Posts Tagged ‘தனிமனித உரிமை’

என்னுடைய தனிமையில் நுழைய உரிமையில்லை: ரத்தன் டாடா வழக்கு!

நவம்பர் 30, 2010

என்னுடைய தனிமையில் நுழைய உரிமையில்லை: ரத்தன் டாடா வழக்கு!

தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம்: தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம் இவற்றில் நுழைய மற்றவர்களுக்கு எந்த அளவில் உரிமையுள்ளது என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். டாட்டாவின் வழக்கறிஞர் மணிக் கரஞ்சவாலா, ரத்தன் டாடா இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் பிரிவு 32ன் கீழ் பெட்டிஷன் போட்டுள்ளதாக உறுதிசெய்தார். இந்திய வருமானத்துறையினரால், பதிவு செய்யப்பட்ட, இந்த டேப்புகள் எவ்வாறு கசிந்து வெளிவந்தன, அவ்வாறு செய்தவர்கள் யாரென கண்டறிந்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்[1]. நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசிய உரையாடல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்[2].

அரசின் பாதுகாப்பில் பத்திரமாக சீல் வைக்கப்பட்ட டேப்புகள் எப்படி வெளியில் வந்தன? இந்த டேப்புகளிலுள்ள விவரங்கள் வெளியில் கசிந்தததால் தனிமனிதனுடைய வாழ்வுரிமை மற்றும் தனிமை முதலியவை பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார். உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஏற்கெனவே, இட்டேப்புகள் முத்திரை பதித்து, மூடியுள்ள கவர்களில் இருக்கும்போது, எப்படி வெளியே வந்தன என்று, சி.பி.ஐ.யைக் கேட்டிருந்தனர்.

அரசாங்கம் பதில் சொல்லவேண்டும்: இந்திய அரசாங்கம், மத்திய உள்துறை காரியதரிசி, சி.பி.ஐ., இந்திய வருமானத்துறை, டெலிகாம் துறை, தகவல் மற்றும் தொழிற்நுட்பத் துறை முதலியவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹரிஸ் சால்வே என்ற பிரபல வழக்கறிஞர், இவருக்காக வாதிடுகிறார். அரசு ஒவ்வொரு தனிமனிதனுடைய தனிப்பட்ட விஷயங்களை காப்பாற்ற வேண்டியது அதன் கடமையாகும். டேப்புகளில், குறிப்பிட்ட பகுதிகள் வெளியாகியுள்ளது, ஏதோ ஒரு அரசியல் பரபரப்பை, ஊடக கிலுகிலுப்பை ஏற்படுத்த செய்த காரியம் மாதிரி தோன்றுகிறது[3].

மாறன் டாடாவை மிரட்டினார் என்று முன்பே செய்திகள் வந்தனவே, அப்பொழுது என்னவாயிற்று? வீட்டுக்கு வீடு நேரிடையாக ஒளிபரப்பு என்ற முறையில், டாடா ஸ்கை நுழைந்தபோது, தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார், ஆனால், டாடா பணியவில்லை[4]. தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறம் மூன்றில் ஒன்று பங்கு பங்குகளை தமக்கு அளிக்குமாறும், இல்லையென்றால், டாடாவின் டி.டி.எச்.ற்கு அனுமதி மறுக்கப்படும் மிரட்டினார் என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. இதுவும் தனிப்பட்ட விஷயம்தானே? இதெப்படி, அப்பொழுது ஊடகங்களில் வெளிவந்தது? அப்பொழுது டாடா ஏன் தனது தனிமனித சுதந்திரம் முதலியவற்றை மறந்து விட்டார்?

நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு[6]: நிரா ராடியாவுடன் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், டெலிபோனில் பேசிய விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் உளவுப் புலனாய்வுப் பிரிவு மற்றும்  நேரடி  வரிவிதிப்புத் துறை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது[7].

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இப்படி கூட்டுக்கொள்ளை அடிப்பது பொது மக்களின் சுதந்திரத்தை பாதிக்கின்றதே? மக்கள்: எங்கு சென்று முறையீடு செய்வது? இவர்கள் கொழுத்து நன்றகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு கிலோ காய்கறி ரூ.40/- / 50/- என்று விற்றால் கவலையா? ஆனால், ஒரு ரூபாயில் / 0.40/- இந்தியா முழுவதும் பேச ஏற்பாடு செய்து கொடுத்தோம் என்றெல்லாம் பேசுவர். ஆனால், ரூ.1,76,000 கோடிகளை மக்கள் திரும்பப் பெறுவது எப்படி?

வேதபிரகாஷ்

© 29-11-2010


[4] The New Indian Express published an exclusive report alleging that the Union Minister for IT & Communications – Dayanidhi Maran has pressurised Ratan Tata of Tata Group of Companies into selling 33% of Tata-Star DTH project to Sun TV group at a price significantly lower than the market rate. The newspaper alleged that the Union Minister for IT & Communications threatened Tata that the clearance for the latter’s telecom projects would be at stake if the shares were not divested to Sun TV group in which the Minister happens to be a promoter and whose Chief Executive Kalanidhi Maran happens to be the Minister’s own brother. The New Indian Express raised series of questions to Tata on this issue, who declined to comment.

[6] தினமலர், நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு, பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010,23:47 IST; மாற்றம் செய்த நாள் : நவம்பர் 30,2010,00:00 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=136452