Archive for the ‘பிஷப்’ Category

மூன்று கோடி முறைகேடு பிஷப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு?

ஜனவரி 20, 2010

தலைமறைவான பிஷப்புக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு
ஜனவரி 20,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15551

கல்வி நிறுவனங்களைப் பற்றி தேடும்போது, இச்செய்தியும் உள்ளது! சேலம் : கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் பிஷப் மாணிக்கம் துரை, சேலத்தில் உயர் பதவி வகிக்கும் இரு போலீசாரின் ஆதரவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் பிஷப்பாக இருப்பவர் மாணிக்கம் துரை. கோவை, தர்மபுரி, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சி.எஸ்.ஐ., பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்விக் கூடங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட இந்த எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள், சொத்துக்களின் பராமரிப்பு, நிர்வாகப்பணிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கண்காணித்த போதிலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், கோவை திருமண்டலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் பிஷப்பையே சார்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், பிஷப் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. “அவரிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோடிகணக்கில் ஊழல் என்றால் அத்தகையோரின் தலமையில் நடக்கும் கல்வி என்னாவது? கடந்த 10ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிஷப் மாணிக்கம் துரை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணிக்கம் துரை தலைமறைவானார். சேலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு போலீசாரே ராஜமரியாதை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் தான், மாணிக்கம் துரையை சி.பி.சி.ஐ.டி.,யின் வலையில் இருந்து பாதுகாத்து, நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற வக்கீல்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னையிலுள்ள உயர்அதிகாரிகள் வரை புகார் சென்றுள்ளது. மாணிக்கம் துரை ஏற்கனவே கோவை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

உள்நாட்டு / வீட்டுப் பிரச்சினை போல பேசி மழுப்புவது! இந்த பிரச்சினை தொடர்பாக சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட் டம் ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அலுவலகத்தில் நடைபெற்றது.திருமண்டல செயலாளர் ரிட்சர்டு துரை தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளரும், கல்விக்குழு தலைவருமான அமிர்தம் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமிர்தம் மற்றும் வக்கீல் சாக்ரடீஸ் ஆகியோர் கூறியதாவது:- “பிஷப் மாணிக்கம் துரை தலைமறைவாக இல்லை. இறைப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அவரை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிறகு மாற்றுக் கருத்து வருவது பொய்யைத்தான் காட்டுகிறது! இந்த நிலையில் தென் இந்திய திருச்சபை முதன்மை பேராயர் கிளன் ஸ்டோன் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு வந்து பிஷப் மாணிக்கம் துரை குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பேராயர் நிலையில் இருப்பவர்கள் திருச்சபையின் நிதியை பாதுகாப்பது முக்கியமாகும். இறை பணி செய்வதையே கடமையாக கொண்டவர்கள் மீது இது போன்ற புகார்கள் எழுவது இறைமக்களை புண்படுத்துவது போல் ஆகும். இந்த மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துபேசி எடுக்கப்படும்.

பிஷப்புக்கு கருப்புக் கொடி: சர்ச் வளாகத்தில் பரபரப்பு (செப்டம்பர் 29,2008,00:00  IST) : கோவை மண்டல பிஷப் மாணிக்கம் துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டப்பட்டதால் சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மண்டல பேராயராக இருப்பவர் மாணிக்கம் துரை. இவர் தனது அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ மக்களின் பொதுப்பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 7ம் தேதி சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து, இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நியாயம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.கூட்டத்தில் இருந்து மாணிக்கம் துரை வெளியேறி விட்டார். இதுகுறித்து விவாதிக்க, அடுத்த நாளே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஆலயத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது; இதுவரை கூட்டம் கூட்டப்படவில்லை. அதிருப்தி அடைந்த சி.எஸ்.ஐ., ஆலய உறுப்பினர்கள் நேற்று திடீரென சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்துக்கு வெளியில் கூடினர். அப்போது சர்ச்சுக்கு வந்த பிஷப்பின் கார் வழிமறிக்கப்பட்டு, கருப்புக் கொடி காட்டப்பட்டது. மேலும், பிஷப்பைக் கண்டித்தும், பண மோசடி குறித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால், சர்ச் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.