 2009ல் கருணாநிதி மறுபடியும் அமைச்சராக்கினார். அதே மாதிரி தகவல் தொடர்பு துறையும் திமுகவிற்கும் ஒத்துவராது போல இருக்கிறது. ராஜா மாட்டிக் கொண்ட பிறகு, இப்பொழுது, பூங்கோதையும் நீரா உரையாடல்களில் சிக்கியுள்ளார்.

பூங்கோதையின் புன்னணி: பூங்கோதை ஆலடி அருணா M.B.B.S., D.N.B., M.R.C.O.G., (London) தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்அமைச்சர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து 2006-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவின்கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அமைச்சர் பூங்கோதை, ஒரு தொழில்முறை பெண்கள் சிறப்பு மருத்துவர் பட்டம் பெற்ற மருத்துவர். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் 28-10-1964ல் பிறந்த இவர் மருத்துவ படிப்புக்கு பிறகு லண்டனில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது கணவர் மருத்துவர் பாலாஜி நரம்பியல் மருத்துவ நிபுணர். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு சமந்தா (வயது 21), காவ்யா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.[1]. டாக்டர் பூங்கோதைக்கு மதிவாணன், தமிழ்வாணன், அமுதவாணன், அன்புவாணன், எழில்வாணன் ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர்.

சமூகநலத்துறை அமைச்சர்: முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இவரது மகள் டாக்டர் பூங்கோதை, மகப்பேறு மருத்துவ நிபுணர். ஆலடி அருணா மறைவை அடுத்து, 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதி பூங்கோதைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையிலும் அவருக்கு இடம் தரப்பட்டது. சமூகநலத்துறை அமைச்சராக 2006-ம் ஆண்டு மே மாதம் பூங்கோதை பொறுப்பேற்றார்.

உறவினருக்காக பரிந்துரை: இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போதிருந்த தலைமைச்செயலாளர் எல்.கே.திரிபாதி, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் உபாத்யாயா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பத்திரிகைகளில் வெளியானது. அதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

சில நாட்களுக்குள் உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசிய பேச்சுகளும் வெளியிடப்பட்டன. இந்த சம்பவமும் சட்டசபையில் பெரும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது. மின்சார வாரியத்தில் உதவிப்பொறியாளராக பணியாற்றிய ஜவஹர் என்ற தனது உறவினரை, லஞ்ச வழக்கு தொடர்பாக கடினமாக நடத்தாமல் மென்மையாக விசாரிக்க வேண்டும் என்று உபாத்யாயாவிடம் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கருணாநிதி கருத்து: இந்த பிரச்சினை 14.5.08 அன்று சட்டசபையில் எதிரொலித்தது. அன்று சட்டசபைக்கு வராத பூங்கோதை, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார். இந்த பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, எதிர்க்கட்சியினரின் கருத்துக்கு பதிலளித்து பேசினார். அவர் தனது பதிலில், “பூங்கோதை தான் செய்த தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் ராஜினாமா செய்தது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுபற்றி கலந்தாலோசிக்கிறேன். தவறு செய்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருக்கும் விசாரணை கமிஷனோடு, பூங்கோதை விவகாரத்தையும் இணைத்து விசாரிக்கலாமா என்பது பற்றி யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

16-07-2008: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. உபாத்யாயா நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை நிர்வாகப் பிரிவின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழக அரசின் தலைமைச் செயலாளரான திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசிக் கொண்ட பேச்சு பத்திரிகைகளில் வெளிவந்தது. அவர்கள் இருவரின் பேச்சு அடங்கிய டேப்பும் வெளியாகி பரபரப்பை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து உபாத்யாயாவுடன் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேசிய பேச்சும் வெளிவந்தது. இவர்கள் இருவரின் பேச்சு அடங்கிய சிடியை ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு தமிழக அரசை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர் பூங்கோதை பதவி விலகினார். உபாத்யாயா மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையத்தை முதல்வர் கருணாநிதி அமைத்தார். தொலைபேசி உரையாடல்கள் வெளியானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரும் விசாரித்தனர். விசாரணையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த சங்கர் என்ற அதிகாரிதான் உபாத்யாயா பதிவு செய்து வைத்திருந்த உரையாடலை பென் டிரைவ் மூலம் பதிவு செய்து வெளியிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்றிரவு (16-07-2008) சங்கர் கைது செய்யப்பட்டார். தொலைபேசி உரையாடலை கைமாற்றித் தர அவர் எதுவும் பணம் பெற்றாரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. உபாத்யாயா நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்திருந்தார். தொலைபேசி உரையாடல்களை அனுமதியின்றி பதிவு செய்தது, அதை அஜாக்கிரதையாக வைத்திருந்தது போன்ற செயல்களுக்காக அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபடியும் தொலைபேசியில் பூங்கோதை: தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் நீரா ராடியாவும் பேசிய உரையாடல் அண்மையில் வெளியானது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய இணையமைச்சர் பதவியை ஏற்காமல்  தவறிழைத்து விட்டதாகவும் அழகிரியுடன் கனிமொழி நட்புடன் இருக்க வேண்டியது முக்கியம் எனவும் ராடியா பேசுகிறார். “அரசியலில் யாரும் எதிரியில்லை; நண்பனுமில்லை” என்றும் அவர் கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். .உரையாடலைக் கேட்க…

ஹை, நான் தான் நீரா

ஹலோ எப்படி இருக்கிறீர்கள்

நான் நன்றாக உள்ளேன்

யா

என்ன நடந்தது

நான் குதிரையைத் தான் தண்ணீர் பக்கத்தில் அழைத்துச் செல்லமுடியும், அதை குடிக்கச் செய்ய முடியாது. சரி

கனியிடம் நான் ஏற்கெனெவே சொல்லிவிட்டேன், அவர்தான் இதையெல்லாம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அவர்தாம் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறாரே!

அவர் தவறை செய்யமுடியாது

என்ன செய்வது.

தில்லிக்கு வரும்போது பேசவேண்டும்

ஆமாம், இன்று தில்லிக்கு வருகிறார் என்று நினைக்கிறேன்

அவர் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன்

திங்கள் கிழமை தில்லிக்கு வரும் போது பேசுகிறேன்

அழகிரியை சந்திக்க வேண்டும்

அவர் குறைவாக மதிப்பிடுகிறீர்கள்

கனியடம் நட்புடன் இருக்க வேண்டு என்று சொல்லுங்கள்

வேதபிரகாஷ்

© 14-12-2010