Archive for the ‘கல்வி படும் பாடு’ Category

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

மே 26, 2010

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

எந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது!

மன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி! சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே! பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்! அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது! இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்! ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன? இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது! இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்! பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது! ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா? இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

பிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்?

இக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்று பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.

மூன்று கோடி முறைகேடு பிஷப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு?

ஜனவரி 20, 2010

தலைமறைவான பிஷப்புக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு
ஜனவரி 20,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15551

கல்வி நிறுவனங்களைப் பற்றி தேடும்போது, இச்செய்தியும் உள்ளது! சேலம் : கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் பிஷப் மாணிக்கம் துரை, சேலத்தில் உயர் பதவி வகிக்கும் இரு போலீசாரின் ஆதரவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் பிஷப்பாக இருப்பவர் மாணிக்கம் துரை. கோவை, தர்மபுரி, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சி.எஸ்.ஐ., பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்விக் கூடங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட இந்த எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள், சொத்துக்களின் பராமரிப்பு, நிர்வாகப்பணிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கண்காணித்த போதிலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், கோவை திருமண்டலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் பிஷப்பையே சார்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், பிஷப் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. “அவரிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோடிகணக்கில் ஊழல் என்றால் அத்தகையோரின் தலமையில் நடக்கும் கல்வி என்னாவது? கடந்த 10ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிஷப் மாணிக்கம் துரை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணிக்கம் துரை தலைமறைவானார். சேலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு போலீசாரே ராஜமரியாதை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் தான், மாணிக்கம் துரையை சி.பி.சி.ஐ.டி.,யின் வலையில் இருந்து பாதுகாத்து, நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற வக்கீல்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னையிலுள்ள உயர்அதிகாரிகள் வரை புகார் சென்றுள்ளது. மாணிக்கம் துரை ஏற்கனவே கோவை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

உள்நாட்டு / வீட்டுப் பிரச்சினை போல பேசி மழுப்புவது! இந்த பிரச்சினை தொடர்பாக சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட் டம் ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அலுவலகத்தில் நடைபெற்றது.திருமண்டல செயலாளர் ரிட்சர்டு துரை தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளரும், கல்விக்குழு தலைவருமான அமிர்தம் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமிர்தம் மற்றும் வக்கீல் சாக்ரடீஸ் ஆகியோர் கூறியதாவது:- “பிஷப் மாணிக்கம் துரை தலைமறைவாக இல்லை. இறைப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அவரை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிறகு மாற்றுக் கருத்து வருவது பொய்யைத்தான் காட்டுகிறது! இந்த நிலையில் தென் இந்திய திருச்சபை முதன்மை பேராயர் கிளன் ஸ்டோன் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு வந்து பிஷப் மாணிக்கம் துரை குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பேராயர் நிலையில் இருப்பவர்கள் திருச்சபையின் நிதியை பாதுகாப்பது முக்கியமாகும். இறை பணி செய்வதையே கடமையாக கொண்டவர்கள் மீது இது போன்ற புகார்கள் எழுவது இறைமக்களை புண்படுத்துவது போல் ஆகும். இந்த மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துபேசி எடுக்கப்படும்.

பிஷப்புக்கு கருப்புக் கொடி: சர்ச் வளாகத்தில் பரபரப்பு (செப்டம்பர் 29,2008,00:00  IST) : கோவை மண்டல பிஷப் மாணிக்கம் துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டப்பட்டதால் சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மண்டல பேராயராக இருப்பவர் மாணிக்கம் துரை. இவர் தனது அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ மக்களின் பொதுப்பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 7ம் தேதி சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து, இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நியாயம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.கூட்டத்தில் இருந்து மாணிக்கம் துரை வெளியேறி விட்டார். இதுகுறித்து விவாதிக்க, அடுத்த நாளே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஆலயத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது; இதுவரை கூட்டம் கூட்டப்படவில்லை. அதிருப்தி அடைந்த சி.எஸ்.ஐ., ஆலய உறுப்பினர்கள் நேற்று திடீரென சி.எஸ்.ஐ., சர்ச் வளாகத்துக்கு வெளியில் கூடினர். அப்போது சர்ச்சுக்கு வந்த பிஷப்பின் கார் வழிமறிக்கப்பட்டு, கருப்புக் கொடி காட்டப்பட்டது. மேலும், பிஷப்பைக் கண்டித்தும், பண மோசடி குறித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால், சர்ச் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.