Archive for the ‘சோனியா’ Category

ராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)

ஓகஸ்ட் 12, 2013

ராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)

Robert Vadrad 42 crores profit deal DLF

எஸ்.சிக்கு ஒதுக்கப் பட்ட நிலங்களை அபகரித்தது[1]: ஹரியானாவில், ஹஸன்பூர் (பல்வால் மாவட்டம்) என்ற இடத்தில் 1981. எஸ்.சி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 75 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்பொழுது, அசோக் கெம்கா (Ashok  Khemka ) என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநில நிலங்கள் குழுமத்தின் (Director General, Consolidation of Holdings – Haryana) தலைவராக இருந்தார். இவர் வத்ரா கம்பெனிகள் வாங்கிய சுமார் 3.5 ஏக்கர் நிலத்தின் உரிமையை ரத்து செய்தார்[2]. இதனால் இவருக்கும் சோனியா மறுமகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அங்கிருந்து அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்படார். இருப்பினும், 08-08-2013 அன்று எப்படி இந்த 3.5 ஏக்கர் நிலம் ஆவணங்களை மாற்றி, கள்ள ஆவணங்களை உருவாக்கி வாங்கப்பட்டது, என்று விளக்கமான 100-பக்க அறிக்கையில் சமர்ப்பித்தார்[3].

Ashok Kemka order october 2012

Khemka, in his enquiry report (copy with Indian Express), said, “As per the records of one property, M/s Sky Light Hospitality had purchased Khasra No 730 (area 3.53 acres) of village Shikhopur (Hadbast No. 160), district Gurgaon vide sale deed no. 4928, dated 12.2.2008 for Rs. 7.5 crores (mutation no. 3803, dated 13.2.2008). This property was resold to M/s DLF Universal for Rs 58 crore vide sale deed no. 1435 dated 18.09.2012 (mutation no. 4513 dated 20.09.2012) after obtaining Letter of Intent (LOI)/License from the Director/ Town and Country Planning, Haryana on 28.03.2008, subsequently renewed on 18.1.2011 for 2.701 acres. The village of Shikhopur (Hadbast No. 160) of district Gurgaon was re-notified u/s 14(1) under the East Punjab Holdings (Consolidation and Prevention of Fragmentation) Act, 1948 on 5th August, 2011. Sale of the property on 18.09.2012 during the pendency of the consolidation proceedings without the sanction of the Consolidation Officer was against the provisions of section 30 of Consolidation Act, ibid. The mutation no. 4513 sanctioned on 20.09.2012 by the Assistant Consolidation Officer was also without jurisdiction, since he is not a Revenue Officer under the Punjab Land Revenue Act.”

Vadra assets, property, investment.3

Raising eyebrows on the manner in which Vadra entered into an agreement to sell the property to DLF, Khemka’s enquiry report reads, “If M/s Sky Light Limited suppressed the fact that it had entered into a sale agreement of the property with DLF before the renewal of the license then the department ought to be taking action against the former for suppressing facts. But if Vadra had indeed informed the department about his entering into agreement to sell the land to DLF on June 3, 2008 (when the first installment was paid to Vadra’s company), it is unfathomable how the department could renew the license in 2011.”

Vadra assets, property, investment.4

While cancelling the mutation, Khemka in his order, issued yesterday, mentioned, “A mutation no. 4513 was sanctioned without jurisdiction on 20.09.2012 to give effect to the sale deed no. 1435 dated 18.09.2012 by the Assistant Consolidation Officer, Gurgaon, who is not a revenue officer. Only a revenue officer as defined in the Punjab Land Revenue Act is competent to sanction mutations. Under the circumstances, as described above, I hereby set aside the mutation no. 4513, dated 20.09.2012 of village Shikhopur (Hadbast No. 160), district Gurgaon, giving effect to the sale deed no. 1435 dated 18.09.2012 on the ground that the Assistant Consolidation Officer, who had sanctioned the mutation was not competent to do so”.

Vadra assets, property, investment.5

Highlights of enquiry report

*The registration of the property was “not proper” because the estate of Shikhopur was notified for consolidation in August 2011. Such transfer/sale of property during the pendency of consolidation proceedings, without the approval of Consolidation Officer is not allowed.

*Permission given to Vadra by the Town and Country Planning, Haryana, also violated the provisions of Consolidation Act.

*February 12, 2008 – The land was bought by Vadra’s company Sky Light Hospitality for Rs 7.5 crore, and the mutation was done the next day

*March 28, 2008 – The Town and Country Planning Department of Haryana issued Vadra’s company a license to develop 2.701 acres of the land into a housing colony.

*January 18, 2011 – The license was subsequently renewed

*September 18, 2012 – The sale deed was registered for Rs 58 crores

 Vadra getting out of airplane

The transaction details, money paid by DLF Universal Limited to Sky Light Hospitality Limited

*Rs 5 crore vide cheque no. 441242 dated June 3, 2008, drawn on ICICI Bank Ltd.

*Rs 10 crore vide cheque no. 350411 dated March 27, 2009, drawn on ICICI Bank Ltd.

*Rs 35 crore vide cheque no. 457201 dated October 7, 2009, drawn on ICICI Bank Ltd.

*Rs 8 crore vide DD/PO no. 283439 dated July 25, 2012 drawn on ICICI Bank Ltd.

Robert Vadra companies.questions

ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலும், வக்கீல் பிரசாந்த் பூஷணும் குற்றம்சாட்டி உள்ளனர். 2007ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வதேரா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாகவும், ஆதாயம் பெறுவதற்காக அந்த நிறுவனம் வதேராவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.85 கோடி வட்டியில்லா கடன் வழங்கியதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த புகாரை வதேரா மறுத்து உள்ளார். இதேபோல் டி.எல்.எப். நிறுவனமும் மறுத்து இருக்கிறது. இருப்பினும் அசோக் கெம்கா விவதாக இல்லை.

Robert Vadrad 42 crores profit deal

அசோக் கெம்காவின் குற்றசாட்டுகள்: வதேராவுக்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்திலேயே இந்த ஊழல் அரங்கேறி உள்ளதாக கூறியுள்ள அவர், ஹரியானாவில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த நில ஊழல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு விசாரித்தால், அதன் மதிப்பு ரூ. 20,000 முதல் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்றார். முன்னதாக டி.எல்.எப். நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அது ராபர்ட் வதேராவின் ‘ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி’ நிறுவனத்தால் வாங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழலின் மதிப்பு 58 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என கடந்த 2012 ஆம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறினார் அசோக்[4]. இதனையடுத்து அவர் வகித்து வந்த நில ஆவணங்கள் மற்றும் பதிவாளர் துறையிலிருந்து மாற்றப்பட்டு, மாநில அரசின் விதை துறைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு நியமித்த விசாரணைக் குழு, வதேராவுக்கு நற்சான்றிதழ் வழங்கியது[5]. ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு விசாரணை முடித்து இறுதி அறிக்கையை ஹரியானா அரசிடம் அளித்தது. அதில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமுகன் ராபர்ட் வதேரா, கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஷிகோபுர் கிராமத்தில் சுமார் 3.53 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் அளித்து அபகரித்திருப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா குற்றம்சாட்டியுள்ளார்[6]. இதில், பல்வேறு சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sky Light Realty P Ltd

நூதன் தாகூர் தொடர்ந்த பொதுநல வழக்கு: இந்த நிலையில், கடந்த அக்டோபர் 2012ல் இந்த பிரச்சினை தொடர்பாக நூடன் தாகூர் என்ற சமூக ஆர்வலர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்[7]. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் வதேரா மீது கூறப்பட்டுள்ள நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த மனு நீதிபதிகள் உமாநாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு 11-10-2012 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் நிகாம் வாதாடுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக 3 வாரங்களில் உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 21, 2012 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்[8].

The Sukhdev Vihar headquarters of Robert Vadra businesses

பொது நலவழக்கு எப்படி ரகசியம் ஆகும்?: ஆனால், இந்த வழக்கைப் பற்றிய அடிப்படை ஆவணங்கள் கூட பொது மக்களுக்குத் தெரியப்படாமல் மறைக்கப் படுகின்றன[9]. அதுட்டுமல்லாது, நூதன் தாகூர் இந்த நிலபேரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கேட்டபோது, பிரதம மந்திரி அலுவலகம் மறுத்துள்ளது[10]. மேலும் இவ்விஷயத்தில் அலஹாபாத் நீதிமன்றத்தில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க மனு நகலைக் கூட காட்ட மறுக்கிறது. அதெல்லாம் “ரகசியம்” என்கின்றது[11]. இத்தகைய போக்கு, வத்ராவை காப்பாற்றுகிறது என்றாகிறது. சாதாரண தனிமனிதன் விவகாரம் என்றால், ரகசியம் எங்கு வருகிறது?

 

Vadra assets, property, investment.1

சிதம்பரம் வத்ராவை ஆதரிப்பது: வத்ராவை எதிர்ப்பது என்பது காங்கிரஸை எதிர்ப்பது என்று கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பொருளாதாரத்தைப் பற்றி ஆர்பாட்டமாக பேசும் சிதம்பரமே, வத்ராவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றார். ஏனென்றால், அது தனிநபர் சமாசாரம் என்கிறார்[12]. மற்றவர்கள் விஷயத்தில் சிபிஐ வேகமாக செய்யல்படும் போது, இங்கு அது என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இதனால், பல கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில்[13], வத்ராவின் அரசியல் பலம் பாரபட்டமற்ற எந்த சோதனையையும் தடுக்கும் என்றே தெரிகிறது. இவையெல்லாம் பொய் என்று மறுக்கும் வத்ரா[14] ஏன் இத்தகைய வியாபாரங்களை செய்துள்ளார் என்று விளக்கவில்லை. சோனியாவின் மாப்பிள்ளை என்ற நிலையில் தான் ஹரியானா அரசு, அரசு நிறுவனங்கள், வங்கிகள் எல்லாமே வத்ராவுக்கு உதவியுள்ளன. இதே வேறு யாராவது கேட்டால், ஒன்றும் கிடைக்காது. இது மெத்தப் படித்த நிதியமைச்சருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்[15].

Vadra assets, property, investment.2

வேதபிரகாஷ்

© 12-08-2013

 

 


[1] As per documents with Intelligent Haryana News that Mr. Robert soon after congress government led by Chief Minister, Mr. Bhupinder Singh Hooda came into power in 2005 started to keep eyes on this village located on bank of Yamuna river and purchased the first piece of land on 03/03/2008 measuring 9 acre falling under Khasra number 122/8, 123/6 from Gurgoan based Mr. H.L. Pahwa son of Sher Singh Pahwa vide registration number 4781 for Rs 3,690,000/- http://www.iharnews.com/index.php/politics/989-vadra-dalits-land-palwal

[2] Haryana’s senior IAS officer Ashok Khemka, before relinquishing the charge as Director General, Consolidation of Holdings, has cancelled the mutation of a 3.531 acres plant of land in Shikhopur village, Manesar, Gurgaon that Sonia Gandhi’s son-in-law Robert Vadra had sold to real estate giant DLF Limited for Rs 58 crore. http://www.indianexpress.com/news/haryana-ias-officer-cancels-robert-vadra-s-land-s-mutation/1017418/

The Prime Minister’s Office has refused to part with records related to its affidavit filed in Allahabad High Court in response to a writ petition seeking probe into allegations made against Robert Vadra on controversial land deals, saying these are “confidential.” [11] http://www.thehindu.com/news/national/records-related-to-vadra-case-are-confidential-pmo/article4806996.ece

[12] Simultaneously, Finance Minister P. Chidambaram ruled out any investigation into Mr. Vadra’s business dealings: unless there was a specific allegation of quid pro quo or corruption, he said, “private transactions cannot and ought not to be allowed to be questioned on the basis of … insinuations.” He was answering a question at the economic editors’ conference here. http://www.thehindu.com/news/national/attack-on-vadra-is-attack-on-party-congress/article3977800.ece?ref=relatedNews

ராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (1)

ஓகஸ்ட் 12, 2013

ராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (1)

Rajinder Vadra, Richard Vadra, née McDonagh

ராஜிந்தர் வத்ராவின் குடும்பம்: ராபர்ட் வதேரா (Robert Vadra / Robert Wadhera), சோனியா மெய்னோவின் மறுமகன், அதாவது பிரியங்காவின் கணவர். சோனியா கத்தோலிக்க மாப்பிள்ளைக்குத் தான் கட்டிக் கொடுப்பேன் என்று தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து வைத்தார். இவரது தந்தை ராஜேந்திர வத்ரா (Rajendra Vadra) மொரதாபாதைச் சேர்ந்தவர், பித்தளை, மரம், கைவினைப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது குடும்பம், சியால்கோட், பாகிஸ்தானிலிருந்து வந்தது. தாயார் மெக்டொனாக் (née McDonagh) மௌரீன் வத்ரா (Maureen Vadra) அயல்நாட்டவர், ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். இவர் எப்படி அந்நியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இருப்பினும், கத்தோலிக்கப் பெண்ணை மணம் செய்து கொண்டபிறகு, கிருத்துவராகியிருக்கிறார். ராபர்ட் வத்ராக்கு, ரிச்சர்ட் மற்றும் மிச்செல் என்ற இரண்டு கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள்.

Vadra-Sonia family fued or anythingelse

சோனியாவின் குடும்பம்: சோனியா மெய்னோ, ஸ்டெபானோ மைனோ (Stefano Maino) மற்றும் பாவ்லோ மைனோவிற்கு (Paola Maino) பிறந்தவர். 1968ல் ராஜிவ் காந்தியை மணந்து கொண்ண்டார். ராகுல் (1970) மற்றும் பிரியங்கா (1972) என்ற இருவர் பிறந்தனர். 1983ல் இந்திய பிரஜையானார். அதாவது 1968 முதல் 1983 வரை 15 ஆண்டுகள் இத்தாலிய பிரஜையாகவே இருந்துள்ளார். 1991ல் ராஜிவ் கொல்லப்பட்டப் பிறகு, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். இருப்பினும் 1998ல் காங்கிரஸின் தலைவரானார். இங்கு பிரியங்கா, வத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டதால் தான், இக்குடும்பங்கள் சேருகின்றன.

Priyanka, Robert, Richard and Hairan

இத்தாலிய வீட்டில், இத்தாலி நண்பர்கள் நடத்திய பார்ட்டியில் சந்திந்துக் கொண்ட வத்ராவும்,  பிரியங்காவும்: ராபர்ட் வதேரா பிரியங்காவை 13 வயதில் (1985ல்) சந்தித்ததாகவும், 1997ல் கல்யாணம் செய்துகொண்டதாகவும் இப்பொழுது சொல்கிறார்கள்[1]. தில்லியில், ஒரு இத்தாலியக் குடும்பத்தின் இல்லத்தில் ராபர்ட் பிரியங்காவை சந்தித்தாராம். தில்லி பிரிடிஷ் பள்ளியில் அவர்களுக்குப் பொதுவான நண்பர்கள் இருந்தார்களாம். ஜீசஸ்-மேரி காலேஜில் பிரியங்கா படித்தாராம். அந்த இத்தாலிய வீட்டில், அவர்களுடைய இத்தாலிய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்டார்களாம்[2]. மௌரீன் முதலில் தான் வழக்கமாக செல்லும் தில்லி சேகர்ட் ஹார்ட் சர்ச்சில் திருமணம் செய்ய ஆசைப் பட்டார்[3]. ஆனால், பிரியங்கா கத்தோலிக்கராக மதம் மாறினால் தான் திருமணம் செய்ய முடியும் என்று சர்ச்சின் பாதிரி சொல்லிவிட்டாராம்[4]. ரைஹான் என்ற மகனும், மிரியா என்ற மகளும் உள்ளார்கள்.

Robert-Vadra-Secuity-Checks-exemption

ராபர்ட் பிரியங்காவை கல்யாணம் செய்து கொண்டது ராஜிந்தருக்குப் பிடிக்கவில்லை: ராப்ர்ட் பிரியங்காவை திருமணம் செய்து கொண்டது, ராஜேந்திர வத்ராவுக்குப் பிடிக்காதலால், தனியாக வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது தந்தை ராஜேந்திர வத்ரா மற்றும் சகோதரர் ரிச்சர்ட், தனது பெயரை உபயோகித்து பலன்களைப் பெறுகிறார்கள் என்று 2001ல் வெளிப்படையாக, ஒரு அறிக்கையை விடுத்தார்[5]. பதிலுக்கு ராஜேந்திர வத்ரா அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார்.  “இந்த இத்தாலிய மாபியாவைக் கண்டு நான் ஒன்றும் பயப்படவில்லை”, என்று இவர் கூறியுள்ளார்[6]. இவ்வாறு வெளிப்படையாக பேசியது, சோனியாவிக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ?

Pre-embarkment exemption given to Robert Vadra

வத்ரா குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட சோகங்கள்: தனது சகோதரி மிச்செல் தில்லி-ஜெய்பூர் சாலை விபத்தில் ஏப்ரல் 2001ல் இறந்தபோது கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது[7]. செப்டம்பர் 2003ல் சகோதரன் ரிச்சர்ட் வத்ரா தற்கொலை செய்து கொண்டபோதும் கண்டுகொள்ளவில்லை[8]. ஏப்ரல் 2009ல் தனது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரது உடல்[9] யூசுப் சராயில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகை அறையில் கண்டெடுக்கப்பட்டது[10]. இவரின் இறுதி சடங்கில் ராபர்ட் வத்ரா, பிரியங்கா, சோனியா எல்லோரும் கலந்து கொண்டார்கள்[11]. இவ்வாறு எட்டு வருடங்களில் தந்தை, சகோதரன், சகோதரி என்று மூவரும் மறைந்தனர். இது நேருவின் உறவினர்கள் மர்மமாக இறந்தது போலிருக்கிறது.

Sonia family attended Rajendra Vadra funeral 2009

அதிகாரத்தில் மிதக்கும் வத்ரா: தந்தை-சகோதரர் இறந்த பிறகு தான், இவர் மீதான புகார்கள் அதிகமாயின. அவர்கள் உயிரோடு இருக்கும் போது, அவர்கள் மீது, இவரும், ஏன் காங்கிரஸ்காரர்களும் புகார் சொன்னார்கள். இவர் தனது அரசியல் தொடர்பு   அதிகாரத்தை உபயோகப்படுத்துவதில்லை, துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று சொல்லமுடியாது. ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்றோருக்குக் கொடுக்கப்படும் SPG  பாதுகப்பு ஏன் தனது மனைவிக்கு 26-09-2005லிருந்து கொடுக்கப்படவேண்டும், விமானநிலையங்களில், இவர் சென்று வரும்போது, எந்தவ்வித சோனைகளுக்கும் உட்படாமல் விலக்கு ஏன் கொடுக்கப்படவேண்டும்[12] என்று இவர் நினைப்பதில்லை போலும்! அதுமட்டுமல்லாது, எப்படி ஹரியானா அரசு, அரசு நிறுவனங்கள், வங்கிகள் எல்லாமே வத்ராவுக்கு உதவுகின்றன என்று கேட்டு, எந்த காங்கிரஸ்காரரும் புகார் செய்யவில்லை. பிறகு வத்ரா எப்படி, தனது குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, இவ்வாறான செயல்களை செய்ய வேண்டும்?

Robert Vadra companies

திடீரென்று வத்ராவின் செல்வம் அதிகமானது: சாதாரண வியாபாரியாக இருந்த இவருக்கு பல கம்பெனிகள், சொத்துகள் என்று திடீரென்று பெருகிக் கொண்டு வந்தது.

  • ஆர்டெக்ஸ் (Artex) என்ற கம்பெனி நகை மற்றும் கைவினைப்பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறாது..
  • நார்த் இன்டியா ஐடி பிரவேட் லிமிடெட் (North India IT Parks Pvt Ltd)
  • ரியல் எர்த் எஸ்டேட்ஸ் பிரவேட் லிமிடெட் (Real Earth Estates Pvt Ltd)
  • ஸ்கை லைட் ரியால்டி பிரவேட் லிமிடெட் (Sky Light Realty Pvt Ltd) – இதில் தாயார் மௌரீன் வத்ரா டைரக்ட்ராக உள்ளார்.
  • இந்த கம்பெனிகள் டி.எல்.எப். என்ற கம்பெனியிடமிருந்து, நிலம் வாங்க முன்பணம் வாங்கியுள்ளன.
  • ஹில்டன் கார்டன் இன் (Hilton Garden Inn) என்ற ஹோட்டல், ஸ்கை லைட் ரியால்டி பிரவேட் லிமிடெட்கு சொந்தமானது.
  • புளூ பிரீஸ் ட்ரேடிங் ( Blue Breeze Trading)

Robert Vadra in airport

விவசாய நிலங்களை வாங்கி, அவற்றை ஐடி, எஸ்.இ.இஜெட் போன்ற கம்பனிகளுக்கு விற்பதுதான் இந்தகம்பனிகளின் வியாபாரம். இந்தந்த இடங்களில் IT, SEZ, ETP முதலியவை வரும் என்பது, முன்னமே தெரியும் என்பதனால், அந்தந்த இடங்களை முன்னமே வாங்கிவைத்து, குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு விற்று கோடிகணக்கில் லாபம் சம்பாதித்து வருகின்றன.

 

வேதபிரகாஷ்

© 12-08-2013


[2] It all began in an Italian home in Delhi. Priyanka 26, first met Robert, 28, six years ago at a party organised by their Italian friends. They had common friends thanks to his days at the New Delhi British School. There developed an instant liking for each other. Priyanka, a student at Jesus and Mary College was at that time beginning to regain some of the freedom. http://www.sundaytimes.lk/970302/plus2.html

[4] The Gandhi family has approached the Church authorities in Delhi, seeking their blessing to solemnise the wedding of Priyanka Gandhi, daughter of Sonia Gandhi and former prime minister Rajiv Gandhi. But the Delhi archdiocese has refused to bless Priyanka’s marriage to 28-year-old businessman Robert Vadhera. The hitch: Priyanka is not a baptised Catholic, unlike her Italian-born mother Sonia Gandhi. ”The Gandhi family has asked for a time between 10.30 am and 2.30 pm on February 5,” Sacred Heart Cathedral’s assistant parish priest Father Johnson toldRediff On The NeT. But the priest said the parish has not yet given permission to the marriage as Priyanka is not a baptised Christian. Priyanka’s mother Sonia and Robert’s mother Maureen are Christians Maureen is said to be a pious Christian who brought up Robert, his brother Richard and sister Michelle in the Christian tradition.  http://www.rediff.in/news/jan/13iype.htm

[5] In January 2002, Robert Vadra placed ads in newspapers, declaring that he had nothing to do with his father, Rajinder, and brother, Richard, and that any attempts by them to gain favours by pretending to act on his behalf should be disregarded. The notice was issued on Robert’s behalf by advocate Arun Bhardwaj. The Congress directed all its CMs, PCC bosses and CLP leaders to let it be known to “one and all” that Robert Vadra had severed ties with his father and brother, and “no favour sought by them in Robert’s name should be entertained.” It is believed that Robert’s decision to snap ties with his father and brother followed reports that Richard had approached a Congress CM over a contract for a major project, using Priyanka’s name. Another Congress leader claimed that Rajinder Vadra had called on him for a favour and sent his visiting card with “father-in-law of Priyanka” boldly pencilled on it. While Robert and Priyanka attended Michelle’s funeral and shared the family’s grief, no attempt was apparently made to resolve the family feud.

http://articles.timesofindia.indiatimes.com/2003-09-20/india/27181380_1_robert-vadra-vadra-family-rajinder-vadra

[6] “I’m Not Scared Of Any Italian Mafia” – Rajinder Vadra was in a bitter mood after his high-profile son, Robert, accused him of misusing the Gandhi family name. Speaking to Outlook, he admitted that he had sought certain favours, but claims it never amounted to misuse.

http://www.outlookindia.com/article.aspx?214333

[9] Rajendra Vadra, father-in-law of Priyanka Gandhi Vadra, was found dead under mysterious circumstances at a guest house in South Delhi http://www.hindu.com/2009/04/04/stories/2009040457512200.htm

[11] Rajinder Vadra, the father-in-law of Priyanka Gandhi Vadra, allegedly committed suicide by hanging himself in Room Number 6 of a guesthouse in Yusuf Sarai here this morning, police officials said. Police said his body was found by an employee of a local stall who had gone to serve him tea at 9.30 am. He was taken to Safdarjung Hospital where doctors declared him dead at 11.30 am. He was cremated in the Lodhi Road crematorium. Among those who were present at the cremation were his son Robert Vadra, Priyanka Gandhi and Sonia Gandhi. Among those who were present at the cremation were his son Robert Vadra, Priyanka Gandhi and Sonia Gandhi.

[12] According to an RTI reply given to a group called RTI Anonymous in March this year, P. Chidambaram’s Office gave Vadra this exemption because he is a Special Case. The reply had this to say: Shri Robert Vadra has been granted exemption from pre-embarkation security checks at all civil airports in the country on the recommendation of this ministry as a special case as he is married to a SPG protectee, i.e. Smt Priyanka Vadra, in consultation with central security agencies

காந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:

ஓகஸ்ட் 28, 2011

காந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:

 

தொப்பிப் போட்டு காதிகட்டியவன் எல்லோரும் காந்தியாக முடியுமா? காந்தி சின்னங்கள், அடையாளங்கள், நினைவுகள், பாரம்பரியங்கள், தொன்மைகள் என்று வைத்துக் கொண்டு பலர் பல்வேறு விதமாக, ஏதாவது ஒரு விதயத்தில் ஆதாயம் தேடி வருவது, இந்த நவீன மேனாட்டுமயமாக்கப்பட்ட சந்தைவணிக பொருளாரத்தைச் சார்ந்த இந்திய சமுதாயத்தில் சாதாரணமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக கோவில்களின் அருகில் சென்றால், பிச்சைக்காரர்களுக்கும், சாதுகளுக்கும், சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், சைவாச்சாரியர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே வேறுபாடே தெரியாமல் இருக்கும். போலி சாமியார்கள், பிச்சைக்கார வேடதாரிகள் உண்மையான சாது-சந்நியாசிகள், மடாதிபதிகளைவிட, பந்தாவாக-டாம்பீகரமாக-ஜோராக இருப்பார்கள். சடாமுடி, ருத்ராக்ஸ கொட்டை, காவியுடை, கட்டை செருப்பு, விபூதி பட்டை முதலியவற்றைப் பார்த்து யாரையும் எடைபோட முடியாது. அவ்வளவு கச்சிதமாக வேடமணிந்து வேலைக்கு, வசூலுக்கு, பிச்சைக்குக் கிளம்பி விடுவார்கள். இவர்களுடைய வேடத்தை நம்பி, நிறைய பேர், குறிப்பாக புதிதாக வருபவர்கள், மற்றவர்கள் இவர்களைக் கண்டு ஏமாந்து விடுவார்கள். அத்போலத்தான், நேருக் குடும்பம், தங்களது குடும்பப்பெயரை விட்டுவிட்டு, காந்தி பெயரை உபயோகப்படுத்தி ஆட்சி செய்து வரும் முறையைக் காட்டுகிறது.

நேருவை துறந்து, காந்தியை காப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரியம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேரன்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது.  மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார்.

தொப்பியோடு வந்த அன்னா: அன்னா ஹஸாரே காந்தியவாதியாக, கதர் ஆடையுடன், தொப்பியுடன் ஊழலுக்கு எதிராக போர் என்று இயக்கத்தை ஆரம்பித்தவுடன், இந்திய மக்கள் பலவித பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், தமக்கு இவர் உதவுவார் என்று ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னர், ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ், அன்னாவைவிட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மிகவும் பயந்து போய் இரும்பு கரங்களுடன் அடக்கி, நடு இரவில், கண்ணீர்புகை குண்டு வெடித்து, லத்தி ஜார்ஜ் செய்து, முதியவர், பெண்கள், சிறுவர்கள் என்று எவரையும் பாராது, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றையேல்லாம் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன. உச்சநீதி மன்றத்தில் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அன்னா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

காணாமல் போன சோனியா: சோனியா காந்தி, இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கிற்காக ரகசியமாக அமெரிக்கா சென்று விட்டார். ராஹுல் காந்தியோ, வழக்கம் போல தாறுமாறாக பேசிக்கொண்டு, உத்திரபிரதேசத்தில் குழப்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அன்னாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுருத்தப் பட்டிருந்ததால், மூச்சேவிடாமல் இருந்தார். இருந்தாலும் 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் பேசி சர்ச்சியைக் கிளப்பி விட்டார்.

வருண்காந்தி: 24-08-2011 அன்று அன்னாவின் கூட்டத்திற்கு சென்றது, 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென 24-08-2011 அன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்[3]. அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். 24-08-2011 அன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை. அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு.  ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி. ஆக அதற்கேற்றபடி, பிஜேபி-அணியினர், வருண் காந்தியை தயார் படுத்தினர் போலும்.

வருண் காந்தி அன்னாவிற்கு இடமளிக்க முன்வந்தது[4]: ஆக.6, 2011: வலுவான லோக் பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அண்ணா ஹசாரே மேற்கொள்ள உள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தில்லியில் தான் வசித்து வரும் அரசு வீட்டில் இடம் அளிக்க தயார் என்று பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம் பெறும் வகையில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்காமல், மத்திய அரசு லோக் பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்தபோது, இதற்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டியது. அந்நிலையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் இடம் கொடுக்க தயார் என்று வருண் காந்தி அறிவித்தார்.

ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது: ‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’ என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது[5]: “எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது? ஏனெனில், நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள்”, இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் 2 கோடி மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது[6].

 

காந்தி போடாத தொப்பி பிரபலமானது[7]: “காந்தி தொப்பி” என்று அழக்கப்படும் கதரால் செய்யப்பட்ட குல்லா, காந்தியால் என்றுமே அணியப்படவில்லை. ஆனால், காந்தியை மறந்த இளைஞர்கள், திடீரென்று அந்த குல்லாவை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டு தெருக்களில் வந்தது வினோதமாக இருந்தது. அன்னா வேட்டிக்கூட கட்டியிருந்தார். ஆனால், இளைஞர்களிடம் வேட்டி பிரபலமாகாதது விந்தையே. இருப்பினும், சென்ற வாரம் முழுவதும் தொப்பி, மூவர்ண கொடி, டி-சர்ட் முதலியவை அமோகமாக வியாபாரம் ஆனது[8]. ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு வெளியே தேசிய கொடிகள், அன்னா ஹசாரே தொப்பி, பட்டன்பேட்ஜ், தலையில் கட்டும் பேண்ட், டிஷர்ட், முழங்கையில் கட்டும் பேண்ட் ஆகியவை அமோக மாக விற்பனையாகி வரு கின்றன. ஹசாரே மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தால் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. நான் அன்னாஹசாரே என்று எழுதப்பட்ட தொப்பியின் விலை ரூ.5 முதல் ரூ.15-க்கும், அன்னாவின் முகமூடி ரூ.5-க்கும், ஹசாரே உருவம் பொறிருத்த பட்டன் பேட்ஜ் ரூ.10 முதல் ரூ.20க்கும், முழங்கையில் கட்டும் மூவர்ண கலருடன் கூடிய பேண்ட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி ரூ.5 முதல் ரூ.1,000க்கும், தலையில் கட்டும் பேண்ட் ரூ.10 முதல் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த 23-ந்தேதிதான் விற்பனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது[9]. உண்ணாவிரத போராட்டத்துக்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு ஹசாரே பொருளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதன் விற்பனை கட்டுங்கடங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் முகத்தில் வரையப்படும் மூவர்ண கொடிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வழக்கமான வியாபாரிகள் இல்லாத பலரும் ஹசாரே உண்ணாவிரதத்தால் தேசிய கொடிகளை விற்பனை செய்து சம்பாதித்து உள்ளனர். பள்ளி செல்லும் சிறுவன் சாதிக் ஹசன் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் ராம்லீலா மைதானத்துக்கு சென்றான். அவனது வேலை முகத்தில் மூவர்ண கொடியை வரைவது. இதன் மூலம் அவன் தினசரி ரூ.1000 சம்பாதித்து வந்தான். அன்னா ஹசாரே தொப்பிகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது, நான் தினசரி 700 முதல் 800 தொப்பிகளை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு ரூ.3,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றார். ஹசாரேயின் உண்ணாவிரதம் எதிரொலியாக டெல்லி சாதர்பஜார் மொத்த மார்க்கெட் பகுதியில் பொருட்களின் லாபம் 5 முதல் 7 சதவீதம் இருந்தது.

சல்மான் கானுக்கு அன்னா தொப்பி கொடுக்க வந்த அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனாராம்[10].

காந்திக்குப் பிறகு அன்னா புகழ் பெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள்: காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது, ராகுலை, சோனியாவைத்தான் புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, அன்னாவை அமுக்கியே வாசித்தனர். முன்பு அன்னாவே ஒரு ஊழல் பேர்வழி என்று சொல்லி, ராம்தேவைப் போலவே மிரட்ட முயற்சித்தனர்[11].  ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி[12]. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர்[13]. இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார். அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும். இப்படிப்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும்”, என்றார் திவாரி[14]. அதன் பிறகு திஹார் சிறையிலும் அடைத்துப் பார்த்தனர். ஆனால், மக்களின் எழுச்சியை தெரிந்து கொண்டு, விடுவித்தனர்.

ககங்கிரஸுக்கு  அன்னா ஹசாரேவின் சவால்: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. இதுகுறித்து அவர் கூறுகையில்[15], “வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது. இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும். ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா. ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.  டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள்”, என்றார் அவர்.


[1] Feroz Gadhi (கதி) – Gandhy (கந்தி) – Gandhi (காந்தி)

[2] அத்தகைய புகைப்படங்களை என்னுடைய மற்ற இணைத்தள பதிவுகளில் பார்க்கலாம்.

கனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

மே 31, 2011

கனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

 

கனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது,  ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.


குஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

கனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].


கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை!

மே 25, 2011

கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை!

சோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].

கனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.


ஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].

மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].

சோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா? கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு  ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.

ஜாமின் எப்போது? நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].

 இந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.

சென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].

கனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.


[2]  Karunanidhi is said to have plainly put it across that he feels that the Congress has not done enough for either the DMK or his daughter.

http://ibnlive.in.com/news/mk-makes-no-attempt-to-hide-displeasure/154115-60-118.html

[10] “If you have a daughter and if she is punished for no mistake, how will you feel? That’s the way I feel,” he told reporters, a tinge of sadness evident on his face.

நீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்!

ஏப்ரல் 15, 2011

நீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்!

நீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.

பால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.

மணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.

கனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

சுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.

வேதபிரகாஷ்

15-04-2011


[2] Controversial corporate lobbyist Niira Radia in her statement recorded under Section 161 of the Criminal Procedure Code has linked Union Agriculture Minister Sharad Pawar to DB Realty but adds that she did not have any evidence to prove that Mr. Pawar or his family members had any stake in Swan Telecom. “I state that as per the general perception in Mumbai as well as outside, DB Realty is directly or indirectly controlled by Mr. Sharad Pawar and his family members,” Ms. Radia’s statement said.

http://www.hindu.com/2011/04/15/stories/2011041565401600.htm

[3] “I am not associated with Swan Telecom in any way. Neither had I recommended anybody for issuance of license. I deal with agriculture ministry and have nothing to do with other departments,” Pawar told HT on phone from Baramati. But Pawar acknowledged close family ties with KM Goenka, father of Vinod Goenka, who is a partner of Shahid Balwa, a director of DB Realty and a promoter of Swan Telecom.

http://www.hindustantimes.com/Pawar-denies-DB-Realty-link/Article1-685089.aspx

[4] Supriya is now the Lok Sabha MP from Baramati. Supriya and Kanimozhi’s long chats — in their leisure time, or even in Parliament’s Central Hall — have now acquired an ominous  subtext, with their friendship now being seen in the context of the spectrum scam: specifically, the Baramati-based DB Realty’s money channel leading to Kalaignar TV.

http://expressbuzz.com/magazine/friends-in-need/253041.html

சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!

மார்ச் 23, 2011

சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!

தாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன்? தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

தாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா? அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.

The following is the number of companies from each country which are under the ED scanner and the amount of money pumped into India from there as per the summary of investigation[5]:

Mauritius : 17 investment companies and banks: Rs. 7,911 crore

Japan: 7 companies and banks (Rs. 98.33 crore)

China: 6 companies and banks (Rs. 5,223 crore)

Finland: 5 companies (Rs. 1,185.9 crore)

Sweden: 2 companies (Rs. 430.34 crore)

France: 2 companies (Rs. 93.9 crore)

Russia: 2 companies (Rs. 2,518 crore)

 
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!

தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].

எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.

வேதபிரகாஷ்

23-03-2011


[6] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்,https://corruptioninindia.wordpress.com/2011/02/10/shahid-usman-balwa-raja-karunanidhi-nexus/

[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்!,

https://corruptioninindia.wordpress.com/2011/02/23/sadiq-basha-sahid-usman-balwa-dawood-ibrahim-nexus/

[8] Mr Swamy also claimed that as per an Union home ministry report, Mr Balwa is linked to fugitive underworld don Dawood Ibrahim.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=360087&catid=36

[9] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s  restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.

http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40

[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது!, https://corruptioninindia.wordpress.com/2011/03/11/cbi-grills-kanimozhi-dayalu-amma-march-2011/

சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா – தேர்தலில் போட்டியிடப் போகிறாராம்!

மார்ச் 22, 2011

சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா – தேர்தலில் போட்டியிடப் போகிறாராம்!

நிஜ டாக்டர்களும், போலி டாக்டர்களும்:: தமிழகத்தில் பலவித டாக்டர்களை பார்த்தாகி விட்டது. திராவிட பாரம்பரியத்தில், டாக்டர் இல்லாத அரசியல்வாதியே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பிறகு, நடிகர்கள் எல்லாம் டாக்டர் பட்டம் பெற்றனர். நிகரிலை பல்கலைகள் ஏற்பட்டப் பிறகு, யார்-யாருக்கு டக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையும் போய்விட்டது. இதற்குள் போலி டாக்டர்கள் வேறு கிளம்பி விட்டார்கள். விடுவவர்களா, நமது திராவிட கண்மணிகள் / திராவிட டாக்டர்கள் எல்லோரையும் உள்ளே தள்ளிவிட்டார்கள்! இப்பொழுது அதனால், உணையான டாக்டர்களே அரசியலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்!

அரசியலில் குதிக்கும் நிஜ டாக்டர்கள் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வேலைசெய்து வரும் டாட்கர். வி. டிகால் மார்ச் 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தன்னை விடிவிக்க வேண்டும் என்று ரிட் மனு தாக்குதல் செய்திருந்தார்[1]. 13ம் தேதி, நீதிமன்றம் அவரது ராஜினாமாவை பரிசீலித்து, விடுவிக்க ஆணையிட்டது. அதற்குள் இப்பிரச்சினை வந்துவிட்டது. இதனால், சுகாதாரத் துறை காரியதரிசி சுப்புராஜ் சொல்வதாவது, “டாக்டர்கள்  பற்றாக்குறை காரணமாக, அவர் விடுவிக்கப் படவில்லை. ஒருவேளை அவர், விடுவிக்கப் பட்டாலும், இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக முடித்துத் தரவேண்டும். அதுமட்டுமல்லாது, கோர்ட் இவ்வழக்கு விஷயமாக எப்பொழுது கூப்பிட்டாலும் வரவேண்டியிருக்கும்”, என்றார்[2]. தொடர்ந்து அவர் சொன்னதாவது, “தேர்தல் சமயத்தில் தமக்கு பல ராஜினாமா கடிதங்கள் வந்தன. ஆனால், இவையெல்லாம், அரசு உத்தியோகத்தை விட்டுவிட்டு, தனியாரிடம் செல்லத்தானிவ்வாறு செய்கிறார்கள்”, என்றும் குற்றஞ்சாட்டினார்[3].

சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா[4]: சாதிக் பாட்சா மரண வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழும் சூழலில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால், ராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ம் தேதி, சாதிக்கின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் காலை 9.45 மணிக்கு பிணவறைக்குள் நுழைந்த டாக்டர் டிகால், 1.30 மணிக்கு உடல் வெளியில் சென்ற பின், வெளியே வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், சில தகவல்களை தெரிவித்து விட்டுச் சென்றார். பரபரப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவை பல தரப்பிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் திடீரென ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக, டாக்டர் டிகால் கூறியதாவது[5]: “சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த பின், நான் ராஜினாமா செய்யவில்லை. இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை[6]. கடந்த 3ம் தேதியே ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்குனர், சுகாதாரத்துறை செயலரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் என்னை பணியில் இருந்து விடுவிக்காததால், இம்மாதிரியான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். தேர்தலில் நிற்பதற்காகத் தான் ராஜினாமா செய்தேன். முக்கிய கட்சியில், “சீட்’ கேட்டிருந்தேன். அவர்கள் கொடுக்கவில்லை; ஆதலால், சுயேச்சையாக கட்டாயம் போட்டியிடுவேன். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன்[7].
இறந்தவர் சாதிக் பாட்சாவா? வேறு யாருமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பிரேதம் வரும் போது பிணவறையில் உள்ள ஊழியர்கள், பிரேதத்தை பெற்றுக் கொண்டு அடையாளங்களை பரிசோதனை செய்து பிணவறை உள்ளே வைக்க அனுமதிப்பர். பிரேத பரிசோதனை செய்யும் போது, போலீசார் முன்னிலையில், இறந்தவரின் உறவினர் அடையாளம் காட்டுவார். அதன் பிறகே, பிரேத பரிசோதனை செய்வோம். இறந்தவர் சாதிக் பாட்சாவா? வேறு யாருமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
பணியில் விடுவிக்க கேட்டுள்ள கோர்ட்டில் மனு தாக்கல்: போலீசார் கொடுக்கும் அடையாளங்களை வைத்து, இறப்பிற்கான காரணத்தையும், இறப்பின் தன்மையையும் சோதனை செய்து, அறிக்கை அளிப்பேன். நான் இதுவரை 500 பிரேத பரிசோதனைகளுக்கு மேல் செய்துள்ளேன். அது தொடர்பான வழக்குகளில் இருந்து நான் தப்ப முடியாது. அதுபோல் தான் இந்த வழக்கும்; இதிலும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் சாட்சி சொல்வேன். இவ்வாறு டிகால் கூறினார். டாக்டர் டிகால் தன்னை பணியில் விடுவிக்க கேட்டுள்ள விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கக் கோரி, கோர்ட்டில், “மேண்டமஸ்’ மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜினாமாவை அரசு நிராகரிப்பு: இந்த நிலையில் டாக்டர் டெக்காலின் ராஜினாமாவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. மேலும் அவரை பணியிலிருந்து விடுவிக்கவும் அது மறுத்து விட்டது. இதுகுறித்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. இளங்கோ கூறுகையில், மார்ச் 3ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் டெக்கால். சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனைக்கு முன்பாகவே அவர் கொடுத்து விட்டார். தற்போது மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. அவர் செவ்வாய்க்கிழமையன்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

பாமக / திமுககாரர்?: டாக்டர் டெக்காலின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டெக்கால் ஏன் திடீரென தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்தார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது[8]. ஆங்கில பத்திரிக்கை ஒன்று பாமக கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றது[9]

வேதபிரகாஷ்

22-03-2011


[4] சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=210217

[9] Dekal’s father is said to have been a PMK member.

http://www.dailypioneer.com/325838/Twist-in-autopsy-doctor%E2%80%99s-tale.html

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

மார்ச் 18, 2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)

குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா? 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத்  தெரியவில்லை.

தற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா? “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.

2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.

மதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:

இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.

சி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”,  என்று கூறியுள்ளார்.

செல்போன் விவரங்கள் என்ன? நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில்  சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும்? அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா? சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா? விசாரிப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.

வேதபிரகாஷ்

18-03-2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (1)

மார்ச் 18, 2011

சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (1)

இந்த பலமான கொட்டையை உடைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும்,: சாதி பாட்சாவின் திடீர் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையின் போது, அவனிடமிருந்து விஷயங்களைப் பெற, ஆவணங்களைப் பெற மிகவும் கஷ்டப்பட்டனர். காலை மற்றும் மதியத்திற்கு மேல் என்று இரண்டு முறை விசாரிக்க வேண்டியதாகி விட்டது. ஆகவே, அவர்கள் சொன்னதாவது, “இந்த பலமான கொட்டையை உடைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும்”, என்பதுதான்! சி.பி.ஐ. சாதிக் பாட்சா தஏற்கொலை செய்து கொண்டதிலும் வியப்படைந்துள்ளனர். ஏனெனில், அவன் மிகுதியும் உறுதியானவன் [Sources pointed out that Batcha had proved to be a tough nut to crack, and had disclosed precious little by way of incriminating evidence against Raja and other accused in the spectrum scam case[1]] என்று சொல்கின்றனர். பிறகு எப்படி அந்த கொட்டை உடைந்தது அல்லது உடைக்கப்பட்டது என்பது தெரியவில்லை!

கொலையா, தற்கொலையா, தற்கொலை என்றால், தூண்டுதலா? ஆகவே, அவரே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலை செய்து கொள்ளத் தூண்டப்பட்டாரா, அல்லது கொலையாகக் கூட இருக்குமா என்ற சந்தேகங்களை பலரும் எழுப்பியுள்ளனர்[2]. உடையே இல்லாமல், வெள்ளைத் துணியில் சுற்றிய நிலையில் பரிசோதனைக்குக் கொடுக்கப்பட்டது என்று டாக்டர். டிகால் கூறியுள்ளது வியப்பாக உள்ளது[3]. போலீஸாரே சி.ஆர்.பி.சி. பிரிவு 174ன் கீழ் இயற்கைக்கு புறம்பான சாவு என்று வழக்கைப் பதிவு செய்துள்ளனர்[4]. தற்கொலை கடிதங்கள் மார்ச் 15 என்று தேதியிடப்பட்டுள்ளன. ஆனால், அவை சாதிக் பாட்சா உடலிலிருந்தோ, அருகிலோ எடுக்கப்படவில்லை, மாறாக ஏழு மணி நேரத்திற்குப் பிறகு சொந்தக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது[5].

தற்கொலை செய்து கொண்டது படுக்கையறையிலா அல்லது பாத்ரூமிலா? ஊடகங்கள் அவரது இறப்பின் இடத்தைப் பற்றி மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றன:

* வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

* தனது அறையின் கூரைச் சுவரிலிருந்து தொங்கியபடி தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

* மாலைச்சுடர்: ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா  நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் குளியல் அறையில் தூக்கில் தொங்கியதாக அவருடைய மனைவியும்[6] ….

* நக்கீரன்: இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா தனது அறையில் தூக்கில் தொங்கியதை உறவினர்கள் பார்த்துள்ளனர்[7].

* இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா தனது அறையில் தூக்கில் தொங்கியதை உறவினர்கள் பார்த்துள்ளனர்[8].

* மீண்டும், பகல் 12:45 மணிக்குமீண்டும் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த ரெகனா பானு, ஜன்னல் வழியாக பார்த்த போது, படுக்கையறையில் சாதிக் பாட்சா, தொட்டில் கட்டும் கயிறால் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்[9].

* குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த அவரை, காரில் ஏற்றி, 1:30 மணிக்கு சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்[10]

அப்படியென்றால், அப்பொழுது உயிரோடு இருந்தாரா?

வேதபிரகாஷ்

18-03-2011


[3] Interestingly, Dekal also pointed out that the body was given to them without clothes or belongings on it. “It was just wrapped in a white sheet and delivered to us by the Apollo Hospital authorities.” The police too do not have a clue about them.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

[4] Though the cops have registered a suicide case under Section 174 (unnatural death) of CrPC, the city police are probing the case from all possible angles. “We are investigating the mystery behind Batcha’s death. We ask: What forced him to take the extreme measure?” a police officer said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Cops-irked-as-case-goes-to-CBI/articleshow/7731337.cms

[5] The suicide note said to be that of Batcha was discovered by relatives and handed over to the police more than seven hours after his death. It was found in his house and not on his body. Interestingly, it is dated 15 March, a day before Batcha’s death.

[6] சாதிக் வீட்டிற்குவந்த மர்ம கார் Thursday, 17 March, 2011   02:20 PM

http://www.maalaisudar.com/newsindex.php?id=35905%20&%20section=1