Posts Tagged ‘கரை படிந்த கை’

மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்! சோனியா மெய்னோவின் பாசம்!

செப்ரெம்பர் 6, 2010

மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்! சோனியா மெய்னோவின் பாசம்!

ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்வு: மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவர் ஆளும், எதிர் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கலந்தாசிக்கும்போது, காங்கிரசின் தரப்பில் பி.ஜே. தாமஸ் என்ற கேரள அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, 1991-92 வருடத்தில் அனுமதியின்று ரூ. மூன்று கோடி பாம் ஆயில் இறக்குமதி செய்த வழக்கில் சம்பந்தப் பட்டது தெரிய வந்துள்ளது[1]. ஆகவே பீஜேபி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சோனியாவின் சாய்ஸ் என்பதனால், மன்மோஹன், எதிர்பார்த்தபடியே தாமஸை நியமனம் செய்துவிட்டார்[2].

ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது பி.ஜே. தாமஸ் தொலைதொடர்பு அமைச்சகத்தின் செயலர்: இதே பி.ஜே. தாமஸ் முன்பு தொலைதொடர்பு அமைச்சகத்தில் செயலராக இருந்துள்ளார். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, இவரது பங்கும் அதில் இருந்ததாக, தொலைதொடர்பு ஊழியர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட ஆளையே, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக்குவது, படு அசிங்கமாக – திகைப்பாக, வேதனையாக இருக்கிறது[3].

சிதம்பரம் ஆதரிக்கும் தாமஸ்: “முன்பு ஊழல் குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கலாம், ஆனால், இப்பொழுது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்[4]. ஆகவே அவரது திறமைதான் நமக்கு இப்பொழுது வேண்டும், அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்”, இப்படி வக்காலத்து வாங்குவது உள்துறை சிங்கம் சிதம்பரம் தான்! நிச்சயமாக கருணாநிதி சிதம்பரத்தின் உதவியுடன் இந்த ஊழலை மறைக்க பார்க்கிறர் என்பது நன்றகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ், இவ்வாறு செயல்படுகிறது.

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா? உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ராஜாவை இவர் எப்படி நியாயம்-தர்மம் படி விசாரிப்பார், புலன் ஆய்வு செய்வார்? ஏனெனில், அப்பொழுது, ராஜா இவரது “பாஸ்”, அலுவலக எஜமானன். ஆகவே, இது நிச்சயமாக ஊழலை மறைக்க, ஒரு ஊழல் அழுக்குப் பட்ட ஆசாமியை வைத்துக் கொண்டு மறைக்கும் நாடகமே என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன[5]. ஆகவே, விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?, என்று கேட்டால், முடியும் என்கிறது காங்கிரஸ்!


[1]The BJP’s objections are over Thomas’ alleged involvement in the palm oil import scam worth almost Rs. 3 crore in 1991-92. Thomas, Kerala’s Food and Civil Supplies secretary, had struck an import deal with a Malaysia-based private firm without mandatory clearance

 

http://www.ndtv.com/article/india/decision-to-appoint-thomas-is-to-cover-up-2g-scam-bjp-49799

[2] இப்பொழுதுகூட, இது “மேஜாரிட்டி டிஸிஷன்” என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, ஊழல் பேர்வழி எப்படி பதவிக்கு வரலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

[3] http://www.thehindu.com/news/national/article615916.ece

[4] Mohan Singh of Samajwadi Party said, “This will negate the very purpose for which CVC was instituted. Thomas may have been exonerated but we all know how acquittals happen. He has been tainted once and he will not be able to put pressure on tainted officials he is supposed to watch.”
Read more: Row over govt pick for CVC post – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Row-over-govt-pick-for-CVC-post/articleshow/6503526.cms#ixzz0yi5neQG3

[5] Vijay wondered as to how Thomas could be expected to make a fair inquiry into the spectrum case — which he insisted could one day land before the CVC — since the main accused, Telecom Minister A Raja, happened to be his one-time boss.

http://www.indianexpress.com/news/new-cvc-bjp-says-attempt-to-cover-up-spectrum-cwg-row/677718/2

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

மே 26, 2010

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

எந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது!

மன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி! சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே! பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்! அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது! இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்! ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன? இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது! இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்! பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது! ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா? இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

பிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்?

இக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்று பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.