Posts Tagged ‘அடையாளம்’

2-ஜி ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்- கொலை செய்யப்பட்டப் பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்!

ஜூலை 2, 2011

2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி..க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்!

 

சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர்  சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீட்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார்.  அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்கு சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

கழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.

 

சென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின் கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3].  இதுபற்றி இந்த வழக்கை
விசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார்.  இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு  சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.

 

2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி..க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்! பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5].  அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .


[1] தினமணி, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளாரா? சி.பி.ஐ சந்தேகம், http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=439960&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[2] தினமலர், சாதிக்பாட்சாகொலையா ? கொலையாளி யார் ? முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வரு‌கை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=267640

[3]புதிய கோணத்தில் விசாரணை, மாலைச்சுடர், ஜூன் 1, 2011, http://www.maalaisudar.com/newsindex.php?id=36223%20&%20section=1

[4] A top CBI offi­cial has disclosed that, prima facie, the death of Sadhick Batcha, a close associate of jailed former Telecom Minister A Raja, appears to be a case of murder not suicide as the local Chennai police had claimed. The agency’s assumptions are based on the close scrutiny of the ‘scene of crime’ and other circumstantial evidence collected during investigation.

Advertisements