Posts Tagged ‘கடத்தல்’

சிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ?

ஏப்ரல் 11, 2016

சிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ?

Ashok Raja, the Sperintendent of Central Excise, who was caught by the CBI officers on April 8, 2016 night around 8 pm at Madurai.சேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் தாக்குதல் - அசோக் ராஜ் வீடு பாதுகாப்புதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.

CBI attacked in Madurai - Ashok Rajசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன்  இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

CBI attacked in Madurai - Ashok Raj house - 10_04_2016_112_025அதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்?: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உடனே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்தனர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.

CBI, Central Excise, tax cut, corruptionதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].

9 booked for attack on CBI sleuths The Hindu 10 April 2016சிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் என்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது, திருட்டு, மிரட்டுதல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].

© வேதபிரகாஷ்

11-04-2016

[1] http://www.koodal.com/news/tamilnadu.asp?id=74304&title=cbi-officers-attacked-in-madurai-tamilnadu-news-headlines-in-tamil

[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/gang-attack-on-cbi-officers-in-madurai-116040900011_1.html

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/09102715/1003971/mystery-

[5] The Hindu, Gang attacks CBI officials, frees ‘detained’ excise superintendent, Madurai, April.9, 2016, Updated: April 9, 2016 05:44 IST.

[6] In a filmi style, an armed gang attacked a team of CBI officials and rescued a Central Excise official who was reportedly trapped in a bribery charge at the Customs office in Madurai on Friday night. The CBI sleuths, including Inspector Murugan, sustained bleeding injuries. The incident is said to have happened at around 8 p.m. at the office of the Commissioner of Customs Central Excise and Service Tax located at Bibikulam. According to police sources, the team of five CBI officials trapped the Superintendent at around 5 p.m. Even as the central investigating officials were recording the statements an armed gang barged into the office and started attacking the officials. The gang also destroyed some of the papers and whisked away the excise official. The injured CBI officials were taken to a private hospital in the vicinity. A team of Madurai city police officials, led by Deputy Commissioner of Police (Law and Order) Bandi Gangadhar was probing the incident.

http://www.thehindu.com/news/cities/Madurai/gang-attacks-cbi-officials-frees-detained-excise-superintendent/article8453508.ece

[7] http://www.koodal.com/news/tamilnadu.asp?id=74304&title=cbi-officers-attacked-in-madurai-tamilnadu-news-headlines-in-tamil

[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.

[9] மாலைமலர், மதுரையில் சி.பி.. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04

[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/gang-attacks-cbi-officials-madurai-250845.html

[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/gang-attacks-cbi-officials-madurai-250845.html

[13] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/17425/mob-attack-cbi-in-madurai

[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.

[15] Based on a complaint lodged by Mr. Murugan, the Tallakulam police had registered a case of rioting, criminal trespass, assaulting government official to deter him from discharging his duty, attempt to murder, dacoity and criminal intimidation.

http://www.thehindu.com/news/cities/Madurai/nine-booked-for-attack-on-cbi-sleuths/article8456657.ece

Advertisements