Archive for the ‘கழுதைகளில் வைத்து கடத்துதல்’ Category

கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான்!

ஏப்ரல் 21, 2010
கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்
ஏப்ரல் 21,2010,00:00  IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24269
தமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான்! ரேஷன் கார்டு, அரிசி, டிவி, ஓட்டு………இப்படி எல்லாமே தொடர்பு கொண்டு ஊழலாகி ஓடிக் கொந்திருக்கும்போது, கோடிகள் ஏன் புழங்காது சாதாரணம மக்களிடம்! அதனால்தான் மோசடி, ஏமாற்றுதல்………என்றாலே கோடிகள், ல்ட்சங்கள் தாம் தமிழ்நாட்டில்!

General India news in detail

தேவாரம் – ஐயோ பெயரே இப்படியா! :கேரளா -தமிழக எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் வனப்பகுதி வழி யாக தமிழக அரசின் இலவச ‘டிவி’கள் கடத்துவது தொடர்கிறது.தேவாரம்,சாக்குலூத்து வனப்பாதை,உத்தமபாளை யம் ஏகலூத்து மற்றும் கோம்பை ராமக்கல் மெட்டு வழியாக அரசின் இலவச ‘டிவி’ கடத்துவது தொடர்கிறது.


கழுதை மூலம் கடத்தல் – சீனாவின் முறையை பின்பற்றுதல்: மாவட்டத்தில் பல வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதனால் ஒரே வீட்டிற்கு ஒன் றிற்கு மேற்பட்ட இலவச டிவி’ கள் கிடைத்தன.இந்த ‘டிவி’களை 900 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விலை வைத்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை வனப்பாதை வழியாக ஆட்கள் மற்றும் கழுதைகளில் வைத்து கடத்துகின்றனர்.

வனத்துறை மற்றும் போலீசாரை கவனிக்கப்படுதல்: ஒரு டிவி’ யை கேரளாவிற்கு கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.கேரளா – தமிழக எல்லையில் தயாராக இருக்கும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி ஜீப்பில் வைத்து அருகில் உள்ள நகரங் களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தமிழகத்திலிருந்து கடத்தப்படும் ஒரு ‘டிவி’ க்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் லாபம் கிடைப்பதால் இந்த கடத்தலில் பலரும் ஆவலாக ஈடுபடுகின்றனர். வனத்துறை மற்றும் போலீசாரை கவனித்துவிடுவதால் ‘டிவி’ கடத்தல் தங்குதடையின்றி நடந்து வருகிறது.

லஞ்சக் கைதுகள் தொடர்கின்றன!

நவம்பர் 14, 2009
ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட இருவர் கைது
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14022

Important incidents and happenings in and around the world

கள்ளக்குறிச்சி : அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற, விவசாயிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி தாசில்தாரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது நிலம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை அகற்றக்கோரி சிவபாலன் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டில் உத்தரவானது.

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கள்ளக்குறிச்சி தாசில்தார் அன்பரசனிடம் சிவபாலன் மனு அளித்தார். இதற்காக, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதுடன், முன் பணமாக 25 ஆயிரம் தருமாறு தாசில்தார் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு சிவபாலன் தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுரையின்படி, தாசில்தார் குடியிருப்புக்கு நேற்று காலை சென்ற சிவபாலன், அவரது உதவியாளர் வில்லிஸ் என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். வில்லிஸ் அப்பணத்தை தாசில்தாரிடம் தர முயன்றபோது, அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர் கைது
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14027

Important incidents and happenings in and around the world

திருமங்கலம் : மதுரை அருகே முகவரி மாற்ற மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் (27). மின்சாதன பொருட்கள் ஏஜன்சி நடத்தி வருகிறார். அதே தெருவில் வேறொரு இடத்திற்கு ஏஜன்சியை மாற்றவும், டி.கல்லுப்பட்டி மெயின் ரோடு மற்றும் மம்சாபுரத்தில் கிளைகளை திறக்க முடிவு செய்தார். இதற்காக அனுமதி எண் (டின் எண்) பயன்படுத்த அனுமதி கேட்டு வணிகவரித்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக 1,000 ரூபாயை வாங்கிக் கொண்டார். நேற்று காலை வணிக வரித்துறை அலுவலகத்திற்கு வந்த அரவிந்தன், சான்றிதழ்களை கேட்டார். அதற்கு துரைராஜ், மீதிப்பணம் ரூ. நான்காயிரத்தை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என கூறியுள்ளார். பின், மூன்றாயிரம் ரூபாய்க்கு துரைராஜ் சம்மதித்துள்ளார்.

இது குறித்து அரவிந்தன், மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை அரவிந்தனிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் வைத்து துரைராஜிடம் கொடுத்தார். அதை வாங்கிய துரைராஜை போலீசார் கைது செய்தனர்.