Archive for the ‘ஒரு ரூபாய் லஞ்சம்’ Category

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்!

ஓகஸ்ட் 8, 2010

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்!

தினமலர், ஆகஸ்ட் 07,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57067

லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிக்கின்றனராம்! தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர். லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சக்கைதுகள் எதற்காக? தூய்மைப்படுத்தவா? விளம்பரத்திற்காகவா? “லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர். இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

புள்ளி விவரங்கள் உண்மை நிலையை உருவாக்குமா? கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையில் உள்ள லஞ்ச வழக்குகள் என்னாகும்? தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.

வழக்குகள் முடிந்தால் தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். “தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு,  ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்- நன்றி- நமது சிறப்பு நிருபர்-

Advertisements

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

ஓகஸ்ட் 8, 2010

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

இந்த கட்டுரை யாதோ கருணாநிதி, அவர் குடும்பம் முதலியவற்றைப் பற்றி விமச்சிக்கும் கட்டுரை அல்ல. அவர், அவர் குடும்ப அங்கத்தினர்கள் அரசியல், அரசியல் அதிகாரம், முதலியவற்றை உபயோகித்து தங்களது தனி நபர் வருமானங்களை அதிகமாக பெருக்குவதற்கு உபயோகித்த முறை, அவற்றால் தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டத் தான் எழுதப் படுகிறது. இந்த மாதிரி எந்த அரசியல்வாதியும் மற்றவரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை வதைத்தால் அவர்களுக்கும் இது பொருந்தும். 1970லிருந்து இப்போழுது வரை பரிணாம வளர்ச்சி எடுத்துள்ள நிலைதான் இது.

தமிழகத்தில் லஞ்சக் கைதுகள்: கருணாநிதி இப்பொழுதுமே பெருமையுடன் ஆர்பரிப்பார் தன்னை தமிழர்கள் ஐந்தாவது முறையாக அரியணை ஏற்றினர் என்று, ஆனால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் லஞ்சம், கையூட்டு, மாமூல், இனாம் தராமல் தமிழக அரசின் எந்த துறையிலும் எந்த வேலையும் நடக்காது என்று. அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கே அது கொடுத்தால்தான் நடக்கும்! இருப்பினும் இவ்வருடம், இந்த ஐந்தாண்டு ஆட்சியில் லஞ்சம் வாங்கியதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆச்சரியமாகவே உள்ளது. இதனால் மாநில அரசு ஊழியர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் “இதெல்லாம் வரப்போகின்ற தேர்தல் யுக்தியப்பா, பொருத்திரு, தலைவர் இதற்காக தகுந்த பரிசு அளிப்பார்” என்ற பேச்சும் அடிபடுகிறது. முன்பு வை. கோபாலசாமி “ஜெயலலிதா ஊழலின் கிணறு என்றால் கருணாநிதி ஊழலின் ஊற்றுக்கண்” என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம். நிச்சயமாக கருணாநிதி ஊழலற்ற நிர்வாகத்திற்காக இந்த கைதுகளை செய்யவில்லை.

சமத்துவ-அரசியல்-கூட்டு: சாராயமும், வீரப்பனும், பிரபாகரனும் இத்தகைய தமிழக, ஏன் தென்னிந்திய அரசியல்வாதிகளைப் பற்றி நிறையவே சொல்வார்கள். கட்சி-மாநில பேதங்கள், வேறுபாடுகள், ஜாதி-இன வித்தியாசங்கள் எதுவும் இன்றி “சமத்துவத்தை” உண்டாக்கிய பெருமை இந்த மூன்றையே சேரும். பாவம், முதலானது தமிழகத்தில் அரசுடமையாக்கப் பட்டு விட்டது, மற்ற இரண்டும் இவ்வுலகத்தில் இல்லை. பின்னது இல்லாது போனபோது, பலர் வருந்தினாலும், மனதிற்குள் பெருமூச்சு விட்டு, “நல்லவேளை இந்த பிரச்சினை போயிற்று” என்று அமைதியானவரும் உண்டு. நாளிதழ்கள்-பத்திரிக்கைகளைவிட அரசாங்க கோப்புகள் இவற்றைப் பற்றி அதிகமாகவே சொல்லும். ஆனால் வெளியே வராது, வராமல் பார்த்துக் கொள்கின்றனர். அதை மறைக்கத் தான் அரசயில் கட்சிகள் தினமும் நடத்தும் ஒன்றுக்கொன்று குறைகூறும், பழிசொல்லும், அவதூறு பேசும் பட்டிமன்றங்கள், நாடகங்கள், சிறப்புச் செய்திகள்!

அரசியல்-தொழிலதிபர்-வியாபார கூட்டின் விளைவு: “டிரான்ஸ்பேரன்ட்-இன்டர்நேஷனல்” என்ற நிறுவனமானது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற புதிய உலக பொருளாதார பாதயில் செல்லும் இந்தியாவில் ஊழல்-லஞ்சம், கம்பெனிகளின் மோசடிகள், கூட்டுக் கொள்ளை, பொருள்-சேவை முதலியவற்றை பெரும், வாங்கும், விற்கும் நடவடிக்கைகளில் உள்ள ஊழல், அரசியல்-ஊடக-சினிமா சாம்ராஜ்ய கூட்டு சுரண்டல் என பல வகைகளில் இந்தியர்கள் எப்படி கடந்த 15 ஆண்டுகளாக பாதிக்கப் படுகின்றனர் என்று எடுத்துக் காட்டியுள்ளனர். எந்த பொருள் அல்லது மக்களுக்கு அதிகமாகத் தேவைப் படும் என்று அறிந்து, அந்த பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது மத்திய-மாநில அரசாங்கங்களிடமிருந்து மாறி-மாறி டென்டர்கள் வாங்கி விநியோகிப்பது / அதேமாதிரி சேவையை அறிந்து அந்த சேவை நிறுவனங்களை தொடங்குவது அதற்கான அனுமதிகள், சான்றிதழ்கள், ஒப்புதல்கள் முதலியனவற்றை சுபமாக வாங்குவது என்று இந்த அரசியல்-முதலாளிகள் தங்களது சுழற்ச்சிக்கொள்ளை முறையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதரற்கேற்ற முறையில் அவர்களது ஊடங்கங்கள் வீருகொண்டு எழுந்து யதேச்சதிகாரமான-அட்டகாசமான தாக்குதல் விளம்பரங்கள், பிரசார ரீதியில் செயல்படுகின்றன. அதற்கக நடிகைகள் / மாடல்கள் தேவையானதால், நடிகைகள் / மாடல்கள் உருவாக்கப் படுகிறார்கள். இப்படி ஒன்றொக்கொன்று இணக்கப் பட்டு, சுழற்ச்சியில் இயங்கி வருவதாலும், அதனால் சீர்கேடுகள் இருந்தும் பணம், வசதியான வாழ்க்கை, அரசியல்-அதிகாரிகள் ஆதரவு-நட்பு முதலியன கிடைப்பதாலும் அமைதியாக, ஆனந்தமாக வியாபாரம் தொடர்கிறது. மக்களின் பணம்தான் உறிஞப்பட்டு அவர்களிடம் செல்கின்றது.

வியாபார சங்கங்களின் கூட்டுக் கொள்ளை: குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையை கடந்த ஐந்தாண்டுகளாக ஆராயும் ஒரு குழுவின்படி, எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு மேற்கண்ட முறைகள் அரசியல்-குடும்பங்களால் தாராளமாக செயல்படுத்தி வருகின்றன என்பதனை எடுத்துக் காட்டுகிறது. பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  இவற்றின் முக்கியமான வேலை என்றால் அங்கத்தினர்களிடமிருந்து வசூல் செய்து மொத்தமாக ஆளும் மற்ற அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு அதன்படியே செய்து வருகின்றனர். பிரதியுபகாரமாக அரசு அவர்களை எதிவும் கேட்காது, எந்த நடிவடிக்கை யும் எடுக்காது, மாறாக வரிசலுகைகள், புதியதாகக் கட்டப் படும் அரசு-வணிக-வளாகங்களில் இடம், குத்தகை முதலிய பலன்கள் கிடைக்கும். இவ்விதமாக வியாபார சங்கங்களும், தொழிலதிபர்களும் மற்றவர்களும் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், விலைவாசி ஏற்றம் அல்லது பண்டிகை நேரங்களில் விலையேற்றி அடிக்கும் கொள்ளையை யாரும் தடுக்க வருவதில்லை.

“உருளைக்கிழங்கு-வெங்காயம்-தக்காளி” கூட்டு! நேற்று தக்காளி கிலோ ரூ. 5/- இன்றோ ரூ40/- ஏன் என்று கேட்டால், லாரி ஸ்டிரைக், சரக்கு வரவில்லை, அதிக மழை என்று காராணங்கள் சொல்லப் படுகின்றன. இப்படி நாலைந்து நாட்கள் விற்று கொள்ளையடித்து பிறகு மறுபடியும் ரூ.10/-ல் கொண்டு வைத்துவிடுவர்! வெங்காயம், உருளைக் கிழங்கும் இப்படிதான். அரசியல்வாதிகள்-வியாபாரிகள்தாம் குட்டாக இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம், அதற்காக காற்கறிகூட்டும் ஏற்படுத்தியுள்ளனர். அதுதான் “உருளைக்கிழங்கு-வெங்காயம்-தக்காளி” கூட்டு! மூன்றில் ஒன்று விலை இறங்fகினால் மற்ற இரண்டில் விலைக் கூட்டி சரி செய்துவிடுவர். ஆகவே இந்த கூட்டுவிலை சராசரியாக ரூ.30 முதல் 70 வரை இருக்கும்.

நாத்திகர்களின் பண்டிகைக் கொள்ளைகள்: இப்பொழுதெல்லாம், நம்பிக்கையாளர்களுக்கு பௌர்ணமி-அமாவாசை, பண்டிகைகள் முதலியன தெரியுமோ, நினைவிற்கு வருமோ இல்லையோ, பகுத்தறிவு பகலவன்கள், பகுத்தறிவி-மேதாவிகள், ரத்தத்தின் ரத்தங்கள், உடன் பிறவா சகோதர்கள் இவர்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கிறது! மைலாப்பூர்-மாம்பலம்-நங்கநல்லூர்-அடையாறு போன்ற இடங்களில், மார்க்கெட்டுகளில், குறிப்பாக ஸ்டேசன் ரோடுகளில், பண்டிகைகளில் இவர்கள் ரோட்டில் கடைகள் வைத்து, எல்லோரையும் “ஐய்யரே வாங்க, மாமி வாங்க” என்று கூவி அழைத்து, ஒரு புதிய சமத்துவத்தையேப் படைக்கிறார்கள். களிமண்ணால் செய்யப் படும் பிள்ளையார், அதிலும் அவர்களால் மிகவும் அதிகமாக வெறுக்கப் படும் பொருள், அதுதான் அவர்களின் முக்கிய வியாபாரம், ரூ. 50/- வரை விற்று வரலாறு படைக்கிறார்கள் பெரியார் பாசறை வீரர்கள்! என்ன இந்த விலைக்கு விற்கிறாயே என்று கேட்டால், “கொடை இலவசம், எருக்கம் பூமாலை இலவசம்” என்ற யுக்திகள், இல்லையென்றால், “வருடத்திற்கு ஒருமுறைதானே அத்ற்கு போய் கணக்கு பார்க்கிறீர்களே”, ரொம்ப போனால், இருக்கவே இருக்கிறது, “யோவ், இஷ்டம் இருந்தா வாங்கு, இல்லீனா………….போ………” என்று வசவு-மழை!

கொழுக்கும் நாத்திகர்களும், இளைக்கும் ஆத்திகர்களும்: இதே மாதிரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என வருடங்கள் உருளுகின்றன…………………பூ, வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், வாசனைப்பொருட்கள், வாழையிலை, முதலியவற்றை கண்டபடி விற்கிறார்கள் [ஒரு கிலோ வேர்கடலை ரூ.70/- அதாவது முன்பு –சர்க்கரை, கடலைமாவு விலை ஏறுவத்ற்கு முன்பு-ன்ஒரு கிலோ ஸ்வீட்/காரம் விலையும் வேர்கடலை விலையும் ஒன்று. இதே மாதிரி முன்பு ஒரு லிட்டல் தண்ணிர் ரூ.10/- ஆனால், ஒரு லிட்டர் பால் ரூ.8/- என விற்றது ஞாபகம் இருக்கலாம்!]. அவற்றை விற்றவர்கள், விற்று வருபவர்கள் இரண்டு ஃபிளாட்டுகள், மூன்று ஆட்டோக்கள், வேன் இத்யாதி வாங்கிவிட்டனர். ஆனால், பூஜை செய்யும் கோஷ்டிகள், ஆத்திக குழுமங்கள் அப்படியே பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்! இதில் வேடிக்கை என்னவென்றால் சில குறிப்பிட்ட பொருட்களில் ஆதிக்கம் செல்லுத்துவது முஸ்லீம்களும், கிருத்துவர்கள்தாம். குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம். அவர்கள் நினைத்தால் அப்பொருட்கள் மார்க்கெட்டில் வராது அல்லது வராமலே செய்து விடலாம்! அவர்கள் வைத்ததுதான் சட்டம். அத்தகைய “ஹிட்லர்-வியாபாரமும்” நடக்கிறது!

ஆயுத பூஜை அடாவடியும், கொள்ளையும்: ஆயுத பூஜை கொண்டாடுவதை திருவாளர் வீரமணி “விடுதலையில்” சுதந்திரமாக வசவு பேசுவார், தூற்றூவார்! ஆனால், பகுத்தறிவு பாசரைகள் முக்கியமாக கொள்லையெடிப்பதே இந்த பூஜையில்தான். சாதாரண கூலியாள் [ஆட்டோ-பட்டரை அனைவரும், அனைத்து தொழிலாளர்களும் அடங்குவர்] முதல் “பெரியாள்”-முதலாளி [பணம் கொடுத்து நடத்துபவர்கள்] வரை கொண்டாடும் விழா, உண்மையிலேயே சமத்துவ விழா. சொல்லபோனால் அதுதான் உண்மையன “தொழிலாளர் விழா”. அரசாங்க / தனியார் அலுவகங்கல்ளிலலம் நடைபெறும். எல்லோரும் காசு போட்டு, அரிசிபொறி, கடலை, பழங்கள், இனிப்புகள் வாங்கி கொண்டாடுவர். ‘மைக்-ஸ்பீக்கர்-செட்டுகளுக்கு” கடுன்மையான கிராக்கி இருக்கும்! அப்பொழுதும், சில கிருத்துவர்கள்-முஸ்லீம்கள் அதனை எதிர்ப்பர். ஒன்று காசு கொடுக்கமாட்டார்கள் அல்லது தனது மேஜை-பீரோக்களுக்கு பூஜைபோடுவதை மறுப்பார்கள். சந்தனபொட்டு வைப்பதைக் கூட எதிர்ப்பார்கள்! அனால், இத்தகைய ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கு புழலும் பணம் கோடிகள்! பூஜை முடிந்ததும் லாபங்களை அடைவது பொறி, கடலை, இனிப்பு விற்பவர்கள்தாம்!

அரசியல்: “நீயா, நானா?” தா, பாண்டியனின் மீது எடுத்த நடவடிக்கயின் போது, பல விஷயங்கள் வெளிவந்தன. ஆனால், அவை எந்த அரசியல்வாதியும் தேர்தலுக்கு நிற்கும்போது தனது “அஃபிடேவிட்”டில் தனது சொத்துகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, முரசொலி மாறன், தயாநிதி மாறன் முதலியோர் கொடுத்திருந்தாலும் தமிழக நாளிதழ்கள் / பத்திரிக்கைகள் மௌனமாகவே இருந்தன. அதுபட்டுமல்லாது, நூற்றுக் கணக்கான நிறுவனங்களில் / கம்பெனிகளில் முதலாளி, கூட்டு-முதலாளி, நடத்தும்-முதலாளி, பங்குதாரர் என இருக்கும்போது அந்தந்த சட்ட-திட்டங்களுக்கு ஏற்ப பல விண்ணப்பங்களில், தஸ்ஜாவேஜுகளில் தம்மைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதும் வெளிப்படையானவையே. ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி பேசாதது ஆச்சரியம்தான். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்டு பேசினால் மக்கள் அவற்றை ஏதோ எதிர் கட்சிகள் சொல்கின்றன, இல்லை “கருணாநிதி-ஜெயலலிதா சண்டை” போன்றது என்று யாரும் கண்டு கொள்வதில்லை.

ஊழல் என்பது வியாதி, லஞ்சம் என்பது வெளிப்பாடு: எப்படி ஒரு பெண் துணிந்து அல்லது வலுக்கட்டாயமாக விபசாரியாகிறாளோ, அதுமாதிரிதான் ஊழலும் மனதில் உருவாகி வெளிப்படுகிறது. என்ன காரணங்கள் சொல்லி நியாயப் படுத்தினாலும் இப்பாவங்களை ஒப்புக் கொள்ள முடியாது. சமூக நினைவு, உணர்வு, தொடு-உணர்ச்சி மரத்து போகும்போது, தனி மனிதன் தன்னுடைய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மறக்கப் படும்போது, மனிதாபிமானத்தையே மறைத்துக் கொள்ளும்போது ஊழல் ஊற்றெடுக்கிறது. எப்படி விபசாரி முதன் முதலில் தயங்கி, பிறகு பழகி தொழிலில் இறங்கி விடுகிறானோ ஊழல் செய்கின்றவனும் அப்படியே. முதன் முதலில் உணவில் உணவுப் பொருட்களில், கலப்படம் செய்கின்றவனும், போலிமருந்து உற்பத்தி செய்பவனும், உணர்ந்து பிறகு மரத்துப் போயிருப்பான்.

எப்படி தீவிரவாதி குண்டுவைத்தால் பல மனிதர்கள் கொல்லப் படுவார்கள் என்று அறிந்தும் குண்டு வைத்துக் கொல்கிறானோ, அதுபோலத் தான், ஊழல் செய்பவனும். எனவே, முதலில் அவன் தவறு செய்வதை நியாயப் படுத்திக் கொள்ள யாதாவது ஒரு சித்தாந்தர்த்தை ஏற்றுக் கொள்கின்றான்.

“கொன்றால் பாவம், தின்னால் போச்சு”நிலை அடைந்ததும், கொல்வதைப் பற்றியும், தின்பதைப் பற்றியும் மறந்து, எப்படி லாவகமாகக் கொல்லலாம், கொன்ற உடல்களை இதமாகப் பதப்படுத்தலாம், அழகாக மாமிசத்தை உபயோகப் படுத்தலாம், சுசியாகச் சமைக்கலாம், எப்படி உண்ணலாம் என்றுதான் நினைப்பானேத் தவிர, உயிரைவிடும் நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான். அதுமாதிரியே, ஊழல்காரனும்.

ஊழல்காரனை மாற்ற, ஊழல்காரன் முதலில் மாற வேண்டும்: ஊழல்காரன் மாறவேண்டுமானல், அவன் திருந்த வேண்டுமானால், அவனே மாற வேண்டும். இருப்பினும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளி தண்டனைக்குட் படுத்தும்பொது, அவனையும் உட்படுத்தலாம். இன்றைய நிலையில் அது அவசியமாகிறது. புற்றுநோய் மாதிரி சமூகத்தையே புரையோடச் செய்யத் துணியும் அவர்கள் நிச்சயமாக, சமூகத்தினின்று அகற்றப் படவேண்டியவரே. ஊழல் தடுப்பு சட்டங்கள், நிறுவனங்கள் ஊழல் செய்பவர்கள் மீதான வழக்குகள் பதிவு செய்யப் படுதல், தண்டனை பரிந்துரைத்தல், இந்த விவரங்களை இணைதளத்தில் வெளியிடுதல் முதலியனவற்றை செய்து வருகின்றன. இருப்பினும், அந்தந்த துறையினர் ஊழல் செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டியுள்ளது. இங்கு மறுபடியும் ஊழல் வவலை செய்தால், தண்டனை மட்டுமல்லாது, எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் காலந்தடள்ளப் படுகிறது, பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள், மறுபடியும் அதே பதவிகளில் அமர்ந்து கொள்கிறார்கள். “பார்த்தாயா, என்னை ஒன்றும் ஆட்ட முடியாது, ஒன்றும்…………………………….முடியாது” என்று ஆணவத்துடன் இருப்பான். மறுபடியும் அவனது ஊழல், இன்னும் அதிகமாக-வேகமாக தொடங்கும், இருக்கும்.

லஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பால் மக்கள் திருப்தி

அக்டோபர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5326

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வேட்டையில் இதுவரை 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர் பொறுப்பில் இருந்து ஊழல், முறைகேடு செய்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

“லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம்’ என்ற வாசகம், அரசுத்துறைகள் இயங்கிய காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், “காசு இல்லையென்றால் காரியம் நடக்காது’ என்ற நிலைதான் அரசுத்துறைகளில் தொடரும் அவலம். போலீஸ் துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. அரசை சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களது தேவைகளுக்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சாதாரண ரேஷன் கார்டு முதல், பெரிய அளவிலான தொழிற்சாலை அனுமதி வரை அனைத்து பைல்களும் தடையின்றி செல்ல லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில அதிகாரிகளால், அத்துறை சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. லஞ்சத்தைத் தடுப்பதற்கு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இந்த துறை நடத்திய வேட்டையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை தவிர, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல், முறைகேடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி உள்ளன. அவை தவிர ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுகிறது. “அரசு ஊழியர்கள் காட்டில் மழை’ என்று பொதுமக்கள் மூக்கு மீது விரல் வைத்தாலும், இது போதாது எனக் கூறி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிலர் மறைமுக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, லஞ்சம் கேட்கும் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிடும் பக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிக்கு கொடுத்த லஞ்சத்தை, மக்களிடம் இருந்து வசூல் செய்து விடலாம் என்ற நோக்கில் கையை நீட்டி மாட்டிக் கொள்வதும், அரசுக்கு வரும் வருவாயை தன் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாலும் போலீசாரால் கைவிலங்கு பூட்டும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆரம்பத்தில் இருந்ததை விட, லஞ்சம் வாங்குவது தற்போது குறைந்துள்ளது. எங்கள் துறையை பொறுத்தமட்டில் லஞ்சம் வாங்கக்கூடாது என அனைத்து ஊழியர்களிடமும் கூறி வருகிறோம். புரோக்கர்கள் சிலர் வாங்கிக் கொண்டு அதிகாரிகளை சிக்கலில் மாட்டி வைக்கின்றனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப் புகார் தொடர்பான அறிவிப்பு பலகைகளை வைக்குமாறும் வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகள் கேட்டாலும், மக்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும், அவ்வாறு இருந்தால் லஞ்சம் வாங்குவது விரைவில் நின்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு வேட்டையில் அரசு தீவிரமாக உள்ளதால், அரசு அலுவலகங்களில் சமீப நாட்களாக லஞ்சம் ஓரளவு குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலை தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

வேதபிரகாஷ்

18-10-2009

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்!

நவம்பர் 5, 2009
நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13820

வத்திராயிருப்பு: நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர் மீது, நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் உத்தரவிட்டனர். தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும், பிரசவம், பொதுநல வார்டுகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.

பெண் நோயாளிகளிடம் டாக்டர்கள் வருகை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டனர். அறுவை சிகிச்சை அரங்குக்கு வந்த குழுவினர் அங்கிருந்த ஏழு “ஆட்டோ கிளேவ்’ இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை கண்டித்தனர். பின், மாத்திரை வழங்கும் பிரிவிலிருந்து வெளியேறிய நோயாளியிடம் மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்தனர். மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விவரங்களுடன் எழுதிய கவரை வழங்காததால் மருந்தாளுனர்களை எச்சரிக்கை செய்தனர். வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஊனமுற்றவர்கள், ஏழைகளுக்கான நலநிதிக்கு உண்டியல் வசூல் மட்டுமே செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.