Posts Tagged ‘குடியும்-கூத்தியுமாக’

லஞ்சம் வாங்கிய கோவை கலால் துணை கமிஷனர் கைது!

ஜூலை 5, 2010

லஞ்சம் வாங்கிய கோவை கலால் துணை கமிஷனர் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33385

குடி குடியைக் கெடுக்கும்: இப்படியெல்லாம் அறிவுரை ஒரு பக்கம், ஆனால், குடிப்பவர்கள், குடிகாரர்கள் அதிகமாகவே உள்ளர்கள். சங்கக்காலத்திலிருந்தே உன்னிப்பாகப் பார்த்தால் தமிழர்கள் “குடியும்-கூத்தியுமாகத்”தான் இருந்துள்ளார்கள். அத்தகைய பாரம்பரியத்தை இன்று மாற்ற முடியாது.

அரசே மதுவை விற்கிறது:  போதா குறைக்கு தமிழக அரசே ஒரு கம்பெனியை வைத்துக் கொண்டு மதுவை விற்கிறது, அமோகமாக வியாபாரம் செய்து க்ஓடிகளை அள்ளுகிறது. இதில் எத்தனை “கணக்கில்” வைத்து வியாபாரம் செய்கிறார்கள், “கணக்கில்” வைக்காமல் வியாபாரம் செய்கிறார்கள் என்பதெல்லாம், இதில் ஊறிப்போனவர்களுக்குத் தான் தெரியும்.

செம்மொழி மாநாடு, மதுவும், மது விற்பனையும்: செம்மொழி மாநாட்டின்போதே, மது எல்லோருக்கும் கிடைக்க வேந்தும் என்ற ரீதியில், சரக்கை தாராளமாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய அரசே ஏற்பாடு செய்திருந்தது. ஆக குடிக்க வந்த கூட்டமும் இருக்கிறது என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த லஞ்சக்கைது வருகிறது.

“பார்’ லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: கோவை: ஓட்டல்களில், “பார்’ லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கோவை கலால் துணை கமிஷனர் மூர்த்தி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட கலால் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. கோவை மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து சாதாரண ஓட்டல்கள் வரை, 120க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் “பார்’கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இதே தொகையைச் செலுத்தி, உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பொள்ளாச்சியைச் சேர்ந்த “பார்’ உரிமையாளர் ஒருவரிடமும் உரிமம் புதுப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் மூர்த்தி கேட்டுள்ளார். இது பற்றி, கோவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மூர்த்தியின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற அந்த “பார்’ உரிமையாளர், லஞ்சப் பணத்தை மூர்த்தியிடம் கொடுத்தார். அப்போது, அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா, இன்ஸ்பெக்டர் கள் ஞானசேகர் ஆகியோர், அறைக்குள் நுழைந்து லஞ்சப் பணத்துடன் இருந்த மூர்த்தியைக் கைது செய்தனர்; நேற்றிரவு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு கருதி, புகார்தாரரின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலுள்ள மூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதுமுள்ள வருவாய்த்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

கழகங்கள் லஞ்சத்திற்கு பெயர் போனவை: கழகங்களும், கழக ஆட்சியாளர்களும் லஞ்சம் வாங்காமல். ஏதாவது செய்வார்களா என்றால் ஆச்சரியமே. லஞ்சம் அவ்வாறு அவர்களிடையே புரையோடிக் கிடக்கிறது. வேலைக்கு விண்ணப்பப் படிவம் வாங்கி, போட்டு, நுழைவுத் தேர்வு எழுதி, நேர்காணல் சென்று, பணம் கொடுத்து, வேலை வாங்கி, பிறகு வேண்டிய இடத்திற்காக பணம் கொடுத்து, பணம் எடுத்து, பட்டுவாடா செய்து………………………இப்படி செல்கிறது வாழ்க்கை. அரசியல்வாதிகள் முட்டை-மூட்டையாக அள்ளும்போது, அரசு அதிகாரிகள், ஊழியர்கள்……………..முதலியோர் அவரவர் நிலைக்கேற்ப கவர்களில் அள்ளுகின்றனர்.