Archive for the ‘காமராஜ்’ Category

டாடா நிலம் விவகாரத்தில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை!

திசெம்பர் 17, 2010

கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை!

தொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை முதலியன: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் அவுட்லுக், இந்தியா டுட்டே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[1]. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். உன்மையிலேயே நடவடிக்கை எடுப்பதென்றால், உயர்நீதி மன்றத்தில் இந்த டேப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும், அவற்றின் மீது ஆதாராமாக எழுதி வருவதாலும்,  அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்குள் மன்மோஹன் சிங்கே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை தடை செய்யமுடியாது என்று சல்மான் குர்ஷித் தரகு வேலை தேவை என்றால் அதையும் குறைகூற முடியாது என்றும் பேசியுள்ளனர்.

ராஜாத்தி-கனிமொழி-பூங்கோதை-நீரா உரையாடல்கள் ஏன்? நீரா ராடியா உரையாடல்களில் கனிமொழியே தனது தாய்-தந்தையர் பற்றியெல்லாம் பேசியுள்ளது தெரிகிறது. அவற்றில் கருணாநிதியைப் பற்றியுள்ள விமர்சனங்கள் அல்லது அவரைப் பற்றிக்கூறும்போது உபயோகித்துள்ள வார்த்தைகள், அவருக்கு வயதாகி விட்டது, மிகவும் குழம்பிய நிலையில் உள்ளார், நாங்கள்தாம் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறோம்……….என்றரீதியில் உள்ள பேச்சுகள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. டேப்புகளிலுள்ள உரையாடல்களை யாரும் மறுக்கவில்லை. அப்பொழுது அதிலுள்ள விஷயங்களை என்னவென்பது? இதில் பூங்கோதையின் உரையாடல், நெருக்கத்தை மேலும் காட்டுகிறது. மேலும் தாயும்-மகளும் இந்த விஷயத்தில் நேரிடையாக மறுப்புத் தெரிவிக்கும் போது, தந்தையார் அமைதியாக இருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.

நில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை[2]: “எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”, என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ராஜா தனக்கும் குறிப்பிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவ்வாறு செய்திகளை வெளியிட்டால், அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிடவில்லை!

ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்யும் சரணவன்[3]: . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில், “ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது. டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல[4]: அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை”, என்றார். இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.

நீரா “டாடா” என்று கேட்டதற்கு ராஜ்சாத்தி “இல்லை” என்றுதானே சொல்லியிருக்கவேண்டும்? இந்தியா டுடே டிசம்பர் 6ம் தேதியே விளக்கத்துடன் வெளியிட்டுவிட்டது. அதில் ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்யவேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன் (வோல்டாஸ் ஒரு டாடா குழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.

வேதபிரகாஷ்

© 17-12-2010


[1]ராஜாத்தி மற்றும் ரத்தினம் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடலை இங்கே காணல்காம்:  http://indiatoday.intoday.in/site/Story/122283/LATEST%20HEADLINES/radiagate-exposes-karunanidhi-wife.html

நீரா ராடியா மற்றும் ராஜாவின் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடக்கின்றன!

திசெம்பர் 15, 2010

நீரா ராடியா மற்றும் ராஜாவின் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடக்கின்றன!

மொத்தம் 34 இடங்களில் ரெய்ட்: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு, அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது[1]. இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீபா பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.
ராஜா-நீராடியா தொடர்புகள்:வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

நக்கீரன் பத்திரிக்கையின் இணை-ஆசிரியர் காமராஜன் வீட்டில் சிபி.ஐ ரெய்ட்: நக்கீரன் பத்திரிக்கையின் இணை-ஆசிரியர் காமராஜன் வீட்டில் சிபி.ஐ ரெய்ட் ஆரம்பித்துள்ளது. இவர் ராஜாவின் நெருங்கிய நண்பர் மற்றும் திமுகவின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகின்றார்[2]. சாதிக் பாட்சா வளர்ச்சியடைந்ததற்கே இவர் தான் காரணம். சென்ற வருடம் டி.டி. தினகரனுக்கு எதிராக அவதூறாக எழுதிய வழக்கில் இவருக்கும் நீதிமன்றம் த்ண்டனை விதித்தது[3]. ஆகஸ்ட் 2003லும் தமிழக போலீஸார் இவரது வீட்டை ரெய்ட் செய்துள்ளது[4]. கைது செய்யப்பட்டார். இவரது மனைவி ஜெயசுதா நீரா ரரடியா கம்பெனியின் சென்னை கிளையில் எக்ஸிகுடிவாக பணியாற்றி வருகிறார்.

ஜெகத் காஸ்பர் அலுவலகத்திலும் ரெய்ட் நடக்கிறது: ஜெகத் காஸ்பர் அலுவலகத்திலும் ரெய்ட் நடக்கிறது[5]. தமிழ் மையம் என்ற குழுமத்தில் கனிமொழி ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத் தக்கது[6]. மேலும் ஜெகத் வாடிகனுக்கு நெருக்கமானவர், தமிழ் புலிகளின் ஆதரவாளர் என்ற போர்வையில் செயல்பட்டு அரசியல் செய்து வருபவர். கனிமொழியிடம் ரெய்டைப் பற்றிக் கேட்டபோது, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது, மேலும் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்[7]. நக்கீரன் பத்திரிக்கையிலும் இவர்கள் எல்லோருமே தொடர்புடைவர்களாக இருக்கின்றனர், மேலும் நித்யானந்தா விஷயத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.


[2] A team of CBI officials from Delhi swooped down at the residence of Kamaraj, Associate Editor of Tamil magazine ‘Nakkeran’ this morning and conducted searches, official sources said. Read more at: http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-cbi-raids-residence-of-senior-tamil-journalist-72698?cp

[6] ………….the raids that included a senior journalist Kamaraj, and an NGO in Chennai that enjoys the patronage of Kanimozhi, who is Karunanidhi’s daughter, a Rajya Sabha MP and a staunch support of Raja’s. The NGO Maiyam, run by Father Jegath Gaspar, organizes the Chennai marathon and other major local events. Kanimozhi is one if its best-known trustees. Kamaraj is an Associate Editor of pro-DMK magazine Nakkeeran.  His wife, Jeyasudha, is a senior executive at the Chennai office of Vaishnavi Communications, owned by Niira Radia, whose own role in the 2G scam is being investigated. Read more at: http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-cbi-takes-raids-to-dmks-door-72667?cp