Archive for the ‘பெல்லாரி’ Category

சுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்!

நவம்பர் 12, 2016

சுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம்ரூ 500 கோடிகள் செலவாம்!

janardhan-reddy-daughter-marriage-telugu

பணக்காரர்களுக்கு என்றால் சட்டம் வளையும் போலிருக்கிறது: இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று  நடத்துவதற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்[1]. ரூ. 500 கோடி செலவில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[2].  சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங்களை எடுத்த விவகாரத்தில் சிபிஐயினால் 2011ல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015ல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், ஆனால், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற சரத்துடன் பெயிலில் வெளிவந்தார். இப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றுள்ளார்[3]. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[4]. ஏழைகளும், சாதாரண மக்களும் தான், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?

janardhan-reddy-daughter-brahmini-wedding-card-1சுரங்க மோசடியில் சிக்கியவர் மகளுக்கும், சுரங்க அதிபரின் மகனுக்கு திருமணம்: சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவ‌ம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது[5]. இதனை “சுரங்கப் பொருத்தம்மென்பதா, மணப்பொருத்தம் என்பதா என்று தெரியவில்லை. நவம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன[6]. லோக் சபா உறுப்பினர் பி. ஶ்ரீராமுலு இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற  முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார்.  ரெட்டிகள் முன்னர் இப்படி வசதியாக இல்லையா என்று தெரியவில்லை.

janardhan-reddy-invitation-cardரூ. 50,000/-க்கு திரைப்பட பாணியில் வீடியோ அழைப்பிதழ்: திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும், அதாவது ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.50,000/- ஆகும்[7]. ஏதோ அன்பளிப்பு பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனைத் திறந்தவுடன், சிறிய எல்.சி.டி டிவி வெடெலை செய்ய ஆரம்பிக்கின்றது. பெண்-மகன் பெற்றோர் மணமக்களை அறிமுகப்படுத்தி, “அதிதி தேவோ பவ” என்று சொல்லி பாட்டு பாடுகிறது. அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப் பட்டிருந்தது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்[8]. திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது[9].  இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று கேட்கவா முடியும்?

reddy-brothers-with-shusma-swarajபணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்![10]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[12]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[13].  நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[14]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள்.

janardhan-reddy-arrested-by-cbi-2011ஊடகக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர உபசரிப்பு: ஊடகக்காரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் வந்திறங்கியதும், கார்கள் தயாராக இருக்கும்; அவரவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்; நன்றாக உனவு கொடுக்கப் படும். நிகழ்ச்சி பற்றி செய்திகளை வெளியிட இவ்வாறு அவர்கள் கவனிக்கப்படுவார்கள். இதைத்தவிர, அவர்களே தனியாக, புகைப்படங்கள், வீடியோ, விளக்கு அமைப்பு முதலியவற்றை பிரத்யேகமாக செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு, அங்கு எல்லோருக்கும் செம ஜாலிதான், எல்லாமே கிடைக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, ஊடகங்களும் தங்களது நன்றியை இப்பொழுதே தெரிவிக்க ஆரம்பித்து விட்டன. என் டி டிவி, அந்த அழைப்பிதழ் வீடியோவை வெளியிட்டுள்ளது[15]. “இந்தியா டிவியும்” போட்டிப் போட்டுக் கொண்டு விவரத்துடன் வெளியிட்டுள்ளது[16]. பிறகென்ன ஊழல்-வெங்காயம்-வெள்லப்பூண்டு எல்லாம்! ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா? இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா? தெரியவில்லை, ஆனால், அனைவற்றையும் மறந்து, ஆடம்பரமாக திருமணம் நடக்கப் போகிறது. இதில், எந்தெந்த பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

janardhan-reddy-with-ediyurappa-cm

© வேதபிரகாஷ்

12-11-2016

[1] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா ?, By: Karthikeyan, Published: Friday, November 11, 2016, 19:45 [IST]

[3] Reddy was arrested by the CBI in 2011 on charges of large-scale illegal mining and the Supreme Court granted him bail in January 2015, on the condition that he shall not visit Ballari. However, following a plea by Reddy, the SC allowed him to visit Ballari for 21 days from November 1 in connection with the rituals relating to his
daughter’s wedding.http://www.deccanherald.com/content/580621/four-day-star-nite-wedding.html

[4] http://tamil.oneindia.com/news/india/a-rs-500-crore-wedding-demonetise-that-266983.html

[5] http://tamil.oneindia.com/news/india/a-rs-500-crore-wedding-demonetise-that-266983.html

[6]  Deecan Herald, Four-day star nite for wedding of Janardhana Reddy’s daughter, Saturday 12 November 2016, News updated at 5:40 PM IST.

[7] http://cinema.dinamalar.com/tamil-news/53007/cinema/Kollywood/Jannarthana-Reddy-house-function—Tamil-actress-dance.htm

[8] firstpost.com, Ex-Karnataka Janardhan Reddy’s daughter’s wedding invitate is a true multimedia experience, FP Staff  Updated: Oct 20, 2016 09:58 IST.

[9] http://www.firstpost.com/politics/this-wedding-invitation-of-karnataka-ex-minister-janardhan-reddys-daughter-has-lcd-screen-3060928.html

[10] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்!

November 12, 2016, Chennai

[11]http://m.chennaionline.com/article/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=258297

[13] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.

[14] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.

[15] http://www.ndtv.com/karnataka-news/now-the-big-fat-wedding-invite-produced-by-ex-minister-janardhan-reddy-1476128

[16] http://www.indiatvnews.com/buzz/life-video-elaborate-wedding-invite-for-ex-minister-janardhan-reddy-s-daughter-has-lcd-screen-352952