Archive for the ‘தீபாவளி இனிப்புகள்’ Category

தீபாவளி இனிப்புகள், அழகான கலப்படங்கள், விஷமான ஸ்வீட்டுகள், மாறிவரும் காலத்தின் அலங்கோலங்கள்

நவம்பர் 2, 2010

 

தீபாவளி இனிப்புகள், அழகான கலப்படங்கள், விஷமான ஸ்வீட்டுகள், மாறிவரும் காலத்தின் அலங்கோலங்கள்

பண்டிகைகள் இந்தியாவிற்கு புதியதல்ல, ஏனெனில் அவை கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுடன் இணைந்துள்ளது. என்னத்தான் புதிய விழாக்கள் / கொண்டாட்டங்கள் இறக்குமதி செய்தாலும்[1] அவற்றை மாற்ற முடிவதில்லை. கடந்த வருடங்களாக பண்டிகை எதிர்ப்புக் கூட்டங்கள் வேறு பிரச்சாரம் செய்து வருகின்றன[2], ஆனால், ஒன்றும் மாற்றம் இல்லை[3]. தீபாவளியும் அப்படித்தான். அது இப்பொழுது ஒரு பொதுப் பண்டிக்கையாகி விட்டது எனலாம், இருப்பினும் இனிப்பு என்று வரும்போது, கடந்த பல ஆண்டுகளாக கலப்படத்தினால் அதிக ஆரோக்யத்திற்கு கேடான ஆபத்து பெருகிவருகிறது. அதாவது, ஸ்வீட் உற்பத்தியாளர்கள் அதிக லாபத்தைப் பெருக்க போலி மூலப்பொருட்களையும், ரசாயனப் பொருட்களையும் அதிகமாக கலக்கின்றனர். அவற்றை கீழ்கண்டவாறு பட்டியல் இடலாம்:

 1. ரசாயனப் பொருட்கள் (chemicals),
 2. போலியான மாற்றுகள் (artificial / duplicate substitutes),
 3. ரசாயன மாற்று மூலப்பொருட்கள் (chemical inputs / substitutes)
 4. தாவர எண்ணைக்குப் பதிலாக மிருகக்கொழுப்பு பயன்படுத்துதல் (கால்நடைக் கொழுப்பு, tallow etc.,),
 5. கனிமப்பாலை உபயோகித்தல் (synthetic milk, detergent milk),
 6. சேர்ப்பிகள், கூடுதல் பொருட்கள் (additives),
 7. கெடாமல் பாதுகாக்கும் ரசாயனங்கள் (preservatives),
 8. வாசனை / நிறம் தரும் ரசாயனங்கள் (essences, flavours)
 9. அழகிற்காக உபயோகப்படுத்தப்படும் அலுமினிய சரகு (Aluminium foil)

என பலவற்றை சேர்க்கிறார்கள். இவையெல்லாம் உண்மையில் நச்சுத்தன்மைக் கொண்டவை, விஷமானவை[4].

குடும்பமாக தின்பண்டங்கள் செய்த நிலை[5]: முன்பெல்லாம் குடும்பமே உட்கார்ந்து கொண்டு பட்சணங்களை / இனிப்புக்காரங்களை செய்வார்கள். பாட்டி, அம்மா, சகோதரிகள், மறுமகள்கள் என ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பலவகை பலகாரங்கள், இனிப்புகளை செய்வார்கள். அதில் எல்லோருடைய பங்கும் இருக்கும், பாசம், நேசம், அன்பும் இருக்கும். “நான் இதை செய்தேன், இந்த தடவை நான் இதை செய்தேன், இதை புது மாதிரியாக செய்தேன்,” என்றெல்லாம் கூறிப்பெருமைப் பட்டுக் கொள்வார்கள். மற்றவர்களுக்குக் கொடுத்து பகிர்ந்து உண்பார்கள். 40-60 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீடுகளில் தாம் உணவு வகைகளைத் தயாரிப்பது வழக்கம். வெளியில் வாங்குவதை மரியாதைக்குறைவாக, அசிங்கமாக, கேவலமாக நினைப்பர். அதிலும் ஓட்டல்களுக்குப் போவதை, தின்பதைக் குற்றமாகவே நினைத்து வந்தனர். அந்நிலையில் கலப்படம் என்பதற்கு பேச்சேயில்லை. மேலும் மற்றவர்களுக்கும் கொடுப்பதால், மிகவும் கவனமாகவே இருப்பர். ஏதோ சில சரியாக வரவில்லை, பதமாக இல்லை, கொஞ்சம் அதிகமாக வெந்து / வேகி விட்டது, கலர் / உருவம் / அமைப்பு சரியாகவில்லை ………..என்றெல்லாம் தான் குறையாகப் பேசப்படும். மேலும் அவற்றை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் தவறாக நினைப்பார்கள் அல்லது அவர்களது திறமையை குறைவாக மதிப்பிடுவார்கள் என்று ஜாக்கிரதையாக இருப்பார்கள்.

கூட்டுக் குடும்பங்கள் சிதறிய நிலை: ஆனால் அந்நிலை கொஞ்சம்-கொஞ்சமாகி மாறி, இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள் சிதறி, நகரவாழ்க்கை பெருக, ஓட்டல்களுக்குப் போவது, தின்பது என்பது நாகரிகமாகி விட்டது. சாப்பாட்டையே ஓட்டலிலிருந்து வரவழைத்து உண்ணும் நிலையில் குடும்பங்கள் வந்து விட்டன. பல பெண்களுக்கு சமைக்கவே மறந்துவிட்டது அல்லது தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். ஆக, ஸ்வீட்டுகளைப் பற்றி கேட்கவே வேண்டாம், அவையெல்லாம் பெண்களுக்கு மிகவும் தொலைவில் போய் விட்டன. அதுவும் கணவன்-மனைவி வேலை செய்யும் வீடாக இருந்தால் சொல்லவே வேண்டாம். மாமியார், நாத்தனார் இருந்தால் அவர்கள் செய்வார்கள், தனிக்குடித்தனம் என்றால் அவ்வளவுதான். ஒன்றும் இருக்காது. வீட்டில் செய்யவேண்டும் என்றால், ஒன்று சமையல்காரரை வைத்து செய்ய வேண்டும், அல்லது ஆண்களே / கணவன்மார்களே செய்ய வேண்டியதுதான்.

தின்பண்டங்களை வெளியே வாங்கவேண்டில நிலை: இந்நிலையில், தின்பண்டங்கள் வெளியில் வாங்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒருநிலையில் அவ்வாறு வாங்குவதே நாகரிகத்தின் அளவுகோலாகவும் மாறியது. “இந்த கடையின் ஸ்வீட்” என்று சொல்கின்ற அளவில் 1980கள் இருந்தன, அதாவது தரம், தரக்கட்டுப்பாடு இருந்தன[6]. 1990களில் அத்தகைய இனிப்பு உற்பத்தியாளர்கள் அதிகமாகி போட்டியும் உண்டாயின, விலையும் குறைவாக இருந்தன[7]. 2000களில் மேற்கத்தைய தாக்கம் காணப்பட்டது. இதனால் மறுபடியும், இந்திய தின்பண்டங்களுக்கு தோய்வு ஏற்பட்டது. பண்டிகைகளின் போது “இறக்குமதி” செய்யப்பட்ட சாக்கிலெட்டுகள் முதலியன “அன்பளிப்பாக” கொடுக்க ஆரம்பித்தனர்[8]. இருப்பினும், நிச்சயமாக இந்தியா அவற்றையெல்லாம் தகவமைத்துக் கொண்டது. இதனால் அன்னியர் / மேனாட்டவர் / இந்தியரல்லாதவர், தின்பண்டங்களின் மூலப்பொருட்களில் கவனம் செல்லுத்தினர். ரசாயன மாற்று மூலப்பொருட்களைக் கண்டுபிடுத்து அவற்றை உபயோகிக்க ஊக்குவித்தனர். முக்கியமாக அயல்நாட்டிலிருந்து அத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன[9]. முதலில் வியாபாரிகளிடம், உற்பத்தியாளர்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஆனால், அவர்களுக்கு அதிக “கமிஷன்”, அயல்நாட்டுப் பயணம், முதலிய அனுபவங்களைக் கொடுத்துக் கெடுத்து மாற்றிவிட்டனர். இதுவும் ஊழல்தான், அபாயகரமான, விஷமான ஊழல்.

கலப்படம் பெருகிய நிலை: இப்படி வெளியில் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக-அதிகமாக, அதற்கான தேவையும் அதிகரித்துவிட்டது. தேவை அதிகமாக-அதிகமாக, உற்பத்தியாளர்களின் மீதான சார்பும் அதிகமாகி, அவர்கள் தங்களது இச்சைக்கு ஏற்றபடி நடக்க ஏதுவாகிவிட்டது. தின்பண்டங்களின் தரம் குறைந்து விட்டது. அதிகமாக விற்பனைக்கு செய்யும் போக்கில் உற்பத்தி செய்வதால், உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் தரத்தைப் பற்றியும் கவலைப் படாத நிலைக்கு அவர்கள் வந்து விட்டார்கள். மேலும் கடைசி நேரத்தில் வாங்கும் போக்கும் மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதற்கு மற்ற பல காரணங்களும் உள்ளன. இதனால், ஓரிரு நாட்களில் வியாபாரம் செய்து, சம்பாதித்து பெரிய ஆளாகி விடலாம் அல்லது தப்பித்து ஓடிவிடலாம் என்ற எண்ணத்துடன் தான் கலக்கல்காரர்கள், கலப்படக்காரர்கள், பண்டிகை விரோதிகள், கலாச்சார ஊடுருவிகள், ஆரோக்கிய சீர்பழிப்பாளிகள், பண்பாட்டுப் புல்லுருவிகள் உள்ளே நுழைகின்றன.

கலப்பட வகைகள், பிரிவுகள், கூட்டணிகள்: முக்கியமாக எண்ணை, வெண்ணை, நெய், பால் போன்ற பொருட்களில் தான் கலப்படம் அதிகமாக இருக்கிறது. கலப்படத்தில் நான்கு வகையாகப் பிரிக்கலாம்:

 1. ஆரோக்யத்திற்கு தீங்கில்லாத கலப்படம்: பாலில் தண்ணீர் ஊற்றுவது போன்ற நிலை.
 2. ஆரோக்யத்திற்கு தீங்குள்ள கலப்படம்- தெரிந்து செய்வது: போலி, மாற்று, ரசாயன பொருட்கள், மூலப்பொருட்கள் உடல் ஆரோக்யத்திற்கு தீங்களிக்கும் என்றறிந்து கலப்படம் செய்வது, அத்தகைய பொருட்களை வாங்குவது, விற்ப்பது, உபயோகிப்பது.
 3. ஆரோக்யத்திற்கு தீங்குள்ள கலப்படம்- தெரியாமல் செய்வது: மற்றவர்களைப் பார்த்து அல்லது அவர்கள் சொல்லி, கெடாமல் பாதுகாக்கும் ரசாயனங்கள், இனிப்பூட்டிகள், சேர்ப்பிகள் என வாங்கி கலக்க ஆரம்பித்தல்.
 4. கூட்டுக்கலப்படக் கொள்ளை (Organized adulteration): எல்லாம் தெரிதே, பண்டிகை காலங்களில், இத்தகையவற்றை பலநிலைகளில் உற்பத்தி செய்து, வாங்கி, விற்று, லாபமடைந்து கொள்ளயடிப்பது கடைசி வகை.

பொருட்களில் கலப்பட வகைகள்: நெய்யில் டால்டா, மற்ற தாவர எண்ணைகள் முதலியவற்றைக் கலப்பது ஒருவிதம், இதனால் ஊறுவிளைவிக்காது எனலாம், ஆனால், மற்ற பருத்திக்கொட்டை, பேயெள்ளு, புங்கன், ஆமணக்கு, கடுகு போன்றவைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள், இயந்திர எண்ணெய்கள், ரப்பர் எண்ணெய்கள் முதலியவற்றைக் கலப்பதால் புற்றுநோய் வரை உண்டாக ஏதுவாகும். அதே மாதிரி பால்கோவாவில் மைதா, ரவை முதலியவற்றைக் கலப்பது தரத்தைக் குறைத்தாலும், ஆயோக்யத்திற்கு உடனடியாக பிரச்சினை இல்லை எனலாம், ஆனால், “மாவா” எனப்படுகின்ற போலியான கட்டிப்பால் முதலியவை தீயதாகும். தீபாவளி நேரத்தில், வட இந்தியாவில் இப்படி கலப்பட கோவாவை ஒபயோகித்து பால்கோவா, மற்றும் பால்-இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். அதற்காக டன் கணக்காக போலி கோவா / மாவா உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மாநிலத்திலிரிந்து அடுத்த மாநிலத்திற்கு திருட்டுத் தனமாக அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது. சென்ற புதன்கிழமை 27-10-2010 அன்று பத்து டன் கோவா தில்லியில் பிடிப்பட்டது, ஆனால் அது காணவில்லை என்ற தகவல் வந்துள்ளது[10]. தில்லியில் ஸ்வீட் கடைகளில் ரெய்ட் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது[11]. பெரிய கடைகள், பிரபகமான ஸ்வீட் கடைகள் என்று சொல்லப்படுகின்ற கடைகளில் உள்ள பால்-இனிப்புகள் பெரும்பாலும் கலப்பட வகைகளாகவே உள்ளன. அதிகாரிகள் சோதனையிட்டபோது, 194 மாதிரிகளில் 39 கலப்படமாகவே இருந்தன[12].

போலிப்பால் தயாரிப்பு: புளியங்கொட்டை, பருத்திக் கொட்டைப்பால் என்று தான் நாம் கேள்விப் பட்டிருப்போம், ஆனால் ரசாயனக்கலப்பில் செய்யப்பட்டப் பாலைப் பற்றி கேல்விப் பட்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. யூரியா, ஃபார்மேலின், ஹைட்ரெஜன் பெராக்ஸைட் போன்ற ரசாயனங்களை கலந்து, கலக்கி அத்தகைய பாலை தயாரிக்கின்றன[13]. அது பார்ப்பதற்கு பாலைப்போலவே உள்ளது. பாலைக்கெட்டியாக்க ஜவ்வரசியைக் கலக்கிறர்கள்[14]. அதேபோல மாவா என்கின்ற கெட்டிப்பாலும் சாக்குப்பொடி, ஃபார்மேலின் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்ப்டுகிறது. இது பால்கோவா செய்யப் பயன்படுத்தப் படுகிறது[15]. அத்தகையக் கொடியோர் தமிழகத்திலும் இருக்கிறார்கள்;

பாலில் கலப்படம்: குளிரூட்டும் நிறுவனத்துக்கு சீல்[16]

First Published : 24 Oct 2009 03:36:32 AM IST; Last Updated : 24 Oct 2009 04:03:49 PM IST

கம்பம், அக். 23:  கம்பத்தில், கேரள மாநிலம் ஆலுவாயைச் சேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர் பால் குளிரூட்டும் நிறுவனத்தை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.   தேனி மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி, வருசநாடு, கம்பம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களிருந்தும் தினந்தோறும் 12 ஆயிரம் லிட்டர் பால் காலை, மாலை இரண்டு முறையும் சேகரித்து குளீருட்டுப்பட்டு, கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந் நிலையில், கேரள அரசின் புகாரின்படி, தமிழக பால்வளத் துறையைச் சேர்ந்த மாநில பால்வள அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ், தேனி மாவட்ட பால் கூட்டுறவு துணை பதிவாளர் சண்முகராஜா ஆகியோர் தலைமையில் பால்வளத் துறையினர் இந்த பால் நிறுவனத்தில் திடீர் சோதனை செய்தனர்.

சோதனையில் பாலில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப் பொருள்கள் கலந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது நிறுவனத்தின் ஊழியர்கள் சந்தோஷ், டோமி ஜார்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். கலப்படப் பால் 5 ஆயிரம் லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலவளத் துறை அதிகாரிகள் கூறியபோது:
ஆய்வில் முறையான ஆவணங்கள் பயன்படுத்தவில்லை. தமிழக அரசின் அனுமதி சான்று பெறவில்லை. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கான சான்றிதழும் பெறவில்லையென்று தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில்  4 பால் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன.  அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

 

ஆக தமிழகத்திலும், இத்தகைய கலப்படக்காரர்கள், கூட்டுக் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 01-11-2010


[1] காதலர்கள் தினம், நண்பர்கள் தினம் …………….முதலியன மேனாட்டு பொருட்களை விற்பதற்கு ஊக்குவிக்கப்படுபவை, மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு ஒவ்வாதவை.

[2] சூற்றுப்புறமாசு என்ற ரீதியில் தீபாவளியை எதிர்ப்பது, ஆரியப்பண்டிகை தமிழருக்கு வேண்டாம் என்ற நாத்திகப் போக்கில் எதிர்ப்பது, என்று பல கோஷ்டிக்கள் இப்பொழுது கிளம்பியுள்ளனர்.

[3] அதாவது, வியாபார ரீதியில் அவர்களே இதில் ஈடுபட்டுள்ளதால், தங்களது பொருட்களை விற்க்க, ஒரு எதிர்மறை பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றும் தெரிகிறது.

[4] ஆக, இதிலும் அவர்களே உள்ளதால், அதைப்பற்றி மூச்சு விடாமல், திசைத்திருப்பும் பிரச்சரத்தை செய்து வருவதை சுலபமாகக் கண்டு கொள்ளலாம்.

[5] கூட்டுக் குடும்பங்கள் ஏன் சிதறின என்பதையும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது அத்தகைய வேண்டிய சேவைகளை காசு கொடுத்து வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் காசுக்காகத்தன் வேலை செய்வார்கள், சேவை செய்ய மாட்டார்கள் என்பதை பிறகு தான் புரிந்து கொள்வார்கள்.

[6] குறிப்பிட்ட ஸ்வீட் உற்பத்தியாளர்கள் விலை அதிகமாக இருந்தாலும், தரத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.

[7] அதாவது அந்த குறிப்பிட்ட ஸ்வீட் உற்பத்தியாளர்களை காப்பியடித்து, போலிகளை உருவாக்கி குறைந்த விலையில் விற்று மக்களை ஏமாற்ற ஆரம்பித்தது. இதனால் “அர்ச்சனா” போன்ற தரமுள்ள உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

[8] இறக்குமதி செய்யப்படும் சாக்கிலெட்டுகள் மற்ற இனிப்பு வகைகள் பற்றி தனியாகவே ஆராய்ச்சி செய்யலாம். இதில் சமூக விரோதிகள், தேசத்துரோகிகள் தாம் அதிகமாக உள்ளனர்.

[9] இதில் சமந்தப்பட்டுள்ளவர்கள் எல்லோருமே, பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுக்கலப்படக் கொள்ளை (Organized adulteration) பிரிவில் வருவர்.