Archive for the ‘பூதானம்’ Category

அரசு புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டு குடியிருந்தால் பட்டா : முதல்வர் கருணாநிதி

ஜனவரி 31, 2010

இலவச மனைபட்டாவும், வரவிருக்கும் பிரச்சினைகளும்

© வேதபிரகாஷ்

முன்னுரை: சமீபத்தில் இலவசமனைபட்டா வழங்குவது என்பது தமிழகத்தில் ஒரு சாதாரணமான செய்தியாகிவிட்டது. அதிலும் குறிப்பாக வீட்டுமனை / நிலங்களின் விலை கோடிக்கணக்கில் உயர்கின்ற நிலையில், நாளுக்கு நாள் நிலமோசடிகள் பெருகிவரும் நிலையில், கோவில் நிலத்தையே அரசு தவறுதலான ஆணையிட்டு பாட்டா போட்ட நிலையில், போதாக்குறைக்கு தொழிற்பூங்காக்களுக்கு ஒதுக்கீடு செய்வது முதலியன தொடடும் நிலையில், இவ்வாறு இலவசமாகக் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. அதுமட்டுமல்லாது, அவ்வாறு அரசு வெளியிடும் ஆணைகளில் உள்ள முக்கியமான சரத்துகள் நாளுக்கு நாள் நீர்த்துவருவது தெரிகின்றது. உதாரணத்திற்கு சில ஆணைகளின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செய்தி வெளியீடு எண். 681 நாள்: 05-102009: ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டம் மற்றும் ஓராண்டு காலம் நீட்டிப்பு[1].

செய்தி வெளியீடு எண். 324 நாள்: 01-05-2009: தமிழகத்திம் பல்வேறு நகரங்களிலும் அமையும் தகவர் தொழில்நுட்ப தொழிற்பூங்காக்களில் 8 தொழில் நிறுவனங்களுக்கு 160 ஏக்கர் நில ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது[2].

மேலும், விவரங்கள் வேண்டுமானால், தமிழக அரசு தளத்திலிருந்து பார்த்துப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்[3].

மறுபடியும் சரத்துகள் தளர்த்தப்படுகின்றன: 29-01-2010: அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போருக்கு, அவர்களது ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது. பின் இத்திட்டத்தில், காலவரையறை பத்து ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன், பட்டா பெற நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான உச்சவரம்பும் முற்றிலும் நீக்கப்பட்டது[4]. இதன் பயனாக, கடந்த மூன்று ஆண்டுகளில், ஆறு லட்சத்து 99 ஆயிரத்து 917 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், மேலும் பலர் பயன்பெறும் வகையில், குறைந்தபட்ச குடியிருப்பு கால வரம்பு மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுமென, சட்டசபையில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, அரசு நிலங்களில் மூன்று ஆண்டுகள் குடியிருந்தாலே, வீட்டுமனைப் பட்டா வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வினோபா பாவாயின் பூதான திட்டமா என்ன, நிலத்தை இலவசமாகக் கொடுக்க? கடந்த இருவருடங்களாக இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன: மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, ஆஹா, என்ன அற்புதமான திட்டம், “நிலம் இல்லாதவர்களுக்கு நிலம்” என்று வியப்பர். ஆனால், இதன் பின்னணியில் பல விஷயங்கள் வெளிவருகின்றன. முன்பு வினோபா பாவே (1895-1982) என்றவொருவர் இருந்தார், அவர் கால் நடையாகவே நடந்து சென்று “பூதான இயக்கம்” நடத்தி பல மக்களுக்கு உதவியுள்ளார். நாடு முழுவதும் பாதயாத்திரை செய்து பணக்காரர்களை ஊக்குவித்து ஏழைகளுக்கு நிலத்தை தானமாகத் தரச் செய்தார். அவ்வாறு அவர் இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சியில் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம் நான்கு மில்லியன் ஏக்கர்! அதாவது 40,00,000 – நாற்பது லட்சம் ஏக்கர்!

பூதானமும், இலவசமும்: இன்றோ இலவசமாகக் கொடுக்கப்படுகிறதாம்! என்னே காலத்தின் கோலம்! “புறம்போக்கு” என்று சொல்வதே கேவலம், ஏனெனில், இந்நாட்டின் நிலம் “புறம்போக்கு” என்றால் அசிங்கம் இல்லையா? ஆனால், அது அரசாணைகளில் பவனி வருகின்றது. தார்மீக எண்ணங்கள் குறைய, குறைய அசிங்களுக்குத் தான் மரியாதை ஏறுகின்றது. ஏப்படியாவது கொள்ளையடிக்கவேண்டும் என்று தீர்மானித்தப் பிறகு, தனிமனித நியாயங்கள் பேசப்படுகின்றன. அப்படித்தான் ஆள்கின்றவர்களும் பேசி கொழுத்துவிட்டார்கள். அரசியலாக்கப் பட்ட இந்த திட்டங்களில் ஊழல்தான் மிஞ்சுகிறது.

இலவசங்களில் சலுகைக் காட்டுவது ஊழலை ஊக்குவிப்பதாக உள்ளது: அரசு நிலங்களில் தைரியமாகச் சென்று குடிசைப் போட்டுக் கொண்டால், வீடு கட்டிக் கொண்டால், பத்தாண்டுகளில், ஐந்தாண்டுகளில், மூன்றாண்டுகளில் அவ்வாறு அக்கிரமித்தவர்களுக்கே நிலம் இலவசம் என்று சொல்வதைப் போல உள்லது1. இதனால்தான், எல்லாக் கட்சிகளும், இதில் இறங்கியுள்ளன. இது தமிழ் திரைப்படங்களில் வரும் ஆபாச ஜோக்குகளைவிட கேவலமாக இருக்கிறது.

அரசியலும், சித்தாந்தமும்: செய்யும் தவறுகள் சித்தாந்தம் பேசி மறைக்கப்படுகிறது. இலவச மனைபட்டா விநியோகத்தில் தமிழ்நாடு மேற்கு வங்காளத்தை விஞ்சிவிட்டது என்று கருணாநிதி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மே 2006லிருந்து 1,75,798 குடும்பங்களுக்கு 2,10,747 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. 6,46,785 பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. ஆனால் 2006 மற்றும் 2007 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் விநியோகிக்கப்பட்ட பட்டாக்கள் முறையே 1,577 மற்றும் 1,839 தான்[5]!

பட்டா விநியோகத்தைத் துரிதப் படுத்துங்கள்[6]!

வீட்டு வாசலிலேயே பட்டா விநியோகம்[7]!

ஐந்து கால / நேர இடைவெளிகளில் திட்டமிட்டு பட்டா விநியோகம் நடக்கும்[8]!

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

இலவச பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கைக்குழந்தை மயங்கியதால் பரபரப்பு: கோவை ஜனவரி 11, 2010:  கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. அதில் 20 ஆண்டு காலமாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம். எந்த பயனும் இல்லை. உடனடியாக எங்களுக்கு பட்டா வழங்க வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 66-வது வார்டு கண்ணப்ப நகர், நாராயணசாமி லே அவுட், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டு மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

திருப்பூரில் வீடு உள்ளவர்களுக்கும் இலவச பட்டா: Last Updated :

திருப்பூர், ஜன.13, 2010: திருப்பூர் பகுதியில் வீடு உள்ளவர்களுக்கும் முறைகேடாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது[10]. இதை அதிகாரிகள் கவனித்து தடுக்க வேண்டும் என்று திருப் பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி தெரிவித்தார். திருப்பூரை அடுத்த இடுவாய் ஊராட்சி எம்ஜி நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 173 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைகளை அடுத்து முதற் கட்டமாக 100 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருந்தது. விடுபட்ட 73 குடும்பத்தினருக்கும் பட்டா கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனடிப்படையில், 63 குடும்பங்களுக்கு இலவச பட்டா புதன்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி, பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், வீடுள்ள சில முக்கிய நபர்களும் இலவச பட்டாக்கள் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், உண்மையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற முறைகேடான செயல்பாடுகளை அரசு அதிகாரிகள் கவனத்து தடுக்க வேண்டும் என்றார். வட்டாட்சியர் மனோகரன், மண்டல துணை வட்டாட்சியர் ஐ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு செய்திக்குறிப்பு ஜனவரி 05, 2010: தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருவோருக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி ஓட்டன்சத்திரத்தில் பேசியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 7 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டுள் ளது[11].  ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங் கப்பட உள்ளது.

காரைக்குடியில் வீடுமனை பட்டா வழங்குவதில் ஊழல்: பிப்ரவரி 06,2009: காரைக்குடியில் அரசு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தாசில்தார், கிளார்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்[12]. காரைக்குடி அண்ணாநகர், கழனிவாசல், ஜீவா நகர், கணேசபுரத்தில் அரசு நிலங்களில் 10 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த 2,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டன. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 3.5 சென்ட் வீட்டு மனை பட்டா தர வேண்டும். ஆனால், காரைக்குடி தாசில்தாராக (தற்போது சிவகங்கை டாஸ்மாக் மேலாளர்) இருந்த அருணாசலம், கிளார்க் நாகநாதன் உட்பட வருவாய்த் துறையினர் அரசு உத்தரவை மீறி முறைகேடாக 87 சென்ட் வரை வழங்கினர்.இதன் மூலம் ஐந்து கோடி ரூபாய் வரையிலான அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.  இது குறித்து மாநில நில நிர்வாக ஆணையருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முறைகேடு கண்டறியப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.தனியாருக்கு அரசு நிலங்களை தாரை வார்த்ததற்காக அப்போதைய தாசில்தார் அருணாசலம், பட்டா பிரிவு கிளார்க் நாகநாதனை அரசு உத்தரவுப்படி சிவகங்கை கலெக்டர் பன்சால் சஸ்பெண்ட் செய்தார்.

கல்வீடு கட்டியவர்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும் நவ. 6, 2009: புதுச்சேரி: புறம்போக்கு இடத்தில் கல்வீடு கட்டியவர்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலர் ஆ. அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் வைத்திலிங்கத்துக்கு அவர் அனுப்பிய கடிதம்: 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடங்களில் தன் சொந்தச் செலவிலும், கடன் வாங்கியும் சிறிய அளவில் கல்வீடாகக் கட்டியுள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு,…

கட்சி உறுப்பினர் ஆனால் இலவச மனைப்பட்டா: டிசம்பர் 20,2009: தேனியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய “டெக்னிக்’கை காங்., கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர்[13]. தேனி மாவட்டத்தில் 1 லட்சம் பேரை உறுப்பினர் களாக சேர்க்கும் பணியில் மாவட்ட காங்., கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் போட்டோகிராபருடன் வீடு வீடாக சென்று போட்டோ எடுத்து வருகின்றனர். “எதற்காக போட்டோ எடுக்கிறீர்கள்’ என கேட்பவர்களிடம், “உங்களுக்கு இலவச மனை பட்டா, வங்கி கடன் கிடைக்கும். அதற்காகத்தான் போட்டோ எடுக்கிறோம்’ என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். விபரம் தெரிந்தவர்களிடம் “உறுப்பினர் சேர்க்கிறோம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்றால் பல உதவிகளை வழங்குவோம்’ என கூறுகின்றனர். தேனி அல்லிநகரம் பங்களாமேடு பகுதியில் நேற்று காலை காங்., கட்சியினர், பலரிடம், “நலத் திட்ட உதவி’ எனக்கூறி போட்டோ எடுத்தனர். உஷார் அடைந்த மற்ற கட்சியினர், இதெல்லாம் ஏமாற்று வேலை என

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பங்கள்: அழகிரி, “நான் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுக்கிறேன்ஏப்ரல் 30,2009: அரசியல் பேசாத அழகிரியின் பிரசாரம் ஏப்ரல் 30,2009 வேட்பு மனு தாக்கலுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கியவர் மதுரை தொகுதி தி.மு.க., வேட்பாளர் மு.க.அழகிரி. எடுத்த எடுப்பிலேயே கிராமப்புறங்களில் பிரசாரம் செய்த இவர், சில நாட்களாக மாநகராட்சி எல்லைக்குள் வலம் வருகிறார். அவரோடு பிரசாரத்தில் ஒருநாள்…பெரும்பாலும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை பெற்றுக்கொண்ட அழகிரி, “நான் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று மைக்கில் அறித்தார்[14].

வீடு உள்ளவர்களுக்கும் இலவச பட்டா: எம்எல்ஏ குற்றச்சாட்டு : திருப்பூர் பகுதியில் வீடு உள்ளவர்களுக்கும் முறைகேடாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து தடுக்க வேண்டும் என்று திருப் பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி தெரிவித்தார்.திருப்பூரை…

Source : Dinamani | 17 Day(s) Ago Category : City | City : Thirupur

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டு வசித்தால் பட்டா! : அரசு புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு இலவச பட்டா அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.அரசு புறம்போக்கு நிலங்களில்…

Source : Oneindia | 1 Day(s) Ago Category : Headlines

இலவச வீட்டுமனை கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு: மதுரை, ஜன.4: மதுரையில் இலவச வீட்டுமனை கோரி பெண்கள் அமைப்பினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தெப்பக்குளம், அனுப்பானடி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர்…

Source : Dinamani | 26 Day(s) Ago Category : National | City : Madurai

3 ஆண்டு குடியிருந்தாலே இலவச மனைப்பட்டா: அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி, மூன்று ஆண்டுகளுக்குமேல் குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ்,…

Source : Chennai Online | 2 Day(s) Ago Category : National | City : Chennai

சென்னை, ஜன.29: பகுதியில் வசிக்கும் குடிசை வாழ் மக்கள் 2620 பேருக்கு அடுத்த வாரம் இலவச மனைப்பட்டா வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில் இன்று…

Source : Maalaisudar | 29 Day(s) Ago Category : City | City : Chennai

சென்னை, ஜன.29: கோடம்பாக்கம் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் புறம்போக்கு நிலத்தில் இரண்டு மாடி வீடுகட்டி அதற்கு இலவச மனைப்பட்டா பெற்றிருக்கிறார். ஆனால் அவரது வீட்டிற்கு அருகிலேயே குடிசை வீட்டில் வசிக்கும் பட்டம்மாள் என்ற…

Source : Maalaisudar | 29 Day(s) Ago Category : City | City : Chennai

முடிதிருத்துவோருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை : டிச.​ 4:​ காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடித்திருத்தும் தொழில் செய்பவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வே…..

Source : Dinamani | 27 Day(s) Ago Category : City | City : Kanchipuram

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் குவிந்தனர் : திண்டுக்கல்,ஜன.௫- திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்து இருந்தனர். வீட்டுமனைப்பட்டா திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்…

Source : Dailythanti | 26 Day(s) Ago Category : National | City : Dindigul

விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்க சிறப்பு கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சிஜிதாமஸ் வைத்ய : விருதுநகர், ஜன.௬- விருதுநகர் மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாத ஊராட் சிகளில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற தகுதி உள்ள பயனாளி களை தேர்வு செய்யும் பொருட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள் ளதாக கலெக்டர்…

Source : Dailythanti | 25 Day(s) Ago Category : National | City : Viruthunagar

திருப்புறம்பியத்தில் 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா : கும்பகோணம், ஜன.11: கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் ஊராட்சியில் 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.திருப்புறம்பியம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல்…

இப்படி செய்திகள் பலப்பல………………………………………………..

வரவிருக்கும் பிரச்சினைகள்: அரசியல் தாதா மக்களை அனுப்பி, குறிப்பிட்ட நிலத்தில் குடிசைப் போட்டு வாழச் சொல்கிறான். அரசியல் கொடி நட்டு அவ்வாறு ஆரம்பித்தால் அதை தட்டிக் கேட்க யாரும் முன்வருவதில்லை. வேண்டுமானால், இதில் தான் கட்சிகள் சமரசத்துடன், தத்தமது உள்ளூர் ஆதிக்கம், பலம் முதலிய காரணிகள் மூலம் தமது அக்கிரமிப்புகளைத் துவங்குகின்றன. பட்டாக்கள் நாளை வழங்கப்பட்டால், அவை அவர்களுடைய பெயரில்தான் இருக்கும். ஆனால், யோசனை சொன்னவன், வழிகாட்டியவன், அனுமதித்தவன், “அட்வான்ஸ்” கொடுத்தவன்…………….இவர்கள் எல்லாம் சும்மா இருப்பார்களா? கோவில் நிலத்தை தவறாக ஆணைப் போட்டு, பட்டா போட்டு, இந்த அரசு விற்று, பிறகு தவறு என்று வாபஸ் வாங்கிக் கொண்டது[15]. ஆனால், வான்கிய – அதில் முஸ்லிம்-கிருத்துவர்களும் அடங்குவர் – ஏற்கெனவே, சங்கம் அமைத்து மாநாடுகளையே[16] நடத்திவிட்டனர்!

© வேதபிரகாஷ்

31-01-2010


[1] இவையெல்லாம் தமிழில்தான் இருக்கின்றன. http://www.tn.gov.in/pressrelease/archives/pr2009/pr051009/pr051009_681.pdf

[2] http://www.tn.gov.in/pressrelease/archives/pr2008/pr010508/pr010508_324.pdf

[3] http://www.tn.gov.in/gorders/house/default.html மற்றும் http://www.tn.gov.in/gorders/house/default.html

சிலவற்றை தமிழில் இங்கேயும் பார்க்கலாம்: http://www.tn.gov.in/tamiltngov/index.html

[4] இலவச பட்டா, [Press Release No.97] ( Honble Chief Ministers statement on Free House Site Patta ), இங்கே பார்க்கவும்: http://www.tn.gov.in/pressdb/pr29Jan10/pr290110_97.pdf

[5] Special Correspondent, Karunanidhi compares State’s land reforms record with that of Bengal, http://www.thehindu.com/2009/11/11/stories/2009111154190400.htm

[6] Staff Reporter, “Speed up patta distribution”, http://www.thehindu.com/2009/01/20/stories/2009012059810600.htm

http://www.hinduonnet.com/2009/02/06/stories/2009020658210200.htm

[7] Syed Muthahar Saqaf,  Villagers get ‘patta’ on their doorstep,

http://www.thehindu.com/2010/01/02/stories/2010010252150400.htm

[8] http://www.hindu.com/2007/12/31/stories/2007123150160300.htm

[9] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/01/11154630/CBE05110110.html

[10] தினமணி, வீடு உள்ளவர்களுக்கும் இலவச பட்டா: எம்எல்ஏ குற்றச்சாட்டு, First Published : 14 Jan 2010 06:26:55 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=EditionCoimbatore&artid=183055&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=

[11] தினமலர், 7 லட்சம் பேருக்கு பட்டா அமைச்சர் பெரியசாமி பேச்சு, ஜனவரி 05,2010

http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=283016&ncat=Dindigul

[12] தினமலர், இலவச பட்டாவில் முறைகேடு தாசில்தார், கிளார்க் சஸ்பெண்ட் , பிப்ரவரி 06,2009, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8402

[13] தினமலர், காங்., உறுப்பினர் சேர்க்கை தேனியில் புதியடெக்னிக், டிசம்பர் 20,2009

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15713

[14] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=10178

[15] http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

[16] Special Correspondent, Tenants of mutt and temple lands seek ownership rights,  in “The Hindu” dated 27-08-2008,  http://www.hindu.com/2008/08/27/stories/2008082754930600.htm