Archive for the ‘டாடா டெலிசர்வீசஸ்’ Category

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

மார்ச் 18, 2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா? 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத்  தெரியவில்லை.

தற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா? “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.

2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.

மதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:

இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.

சி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”,  என்று கூறியுள்ளார்.

செல்போன் விவரங்கள் என்ன? நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில்  சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும்? அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா? சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா? விசாரிப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.

வேதபிரகாஷ்

18-03-2011

ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

பிப்ரவரி 3, 2011

ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!

கருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].

காங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை!

ராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.

கொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].

கனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.

“ஹாட் அண்ட் கோல்ட் சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும்! காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.

ராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது! அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம்.  ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது.  இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்  கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது!.

© வேதபிரகாஷ்

02-02-2011


ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

திசெம்பர் 8, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.

அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].

பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].

ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!


ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!

நவம்பர் 27, 2010

ஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்!

டாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா? சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].

உலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.

ராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா? டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா? கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில்! வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.

ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை  சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”

நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].

வேதபிரகாஷ்

© 27-11-2010


[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்?, https://corruptioninindia.wordpress.com/2010/11/23/karunanidhi-became-old-we-will-only-rule-tamilnadu/

[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.

[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றைஊழலில் வலம் வருகிறார்கள்!, https://corruptioninindia.wordpress.com/2010/11/22/barqadutt-niraradia-kanimozhi-nexus/

[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/

[6] At the heart of the controversy is Andimuthu Raja, a little-known regional politician who became the powerful telecommunications minister in the world’s fastest growing mobile-phone market. During his first stint as minister, he was accused of selling lucrative mobile telephone licenses at dirt-cheap prices, costing the Indian treasury as much as $40 billion, according to a government investigative report released last week.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/22/AR2010112203831.html

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/22/AR2010112203831_2.html

[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா?, https://corruptioninindia.wordpress.com/2010/11/25/like-watergate-would-radiatape-change-india/

[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா?, https://corruptioninindia.wordpress.com/2010/11/23/barkha-nira-viirsinghvi-congress-dmk-nexus/

[11] “We have somewhat slipped into a morass of a series of allegations… unauthorised tapes flooding… the media going crazy on alleging, convicting, executing… literally character assassination…. I wish the government would take a stand, bring an auditor… have an investigation and book people who are guilty of something, but stop this sort of Banana Republic kind of attack on whoever one chooses to attack on a basis unsubstantiated even before the person has a very Indian right, namely to be considered innocent until found guilty in a court of law.”

வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா?

நவம்பர் 25, 2010

வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா?

நீரா ராடியாவிடம் 7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, வைஷ்ணவி தொலைதொடர்பு,  மக்கள் தொடர்பு முதலிய பல நிறுவனங்களின் உரிமையாளர், இயக்குனர் என்ற பதவிகளை வகித்துவரும் நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவினர் இன்று 7 / 9 மணி நேரம் தில்லியில் 24-1-2010 அன்று விசாரணை நடத்தினர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மக்கள் தொடர்பு நிறுவன உரிமையாளரான நிரா ராடியா, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

ராடியா கேட்: வாடர்கேட்[1] போல நீரா ராடியா டேப்புகள் பரபரப்பாகப் பேசப் படுகின்றன. உலகம் முழுவதும் பரவி, பத்திரிக்கைக்களிலும், இணைதளங்கங்களிலும் பேசப்பட்ட் வருகின்றன. ஓபன் என்ற பத்திரிக்கை[2] நீரா ராடியா, பர்கா தத், வீர் சிங்வி முதலியோர்[3] தங்களுக்குள் பேசிய உரையாடல்கள் கொண்ட ஒலிநாடாக்களை வெளியிட்டது. நீரா ராடியா அரசியல்வாதிகள் (ராஜா[4], கனிமொழி[5]), தொழிலதிபர்கள் (ரதன் டாடா[6]), பத்திரிக்கைத்துறை வல்லுனர்கள் (பர்கா தத், விர் சிங்வி), என பலத்தரப்பட்டவர்களுடன் பேசிய உரையாடல்களை வெளியிட்டது. அதிலிருந்து காங்கிரஸ் மற்றும் பத்திரிக்கைத் துறையினர், எவ்வாறு, இந்திய அரசியலை தமது கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றனர் என்று தெரிய வந்தது[7].

நீராவிடம் விசாரணை நடப்பது சம்ந்தப்பட்டவர்களிடையே பெருத்தக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீரா பெரிய கைதேர்ந்த கில்லாடி என்பதால், அமைதியாக இருக்கின்றனர்.

சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்க பேரம் பேசியவர் நீரா ராடியா.  இவரின் தொலை பேசி உரையாடல்களை அரசு ஒட்டுக்கேட்டதால் உண்மைகள் அம்பலம் ஆகின. பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் நீரா ராடியா பேசிய உரையாடல்களின் பதிவுகள் அமலாக்கப் பிரிவு வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது பங்கு குறித்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும், கடந்த 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த புதிய பதில் மனுவில், ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த டெலிபோன் உரையாடல்களை ஆய்வு செய்து வருகிறோம். பொருத்தமான நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர்[8].

இங்கிலாந்து பாஸ்போர்ட் கொண்ட பெண்மணி: உடல்நலக் குறைவை காரணம்காட்டி அமலாக்கப் பிரிவு முன்பு ராடியா ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.  இந்நிலையில் நீரா ராடியாவிடம் அமலாக்க அதிகாரிகள் இன்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  அரசியல் தொடர்புகள், பண பேரங்கள் பற்றிய ஆவணங்களை ஒப்படைப்பதாக நீரா உறுதி அளித்துள்ளார்.  கோடிகள் ஊழல் கரைப் படிந்த ராஜாவுக்கும், தனக்கும் உள்ள தொடர்பை நீரா ராதியா ஒப்புக்கொண்டார்[9].

அமலாக்கப் பிரிவினர் அலுவலகத்தில் தோன்றினார்: நீரா ராடியா புதன் கிழமை (24-11-2010) அன்று சட்ட அமூல் படுத்தும் துறையினர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு சென்று வாக்குமூலம் அளித்தார். ஒன்பது மணி நேரம் அதிகாரிகள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு, அவர் கைப்பட வாக்குமூலத்தை 20 பக்கங்களில் எழுதப்பட்டு வாங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட தஸ்ஜாவேஜுகளை அதிகாரிகளிடம் கொடுத்தார். ஆலோசனை கட்டணம் என்று சுமார் 60 கோடிகளை டெலிகாம் கம்பெனிகள் மூலம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் அவர் எப்படி தனது கம்பெனிகளுக்குச் சென்றது, என்றும் விளக்கினார் [According to official sources, the agency grilled Radia regarding the flow of funds in her companies which included M/s Vaishnavi Corporate Consultants, M/s Vitcom, M/s Neucom Consulting, erstwhile budget carrier Magic Airlines and Noesis Strategic Consulting Services]. மாலை 5 மணிக்கு அலுவகத்திலிருந்து வெளியே வந்தபோது, பத்திரிக்கையாளர்களிடம், “நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதற்கு இருக்கிறேன். ஆனால், நான் இங்கு இல்லை என்பது போல பேச்சு அடிபடுகிறது. வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால், இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை”.

5,841 உரையாடல்களின் பதிவுகள்: மத்திய புலனாய்வுத்துறை நீரா ராடியா பலருடன் பேசிய 5,841 உரையாடல்களின் பதிவுகள், ஒவ்வொன்றும் சுமார் 30-40 நிமிடங்களுக்குள்ளவை, தங்களிடம் இருப்பதாக கூறினர்[10] [The Central Bureau of Investigation (CBI) on Monday admitted it had in its possession 5,851 call recordings, many of them 30-40 minutes long, of Radia with various people]. இப்பொழுதைக்கு சிலருடைய உரையாடல்கள் தாம் வெளியிடப்பட்டுள்ளன. மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 25-11-2010


[1] On June 16, 1972, a security guard at the Watergate Hotel in Washington , D.C. , discovered a piece of tape on the lock of the door that led to the National Democratic Headquarters. This foiled break-in attempt at the Watergate scandal was part of a larger campaign by Nixon supporters to tarnish the reputation of Democratic candidates and the Democratic Party. Democratic candidates were harassed, subject to negative campaign ads, and on two separate occasions the National Democratic Headquarters were broken into.  As soon as the attempted break-in at Watergate Hotel scandal became know, president Richard Nixon ordered the entire affair covered up. It became clear that the Nixon presidency had been involved in serious manipulation and abuses of power for years. Millions of dollars coming from Nixon supporters were used to pay for the cover-up in an attempt to hide the truth from Congress and the American people. The investigation would introduce the American people to such people as John Ehrlichman and Bob Haldeman. Ehrlichman was the President and Chief of the Domestic Council and Haldeman was the Chief of Staff. Both would be fired in a desperate attempt to save the presidency. The investigation would ask two questions which would forever live in political infamy.The questions were, “What did the president know?” and “When did he know it?”

The investigation into Watergate scandal Summary revealed that Nixon knew about the break-in from the beginning and that he was involved in the cover-up as it progressed.

http://www.corporatenarc.com/watergate.php

[7] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றைஊழலில் வலம் வருகிறார்கள்!, https://corruptioninindia.wordpress.com/2010/11/22/barqadutt-niraradia-kanimozhi-nexus/

கோடி-கோடிகளாக நடந்த ஊழல் விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் படி.

நவம்பர் 17, 2010

கோடி-கோடிகளாக நடந்த ஊழல் விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் படி.

இஷ்டப்படி ஒதுக்கீடு செய்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் ராஜா:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127783

2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான, மத்திய ஆடிட்டர்  ஜெனரலின் அறிக்கை நேற்று அமளியின்  நடுவே பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது புட்டுபுட்டு வைக்கப்பட்டுள்ளது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆடிட்டர் ஜெனரல் (கேக்),  தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடம்  சமீபத்தில் அளித்து இருந்தார்.  இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில்  ராஜாவும் மக்களுக்கு சேவை செய்த பெருமையைக் கூறி  ராஜினாமா செய்ய நேரிட்டது.

இந்நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.லோக்சபாவில் இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில், நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவால் தாக்கல் செய்தார். மொத்தம் 77 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தரப்பட்ட  விதம், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு தீவிர கண்காணிப்பு தேவை. அதற்கான பணியைத்தான் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை  மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சி.ஏ.ஜி., அறிக்கையில்   முழு விவரங்களை குறிப்பிட்டு, பின்குறிப்பாக ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு போல், வேறு எந்த அமைச்சகத்திலோ, அரசின் வேறு துறையிலோ ஏற்பட்டுவிடக்கூடாது  என்ற எண்ணத்திலும், குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற வகையில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அறிக்கையில்,  மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி வளைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையையும் பொருட்படுத்தவில்லை, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

* “3ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான்,   “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன.
* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.
*”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை.  மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.   இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன.  இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.
* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும்,  இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையும் ராஜா பொருட்படுத்தவில்லை.
* தகவல் தொடர்புத்துறை ஆணையத்தின்(டிராய்)வழிகாட்டு நெறிமுறையின் படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில்,”டிராய்’  கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு  இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது.  அவ்வாறு கேபினட் முடிவை மீறும் போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும்  இங்கே  பின்பற்றப்படவில்லை.
* எவ்வித அனுபவமும் இல்லாத, “ஸ்வான்’  நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.
* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.
*கடந்த 2001ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த  விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் “3ஜி’ ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம்  கோடி முதல் 37 ஆயிரம் கோடி வரை கொடுத்துள்ளனர்.
* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்)  தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ்  35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.
* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்’ நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை “எட்டிசேலட்’ என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு  4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை பெற  1,661 கோடி ரூபாய் மட்டுமே  “யூனிடெக்’  கட்டியிருந்தது.  லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது.  இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது “2ஜி’ உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம்: ஒரு பார்வை

*”2ஜி’ லைசென்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அக்கறையின்றி அள்ளிவீசப்பட்டுள்ளது.
*விதிமுறைகள் வளைக்கப்பட்டுள்ளன; எவ்வித நடைமுறையோ, ஒழுங்குமுறையே பின்பற்றப்படவில்லை
* வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக, கடைசி தேதி முன்தேதியிடப்பட்டுள்ளது.
*மொத்தத்தில், அரசுக்கு  1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட  அமைச்சர் ராஜாவின் வெளிப்படையில்லாத  அணுகுமுறை  காரணமாயிருக்கிறது.  மேலும், அவர் அள்ளி வழங்கிய  சலுகையில், டேடா காம் ( தற்போது வீடியோகான்). எஸ்-டெல், ஸ்வான் அண்ட் லூப் டெலிகாம்  ஆகிய தொழிலமைப்புகளுக்கு  2008ல் லைசென்ஸ்  தரப்பட்டிருக்கிறது,
* பிரதமர் ஆலோசனையை அவர் மீறி இதை வழங்கியிருக்கிறார். சட்டங்களை மீறி, நடைமுறைகளை மீறி  “2ஜி’ லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

*ஸ்வான் டெலிகாம் லைசென்ஸ்: ரூ.1,537 கோடிஇந்நிறுவனம் தனது 45 சதவீத பங்கை விற்றதன் மூலம் ரூ.4,200 கோடி பெற்றுள்ளது.

*மொபைல் சந்தாதாரர் நிலவரம்
2001 : 40 லட்சம்
2008 : 35 கோடி
* வருவாய் இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி.
* சில நிறுவனங்களுக்கு  லைசென்ஸ் வழங்கப்பட்டது 2008ம் ஆண்டில், விலை நிர்ணயமோ  2001ம் ஆண்டின்படி  செய்யப்பட்டது.
* யூனிடெக் ஒயர்லெஸ் லைசென்ஸ்:ரூ.1,661 கோடி.இந்நிறுவனம் 60 சதவீத பங்கை விற்றதன் மூலம் திரட்டிய தொகை: ரூ.6,200 கோடி.
*அரசுக்கு கிடைத்த வருவாய்: “2ஜி’: ரூ.10,772 கோடி.
“3ஜி’:ரூ. ஒரு லட்சம் கோடி.