Posts Tagged ‘சாதிக் பாட்சா’

தலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்!

திசெம்பர் 15, 2010

தலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்!

தலித் தலித்துகளை அடிப்பது, நொறுக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது: தலித்துகள் தலித்துகளையே வித்தியாசமாக பாவிப்பது, தங்களுக்குள் நடந்து கொள்வது, அடக்கியாள்வது, முதலியவற்றைப் பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்[1]. சமூக ரீதியில் அது புதிராக இருக்கலாம், ஆனால், அரசியலில் சஜமாக, பணம்-பதவி வந்தால் அந்த தலித்தே “உயர்-ஜாதிக்காரன்” போல நடந்துகொள்வதை மற்ற தலித்துகள் நன்றாகவே பார்த்ததுள்ளனர், உணர்ந்துள்ளனர், அனுபவித்துள்ளனர்.

தலித் என்பதனால் ராஜா தாக்கப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார்: ராஜா ஒரு “தலித்” அதாவது எஸ்.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால்தான், மற்ற சாதியினர் அவர்மீது ஊழல், மோசடி, நீதிபதியை மிரட்டுதல் என்று தாக்குதல் நடத்துகின்றனர் என்று கருணாநிதி, வீரமணி மற்ற திமுகவினர், அபிமானிகள் வக்காலத்து வாங்கி பேசினர், கூட்டம் போட்டனர்[2], பிரச்சாரம் செய்தனர். ஒருவேளை அந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கோ அல்லது கூட்டம் நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்தார்களோ அந்த ஆண்டவனுக்கு, இல்லை, பெரியாரின் ஆவிக்குத்தான்[3] தெரியும்!

விவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார்! ஆனால், இப்பொழுது ஏழைகள், விவசாயிகள், ஏன் தலித்துகளாக இருப்பவர்களே தமது நிலங்களை மிரட்டி குறைவான விலைக்கு வாங்கி விட்டு, அதை எம், ஆர், எஃப் போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு கோடிகளுக்கு விற்றுவிட்டனர். கேட்டால் எங்களை ராஜா மற்றும் சாதிபாட்சாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்[4] என்று புகார் எழுந்துள்ளது. கோவிந்த ராஜு என்பவர் இவ்வாறு கூறுவதை டைம்ஸ்-நௌ தொலைக்காட்சி காட்டியது, செய்தியாகவும் வெளியிட்டுள்ளது[5].

“விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள்! அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! அதாவது, இன்னும் கொஞ்சம் அணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடுவர் என்று பொறுளாகும்.

கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் – ராஜாவின் சம்பந்தங்கள்: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது[7]. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 17 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.

எஸ்.சி / எஸ்.டஇ சட்டமே மிரட்டுவதற்கு உபயோகப்படுவது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். அதாவது எஸ்.சி/.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மிரட்டியதுதான் வேடிக்கை, ஆனால், உண்மை. பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.

எம்.ஆர்.எப் நிலைத்தை வாங்குவது: கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்த நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.

அரசு நடவடிக்கை எடுப்பது, விசாரணை செய்வது – வழக்கம் போல[8]: இந்த சர்ச்சை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். போலீஸ் தரப்பில், மஹேந்திர ராத்தோர் “இது வரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை”, என்று கூறுகிறார். இதற்குள் இதை விசாரிக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது[9]. அரசு நடவடிக்கை எடுப்பது என்பது ஊழலை மறைக்கத்தான் என்பது தெரிந்த விஷயமே[10]. இதைப் போலத்தான் சோனியாவும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது[11]. எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும்[12], நாளைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை, அதுதான் இது என்று மெய்பிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார்கள். சோனியா குரோச்சியைக் காக்கமுடியும் என்றால், கருணாநிதியால் ராஜாவைக் காக்க முடியாதா?

வேதபிரகாஷ்

© 15-12-2010


[1] வேதபிரகாஷ், தலித் – சித்தாந்தம், பிரச்சினை, அரசியல், http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

Vedaprakash, Dalit – Precept, Problem and Politics, Published in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114.

http://vedaprakash.indiainteracts.in/2007/09/06/dalit-%E2%80%93-precept-problem-and-politics/

[2] விடுதலை நாளிதழில் பார்க்கவும். கடந்த மாதம், தி.நகரில் கூட கூட்டம் போட்டார்கள்.

[3] கருணாநிதி ஒரு தடவை கேள்வி கேட்டபோது, பெரியார் ஆவிக்குத்தான் தெரியும், கேட்டுப் பாருங்கள் என்றார்!

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)?

திசெம்பர் 8, 2010

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா?

ஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா? இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும்? ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான்! அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?

பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே! இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.

காலங்கடந்த நடவடிக்கை ஏன்? உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள்    மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.

சி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும்? இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.

தேர்தல் பேரத்திற்கு ஒத்திகையா? வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல்  பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம்  தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.

சோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா? கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா? இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா? அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே? நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.

காங்கிரஸ்-திமுக ஊடலா, ஊழலா? இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்!

வேதபிரகாஷ

09-12-2010