Posts Tagged ‘கோடி’

ஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன?

ஜனவரி 15, 2014

ஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன?

கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்

கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்

அதிரடி ஆம்ஆத்மிகட்சியும், பிரபலங்களும்: ஆம் ஆத்மி கட்சி ஏதோ கொள்கை, ஊழல்-எதிப்பு, தூய்மை, நியாயம், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைத்துள்ளது. அதனால், திடீரென்று ஏகபட்ட மௌசும் கூடியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக ஊடகங்களில் தினமும் ஏகப்பட்ட தயாரிக்கப் பட்ட, திரிக்கப் பட்ட கிசுகிசுக்கள், யூகங்கள் எல்லாம் ஏதோ “செய்திகள்” நாளிதழ்கள் தாராளமாக “செய்திகள்” போல வெளியிட்டு வருகின்றன. நடிகர்-நடிகைகள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் கட்சியில் சேரப்போகிறார்கள், சேர்ந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். விஷால் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[1]; நமீதா சேரப் போகிறார்[2], சேர்ந்து விட்டார்; விஜய் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[3]; இப்படி வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன.

TN AAP complaints, fraudulent accusations

TN AAP complaints, fraudulent accusations

தொடங்கிய சில நாட்களிலேயே கோஷ்டி சண்டை: டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 30,000 பேர் சேர்ந்து விட்டனர், 42,000 சேர்ந்து விட்டனர்[4], என்று அதிரடியாக செய்திகள். இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் 07-01-2014 அன்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.  தொடங்கிய சில நாட்களிலேயே இப்படி திராவிடக் கட்சிகளை மிஞ்சும் வகையில் கோஷ்டி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது போலும்!

TN AAP complaints, fraudulent accusations- expelled members

TN AAP complaints, fraudulent accusations- expelled members

போட்டி பேட்டிகள் ஆரம்பித்து புகார்களில் முடிந்த கதை: இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது[5]: “இன்று காலை பத்திரிகையில்எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்”, இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார். கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].

இரண்டு  அறக்கட்டளைகளுக்கு  கிறிஸ்டினா  நிதி  திரட்டினார்: அக்கட்சிக் காரர்கள் திடீரென்று ஒருவர் மீது ஒருவர் மோசடி புகார் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இரண்டு அணியினர் செயல்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அக்கட்சியில் ஒரு தரப்பினர் மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார்[7]. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடம் கிறிஸ்டினா நன்கொடை கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[8].  புகார்கள் குறித்து கேள்வி எழுப்புவர்களை கட்சியில் இருந்து கிறிஸ்டினா நீக்கி விடுவதாகவும் நிர்வாகிகள் கூறினார். கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து  சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வலியுறுத்தினர்.  வருகின்றனர்[9].

TN AAP complaints, fraudulent accusations.galore

TN AAP complaints, fraudulent accusations.galore

பதிலுக்கு கிறிஸ்டீனா சாமி புகார்: இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்[10]. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்[11]. எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது. அமைந்தகரை பகுதியில் அலுவலம் திறக்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் கீழ்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி.  இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாராயணன் உட்பட பலர், அமைந்தகரையில் முன்பு செயல்பட்ட அலுவலகத்தை மீண்டும் திறந்து, ஆம் ஆத்மி கட்சி என்று கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்[12]. இதற்காக பணமும் வசூலிக்கின்றனர். போஸ்டர்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றனர். தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை. அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர்[13]. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்[14]. எங்களது புகார் குறித்து விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார், இவ்வாறு அவர் கூறினார்[15].

பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்: கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, பெயர் தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர் என்றால் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி போன்ற கட்சிகள் சுவரொட்ர்டிகள் கூட ஒட்டுவதற்கு பணம் இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அந்நிலையில் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கில் நிதியை அளிப்பர் என்று தெரியவில்லை. அவர்களது பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்:

  1. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் [அந்த அளவிற்க்ய் டெக்னிகலாக வசூல் செய்கின்றனரா?].
  2. மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம் [அதாவது வசூலித்தது வரை விட்டுவிடுவோம் என்கின்றனர் போலும்].
  3. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார் [யார் இந்த கிறிஸ்டினா சாமி, எப்படி உடனடியாக  இரண்டு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி இருக்க முடியும், எப்படி பணம் வந்திருக்க முடியும் என்றெல்லாம் மர்மமாக இருக்கின்றன].
  4. கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து  சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் [அந்த அளவிற்கு கோடிகளைக் கொட்டியவர்கள் யார்?].
  5. அவர்கள் (நாராயணன் முதலியோர்) போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர் [கிறிஸ்டினா சாமி, இப்படி சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.].

வேதபிரகாஷ்

© 13-01-2014


[6] மாலைமலர், சென்னையில் தொடங்கிய தமிழக ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2:11 PM IST.

[8] தினகரன், கட்சி நிர்வாகிகள்புகாரால்ஆம்ஆத்மியிலும்கோஷ்டிபூசல்வெடித்தது?, மாற்றம் செய்த நேரம்:1/11/2014 5:08:01 PM

[9] தினத்தந்தி, ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : Jan 13 | 09:56 pm

[11] தினகரன், ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார், 14-01-2014

[15] மாலை மலர், ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 15, 8:49 AM IST.

ஊழலை மறந்த அம்மா, ஊழலை மறைத்த மகன், ஊழல் புகாரில் சிக்கிய மைத்துனர், எல்லாவற்றையும் மறுக்கும் ஊடக நாடகங்கள்!

ஒக்ரோபர் 3, 2013

ஊழலை மறந்த அம்மா, ஊழலை மறைத்த மகன், ஊழல் புகாரில் சிக்கிய மைத்துனர், எல்லாவற்றையும் மறுக்கும் ஊடக நாடகங்கள்!

சோனியாவின் நாடகம் ஊடகங்கள் ஒத்தூத, கூட்டணி கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்க மறுபடியும் அரங்கேறியது!

“ஏய், என்னது, முட்டாள்தனமான சட்டம், பிரதமருக்கு என்ன மூளையில்லையா?”, என்பதுபோல, ராகுல் சொல்லிவிட்டதாக ஊடகங்கள் கூத்தடிக்கின்றன.

சோனியா ஆட்சியின் எல்லாவிதமான கோடி-கோடி ஊழல்களையெல்லாம் ஊடகங்கள் திடீரென்று மறந்து விட்டன போலும்!

2ஜி, காமன்வெல்த், நிலக்கரி……………………………என்று கோடி-கோடி-கோடி…………………..ஊழல்கள் தொடர்ந்தன, தொடர்கின்றன……………..

சம்பந்தப்பட்ட கோப்புகள், பைல்கள், ஆவணங்கள் மறைந்து போகின்றன!

அம்மா சட்டம் எடுத்து வந்தாராம், மகன் அதனை எதிர்த்தானாம், உடனே வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டனராம்!

போதாகுறைக்கு, பிரதம-மந்திரிக்கு வேறு, ஏதோ இழுக்கு ஏற்பட்டுவிட்டது போன்ற புலம்பல் வேறு!

இப்பொழுதுள்ள மன்மோஹனுக்கு என்றாவது சூடு-சொரணை, ரோசம்-மானம், சுயமரியாதை  இவையெல்லாம் இருந்தனவா இல்லையா என்று தெரியவில்லை.

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரதம மந்திரியாக இருந்த பெருமையைப் பெற்றுள்ளார், பத்து ஆண்டுகளையும் கழித்து விடுவார்.

ஆனால், சோனியாவின் கைப்பாவையாகத்தான் இருந்து வந்துள்ளார். மெட்த்தப் ப்பட்டித்த வல்லுனராக, அறிவாளியாக இருந்தாலும் அவர் அப்படி ஏன் இருந்தார் என்பது  அவருக்குத்தான் தெரியும்.

கிரிமினல் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களை (இப்பொழுதைய / முந்தைய மந்திரிகள், முதலமைச்சர்கள் என்றும் படிக்கலாம்) காப்பாற்ற மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றவாளிகள் என தண்டனை பெற்றால் அந்த எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் தகுதி இழப்பதுடன் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கடுமையான திர்ப்பு சுப்ரீம் கோர்ட் கொண்டு வந்தது.

இந்த தீர்ப்பை நீர்த்து போக செய்வதற்காக எம்.பி. – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற மத்திய அமைச்சரவை திருத்தங்களுடன் கூடிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மனுவை கோர்ட் ஏற்கவில்லை.

இதனையடுத்து காங்.கிரஸ் அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை சற்று தள்ளி வைத்தார்.

இந்நிலையில் இந்த அவசர சட்டம் தேவையற்றது, இந்த விஷயத்தில் மத்திய அரசு செய்த அனைத்து செயல்பாடுகளும் தவறானவை, இது முட்டாள் தனமானது, இந்த அவசர சட்டத்தை கிழித்து வீசி எறியப்பட வேண்டும் என ராகுல் பிரஸ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கடுமையாக சாடினார்.

பிரதம மந்திரிக்கு எதிராக இக்கருத்து இருந்தது. ராகுலின் இந்த பேச்சை கையிலெடுத்த எதிர்கட்சிகள் சுய மரியாதை இருக்கும் பட்சத்தில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறின.

இதற்கிடையில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொள்ளவில்லை.

ராஜ்காட்டில் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன், சோனியா, அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சோனியாவும், மன்மோஹனும் சற்று விலகியபடியே உட்கார்ந்து இருந்தது வேடிக்கையாக இருந்தது.

வேதபிரகாஷ்

© 03-10-2013

சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!

ஏப்ரல் 5, 2011

சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!

கோடிகளில் பணம் – முன்னேறும் தமிழகம்! தமிழகத்தில், லட்சக்கணக்காக ருபாய் நோட்டுக் கட்டுகள் பிபடுவது போய், இப்பொழுது, கோடிகளில் பிடிக்கப்படுவது ஆச்சரியமே! இந்த விஷயத்தில் தமிழகம் முன்னேறிவிட்டது எனலாம். கே.என். நேருவின் நண்பருக்கு / உறவினருக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து, ரூ. 5.11 கோடி ரூபாய் திருச்சியில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவர் அதை – அதாவது அந்த பணம் தமது உறவினர்களுடையது என்று, சில ஊடகங்களில் வெளிவந்துள்ளதை – மறுத்துள்ளார்[1]. இதற்குள் வருமான வரித்துறையினர் உதயகுமார் என்ற அந்த நபரின் இல்லத்திலும் சோதனை நடத்தினர்[2]. இப்படி கட்டுக்கட்டா ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கில் வைத்திரிந்தால், சாதாரண மக்கள் என்ன செய்வது?

சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்: திமுக அமைச்சர் தம்பியின் நெருங்கிய நண்பருக்கு / அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார்[3] என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் இருந்து வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்யப்படுவதற்காக வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படும் ரூ.5.11 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்[4]. நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற எம்.ஜே.டி என்ற தனியார் ஆம்னி பேருந்து திருச்சி பொன்னகரில் நிறுத்தப் பட்டிருந்தது. இது கே.என்.நேருவின் உறவினர் உதயகுமரன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது[5]. நேற்று நள்ளிரவில் இந்தப் பேருந்தில் பணம் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து, திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கீதா, போலீஸார் துணையுடன் சோதனை மேற்கொண்டார்.

தகவலின் பேரில் சோதனை – பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக திருச்சி பொன்நகர் பகுதியில் ஆம்னி பஸ் ஒன்றில் பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.   அத்தகவலின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமை யிலான பறக்கும் படையினர் இன்று அதிகாலை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு ஆம்னி பஸ் ஒற்றின் மேல் பகுதியில் 5 பைகளில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த 5 பைகளிலும் மொத்தம் ரூ.5.11 கோடி மதிப்புள்ள பணக்கட்டுக்கள் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.  கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது[6]. அந்தப் பணம் முழுவதும் வங்கி ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டு வங்கி முத்திரையுடன் இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வருமான வரித்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது:. தேர்தல் அதிகாரிகள் இன்று  சோதனை மேற்கொண்ட ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. பணப் பறிமுதல் தொடர்பாக உரிமையாளர் உதயகுமார் வீட்டிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  இவர் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இன்று பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் 10 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[7]. ஆம்னி பஸ்சில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதபிரகாஷ்,

05-04-2011