Posts Tagged ‘ஒரு ரூபாய் அரிசி’

அரிசியும், அரசியலும், ஊழலும்!

நவம்பர் 14, 2009

சினிமா ஸ்டைலில் அரசியல், ஆய்வுகள், திட்டங்கள்!

சினிமா ஸ்டைலில் அரசியல், ஆய்வுகள், திட்டங்கள்! சினிமாவிற்கு வசனமெழுதி, பாடல்கள்பாடி, சினிமா எடுத்து, தயாரித்து, பழைய சினிமா படங்கள் வாங்கிச் சேர்த்து, சினிமா தொலைக்காட்சி செனல்கள் ஆரம்பித்து, மகன், பேரன்களை சினிமாக்களில் நடிக்கவைத்து, சினிமாக்கள் வாங்குவது-விற்பது, நடிக-நடிகையரைக் கட்டு படுத்துதல்..  ..  ..   இவ்வாறு இன்று வரை சினிமாவை, சினிமாத் துறையையே ஆட்டிப்படக்கும் மாபெரும் அசுர சக்தியாக வளர்ந்துள்ளது, திமுக, கருணாநிதி, அவரது மூன்றுதலைமுறை வம்சாவளிகள். அத்தகைய கவர்ச்சிகர ஆட்டங்களில், அரசாட்சியும் சினிமா பாணியில் நடந்து வருகிறது. வேலை நடக்கிறதோ இல்லையோ, “முட்டாள் பெட்டியில்” தினம்-தினம் 300 கோடி ஒதுக்கப்பட்டது, திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது, தில்லிக்கு / பிரதம மந்திரிக்கு கடிதங்கள் எழுதப்பட்டன, வேலைக்குச் சேர பணிஆணைகள் விநியோகம் செய்யப்பட்டது என்று படம் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த பணம் என்னவாகிறது, மக்களுக்காக செலவழிக்கப்படுகிறதா, துவக்கிய திட்டங்கள் கல்வெட்டுகளுடன் நின்று விடாமல் செயல்படுத்தப் பட்டனவா, எழுதிய கடிதங்கள் வேடிக்கையான கவிதைகள் ஆயினவா அல்லது படிக்கப்பட்டனவா, அதனால் பிரயோஜனமாக ஏதாவது மக்களுக்கு நல்லது நடந்ததா, வேலைக்கு அமர்த்தப்பட்டவர் அவ்வேலைகளுக்கு தகுதியானவர்களா அல்லது பணம் கொடுத்து, பணம் எடுக்கவாண்டும் என்ற ரீதியில் அமர்த்தப்பட்டவர்களா என்றெல்லாம் யாருக்குத் தெரியும்?

சினிமா பாணியில் திடீர் ஆய்வுகள்: “லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது” என்ற கதைகளை அடுத்து இப்பொழுது, ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீரென்று ஆய்வு – எடையைப் பார்த்தார், அதைப் பார்த்தார், இதைப் பார்த்தார் என்றெல்லாம் செய்திகள்! என்ன இது “முதல்வன்” பாணியில் புறப்பட்டு விட்டனர்? உண்மையில் நியாயமாக, தர்மமாக வேலை செய்யும் தமிழக அரசாங்க ஊழியர்கள் மிகவும் குறைவு. ஆகவே, அத்தகைய நிலை மாற வேண்டுமானால், அமைச்சர் தினம்-தினம் சோதனை செய்யவேண்டும். அல்லது தூமைப்படுத்துவது வீட்டிலிருந்து வரவேண்டும் என்றால் முதலில் அவர், அவர் கட்சி, அவர் மக்கள், அவர் மாநிலம் அவ்வாறு சுத்தமாக இருக்கிறார்களா என்ரு பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ரெஷன்கடைகளின் ஊழல் மக்களுக்கு நன்றாகத் தெரிந்ததே.

ரேஷன்கடை ஊழல் பிரசித்திப் பெற்றதே: தினம்-தினம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கால்கடுக்க நின்று, இன்று என்ன கொடுப்பர் என்று கிடைப்பதை வாங்கி செல்லும் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்ன நடக்கிறது என்று. இன்று பாமாயில் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தால் பெண்கல் ஓடோடிச் சென்று வரிசையில் நிற்பர்! ஆனால் ஒரே மணிநேரத்தில் ‘ஸ்டாக்” தீர்ந்துவிட்டது என்று “பில்” போடுவது நிறுத்தப்படும்! ஓட்டொடி வந்த பெண்கள் பாவம், வெறும் பை-கார்டுகளுடன் ரேழன் கடை ஊழியர்களை சபித்துக் கொண்டு வீடு திரும்புவர்.

“முதல்வர்” ஸ்டாலின் திடீர் ஆய்வு: தஞ்சாவூர் ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்[1]. தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின், எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென ஆய்வுக்கு புறப்பட்டார். தஞ்சை அடுத்த மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள ரேஷன் கடை ஆய்வின் போது, அங்கிருந்த மக்கள், “ரேஷனில் பச்சரிசி வழங்க வேண்டும்; மற்ற பொருட்கள் தரமாக கிடைக்கின்றன’ என்றனர். “பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ஸ்டாலின் உறுதியளித்தார்.

“ஸ்டாலின், முதல்வர்’: பின், மாதாக்கோட்டை தூய மைக்கேல் உயர் நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளி சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளிடம், “என்னை யார் என்று தெரியுமா?’ என கேட்டதற்கு, “ஸ்டாலின், முதல்வர்’ என குழந்தைகள் கூறினர். [தான் முதல்வர் இல்லை என்று குழந்தைகளிடம் தெரியப் படுத்திக் கொண்டாரா?]. ஞாபகம் இருக்கிறதா[2]தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பேச்சு”!

பள்ளி முதல்வர் லூயிஸ், “இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும்; இங்குள்ள எட்டு ஆசிரியர்களை நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும்; பள்ளி அங்கீகாரத்தை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பதை மாற்றி, நிரந்தரமாக அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்றார். துணை முதல்வர், கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். மாதாக்கோட்டை பாலர் பள்ளியின் ஆய்வில், “பாலர் பள்ளிக்கு போதுமான இடவசதி இல்லை; புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்’ என, அவர்களின் கோரிக்கைக்கு, விரைவில் கட்டட வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அவர் வருகையை அறிந்து கூடிய பொதுமக்களிடம் இருந்தும், கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திடீர் ஆய்வின் போது, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

ஒருரூபாய் அரிசி ஊழலினால் ரேஷன் விநியோகம் படும்பாடு: “ஒருரூபாய் அரிசி திட்டம்”, ஏதோ எல்லா மக்களுக்கும் கொடுக்கிறமாதிரி லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, விளம்பரங்கள் செய்து ஆரம்பிக்கப்பட்டது! ஆனால் படங்களில் பார்த்ததோ பட்டுப்புடவைகள், நகைகள் அணிந்த பெண்கள் போஸ் கொடுத்துக் கொண்டு அரிசியை வாங்கிச் சென்றனர்! இருரூபாய் அர்சி பையில் கொடுக்க செலவிட்ட பணம் ரூ. 50க்கு மேல்! அத்தகைய கவர்ச்சிகர பிரச்சார விநியோகம் ஆரம்பித்தது. பிறகு எப்பொழுது பார்த்தாலும் மூட்டை முட்டைகளாக ரேஷன் அரிசி கடத்தல் – லாரிகளில், வேன்களில் ஏன் ரயில்களில்! விமானத்தில்தான் கடத்தவில்லை. அப்படியென்றால், அதில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும். தமக்கு வேண்டும் – அதாவது சாப்பாட்டிற்கு வேண்டும் என்று அரிசி கடத்துகிறார்களா அல்லது இதுவே ஒரு “கொள்ளையடுப்பு தந்திரமா?” ஆமாம், தமிநாடு-ஆந்திரா-கேரளா எல்லைகளில் கூலிக்கு ஆட்கள் நியமித்து அரிசி மூட்டைகளை கடத்தி, ஒரு இடத்தில் குவித்து, பிறகு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. போலி ரேஷன்கார்ட் மற்றும் அரிசிகடத்தல் இவற்றிற்குள்ள சம்பந்தமும்[3] வெட்டவெளிச்சமாகியது!

ரேஷனில் பொங்கல் பொருட்கள் விநியோகம்: கவர்ச்சிகர ரேஷன் அத்தோடு நின்றுவிடவில்லை. மக்களைத் திசைத் திருப்ப, பிரச்சார ரீதியில் ரூ.50ற்கு “பொங்கல் பொருட்கள்” விநியோகம் நடந்தது! என்ன பொங்கல் இந்தாண்டுதான் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றதா? 60 ஆண்டு கழகங்களின் ஆட்சிகளில் எப்போதொமே கொண்டாடப் படவில்லையா? இல்லை, எல்லாமே சிமா ஸிஐல் அரசியலுக்கு முன்னோடி, ஏர்கெனவே “தமிழ் புத்தாண்டை” மாற்றியாகிவிட்டது!  இனி மற்ற பண்டிகைகளின் மீது தாக்குதல் நடத்தவேண்டும். அப்பொழுதுதான் வியாபாரம் ஜாஸ்தியாகும், லாபங்கள் பெருகும். அதன்விளைவுதான் “தீபாவலி” பிரச்சாரம்[4]! அதுவும், ஸ்ரீலங்க-தமிழர்களும் செரெது கொண்டு அதிரடியாக இறங்கினர். அரிசிமூட்டை ஊழலைப் போல, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர். விவேகாநந்தரே இப்படி சொல்லிவிட்டார் என்றெல்லாம் கூசாமல் தமிழ்-அறிவுஜீவிகள் பிதற்றின. உண்மையை எடுத்துக் காட்டியதும் மௌனிகளாகின!

பருப்புவிலை ஏறியதும் பருப்பு விநியோகம்: எப்பொழுதும் இல்லாமல், பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன[5] [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  பருப்புவிலை ஏறியது. ரேழனுக்கு வந்தது! பிறகு ரேஷனிலும் எகிறியது விலை!

வியாபார சங்கங்களின் கூட்டுக் கொள்ளை: குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையை கடந்த ஐந்தாண்டுகளாக ஆராயும் ஒரு குழுவின்படி, எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு மேற்கண்ட முறைகள் அரசியல்-குடும்பங்களால் தாராளமாக செயல்படுத்தி வருகின்றன என்பதனை எடுத்துக் காட்டுகிறது. பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  இவற்றின் முக்கியமான வேலை என்றால் அங்கத்தினர்களிடமிருந்து வசூல் செய்து மொத்தமாக ஆளும் மற்ற அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு அதன்படியே செய்து வருகின்றனர். பிரதியுபகாரமாக அரசு அவர்களை எதிவும் கேட்காது, எந்த நடிவடிக்கை யும் எடுக்காது, மாறாக வரிசலுகைகள், புதியதாகக் கட்டப் படும் அரசு-வணிக-வளாகங்களில் இடம், குத்தகை முதலிய பலன்கள் கிடைக்கும். இவ்விதமாக வியாபார சங்கங்களும், தொழிலதிபர்களும் மற்றவர்களும் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், விலைவாசி ஏற்றம் அல்லது பண்டிகை நேரங்களில் விலையேற்றி அடிக்கும் கொள்ளையை யாரும் தடுக்க வருவதில்லை.

டன்டனாடன்! “தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு”! ஆஹா, இதைவிட தமிழகத்திற்கு வேறென்ன வேண்டும்? இவர் டிவி கொடுப்பார்! இவர் தந்தை – கருணாநிதி- டிவி கொடுக்க மக்கள் பணம் அள்ளிக் கொடுப்பார்; தயாநிதி மாறனோ எஸ்.சி.வி மூலம் கன்க்ஸென் கொடுப்பார், அல்லது சன் – டைரக்ட் கனெக்ஸன் கொடுப்பார்! சன் பிக்சர்ஸ் படங்கள் எடுக்கும், ஓளிபரப்பும், குடிமகன்கள் சினிமா பார்த்துகொண்டே காலம் கழிப்பர்! கோடிக்கணக்கான மக்களின் பணம் இப்படி விரயம் செய்வதை யாரும் கண்டுகொள்வதில்லையே? இதற்கும் அடிப்படை, ரேஷன் கார்டு!

ரேஷன்கார்ட் ஊழல்: தமிழகத்தில் போலி ரேஷன்கார்டுகள், அதிகாரிகள் சோதனை என்றெல்லாம் செய்திகள் வருகின்ரன. அரசு அதிகாஅரிகள் துணையின்றி எவ்வாறு அத்தகைய கார்டுகள் வழங்கமுடியும்?

  • தமிழகத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 290 போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு, அவை ரத்து செய்யப்பட்டுள்ளன[6].தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டறிய, வீடு, வீடாக ரேஷன் கார்டு தணிக்கை நடத்த, உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு[7]
  • விருதுநகர் மாவட்டத்தில் 77649 போலி ரேஷன் கார்டுகள்[8]
  • ராமநாதபுரம்: போலி ரேஷன் கார்டுகள் மற்றும் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள 20 பேர் கொண்ட[9]
  • 21 Sep 2009 திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.[10]
  • 13 Sep 2009 சேலத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அளவில் போலி ரேஷன் கார்டு தொடர்பான தணிக்கை நான்கு கட்டமாக ஆய்வு[11]
  • சென்னை : போலி ரேஷன் கார்டு வழங்க உடந்தையாக இருந்த, சென்னை ஆயிரம் விளக்கு, உதவி ஆணைய அலுவலக ஊழியர்கள் மூன்று பேர் தற்காலிக பணி[12]
  • சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் [13]
  • 19 Mar 2009 போலி ரேஷன் கார்டு ஆய்வு ஒத்திவைப்பு: தேர்தலை முன்னிட்டு
  • போலி ரேஷன் கார்டு ஆய்வில் நடந்த குளறுபடியால் பொதுமக்கள்[14]
  • சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் கார்டுகள்[15]
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தணிக்கை மேற்கொண்டு அதிகாரிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போலி ரேஷன் கார்டுகள் குறித்து மேல்[16]
  • சிதம்பரம் பகுதியில் இதுவரை 100 போலி ரேஷன் கார்டுகள் இருப்பது[17]
  • போலி கார்டு பின்னணி அதிகாரிகள் ரேஷனில் துணிகர வசூல்வேட்டை. ஜூன் 06,2008,00:00 IST. சிவகங்கை: போலி ரேஷன் கார்டு கண்டு பிடிக்கப்பட்டால்[18]
  • போலி ரேஷன் கார்டு பதிவு : இணை ஆணையர் திடீர் ஆய்வு. பொது. 1.போலி ரேஷன் கார்டு ஆய்வு பணி : அரவக்குறிச்சியில் மெத்தனம்[19]
  • போலி ரேஷன் கார்டுகள் உலவினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் : உணவு போலி ரேஷன் கார்டுகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் இனி[20]

இவ்வாறு நீண்டுகொண்டே செல்கிறது! அதுமட்டுமல்லது, மற்ற வேடிக்கைகளும் உள்ளன:

·
ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி … போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் நோக்கத்துடன் தமிழகத்தில் அரைகுறையாக நடத்தப் பட்ட தணிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க[21]

·         ஐதராபாத்: ஆந்திராவில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் போலி ரேஷன் கார்டு கண்டுபிடிக்கப் பட்டுள் ளது[22]. …

ரேஷன்அரிசி கடத்தல்-போலிரேஷன்கார்டுகள்-அரசியல்வாதிகள் சம்பந்தம்: மேற்கண்ட மாதிரி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், கைதுகள் முதலியன பல உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன:

  • கடந்த ஆண்டில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கொண்டு வரப்பட்ட சில நாட்களில், ரேஷன் அரிசி கடத்தல் கட்டுக்கடங்காமல் போனது[23].
  • தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு மட்டும், 1.12 கோடி கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு 10.95 கோடிரூபாய்[24].
  • திண்டுக்கல்: கேரளாவிற்கு கடத்தவிருந்த 200 மூடை ரேஷன் அரிசியை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழநி அருகே லாரியுடன்[25]
  • தேவாரம்: தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தினமும் 10 டன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது[26]….
  • கோழித்தீவனம் போலி பில் படி ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்[27]. ஜூலை 22,2008,00:00 IST
  • ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்:விற்பனையாளர் உட்பட இருவர் கைது. நவம்பர் 08,2009,00:00 IST. ஏர்வாடி: ஏர்வாடியில் ரேஷன் அரிசி கடத்திய[28]
  • போலீசார் ஒத்துழைப்புடன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ஜோர்! அக்டோபர் 28,2009,00:00 IST[29]
  • தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : கண்டுகொள்ளாத ‘சிவில் சப்ளை’ ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை நம்பி இன்றும் பல குடும்பங்கள்[30]
  • மின்சார ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது[31]. இதை கண்டும் காணாமல் போலீசார் மற்றும் வருவாய்த்
  • ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரேஷன் கடையிலிருந்து 90 மூட்டை ரேஷன் அரிசி, 2 மூட்டை சர்க்கரை கடத்திய மினி லாரியை[32]
  • ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: எட்டு டன் சிக்கியது; 19 பேர் கைது. ஜூன் 21,2009,00:00 IST. கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் இருந்து ரயில்[33] இரண்டு ரூபாய் ரேஷன் அரிசியை, நான்கு ரூபாய்க்கு தருகின்றனர். அதிலும் ஒரு ரூபாயை அரசு குறைத்திருப்பதால், கடத்தல் பிசினஸில் லாபம்[34]
  • புதுச்சேரியிலிருந்து கேரளாவுக்கு 36 டன் ரேஷன் அரிசி கடத்தல். ஏப்ரல் 28,2008,00:00 IST. கள்ளக்குறிச்சி : புதுச்சேரியிலிருந்து[35] சில மாதங்களுக்கு முன் வரை, கோவை வழியாக, ரேஷன் அரிசி கடத்தல் அதிகம் நடந்தது. இதையடுத்து, 13 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, போலீசார்[36]
  • 210 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல். செப்டம்பர் 19,2008,00:00 IST. நெய்வேலி : கடத்தப்பட்ட 210 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார்[37], 29 Jun 2008
  • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் மினிடோர் வேன் மதுரை உணவு கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம்[38] 5 May 2008
  • இவர்கள் கடத்தி செல்லும் ரேஷன் அரிசியை குமுளியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் ரூ. 8.50 க்கு விற்பனை செய்கின்றனர்[39]. மணலால் மூடி ரேஷன் அரிசி கடத்தல். மே 07,2008,00:00 IST.
  • நாகர்கோவில் : மணலால் மூடி கடத்தப்பட்ட 100 மூடை[40]
  • 11 கோடி ரூபாய் ரேஷன் அரிசி கடத்தல் : ஜெயலலிதா புகார். மே 25,2008,00:00 IST. சென்னை : “தமிழகத்தில் தொடர்ந்து[41] காரைக்குடி : புதுவயல் அரிசி ஆலைக்கு 80 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்த டிரைவரை லாரியுடன் போலீசார் கைது செய்தனர்[42].

இவ்வாறாகவும் ஆயிரக்கணக்கான செய்திகள்! பிறகு என்னததன் தமிழகத்தில் நடக்கிறது?


[1] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14982

[2]http://dravidianatheism.wordpress.com/2009/10/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/

[3] 8 Sep 2008 ஒழிக்க முடியாத போலிகள்: அரிசிக் கடத்தலுக்கு மற்றொரு முக்கியக் காரணமாக இருப்பது போலி ரேஷன் கார்டுகள். தி.மு.க
www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=4564

[4] மிரட்டலா? [விடுதலை, தலையங்கம், 20-10-2009] http://www.viduthalai.com/

வேதபிரகாஷ், தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

, மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

[5] வேதபிரகாஷ், லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?, மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

[6] www.dinamalar.com/new/Political_detail.asp?News_id=1194

[7] www.dinamalar.com/new/Incident_detail.asp?News_id=2509

[8] www.dinamalar.com/district_main.asp?ncat=Virudhunagar

[9] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=11295&cls…TN

[10] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=17200

[11] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16960

[12] www.dinamalar.com/new/Incident_detail.asp?News_id=1586

[13] www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=13462

[14] www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=11801

[15] www.dinamalar.com/New/Political_detail.asp?News_id=13462

[16] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Krishnagiri…2/27/

[17] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Cuddalore…11/2/

[18] www.dinamalar.com/Tnspl_detail.asp?news_id=464&ncat…1

[19] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Karur&showfrom

[20] www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=1194

[21] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=9130&cls

[22] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=11213

[23] www.dinamalar.com/Political_detail.asp?news_id=8087

[24] www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=811&ncat…1

[25] www.dinamalar.com/tnsplnewsdetail.asp?News_id=1423

[26] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4226

[27] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=3390

[28] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13867

[29] www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5436

[30] www.dinamalar.com/Tnsplnewsdetail.asp?News_id=4040&cls=row3

[31] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12284

[32] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8726&cls

[33] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=10942

[34] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4564&cls

[35] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=1538&ncat

[36] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=12506

[37] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4828

[38] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2834&ncat

[39] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=1662&ncat

[40] www.dinamalar.com/New/Incident_detail.asp?News_id=1712

[41] www.dinamalar.com/Political_detail.asp?news_id=1639&ncat

[42] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=5878&ncat