Archive for the ‘யுனிடெக்’ Category

கனிமொழி கைதைத் தவிக்க கருணாநிதி கோர்ட்டில் கனிமொழியுடன் செல்கிறாராம்!

மே 4, 2011

கனிமொழி கைதைத் தவிக்க கருணாநிதி கோர்ட்டில் கனிமொழியுடன் செல்கிறாராம்!

கனிமொழி கைதாவாரா? அமூலாக்கப்பிரிவு கோர்ட்டில் ஆஜராகுமாறு[1] ஆணைப்பிறப்பித்துள்ள நிலையில், கருணாநிதியும் உடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[2]. விசாரணைக்குப் பிறகு கனிமொழி கைடு செய்யப்படலாம் என்பதால், கருணாநிதி கூட செல்கிறார்[3] என்று செய்திகல் வெளியாகின.. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை (07-05-2011) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன[4]. கனிமொழி கைது செய்யப் படலாம், திஹார் ஜெயிலில் அடைக்கப் படலாம் என்ற செய்திகள் ஏற்கெனவே வெளிவர ஆரம்பித்து விட்டன[5]. இருப்பினும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் நம்பிக்கையயக கூறியுள்ளதால், கருணாநிதி செல்வது தவிக்கப்பட்டூள்ளது[6]. இருப்பினும், முன்பு ராஜா விஷயத்தில் அழுத்தம் எடுத்து வந்தது போல, இப்பொழுது செய்வதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், ஒருவேளை அவர் சோனியாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் சோனியாவின் பிறந்த நாள் சாக்கை வைத்துக் கொண்டு, கனிமொழி சோனியாவின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கவுள்ள்தாக திமுகவினர் சொல்கின்றனர்.

குடும்ப சகிதமாக தில்லிக்கு வந்துள்ள கனிமொழி: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.
கனிமொழி கைதா இல்லையா என்பது, நீதிபதிஐப் பொறுத்துள்ளது: “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், “டி.பி., ரியாலிட்டி’ குழுமத்தில் இருந்து, “கலைஞர் டிவி’க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி[7]: இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர்[8]. ராஜாத்தி அம்மாளும் விமானத்தில் தில்லுக்கு வந்து சேர்ந்துள்ளார். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. “கலைஞர் “டிவி’க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, “டி.பி., ரியாலிட்டி’ குழுமம் ஏன் முன் வர வேண்டும்?’ என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் “டிவி’ கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், “கலைஞர் “டிவி’க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.
கனிமொழி சோனியாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சோனியாவின் பிறந்த நாள் சாக்கை வைத்துக் கொண்டு, கனிமொழி சோனியாவின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றதும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கனிமொழி ஒருவேளை ஏதாவது வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதை கருத்திற்கொண்டு, சோனியா என்ன செய்வார் என்பது, நாளைதான் தெரியும். அதாவது, கனிமொழி கைதாவது அல்லது, விசாரித்து அனுப்பிவிடுவது என்ற முறையோடு, முடிந்து விடுமா அல்லது, வேறு நடவடிக்கைத் தொடருமா என்பது தெரிய வரும். இப்பொழுதைய நிலையில் கைது நடவடிக்கை இருக்காது என்று திமுக நம்புவதாக உள்ளது[9].

காங்கிரஸ் உதவுமா, உதவாதா? கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், “ராஜா கைது இருக்காது’ என்று அளித்த உறுதியும், “குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது’ என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

கனிமொழியை ஆதரித்து வாதாட்ட வரும் வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பணம், “கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,’ என்று தெரிவித்தன.
கரீம் மொரரனி, சாஹித் பல்வா, கலைஞர் டிவி: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது. இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு: இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

மொரீசியஸ் தீவில் விசாரணை: இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்பட பல வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துகிறது. இது தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு 15ம் தேதி மொரீசியஸ் செல்கிறது.

சினியுக் இயக்குநர் முன் ஜாமீன் மனுஇந் நிலையில் சினியுக் இயக்குநர் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சாஹித் பல்வாவின் டி.பி. ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணம் சினியுக் நிறுவனம் வழியாகக் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை மறுதினம் இவரும் கனிமொழியும், சரத் குமாரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர்களை சிபிஐ கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி கரீம் மொரானி மனு தாக்கல் செய்துள்ளார்.



Advertisements

அண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்!

ஏப்ரல் 6, 2011

அண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்!

அண்ணதுரை என்றால், தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தெரியும் ஆனால், அண்ணா ஹஸாரே என்றால், எப்படித் தெரியும்? ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள்! அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில்! போதாகுறைக்கு, இன்றைய தம்பியின் மகளே அந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். இன்றைய ஊழலுக்கு பிரதம மந்திரி மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்திதான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதைப் பொறுக்காத, சோனியா கங்கிரஸ் தலைவர் ஒருவர்,  அண்ண ஹஸாரே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லியிருக்கிறார்[1].

மன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்[2]. உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.

சமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
லோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது[3]. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்[4]. மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.

.

வேதபிரகாஷ்,

06-04-2011


சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!

மார்ச் 23, 2011

சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!

தாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன்? தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

தாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா? அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.

The following is the number of companies from each country which are under the ED scanner and the amount of money pumped into India from there as per the summary of investigation[5]:

Mauritius : 17 investment companies and banks: Rs. 7,911 crore

Japan: 7 companies and banks (Rs. 98.33 crore)

China: 6 companies and banks (Rs. 5,223 crore)

Finland: 5 companies (Rs. 1,185.9 crore)

Sweden: 2 companies (Rs. 430.34 crore)

France: 2 companies (Rs. 93.9 crore)

Russia: 2 companies (Rs. 2,518 crore)

 
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!

தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].

எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.

வேதபிரகாஷ்

23-03-2011


[6] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்,https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/

[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்!,

https://corruptioninindia.wordpress.com/2011/02/23/sadiq-basha-sahid-usman-balwa-dawood-ibrahim-nexus/

[8] Mr Swamy also claimed that as per an Union home ministry report, Mr Balwa is linked to fugitive underworld don Dawood Ibrahim.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=360087&catid=36

[9] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s  restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40

[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!, https://corruptioninindia.wordpress.com/2011/03/11/cbi-grills-kanimozhi-dayalu-amma-march-2011/

சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா – தேர்தலில் போட்டியிடப் போகிறாராம்!

மார்ச் 22, 2011

சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா – தேர்தலில் போட்டியிடப் போகிறாராம்!

நிஜ டாக்டர்களும், போலி டாக்டர்களும்:: தமிழகத்தில் பலவித டாக்டர்களை பார்த்தாகி விட்டது. திராவிட பாரம்பரியத்தில், டாக்டர் இல்லாத அரசியல்வாதியே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பிறகு, நடிகர்கள் எல்லாம் டாக்டர் பட்டம் பெற்றனர். நிகரிலை பல்கலைகள் ஏற்பட்டப் பிறகு, யார்-யாருக்கு டக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையும் போய்விட்டது. இதற்குள் போலி டாக்டர்கள் வேறு கிளம்பி விட்டார்கள். விடுவவர்களா, நமது திராவிட கண்மணிகள் / திராவிட டாக்டர்கள் எல்லோரையும் உள்ளே தள்ளிவிட்டார்கள்! இப்பொழுது அதனால், உணையான டாக்டர்களே அரசியலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்!

அரசியலில் குதிக்கும் நிஜ டாக்டர்கள் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வேலைசெய்து வரும் டாட்கர். வி. டிகால் மார்ச் 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தன்னை விடிவிக்க வேண்டும் என்று ரிட் மனு தாக்குதல் செய்திருந்தார்[1]. 13ம் தேதி, நீதிமன்றம் அவரது ராஜினாமாவை பரிசீலித்து, விடுவிக்க ஆணையிட்டது. அதற்குள் இப்பிரச்சினை வந்துவிட்டது. இதனால், சுகாதாரத் துறை காரியதரிசி சுப்புராஜ் சொல்வதாவது, “டாக்டர்கள்  பற்றாக்குறை காரணமாக, அவர் விடுவிக்கப் படவில்லை. ஒருவேளை அவர், விடுவிக்கப் பட்டாலும், இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக முடித்துத் தரவேண்டும். அதுமட்டுமல்லாது, கோர்ட் இவ்வழக்கு விஷயமாக எப்பொழுது கூப்பிட்டாலும் வரவேண்டியிருக்கும்”, என்றார்[2]. தொடர்ந்து அவர் சொன்னதாவது, “தேர்தல் சமயத்தில் தமக்கு பல ராஜினாமா கடிதங்கள் வந்தன. ஆனால், இவையெல்லாம், அரசு உத்தியோகத்தை விட்டுவிட்டு, தனியாரிடம் செல்லத்தானிவ்வாறு செய்கிறார்கள்”, என்றும் குற்றஞ்சாட்டினார்[3].

சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா[4]: சாதிக் பாட்சா மரண வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழும் சூழலில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால், ராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ம் தேதி, சாதிக்கின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் காலை 9.45 மணிக்கு பிணவறைக்குள் நுழைந்த டாக்டர் டிகால், 1.30 மணிக்கு உடல் வெளியில் சென்ற பின், வெளியே வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், சில தகவல்களை தெரிவித்து விட்டுச் சென்றார். பரபரப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவை பல தரப்பிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் திடீரென ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக, டாக்டர் டிகால் கூறியதாவது[5]: “சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த பின், நான் ராஜினாமா செய்யவில்லை. இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை[6]. கடந்த 3ம் தேதியே ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்குனர், சுகாதாரத்துறை செயலரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் என்னை பணியில் இருந்து விடுவிக்காததால், இம்மாதிரியான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். தேர்தலில் நிற்பதற்காகத் தான் ராஜினாமா செய்தேன். முக்கிய கட்சியில், “சீட்’ கேட்டிருந்தேன். அவர்கள் கொடுக்கவில்லை; ஆதலால், சுயேச்சையாக கட்டாயம் போட்டியிடுவேன். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன்[7].
இறந்தவர் சாதிக் பாட்சாவா? வேறு யாருமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பிரேதம் வரும் போது பிணவறையில் உள்ள ஊழியர்கள், பிரேதத்தை பெற்றுக் கொண்டு அடையாளங்களை பரிசோதனை செய்து பிணவறை உள்ளே வைக்க அனுமதிப்பர். பிரேத பரிசோதனை செய்யும் போது, போலீசார் முன்னிலையில், இறந்தவரின் உறவினர் அடையாளம் காட்டுவார். அதன் பிறகே, பிரேத பரிசோதனை செய்வோம். இறந்தவர் சாதிக் பாட்சாவா? வேறு யாருமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
பணியில் விடுவிக்க கேட்டுள்ள கோர்ட்டில் மனு தாக்கல்: போலீசார் கொடுக்கும் அடையாளங்களை வைத்து, இறப்பிற்கான காரணத்தையும், இறப்பின் தன்மையையும் சோதனை செய்து, அறிக்கை அளிப்பேன். நான் இதுவரை 500 பிரேத பரிசோதனைகளுக்கு மேல் செய்துள்ளேன். அது தொடர்பான வழக்குகளில் இருந்து நான் தப்ப முடியாது. அதுபோல் தான் இந்த வழக்கும்; இதிலும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் சாட்சி சொல்வேன். இவ்வாறு டிகால் கூறினார். டாக்டர் டிகால் தன்னை பணியில் விடுவிக்க கேட்டுள்ள விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கக் கோரி, கோர்ட்டில், “மேண்டமஸ்’ மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜினாமாவை அரசு நிராகரிப்பு: இந்த நிலையில் டாக்டர் டெக்காலின் ராஜினாமாவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. மேலும் அவரை பணியிலிருந்து விடுவிக்கவும் அது மறுத்து விட்டது. இதுகுறித்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. இளங்கோ கூறுகையில், மார்ச் 3ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் டெக்கால். சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனைக்கு முன்பாகவே அவர் கொடுத்து விட்டார். தற்போது மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. அவர் செவ்வாய்க்கிழமையன்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

பாமக / திமுககாரர்?: டாக்டர் டெக்காலின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டெக்கால் ஏன் திடீரென தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்தார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது[8]. ஆங்கில பத்திரிக்கை ஒன்று பாமக கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றது[9]

வேதபிரகாஷ்

22-03-2011


[4] சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=210217

[9] Dekal’s father is said to have been a PMK member.

http://www.dailypioneer.com/325838/Twist-in-autopsy-doctor%E2%80%99s-tale.html

ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!

மார்ச் 17, 2011

ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!

ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

தூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உறவினர்கள் கண்ணீர்சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா?! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த சாதிக்? ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்?: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;

லட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].

பெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.

மர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.

டில்லியில் பரபரப்புஅரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார்? சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

ஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.

தெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன? இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.

வேதபிரகாஷ்

17-03-2011


[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=206895

[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207026

சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்!

பிப்ரவரி 23, 2011

சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்!

 

சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[1] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!

ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை: புதுதில்லி, பிப். 22: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்[2]. இவ்விருவரையும் சென்னையிலிருந்து, சி.பி.ஐ இங்கு கொண்டு வந்துள்ளானர், ஆனால், கைது செய்யப் படவில்லை[3] என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக வந்த பணம், பாட்சாவுக்குச் சொந்தமான க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை [22-02-2011] விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவருக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார், என்று தமிழ் பத்திரிக்கைகள் கூறுகின்றன.

 

சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் சாதி பாட்சா தொடர்புகள்:. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வா, தமக்கு பாட்சாவை கடந்த சில ஆண்டுகளாகத் தெரியும் என சிபிஐ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இருவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவஎர்களுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் பினாமி போக்குவரத்துகள் நடபெற்றுள்ளன மற்றும் அதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்ர்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் கூர்மையாக நோக்கத்தக்கது. எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்…

 

தனி விமான நிலையம் வைத்துள்ள சாஹித் உஸ்மான் பல்வா; 22-02-2011 அன்று தீஸ் ஹஜாரி கோர்ட்டில், சுப்ரமணியன் சுவாமி கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்: குஜராத் பல்வாவின் சொந்த ஊராகும். குஜராத்தில் பனஸ்கந்தா மாகாணத்தில் பலன்பூர் என்ற இடத்தில் சாஹித் உஸ்மான் பல்வாவிற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு விமான நிலையம் எல்லா வசதிகளுடனும் உள்ளது[4]. ஹெலிகேப்டர் மட்டுமல்லாது, விமானமே வந்து செல்லக்கூடிய அளவில் ஓடுபாதை முதலியன உள்ளன. இங்கு ராஜா வந்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார். அதுமட்டுமல்லாது, குற்றப் பின்னணியில் உள்ள ஆட்களை இங்கிருந்து துபாய்க்கு அழைத்து செல்வது, அங்கிருந்து, இங்கு வருவது போன்ற காரியங்களும் நடப்பதாக கூறியுள்ளார்[5]. இவையெல்லாம் அரசுதுறைகளுக்குத் தெரியாமல் நடந்து வருகின்றன[6].

 

தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[7]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

 

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[8]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[9]. இனி இந்த பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[10].

ஸ்பெட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ ஏன் ஆராயவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு, அவ்விவரங்கள் தமக்குத் தெரியாது என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். சுப்ரமணியன் சுவாமியின் புகாரும் தம்மிடம் இல்லை என்றனர். உடனே ஒரு நகலை சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு கொடுத்தார். நீதிபதி, தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயும்படி பணித்துள்ளது[11].

 

வேதபிரகாஷ்

23-02-2011


[1] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/

[4] Shahid Usman Balwa was “running an illegal private airport at Palanpur in Banaskantha district of Gujarat” from where he hails.

http://www.thehindu.com/todays-paper/tp-national/article1482340.ece

[5] He said Mr Balwa uses the private airport to travel frequently, even abroad, and may be without informing the authorities. “Mr Balwa owns private jets and all kind of VIPs and criminals can go from there without any check,” Mr Swamy alleged. http://deshgujarat.com/2011/02/22/balwa-owns-illegal-private-airport-in-gujarats-palanpurswamy-to-court/

[6] The airport, he said, was being used by Balwa and “all kinds of VIPs and criminals” to enter and leave the country without informing the authorities.

[7] Mr Swamy also claimed that as per an Union home ministry report, Mr Balwa is linked to fugitive underworld don Dawood Ibrahim. http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=360087&catid=36

[8] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s  restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40

[11] Special Judge (CBI) Pradeep Chaddah had earlier stayed further proceedings in the complaint as per Section 210 of the Criminal Procedure Code and called for a detailed report from the CBI, asking it to state whether the national security aspect was being covered by the probe into the spectrum scam. However, the CBI investigating officer in his report submitted on Tuesday sidestepped the question by answering that he was “not aware of the details of national security aspects raised by the petitioner” as a copy of the complaint was not made available to him

http://www.thehindu.com/todays-paper/tp-national/article1482340.ece

 

எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்!

பிப்ரவரி 18, 2011

எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்!

சி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா? எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்! அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம்! உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள்? ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ?

கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்! கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம்! சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].

சென்னைவாசிகளுக்கேத் தெரியாத ரெய்ட்! கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான்! அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை!

கனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா? மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.

கலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம்! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

கடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

18-02-2011


[2] தினமணி, கணக்குகளை சரிபார்க்கலாம்: கலைஞர் டி.வி. First Published : 16 Feb 2011 08:14:51 PM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%E……….ID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

[3] The raid concluded around 6 a.m., the sources said. Top management of the Kalaignar TV was present during the search, the sources said. The Hindu, CBI raids Kalaignar TV premises,
CHENNAI, February 18, 201http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1467762.ece

[5] தினமணி, கலைஞர் டிவி அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை, First Published : 18 Feb 2011 11:28:30 AM IST; Last Updated : 18 Feb 2011 12:34:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=378245&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[6] தட் ஈஸ் தமிள், எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2011.

ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

பிப்ரவரி 3, 2011

ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

கருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].

காங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை!

ராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.

கொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].

கனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.

“ஹாட் அண்ட் கோல்ட் சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும்! காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.

ராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது! அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம்.  ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது.  இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்  கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது!.

© வேதபிரகாஷ்

02-02-2011


ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)?

திசெம்பர் 8, 2010

ரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா?

ஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா? இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும்? ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான்! அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?

பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே! இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.

காலங்கடந்த நடவடிக்கை ஏன்? உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள்    மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.

சி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும்? இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.

தேர்தல் பேரத்திற்கு ஒத்திகையா? வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல்  பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம்  தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.

சோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா? கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா? இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா? அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே? நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.

காங்கிரஸ்-திமுக ஊடலா, ஊழலா? இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்!

வேதபிரகாஷ

09-12-2010


ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

திசெம்பர் 8, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.

அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].

பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].

ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!