Posts Tagged ‘ஜாபர் அலி’

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (2)?

திசெம்பர் 11, 2010

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (2)?

11-12-2010 (சனிக்கிழமை): தொலை தொடர்பு முறைகேட்டில் சிக்கி தனது பதவியை இழந்த மத்திய அமைச்சர் ராஜா தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சி.பி.ஐ., ரெய்டுக்கு பின்னர் நடந்த முதல் சந்திப்ப்பு 40 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்தது. வெளியில் ஊடகக்காரர்கல் சூழ்ந்து கொண்டு, கேள்விகள் கேட்டதற்கு, “சி.பி,ஐ. ரெய்ட் நடப்பதெல்லாம் சகஜமான விஷயம்தான். முறைப்படி செய்கிறார்கள், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளேன்”, என்று கூறி வண்டியில் ஏறி சென்றுவிட்டார்.

லட்சம் கோடி முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்[1]:முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் டில்லி, பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகள், தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் பெர்சனல் டைரியையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் கடிதமும் கிடைத்தது[2]: மேலும் சிபிஐ சோதனையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற நடைமுறையை நிறுத்தி வைக்குமாறும், ஏல முறையை கடைப்பிடிக்குமாறும் கூறி ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய ஒரிஜினல் கடிதமும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சி.பி.., வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக, ராஜாவால் தமிழில் எழுதப்பட்ட அவரது பெர்சனல் டைரிகளும் கைப்பற்றப்பட்டன. இவை, 2003லிருந்து 2010 வரையிலான காலங்களில் எழுதப்பட்டவை. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த விவரங்கள், இந்த டைரிகளில் இடம் பெற்று உள்ளன. இதில், அரசு வக்கீல்கள் இருவர் பற்றியும், டில்லி மற்றும் சென்னையில் உள்ள ஹவாலா டீலர்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள், முன்னாள் அமைச்சரின் சார்பில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் நேற்று முன்தினம் நடந்த சோதனையில், ராஜாவுக்கு நெருக்கமான சாதிக்பாட்சா, ஏழு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் தலைமையில் செயல்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம், குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை கையாண்டதால், ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபின் தான் தகவல் தெரியவரும்.

இதுகுறித்து சி.பி.., அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி, சென்னை, காஜியாபாத்தில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எந்த வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்தும், ராஜாவிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்தும் தற்போது தெரிவிக்க முடியாது. சோதனையின் போது, சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.

10-12-2010 (வெள்ளிக்கிழமை): மொபைல் கம்பெனிகள் அயல்நாடுகளில் மேற்கொண்ட பணப்போக்கு வரத்து விவகாரங்களை 2-ஜி ஸ்பெட்ரம் ஊழல் தொடர்பாக ஆராயச் ஆரம்பித்து விட்டது. அமுலாக்கப் பிரிவு அமீரகம், இங்கிலாந்து, நார்வே, லிபியா, சிங்கப்பூர், ஐஸல் ஆஃப் மேன், மொரிஸியஸ், ருஷ்யா, சைப்ரஸ் முதலிய நாடுகளைக் கேட்டுள்ளது. குறிப்பாக கீழ்கண்ட கம்பெனிகளின் விவரங்களைக் கேட்டுள்ளது:

  • ஸ்வான் இப்பொழுது எடிசலத் டிபி [Etisalat DB], அமீரகம்,
  • எடிசலத் மொரிஸியஸ், Etisalat Mauritius,
  • மவி இன்வெஸ்ட்மென்ட், மொரிஸியஸ், – Mavi Investment Fund
  • டெல்ஃபி, மொரிஸியஸ்,
  • சிஸ்டிமா ஸ்யாம், ருஷ்யா [Sistema Shyam],
  • சிஸ்டிமா JSFC, ருஷ்யா Sistema JSFC
  • யுனிடெக் [Unitech],
  • யுனிடெக்- பர்லெய் ஹோல்டிங்ஸ், [Burley Holdings மொரிஸியஸ்,
  • யுனிடெக் – ஃபாஸ்ட் நெட் ஹோல்டிங்ஸ், Fastnet Holdings, மொரிஸியஸ்
  • டெலிநார், நார்வே
  • எஸ் டெல் [S Tel], மொரிஸியஸ்,
  • பாடில்கோ மில்லினியம் இந்தியா கம்பெனி, மொரிஸியஸ், [Batelco Millennium India Co]
  • டெலிகம் இன்வெஸ்ட்மென்ட், மொரிஸியஸ், Telecom Investments
  • பாடில்கோ, அஹ்ரைன், [Bahrain’s Batelco]
  • ஐடியா செல்லுலார் [Idea Cellular], சைப்ரஸ்
  • எம்பிகாம் கார்பரேஷன், பிரிடிஷ் வர்ஜின் தீவுகளில்பதிவு செய்யப்பட்டது – Empecom Corporation incorporated in British Virgin Islands,
  • யுனிடெக் குளோபல், நியூ ஜெர்ஸி – Unitech Global of Jersey,
  • யுனிடெக் குளோபல், ஐஸல் ஆஃப் மேன், three companies registered in Isle of Man,
  • யுனிடெக் குளோபல், two in Singapore, and
  • யுனிடெக் குளோபல், subsidiary in Dubai,
  • யுனிடெக் குளோபல், subsidiary in Libya

09-12-2010 (வியாழக்கிழமை): குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை: முதல்வர்[3]: சென்னையில் பத்திரிக்கைக்காரர்களுடன் ஏசும் போது, “”ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது பேட்டி:

இன்றைய தினம் நாடு முழுக்க, டில்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில், ராஜாவின் வீடுகளில், சி.பி.ஐ., சோதனை நடைபெற்றுள்ளதே? சி.பி.ஐ., சோதனைகள் நடைபெறுவது ஒன்றும், பெரிதாகப் பேசப்படும் விஷயம் இல்லையே!
சி.பி.ஐ., சோதனை நடைபெற்றதை அவமானகரமான ஒன்றாக கருதுகிறீர்களா? அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டில் இருக்கின்றனர்.
ராஜா கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவார் என சொல்லப்படுகிறதே?

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என தி.மு.க., நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் நாங்கள் ராஜாவை கைவிடத் தயாராக இல்லை.
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், காங்கிரஸ் கட்சியை நீங்கள், பிளாக் மெயில் செய்வதாக சொல்லியிருக்கிறாரே? பிளாக் மெயில் செய்யும் கலை எல்லாம், ஜெயலலிதாவுக்குத்தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.

 

ஜெயலலிதா அறிக்கையில், சி.பி.ஐ., விசாரணையை விரிவாக்கி, அது பற்றி தோண்டினால், மேலும் விவரம் கிடைக்கும் என சொல்லியிருக்கிறாரே? அந்த அம்மையாரிடம் கூட சி.பி.ஐ., விசாரித்தால், எவ்வளவோ கிடைக்கும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது.

 

பார்லிமென்ட் உறுப்பினர்களின் கூட்டுக் குழு வேண்டும் என்பதைப் பற்றி? அதைப்பற்றி இன்றைய தினம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பா.ஜ., ஆட்சி காலத்திலிருந்தே, ஸ்பெக்ட்ரம் பிரச்னையைப் பற்றி, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சொல்லியிருக்கின்றனர். அதற்கு கூட்டுக் குழு வேண்டுமென்று கோரும் பார்லிமென்ட் உறுப்பினர்களின் பதில் என்ன? பத்திரிகையாளர்களாகிய உங்கள் பதில் என்ன?
நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக அதற்கு தயாராக இருக்கிறீர்களா?

என்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கியதோ, அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில், அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சென்னை ஐகோர்ட்டில் ஒரு நீதிபதியுடன் ராஜா பேச முனைந்ததாக ஒரு வழக்கில் கூறப்பட்டதைப் பற்றி? அவர் மீதான அந்த குற்றச்சாட்டை, ராஜாவே மறுத்திருக்கிறார். அவ்வளவு தான் எனக்கு தெரியும்.

08-12-2010 (புதன் கிழமை): 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பெரம்பலூர் சத்திரைமனைவேலூரில் உள்ள ராசாவின் வீடு, பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா கமலாவின் வீடு, லாடபுரத்தில் உள்ள ராசாவுடைய மாமியாரின் வீடு, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் ராசாவின் அப்பா பெயரில் இயங்கும் ஆண்டிமுத்துசின்னபிள்ளை அறக்கட்டளை அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று காலையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை முடிந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் சாதிக் வீட்டில் சி.பி.ஐ தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவன உரிமையாளர் ஆவா‌ர். இவரை ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள் ‌விசாரணை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌ள்ளன‌ர். மேலு‌ம் வன்னிய தேனாம்பேட்டையில் உ‌ள்ள ஆ.ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. பின்னர் பெரம்பலூரில் ஒரு வங்கிக்குச் சென்ற அதிகாரிகள் சில தகவல்களைக் கேட்டறிந்தனர்[4].

பூட்டியிருந்த அண்ணன் வீடு: ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன். சென்னை அண்ணா பல்கலையில் பருவ நிலை மாற்ற ஆய்வுத் துறை இயக்குனராக உள்ளார். இவரது வீடு திருச்சி திருவானைக்கோவில் சிவராமன் நகரில் உள்ளது. சென்னையில் பணி புரிவதால், வீடு பூட்டப்பட்டு வாட்ச்மேன் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.நேற்று காலையில் டாடா சுமோ விக்டா காரில் இரண்டு பேர் வந்தனர். வீடு பூட்டியிருந்ததால், உள்ளே சென்று சோதனையிட முடியவில்லை. 20 நிமிடத்துக்கும் மேலாக, வீட்டிலிருந்த வாட்ச்மேனிடம் விசாரித்த பின், காலை 9 மணிக்கு புறப்பட்டனர்.

கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்: இக்கம்பெனி ஆரம்பித்த பொழுது, கீழ்கண்டவர்கள் இயக்குனர்களாக இருந்தனர்:

  1. ஏ. எம். சாதிக் பாட்சா, மேனேஜிங் டைரக்டர்
  2. ஆர். பி. பரமேஷ் குமார், ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் (ராஜாவின் மைத்துனர்)
  3. ஏ. எம். ஜமால் முஹம்மது
  4. டேவிட் கார்த்திகேயன்
  5. ஆர். ராம்கணேஷ் (ராஜாவின் மைத்துனர்)
  6. ஏ. பரமேஸ்வரி (ராஜாவின் மனைவி)
  7. எஸ். ரேஹா பானு

பிறகு, சட்டப்படி பிரச்சினை வரும் என்பதால், பரமேஸ்வரி விலகிக்கொண்டார்.

சாதிக் பாட்சாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது: செ‌ன்னை தேனா‌ம்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான சாதிக் பாட்சா வீட்டிலும் சி.பி.ஐ அதிரடி சோதனை மேற்கொள்கிறது. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவன உரிமையாளர் ஆவா‌ர். 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவரை ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள் ‌விசாரணை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌ள்ளன‌ர். பிறகு பாட்சாவின் தம்பி ஜாபர் அலியை அழைத்துச்சென்று, பாஷாவின் அலுவலகத்தில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பாட்சாவின் வீட்டில் அதிகாரிகள் 8 மணி முதல் 11.30 வரை சோதனை நடத்தினர். பிறகு பாட்சாவை அதிகாரிகள் அழைத்துச் சென்று ராஜாஜி பவனில் விசாரித்தனர். பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சாதிக் பாட்சா, தற்போது குடியிருக்கும் வீடு, நடிகர் சிவாஜி குடும்பத்திற்கு சொந்தமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டில் சாதிக் பாட்சா குடியேறினார். இந்த வீட்டிற்கு வாடகை, மாதம், 80 ஆயிரம் ரூபாய்.சாதிக் பாட்சாவும், கலியபெருமாளும் சேர்ந்து, சில லட்சங்கள் முதலீட்டில் துவங்கிய, “கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்’ தற்போது, 700 கோடி ரூபாய் லாபம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பணம் இதில், முதலீடு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்கின்றனர். மேலு‌ம் வன்னிய தேனாம்பேட்டையில் உ‌ள்ள ஆ.ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

வேதபிரகாஷ்

© 11-12-2010


[1] தினமலர், லட்சம் கோடி முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2010,23:03 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 09,2010,23:11 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142635

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)?

திசெம்பர் 8, 2010

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா?

ஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா? இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும்? ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான்! அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?

பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே! இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.

காலங்கடந்த நடவடிக்கை ஏன்? உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள்    மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.

சி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும்? இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.

தேர்தல் பேரத்திற்கு ஒத்திகையா? வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல்  பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம்  தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.

சோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா? கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா? இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா? அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே? நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.

காங்கிரஸ்-திமுக ஊடலா, ஊழலா? இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்!

வேதபிரகாஷ

09-12-2010