Archive for the ‘ராஜா தலித்’ Category
மே 6, 2011
கனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்!
கனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.

க்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா? இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்?

’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.
வாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.
கனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7]. |
`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.
கைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.
எங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.
குறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா
அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 17, 2011
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
தூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா?! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த சாதிக்? ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்?: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;
லட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].
பெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.
மர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.
டில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார்? சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.
தெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன? இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.
வேதபிரகாஷ்
17-03-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 11, 2011
அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்!
- அண்ணா அறிவாலயத்தில் என்ன நடக்கிறது?
- திமுகவின் தலைமையகத்தில் என்ன நடக்கிறது?
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்கார்ந்து முதல் மந்திரி கருணாநிதியுடன் கூட்டணி பேரம் பேசுகின்ற நிலையில், அவரது மனைவி, மகள்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்களா?
- சில நாட்களுக்கு முன்பு தானே அங்கு சி. பி.ஐ ரெய்டும் நடந்துள்ளது?
- அப்படியென்றால், உள்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை?
- சாதாரண அதிகாரிகள் என்ன விசாரணை செய்து விடப் போகிறர்கள்?
- மத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது அவர்கள் எந்த அளவிற்கு மனசாட்சியுடன், நேர்மையுடன், தைரியமாக, சுய உணர்வுட தங்களது கடமையை செய்வார்கள்?
- இல்லை, அந்நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று போய் நாளை வருகிறேன் என்று சென்று விடுவாரா?
- சீட்டு பேரத்தை நிறுத்து விட்டு வேறு வேலை பார்ப்பார்களா?
- கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தானே?
- அதை கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன?
- ரூ 214 கோடி கலைஞர் டிவிக்கு வந்தது-போனது தெரியுமா என்ரு கனிமொழியிடம் கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன?
- அதை தில்லியில் இருக்கும் ராஜாவிடம் கேட்டாலே சொல்லிவிடுவாரே?
குறிச்சொற்கள்:அண்ணா அறிவாலயம், அழகிரி, ஊழல், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி பேரம், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், திமுகவின் தலைமையகம், ராஜா, ராஜா போய் ராணி வந்த கதை, ராஜாத்தி, ராடியா டேப்புகள்
ஊழல், ராகுல், ராகுல் காந்தி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
பிப்ரவரி 23, 2011
சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்!
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[1] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!
ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை: புதுதில்லி, பிப். 22: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்[2]. இவ்விருவரையும் சென்னையிலிருந்து, சி.பி.ஐ இங்கு கொண்டு வந்துள்ளானர், ஆனால், கைது செய்யப் படவில்லை[3] என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக வந்த பணம், பாட்சாவுக்குச் சொந்தமான க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை [22-02-2011] விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவருக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார், என்று தமிழ் பத்திரிக்கைகள் கூறுகின்றன.
சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் சாதி பாட்சா தொடர்புகள்:. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வா, தமக்கு பாட்சாவை கடந்த சில ஆண்டுகளாகத் தெரியும் என சிபிஐ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இருவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவஎர்களுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் பினாமி போக்குவரத்துகள் நடபெற்றுள்ளன மற்றும் அதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்ர்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் கூர்மையாக நோக்கத்தக்கது. எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்…
தனி விமான நிலையம் வைத்துள்ள சாஹித் உஸ்மான் பல்வா; 22-02-2011 அன்று தீஸ் ஹஜாரி கோர்ட்டில், சுப்ரமணியன் சுவாமி கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்: குஜராத் பல்வாவின் சொந்த ஊராகும். குஜராத்தில் பனஸ்கந்தா மாகாணத்தில் பலன்பூர் என்ற இடத்தில் சாஹித் உஸ்மான் பல்வாவிற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு விமான நிலையம் எல்லா வசதிகளுடனும் உள்ளது[4]. ஹெலிகேப்டர் மட்டுமல்லாது, விமானமே வந்து செல்லக்கூடிய அளவில் ஓடுபாதை முதலியன உள்ளன. இங்கு ராஜா வந்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார். அதுமட்டுமல்லாது, குற்றப் பின்னணியில் உள்ள ஆட்களை இங்கிருந்து துபாய்க்கு அழைத்து செல்வது, அங்கிருந்து, இங்கு வருவது போன்ற காரியங்களும் நடப்பதாக கூறியுள்ளார்[5]. இவையெல்லாம் அரசுதுறைகளுக்குத் தெரியாமல் நடந்து வருகின்றன[6].
தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[7]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[8]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[9]. இனி இந்த பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[10].
ஸ்பெட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ ஏன் ஆராயவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு, அவ்விவரங்கள் தமக்குத் தெரியாது என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். சுப்ரமணியன் சுவாமியின் புகாரும் தம்மிடம் இல்லை என்றனர். உடனே ஒரு நகலை சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு கொடுத்தார். நீதிபதி, தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயும்படி பணித்துள்ளது[11].
வேதபிரகாஷ்
23-02-2011
[6] The airport, he said, was being used by Balwa and “all kinds of VIPs and criminals” to enter and leave the country without informing the authorities.
[8] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.
http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40
[11] Special Judge (CBI) Pradeep Chaddah had earlier stayed further proceedings in the complaint as per Section 210 of the Criminal Procedure Code and called for a detailed report from the CBI, asking it to state whether the national security aspect was being covered by the probe into the spectrum scam. However, the CBI investigating officer in his report submitted on Tuesday sidestepped the question by answering that he was “not aware of the details of national security aspects raised by the petitioner” as a copy of the complaint was not made available to him
http://www.thehindu.com/todays-paper/tp-national/article1482340.ece
குறிச்சொற்கள்:ஊழல், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சுப்ரமணியன் சுவாமி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ராஜா, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சோதனை, சோனியா, தயாநிதி மாறன், தாவூத் இப்ராஹிம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிரியா, மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா தலித், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
திசெம்பர் 20, 2010
ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?
ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].
ராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.
அப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.
கோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி? ராஜா குறிப்பாக, “எங்கப்பா? எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா?” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமாக, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. மனதில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.
நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.ஐ., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை”[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.
வழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.
கருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே? |
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே… |
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா? |
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். |
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
|
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார். |
காங்கிரஸ் – தி.மு.க., உறவு எப்படி உள்ளது? |
உங்களால் வெட்ட முடியாது[8]. |
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? |
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன். |
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
|
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி. |
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே? |
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார். |
ராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.
நேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார். தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, இரண்டு பெண்கள், உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சி.ஆர்.பி.சி, சி.பி.ஐ நோட்டீஸ், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தென் பகுதி பெண்மணி, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வடநாட்டுப் பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அவமரியாதை, அவமானம், இழுக்கு, களங்கம், சி.பி.ஐ நோட்டீஸ், சோதனை, தென்னட்டு பெண்மணி, தென்னாட்டு பெண்மணி, ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராமசந்திரன், ரெய்ட், வடநாட்டு பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
திசெம்பர் 15, 2010
தலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்!
தலித் தலித்துகளை அடிப்பது, நொறுக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது: தலித்துகள் தலித்துகளையே வித்தியாசமாக பாவிப்பது, தங்களுக்குள் நடந்து கொள்வது, அடக்கியாள்வது, முதலியவற்றைப் பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்[1]. சமூக ரீதியில் அது புதிராக இருக்கலாம், ஆனால், அரசியலில் சஜமாக, பணம்-பதவி வந்தால் அந்த தலித்தே “உயர்-ஜாதிக்காரன்” போல நடந்துகொள்வதை மற்ற தலித்துகள் நன்றாகவே பார்த்ததுள்ளனர், உணர்ந்துள்ளனர், அனுபவித்துள்ளனர்.
தலித் என்பதனால் ராஜா தாக்கப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார்: ராஜா ஒரு “தலித்” அதாவது எஸ்.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால்தான், மற்ற சாதியினர் அவர்மீது ஊழல், மோசடி, நீதிபதியை மிரட்டுதல் என்று தாக்குதல் நடத்துகின்றனர் என்று கருணாநிதி, வீரமணி மற்ற திமுகவினர், அபிமானிகள் வக்காலத்து வாங்கி பேசினர், கூட்டம் போட்டனர்[2], பிரச்சாரம் செய்தனர். ஒருவேளை அந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கோ அல்லது கூட்டம் நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்தார்களோ அந்த ஆண்டவனுக்கு, இல்லை, பெரியாரின் ஆவிக்குத்தான்[3] தெரியும்!
விவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார்! ஆனால், இப்பொழுது ஏழைகள், விவசாயிகள், ஏன் தலித்துகளாக இருப்பவர்களே தமது நிலங்களை மிரட்டி குறைவான விலைக்கு வாங்கி விட்டு, அதை எம், ஆர், எஃப் போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு கோடிகளுக்கு விற்றுவிட்டனர். கேட்டால் எங்களை ராஜா மற்றும் சாதிபாட்சாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்[4] என்று புகார் எழுந்துள்ளது. கோவிந்த ராஜு என்பவர் இவ்வாறு கூறுவதை டைம்ஸ்-நௌ தொலைக்காட்சி காட்டியது, செய்தியாகவும் வெளியிட்டுள்ளது[5].
“விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள்! அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! அதாவது, இன்னும் கொஞ்சம் அணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடுவர் என்று பொறுளாகும்.
கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் – ராஜாவின் சம்பந்தங்கள்: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது[7]. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 17 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
எஸ்.சி / எஸ்.டஇ சட்டமே மிரட்டுவதற்கு உபயோகப்படுவது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். அதாவது எஸ்.சி/.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மிரட்டியதுதான் வேடிக்கை, ஆனால், உண்மை. பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.
எம்.ஆர்.எப் நிலைத்தை வாங்குவது: கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்த நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.
அரசு நடவடிக்கை எடுப்பது, விசாரணை செய்வது – வழக்கம் போல[8]: இந்த சர்ச்சை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். போலீஸ் தரப்பில், மஹேந்திர ராத்தோர் “இது வரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை”, என்று கூறுகிறார். இதற்குள் இதை விசாரிக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது[9]. அரசு நடவடிக்கை எடுப்பது என்பது ஊழலை மறைக்கத்தான் என்பது தெரிந்த விஷயமே[10]. இதைப் போலத்தான் சோனியாவும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது[11]. எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும்[12], நாளைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை, அதுதான் இது என்று மெய்பிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார்கள். சோனியா குரோச்சியைக் காக்கமுடியும் என்றால், கருணாநிதியால் ராஜாவைக் காக்க முடியாதா?
வேதபிரகாஷ்
© 15-12-2010
[1] வேதபிரகாஷ், தலித் – சித்தாந்தம், பிரச்சினை, அரசியல், http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/
Vedaprakash, Dalit – Precept, Problem and Politics, Published in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114.
http://vedaprakash.indiainteracts.in/2007/09/06/dalit-%E2%80%93-precept-problem-and-politics/
[2] விடுதலை நாளிதழில் பார்க்கவும். கடந்த மாதம், தி.நகரில் கூட கூட்டம் போட்டார்கள்.
[3] கருணாநிதி ஒரு தடவை கேள்வி கேட்டபோது, பெரியார் ஆவிக்குத்தான் தெரியும், கேட்டுப் பாருங்கள் என்றார்!
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆர். பி. பரமேஷ் குமார், ஏ. எம். சாதிக் பாட்சா, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தலித், பரமேஷ் குமார், பரமேஸ்வரி, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆர். பி. பரமேஷ் குமார், ஆர். ராம்கணேஷ், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு ரெய்ட், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 8, 2010
ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா?
ஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா? இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும்? ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான்! அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?
பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே! இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.
காலங்கடந்த நடவடிக்கை ஏன்? உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.
சி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும்? இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.
தேர்தல் பேரத்திற்கு ஒத்திகையா? வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.
சோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா? கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா? இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா? அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே? நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.
காங்கிரஸ்-திமுக ஊடலா, ஊழலா? இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்!
வேதபிரகாஷ
09-12-2010
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 8, 2010
ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!
ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.
அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].
பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].
ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
நவம்பர் 29, 2010
துள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி!
துள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
கூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.
துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.
கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா? பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்
அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது? கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது? நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா? முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.
திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3]? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்?
வேதபிரகாஷ்
© 29-11-2010
[1] “The Kalkis and Dinamanis did not bother to write anything about the Mundra scandal after that. But, even after Mr. Raja resigned over the spectrum issue, the Opposition and certain sections of the press continue to harp on the need for a JPC probe just because Mr. Raja is a Dalit.”
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article917996.ece
குறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்
1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »