Posts Tagged ‘அழகிரி’
ஜூலை 2, 2011
2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்!
சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீட்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்கு சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.
சென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின் கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3]. இதுபற்றி இந்த வழக்கை
விசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.
2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்! பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5]. அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .
[4] A top CBI official has disclosed that, prima facie, the death of Sadhick Batcha, a close associate of jailed former Telecom Minister A Raja, appears to be a case of murder not suicide as the local Chennai police had claimed. The agency’s assumptions are based on the close scrutiny of the ‘scene of crime’ and other circumstantial evidence collected during investigation.
குறிச்சொற்கள்:அடையாளம், அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கொலை, தட-அடையாள நிபுணர், பிரேத பரிசோதனை, ராஜா
ஊழல், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கூட்டணி ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், தற்கொலை, தூக்கு, பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ராஜா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, வீடு ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மே 31, 2011
கனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

கனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனிமொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

குஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார். |
சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

கனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்
அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்வரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மே 25, 2011
சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது!
அப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை போய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது. |
கருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் என்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்!
கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவிர்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்!
வேதபிரகாஷ்
25-05-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழல், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 23, 2011
சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!
தாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன்? தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
தாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா? அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.
The following is the number of companies from each country which are under the ED scanner and the amount of money pumped into India from there as per the summary of investigation[5]:
Mauritius : 17 investment companies and banks: Rs. 7,911 crore
Japan: 7 companies and banks (Rs. 98.33 crore)
China: 6 companies and banks (Rs. 5,223 crore)
Finland: 5 companies (Rs. 1,185.9 crore)
Sweden: 2 companies (Rs. 430.34 crore)
France: 2 companies (Rs. 93.9 crore)
Russia: 2 companies (Rs. 2,518 crore)
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!
தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].
எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.
வேதபிரகாஷ்
23-03-2011
[9] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.
http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 18, 2011
சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)
குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா? 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.
தற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா? “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.
2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.
4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.
மதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:
இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.
சி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.
செல்போன் விவரங்கள் என்ன? நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும்? அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா? சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா? விசாரிப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.
வேதபிரகாஷ்
18-03-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
அடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 17, 2011
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
தூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா?! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த சாதிக்? ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்?: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;
லட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].
பெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.
மர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.
டில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார்? சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.
தெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன? இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.
வேதபிரகாஷ்
17-03-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 11, 2011
அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்!
- அண்ணா அறிவாலயத்தில் என்ன நடக்கிறது?
- திமுகவின் தலைமையகத்தில் என்ன நடக்கிறது?
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்கார்ந்து முதல் மந்திரி கருணாநிதியுடன் கூட்டணி பேரம் பேசுகின்ற நிலையில், அவரது மனைவி, மகள்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்களா?
- சில நாட்களுக்கு முன்பு தானே அங்கு சி. பி.ஐ ரெய்டும் நடந்துள்ளது?
- அப்படியென்றால், உள்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை?
- சாதாரண அதிகாரிகள் என்ன விசாரணை செய்து விடப் போகிறர்கள்?
- மத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது அவர்கள் எந்த அளவிற்கு மனசாட்சியுடன், நேர்மையுடன், தைரியமாக, சுய உணர்வுட தங்களது கடமையை செய்வார்கள்?
- இல்லை, அந்நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று போய் நாளை வருகிறேன் என்று சென்று விடுவாரா?
- சீட்டு பேரத்தை நிறுத்து விட்டு வேறு வேலை பார்ப்பார்களா?
- கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தானே?
- அதை கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன?
- ரூ 214 கோடி கலைஞர் டிவிக்கு வந்தது-போனது தெரியுமா என்ரு கனிமொழியிடம் கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன?
- அதை தில்லியில் இருக்கும் ராஜாவிடம் கேட்டாலே சொல்லிவிடுவாரே?
குறிச்சொற்கள்:அண்ணா அறிவாலயம், அழகிரி, ஊழல், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி பேரம், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், திமுகவின் தலைமையகம், ராஜா, ராஜா போய் ராணி வந்த கதை, ராஜாத்தி, ராடியா டேப்புகள்
ஊழல், ராகுல், ராகுல் காந்தி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
மார்ச் 11, 2011
கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!
மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும்: நேற்று வரை கனிமொழியை விசாரிப்பது என்பது என்ற பிரச்சினை மறுபடியும் எழும்பியிருந்தது. மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறிவந்தன[1]. ஆனால், இன்று காலை 10.30-11 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் முதலியோரை விசாரிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்து விட்டனர்[2]. வாசலில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் இருந்த நேரத்தில், இவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் அமைதியாக உள்ளே சென்று விட்டனர்[3]. சொல்லி வைத்தால் போல, கனிமொழியியும், ராஜாத்த்தியும் காரில் / கார்களில் வந்து, பின் பக்கமாக கலைஞர் டிவி அலுவலகத்தில் வந்து விட்டனராம்[4]. விசாரணையும் ஆரம்பித்து விட்டதாம்!
2008ல் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் விவரங்களை சி.பி.ஐ சேகரித்துள்ளது. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஆவணங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக, யுனிடெக்கின் எட்டு கம்பெனிகள் ஒன்றாக இணைந்து, மூன்று வருடங்களில் ஷேர்களை விற்க்கக்கூடாது என்ற சரத்தை எப்படி ஏய்த்தது என்று ஆய்ந்து வருகின்றனர்[5]. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டி.பி. ரியால்டியின் 214 கோடி முதலீடு வருகின்றது. கலைஞர் டிவியில் பங்கீடு செய்து, திரும்பப் பெற்றுவிட்டாலும், அதனை விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிந்த விஷயமே.
கனிமொழி, நீரா ராடியா தொடர்புகள்: கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரபல அரசியல் தரகர் நிரா ராடியா மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தலாம் என, பி.டி.ஐ ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோல், கடந்த 2007ல் “2ஜி’ லைசென்ஸ் பெற மனு செய்த யுனிடெக் நிறுவனத்திற்கு, நில விவகாரம் தொடர்பாக, டாடா ரியல் எஸ்டேட் வழங்கியதாக கூறப்படும் 1,600 கோடி ரூபாய் குறித்தும், 2008ல், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவக்கவுள்ளனர்[6].
ராஜாத்தி அம்மாளின் நிலை: நீராவின் டேப்புகளில் கனிமொழி-ராஜாத்தி பேச்சுகள் அளவுக்கு அதிகமாகவே அரசியல்-வியாபாரம் என பல விஷயங்கள் பேசப்பட்டது அம்பலமானது. டாடாவின் சொத்து ஒன்று அனுகூலமாக ராஜாத்திற்கு / கனிமொழிக்கு மாற்றியதாக / குறைவான விலைக்குக் கொடுத்ததாகவும் பேச்சு இருந்தது. ஆக, பண்பரிமாற்றம் அல்லது பலன்கள் எவ்வாறாக அந்த கம்பெனிகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அளித்தன என்பதனை ஆராய வேண்டிய நிலையில், தேர்தல் மற்றும் இதர விவகாரங்கள் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. அத்ற்கேற்றார்போல, அரசுதுறைகள் மற்ரும் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய நிருவனங்கள் / அமைப்புகள் அவ்வாரு செய்வதில் பிரஷ்கின்ரனவா என்ர சந்தேகமும் எழுகின்றது. துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றன என்ற தோற்றமும், எண்னமும் ஏற்படுகின்றது.
மார்ச் 15, மார்ச் 31 ஆக மாறியது ஏன்? மார்ச் 15ம் தேதி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப் படும் என்று பரவலாகப் பேசப் பட்டது. அந்நிலையில் தான் திமுக-காங்கிரஸ் சீட்டு இழுபரி படலம் நடந்டேறியது. அதில் குறிப்பாக கனிமொழிக்கு சம்மன் அனுப்பக் கூடாது, சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்ற கண்டிஷன்களை திமுக போட்டது என்று பரவலாகப் பேசப் பட்டது. அழகிரியே சோனியாவை நேரில் பார்த்து பேசியதும் வியப்பாக இருந்தது. ஆக, விசாரணை தேதிதான் தள்ளிப் போட்டுள்ளதாக தெரிகிறது.
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[7] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!
ஸ்வான் டெலிகாம், எடிசலாட் தொடர்புகள்: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இப்போது சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது[8].
குறைந்த காலத்தில் பெரிய பணக்காரராகிய சாஹித் உஸ்மான் பல்வா[9]: கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த சாஹித் உஸ்மான் பல்வா இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகிகையின்படி 1-பில்லியன்$ அதிபதியாக உள்ளார். மும்பையில் பல கட்டுமானங்களை முடித்து கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த, இவர், குறைந்த காலத்தில் பெரிய பணக்காரர் ஆனார் என்பதும் குறிப்பிடத் தக்கது[10]. இவரது மற்றும் இதர கம்பெனிகள் 22,000 கோடிகள் இழப்பிற்குக் காரணம் என்று சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது[11].
எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.
கலைஞர் டிவிக்கும், சாஹித் உஸ்மான் பல்வாவிற்கும் உள்ள தொடர்பு[12]: கலைஞர் டிவி நிதிநிலை அறிக்கையில் சினியுக் மீடியா என்ற நிறுவனத்திலிருந்து, ரூ 214 கோடி கடன் பெற்றதாக காட்டியிருந்தது. அது குசிகாவ் பழம் மற்றும் காய்கறி நிறுவனத்திலிருந்து கடன்பெற்றதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு, கருணாநிதியையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சுப்ரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்[13]. அந்த நிறுவனத்தின் அதிபர் தான் இந்த சாஹித் உஸ்மான் பல்வா[14]. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏன் சைனா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரத்திலும் ஒரு ஹோட்டலை வாங்கியுள்ளார்.
யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது: ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது[15]. இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[16]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[17]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[18].
வேதபிரகாஷ்
11-03-2011
[4] Kanimozhi arrived at the party headquarters a little past 10.30 this morning. Dayaluammal, mother of Union Minister M K Alagiri and deputy Chief Minister M K Stalin, arrived a little later along with Karunanidhi’s nephew and one of the directors of the TV channel, P Amirtham, and entered through the rear entrance almost unnoticed.
[12] Stock market reports say that the CBI is looking into DB Realty’s transfer of funds ~ about Rs 214 crore ~ to Kalaignar TV, which is run by a majority stakeholders belonging to Tamil Nadu chief minister Mr M Karunanidhi’s clan.
[16] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.
http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40
குறிச்சொற்கள்:அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் கையாடல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நெப்பொலியன், பரமேஸ்வரி, பாலு, மாலத்தீவு, முறைகேடு, ராஜா, ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் ராகம், கனிமொழி, கனிமொழி ராசா, கருணாநிதி, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சன்டிவி பங்குகள், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், ஹசன் அலி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
மார்ச் 8, 2011
ஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்! (2)
ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரியது! சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
இந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும்? இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே! மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ? இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.
காசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.
ஜெயலலிதாவுடன் தொடர்பா? கோடிக்கணக்கில் கருப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].
ஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு மெத்தனமாக இருக்கிறதா? ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.
காசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:
- 1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.
- பிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
- ஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.
- கசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.
- அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.
- அலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.
பிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].
வேதபிரகாஷ்
08-03-2011
[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=387045&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
[4] The Enforcement Directorate (ED), the agency that investigates economic crimes in India, has secured a stay from the Bombay high court on a sessions court order asking it to return the passport of Switzerland-based hotelier Philip Anandraj, a claimed accomplice of Hasan Ali Khan, the Pune-based stud farm owner allegedly involved in laundering $8 billion (about Rs34,750 crore). Posted: Sat, Aug 23 2008. 12:30 AM IST
http://www.livemint.com/2008/08/22234938/ED-gets-stay-from-Bombay-HC-on.html
[5] According to Anandraj’s lawyer, P. Janardhan, his client has not committed any offence. “In 2003, my client (Anandraj) introduced Khan to the owner of a hotel in Lucerne in Switzerland that Khan wanted to buy,” he said. “Negotiations took place but the deal was not struck as there was no money in Khan’s (bank) account.” Janardhan also alleged that Khan borrowed $500,000 from Anandraj but never returned the money. “In 2006, when Anandraj came to India to get his money back, ED seized Anandraj’s passport and laptop, which had details of the Swiss hotel deal and Khan’s bank accounts,” he said. “We have submitted all supporting documents based on which the court has passed the order.”
http://www.livemint.com/2008/08/13004336/Swiss-hotelier-wins-1st-round.html
குறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 3, 2011
ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!
கருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].
காங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை!
ராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.
கொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].
கனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.
“ஹாட் அண்ட் கோல்ட்” சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும்! காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.
ராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது! அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம். ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது!.
© வேதபிரகாஷ்
02-02-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சோனியா, டெலிகாம் ஊழல், தேர்தல், நீரா ராடியா, போஃபோர்ஸ், மாலத்தீவு, முறைகேடு, ராகுல், ராஜா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஊழலுக்கு ஊழல், ஊழல், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், சண்முகநாதன், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சோனியா, சோனியா மெய்னோ, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, தியாகம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தேர்தல், தொகுதி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பேரம், மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராகுல், ராகுல் காந்தி, ராஜினாமா, ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »