ராணிப்பேட்டை மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஊழல், கோடிகளில் பணம் தங்க முதலியன பறிமுதல் எல்லாம் ஒரு துளி வெள்ளம் தான்! ஊழலை ஒழிப்பது, தூய்மைப் படுத்துவது எப்படி? (3)

பன்னீர் செல்வம் சிக்கியது எப்படி?: பன்னீர்செல்வத்திடம் தனிப்பட்ட முறையில், 20க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர். அதில் ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு, 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதனால் அவரை, வேலையிலிருந்து பன்னீர்செல்வம் நிறுத்தி விட்டார். அவர் தான் பன்னீர்செல்வத்தை சிக்க வைத்தவர் என தகவல் பரவி வருகிறது. விருதம்பட்டில் சோதனை நடத்திய பிறகு, அதிரடியாக பாரதி நகரில் உள்ள அவரது மற்றொரு பங்களா வீட்டில் சோதனை செய்ய போலீசார் சென்றனர். இது தெரியாமல், பன்னீர்செல்வம் விருதம்பட்டிலேயே இருந்துள்ளார். சோதனை நடந்து, இரண்டு மணி நேரத்துக்கு பிறகு தான், அவர் அங்கு சென்றுள்ளார். இவ்வளவு பணம் வந்தது குறித்து, பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் சொல்லாமல், என் கணவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். சிறிது நேரத்தில், மயக்கம் போட்டு விழுந்த அவரை, மகளிர் போலீசார், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்து அழைத்து வந்தனர்.

விசாரணை வளையத்தில் உதவியாளர்கள்: ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்ய வேண்டும் என்றால், தமிழகத்திற்கு வந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்குவதற்கு, தனியான வாடகை வீடு என்றால், பன்னீர்செல்வம், லஞ்சம் வாங்குவதற்கு என்றே தனிப்பட்ட முறையில், 20 பேரை வேலைக்கு வைத்திருந்தார். அதாவது, நிறுவனமாக்கப் பட்ட லஞ்ச லாவண்யம், அவ்வாறு வேலைக்கு ஆட்கள் நியமிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இனி அதற்கு பயிற்சியும் அளிப்பார்கள் போலிருக்கிறது. அவர்களிடம், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள், நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். எம்.டெக்., படித்துள்ள பன்னீர்செல்வத்துக்கு, மனைவி புஷ்பா, 45. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரு மகள் கணவருடன் வசிக்கிறார். மற்றொரு மகள், சென்னையில் அரசு அதிகாரியாக உள்ளார். மகன் முதுநிலை படிப்பு முடித்து விட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இப்படி பட்டவர்கள், படித்தும் என்ன பிரயோஜனம்? நியாமான பிள்ளைகள் என்றால், “அப்பா, இப்படி லஞ்சம் வாங்காதே, எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது,” என்று சொல்லியிருப்பார்களே?

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது[1]: பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எத்தனை வங்கிகளில் லாக்கர் வசதி உள்ளது என்பதை விசாரித்த பிறகு அதை திறந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வத்தை விரைவில் விசாரணைக்கு அழைப்போம். அதேபோல், வேலூர் மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களையும் அழைத்து விசாரிப்போம். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அரசின் அனுமதியுடன் பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பதிவு செய்யப்படும். அப்போது, மீண்டும் ஒரு சோதனை நடத்தப்படும். பன்னீர்செல்வத்திடம் இருந்து அதிகபட்ச அளவு பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேவைப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக பரிந்துரை செய்யவும் வாய்ப்புள்ளது,’’ என தெரிவித்தனர்[2].

உண்மையில் மாசு, கசடு, கும்பி, சகதி, சாக்கடை, நச்சு துகள்கள், கழிவுகள் முதலியவை பல வழிகளில்–முறைகளில் உருவாகி வருகிறது: மேலே குறிப்பிட்டப் படி, மனிதனின் தேவைகள் அதிகமாக-அதிகமாக பஞ்சபூதங்களை அசுத்தமாக்கும் வேலைகள், விஞ்ஞானம்-தொழிற்நுட்ப ரீதியில் அதிகமாகவே நடந்து வருகின்றன.
- மேலே பலவித மாசு உருவாகும் தொழிற்சாலைகள், வேலைகள் முதலியன குறிப்பிடப்பட்டன. இனி சில குறிப்பிடப்படுகின்றன.
- உலோகப் பூச்சு செயல்பாட்டினால் [metal plating, anodizing etc] அதிக அளவு மாசு காற்றில் மற்றும் நீரில் கலக்கின்றன. யாரும் தடுக்கவில்லையே?
- உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் மீறி, தோல் தொழிற்சாலைகளில் [leather processing and goods manufacture] அதிக அளவு மாசு காற்றில் மற்றும் நீரில் கலக்கின்றன. யாரும் தடுக்கவில்லை. அயல்நாட்டவருக்கு வேண்டிய பொருட்களைத் தாம் இங்கு உற்பத்தி செய்து, ஏற்றுபதி செய்கிறார்கள்.
- புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் [asbestos] தடை செய்யப் பட்டுள்ளது, ஆனால், தொழிற்சாலைகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சைனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் $ 2 பில்லியன் மதிப்பில், 3,50,000 டன் ஆஸ்பெஸ்டாஸை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.
- சுரங்கம் [mining], ரசாயன [chemical of all sorts], மின்சாரம் [electricity production through thermal, nuclear etc], மருந்து, துணி, காகிதம், வாகனங்கள் என்றிருக்கும் மற்ற தொழிற்சாலைகளும் சளைத்தவை அல்ல!
- சக்கரை, உரம், வண்ணம், பூச்சி மருந்து, பெட்ரோலியம், இவை எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.
- சர்க்கரை என்றால், “மொலேசஸ்” [molasses] முதலியனவும் வரும். அதுதான் மது [beer, rum etc] உற்பத்தி செய்ய உதவுகின்ற மூலப்பொருள். “ஹுக்கா”விலும் உபயோகப்படுத்தப் படுகிறது.
- ஏர்-கன்டிஷனர், ரெப்ரிஜிரேடர்கள் இயங்குவதாலும், சுற்றுப்புறசூழ்நிலை பாதிக்கப் படுகிறது, ஓஸோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் உற்பத்தி-உபயோகம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
- இந்த தொழிற்சாலைகளை அறிந்து கொண்ட பிறகு, அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் அந்த நகரங்களை நினைத்துப் பாருங்கள், உண்மை விளங்கும்!
- அவற்றில் யார் முதலீடு செய்திருக்கிறார்கள், அவர்களின் யோக்கியதை, அந்தஸ்து என்பதை எல்லாம் விவரங்களை சொன்னால், ஏன் அவை ஊக்கப் படுத்தப் படுகின்றன, ஆதரிக்கப் படுகின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ஊழல் என்பது என்ன, அது லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல: உடல் சுத்தம் மட்டுமல்ல, உள்ளமும், சிந்தனைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.
1. ஊழல் என்பது, தீய எண்ணங்களின் வெளிப்பாடு, அதர்ம காரியம், நன்னடத்தை இல்லாத வேலை, மிக்க ஒழிங்கீனமான செயல், என்றெல்லா விவரிக்கலாம்.
2. மனம் தீய எண்ணங்களால், ஆக்கரமித்து, உடனடியாக எதையாவது அடைய வேண்டும், கவர வேண்டும் என்று தயாராகும் மனப்பாங்கு.
3. வஞ்சகத்துடன், குரூர எண்ணங்களுடன் செயல்பட்டு, யாரிடமிருந்தாவது, அதையாவது, எப்படியாது பறிக்க திட்டமிடும் குணமாகிறது.
4. செய்வது அநீதி, பாவம், அதர்மம், திருட்டு, என்றெல்லாம் தெரிந்தும், தீர்மானமாக செய்யத் தாயாராகி அக்கிரமத்துடன் கவர்வது.
5. செய்கின்ற வேலைக்கு அரசு சம்பளம் கொடுத்தாலும், இவ்வாறு மாமூல், கையூட்டு, லஞ்சம், கவனிப்பு இல்லாமல் செரிக்காது.
6. வேலைக்கு வருவதற்கே லஞ்சம் கொடுப்பவன், “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு,” என்ற சித்தாந்தத்தையே உருவாக்கி விட்டான்.
7. தெரியாமல் திருடுவதற்கும் தெரிந்து லஞ்சம் வாங்குவதும் ஒன்றேயாகும், பலிக்காடா ஆவது, அப்பாவி அல்லது வெறுத்துப் போன மனிதனாக இருப்பான்.
8. விபச்சாரி எப்படி தனது தொழிலுக்காக அலங்கரித்து, ஆசை வார்த்தைப் பேசி, படுக்க அழைக்கிறாளோ, அதுப்போலத்தான், லஞ்சம்வாங்குவதும்.
9. திராவிடத்துவ ஆட்சியில், லஞ்சம் வாங்குவது என்பது, ஒரு ஏற்படுத்தப் பட்ட, நிறுவனத்துவ திறமைகளுடன் செயல் பட்டு வருகிறது.
10. பிறப்பு முதல் இறப்பு வரை எந்த காரியத்திற்கும் தம்மிடம் வரவேண்டும், என்று புலிகள் போல இறைக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன.

70 வருட ஊறிப் போனப் பழக்கத்தை மாற்ற காலம் ஆகலாம், ஆனால் மாற்ற வேண்டும்: ஆகவே, இவர்களை முதலில் மாற்ற வேண்டும். 70 ஆண்டுகளில் வளர்ந்து / வளர்த்து விட்ட இவர்களை, திரும்ப பழைய நிலைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் காலம் ஆகலாம். சட்டம்-நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், வக்கீல்கள் முதலியோர் கட்சிகளால் நியமிக்கப் படுவதால், அவர்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளனர் / இருக்கின்றனர். எல்லாவற்றையும் அனுபவித்து விட்ட அவர்கள், திடீரென்று அவற்றையெல்லாம் விட்டுவிடு என்றால் அப்படியே துறந்து, புத்தனாகி விடமாட்டான். “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல……..,” என்று சொல்லி நியாப் படுத்தியவர் தான், முதன் முதலாக, காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். குறுகிய காலத்தில் அவர் காலமாகி விட்டதால், கருணாநிதி முதல்வர் ஆனால், ஊழல் பற்றிய அவரது அணுகுமுறையை, சர்க்காரியா கமிஷனே விளக்கி விட்டது.

எப்படி படிப்படியாக கட்டுப்படுத்துவது, குறைப்பது மற்றும் முடிவாக நீக்குவது:
- கல்வித்துறை, TNPSC, பல்வேறு அரசுத் துறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் போன்றவர் / போன்றவை ஒழுங்காக செயல் படவேண்டும்.
- சட்டக் கல்லூரி, தேர்வு பெற்று வருபவர், வக்கீல், நீதிபதி, நீதிமன்றம், இவையும் ஒழுங்காக, சட்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
- அதேபோல, குறிப்பாக போலீஸ் துறை, போலீஸ் அதிகாரிகள், போலீஸ் காரர்கள், மிக ஒழுக்கமாக, ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.
- கருத்துவாக்கம் செய்பவர் மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும் நியாமாக, தார்மீகத்துடன் இருக்க வேண்டும்.
- “கடமை, கண்ணியம், கட்டுப் பாடு” என்று பேசினால் மட்டும் போதாது. வேலை செயும் போது, செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
- அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பள கொடுக்கிறது. வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக, கண்ணியமாக வேலை செய்ய வேண்டும்.
- சட்டமீறல்களை ஊக்குவிக்கக் கூடாது, அதற்குத் துணை போகக் கூடாது. அதையே தொழிலாக வைத்து, லஞ்சம் வாங்கும் போக்கை மாற்ற வேண்டும்.
- குறிப்பிட்ட வேலைகள் நியமனம், இடம் / வேலை மாற்றம் போன்றவற்றில், ஊழல் அறவே இருக்கக் கூடாது.
- IAS, போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், வக்கீல்கள், அரசு/ அரசியல் சார்புடையவர்களாக நியமிக்க-இருக்கக் கூடாது.
- அரசு அனுமதி, லைசென்ஸ், சான்றிதழ், நிதியுதவி போன்றவற்றில் உள்ளவர்களும் அதே போல அரசு/ அரசியல் சார்புடையவர்களாக நியமிக்க-இருக்கக் கூடாது.
© வேதபிரகாஷ்
17-10-2020

[1] தினமலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 19 மணி நேர சோதனையில் ரூ.3.25 கோடி பறிமுதல், Added : அக் 16, 2020 10:29.
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2634257
