Archive for the ‘யூனிடெக் ஒயர்லெஸ்’ Category
மார்ச் 23, 2011
சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!
தாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன்? தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
தாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா? அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.
The following is the number of companies from each country which are under the ED scanner and the amount of money pumped into India from there as per the summary of investigation[5]:
Mauritius : 17 investment companies and banks: Rs. 7,911 crore
Japan: 7 companies and banks (Rs. 98.33 crore)
China: 6 companies and banks (Rs. 5,223 crore)
Finland: 5 companies (Rs. 1,185.9 crore)
Sweden: 2 companies (Rs. 430.34 crore)
France: 2 companies (Rs. 93.9 crore)
Russia: 2 companies (Rs. 2,518 crore)
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!
தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].
எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.
வேதபிரகாஷ்
23-03-2011
[9] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.
http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 17, 2011
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
தூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா?! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த சாதிக்? ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்?: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;
லட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].
பெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.
மர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.
டில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார்? சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.
தெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன? இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.
வேதபிரகாஷ்
17-03-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 18, 2011
எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்!
சி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா? எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்! அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம்! உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள்? ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ?
கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்! கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம்! சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].
சென்னைவாசிகளுக்கேத் தெரியாத ரெய்ட்! கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான்! அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை!
கனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா? மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.
கலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம்! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
கடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
வேதபிரகாஷ்
18-02-2011
[6] தட் ஈஸ் தமிள், எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2011.
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், நீரா ராடியா, ராசா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அமைச்சர் அந்தஸ்து, ஆடிட்டர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, ஜாபர் அலி, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
திசெம்பர் 8, 2010
ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா?
ஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா? இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும்? ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான்! அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?
பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே! இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.
காலங்கடந்த நடவடிக்கை ஏன்? உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.
சி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும்? இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.
தேர்தல் பேரத்திற்கு ஒத்திகையா? வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.
சோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா? கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா? இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா? அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே? நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.
காங்கிரஸ்-திமுக ஊடலா, ஊழலா? இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்!
வேதபிரகாஷ
09-12-2010
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 8, 2010
ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!
ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.
அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].
பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].
ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
நவம்பர் 29, 2010
துள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி!
துள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
கூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.
துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.
கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா? பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்
அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது? கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது? நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா? முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.
திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3]? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்?
வேதபிரகாஷ்
© 29-11-2010
[1] “The Kalkis and Dinamanis did not bother to write anything about the Mundra scandal after that. But, even after Mr. Raja resigned over the spectrum issue, the Opposition and certain sections of the press continue to harp on the need for a JPC probe just because Mr. Raja is a Dalit.”
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article917996.ece
குறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்
1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 27, 2010
ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!
டாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா? சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].
உலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.
ராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா? டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா? கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில்! வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.
ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].
குற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”
நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].
வேதபிரகாஷ்
© 27-11-2010
[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.
[11] “We have somewhat slipped into a morass of a series of allegations… unauthorised tapes flooding… the media going crazy on alleging, convicting, executing… literally character assassination…. I wish the government would take a stand, bring an auditor… have an investigation and book people who are guilty of something, but stop this sort of Banana Republic kind of attack on whoever one chooses to attack on a basis unsubstantiated even before the person has a very Indian right, namely to be considered innocent until found guilty in a court of law.”
குறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, டோகோமோ, தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், பாலு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம்
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
நவம்பர் 17, 2010
கோடி-கோடிகளாக நடந்த ஊழல் விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் படி.
இஷ்டப்படி ஒதுக்கீடு செய்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் ராஜா:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127783
2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான, மத்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை நேற்று அமளியின் நடுவே பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது புட்டுபுட்டு வைக்கப்பட்டுள்ளது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆடிட்டர் ஜெனரல் (கேக்), தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடம் சமீபத்தில் அளித்து இருந்தார். இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் ராஜாவும் மக்களுக்கு சேவை செய்த பெருமையைக் கூறி ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.லோக்சபாவில் இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில், நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவால் தாக்கல் செய்தார். மொத்தம் 77 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தரப்பட்ட விதம், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு தீவிர கண்காணிப்பு தேவை. அதற்கான பணியைத்தான் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சி.ஏ.ஜி., அறிக்கையில் முழு விவரங்களை குறிப்பிட்டு, பின்குறிப்பாக ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு போல், வேறு எந்த அமைச்சகத்திலோ, அரசின் வேறு துறையிலோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற வகையில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அறிக்கையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி வளைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையையும் பொருட்படுத்தவில்லை, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
* “3ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன.
* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.
*”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை. மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன. இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.
* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையும் ராஜா பொருட்படுத்தவில்லை.
* தகவல் தொடர்புத்துறை ஆணையத்தின்(டிராய்)வழிகாட்டு நெறிமுறையின் படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில்,”டிராய்’ கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது. அவ்வாறு கேபினட் முடிவை மீறும் போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும் இங்கே பின்பற்றப்படவில்லை.
* எவ்வித அனுபவமும் இல்லாத, “ஸ்வான்’ நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.
* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.
*கடந்த 2001ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் “3ஜி’ ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி முதல் 37 ஆயிரம் கோடி வரை கொடுத்துள்ளனர்.
* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்) தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ் 35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.
* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்’ நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை “எட்டிசேலட்’ என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை பெற 1,661 கோடி ரூபாய் மட்டுமே “யூனிடெக்’ கட்டியிருந்தது. லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது “2ஜி’ உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம்: ஒரு பார்வை
*”2ஜி’ லைசென்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அக்கறையின்றி அள்ளிவீசப்பட்டுள்ளது.
*விதிமுறைகள் வளைக்கப்பட்டுள்ளன; எவ்வித நடைமுறையோ, ஒழுங்குமுறையே பின்பற்றப்படவில்லை
* வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக, கடைசி தேதி முன்தேதியிடப்பட்டுள்ளது.
*மொத்தத்தில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட அமைச்சர் ராஜாவின் வெளிப்படையில்லாத அணுகுமுறை காரணமாயிருக்கிறது. மேலும், அவர் அள்ளி வழங்கிய சலுகையில், டேடா காம் ( தற்போது வீடியோகான்). எஸ்-டெல், ஸ்வான் அண்ட் லூப் டெலிகாம் ஆகிய தொழிலமைப்புகளுக்கு 2008ல் லைசென்ஸ் தரப்பட்டிருக்கிறது,
* பிரதமர் ஆலோசனையை அவர் மீறி இதை வழங்கியிருக்கிறார். சட்டங்களை மீறி, நடைமுறைகளை மீறி “2ஜி’ லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
*ஸ்வான் டெலிகாம் லைசென்ஸ்: ரூ.1,537 கோடிஇந்நிறுவனம் தனது 45 சதவீத பங்கை விற்றதன் மூலம் ரூ.4,200 கோடி பெற்றுள்ளது.
*மொபைல் சந்தாதாரர் நிலவரம்
2001 : 40 லட்சம்
2008 : 35 கோடி
* வருவாய் இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி.
* சில நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது 2008ம் ஆண்டில், விலை நிர்ணயமோ 2001ம் ஆண்டின்படி செய்யப்பட்டது.
* யூனிடெக் ஒயர்லெஸ் லைசென்ஸ்:ரூ.1,661 கோடி.இந்நிறுவனம் 60 சதவீத பங்கை விற்றதன் மூலம் திரட்டிய தொகை: ரூ.6,200 கோடி.
*அரசுக்கு கிடைத்த வருவாய்: “2ஜி’: ரூ.10,772 கோடி.
“3ஜி’:ரூ. ஒரு லட்சம் கோடி.
குறிச்சொற்கள்:2ஜி' ஸ்பெக்ட்ரம், 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டாடா டெலிசர்வீசஸ், மத்திய ஆடிட்டர் ஜெனரல், யூனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டாடா டெலிசர்வீசஸ், யூனிடெக் ஒயர்லெஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »