Archive for the ‘ஒரு-ரூபாய்-அரிசி-கடத்தல்’ Category

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

ஓகஸ்ட் 8, 2010

லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?

இந்த கட்டுரை யாதோ கருணாநிதி, அவர் குடும்பம் முதலியவற்றைப் பற்றி விமச்சிக்கும் கட்டுரை அல்ல. அவர், அவர் குடும்ப அங்கத்தினர்கள் அரசியல், அரசியல் அதிகாரம், முதலியவற்றை உபயோகித்து தங்களது தனி நபர் வருமானங்களை அதிகமாக பெருக்குவதற்கு உபயோகித்த முறை, அவற்றால் தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டத் தான் எழுதப் படுகிறது. இந்த மாதிரி எந்த அரசியல்வாதியும் மற்றவரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை வதைத்தால் அவர்களுக்கும் இது பொருந்தும். 1970லிருந்து இப்போழுது வரை பரிணாம வளர்ச்சி எடுத்துள்ள நிலைதான் இது.

தமிழகத்தில் லஞ்சக் கைதுகள்: கருணாநிதி இப்பொழுதுமே பெருமையுடன் ஆர்பரிப்பார் தன்னை தமிழர்கள் ஐந்தாவது முறையாக அரியணை ஏற்றினர் என்று, ஆனால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் லஞ்சம், கையூட்டு, மாமூல், இனாம் தராமல் தமிழக அரசின் எந்த துறையிலும் எந்த வேலையும் நடக்காது என்று. அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கே அது கொடுத்தால்தான் நடக்கும்! இருப்பினும் இவ்வருடம், இந்த ஐந்தாண்டு ஆட்சியில் லஞ்சம் வாங்கியதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆச்சரியமாகவே உள்ளது. இதனால் மாநில அரசு ஊழியர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் “இதெல்லாம் வரப்போகின்ற தேர்தல் யுக்தியப்பா, பொருத்திரு, தலைவர் இதற்காக தகுந்த பரிசு அளிப்பார்” என்ற பேச்சும் அடிபடுகிறது. முன்பு வை. கோபாலசாமி “ஜெயலலிதா ஊழலின் கிணறு என்றால் கருணாநிதி ஊழலின் ஊற்றுக்கண்” என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம். நிச்சயமாக கருணாநிதி ஊழலற்ற நிர்வாகத்திற்காக இந்த கைதுகளை செய்யவில்லை.

சமத்துவ-அரசியல்-கூட்டு: சாராயமும், வீரப்பனும், பிரபாகரனும் இத்தகைய தமிழக, ஏன் தென்னிந்திய அரசியல்வாதிகளைப் பற்றி நிறையவே சொல்வார்கள். கட்சி-மாநில பேதங்கள், வேறுபாடுகள், ஜாதி-இன வித்தியாசங்கள் எதுவும் இன்றி “சமத்துவத்தை” உண்டாக்கிய பெருமை இந்த மூன்றையே சேரும். பாவம், முதலானது தமிழகத்தில் அரசுடமையாக்கப் பட்டு விட்டது, மற்ற இரண்டும் இவ்வுலகத்தில் இல்லை. பின்னது இல்லாது போனபோது, பலர் வருந்தினாலும், மனதிற்குள் பெருமூச்சு விட்டு, “நல்லவேளை இந்த பிரச்சினை போயிற்று” என்று அமைதியானவரும் உண்டு. நாளிதழ்கள்-பத்திரிக்கைகளைவிட அரசாங்க கோப்புகள் இவற்றைப் பற்றி அதிகமாகவே சொல்லும். ஆனால் வெளியே வராது, வராமல் பார்த்துக் கொள்கின்றனர். அதை மறைக்கத் தான் அரசயில் கட்சிகள் தினமும் நடத்தும் ஒன்றுக்கொன்று குறைகூறும், பழிசொல்லும், அவதூறு பேசும் பட்டிமன்றங்கள், நாடகங்கள், சிறப்புச் செய்திகள்!

அரசியல்-தொழிலதிபர்-வியாபார கூட்டின் விளைவு: “டிரான்ஸ்பேரன்ட்-இன்டர்நேஷனல்” என்ற நிறுவனமானது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற புதிய உலக பொருளாதார பாதயில் செல்லும் இந்தியாவில் ஊழல்-லஞ்சம், கம்பெனிகளின் மோசடிகள், கூட்டுக் கொள்ளை, பொருள்-சேவை முதலியவற்றை பெரும், வாங்கும், விற்கும் நடவடிக்கைகளில் உள்ள ஊழல், அரசியல்-ஊடக-சினிமா சாம்ராஜ்ய கூட்டு சுரண்டல் என பல வகைகளில் இந்தியர்கள் எப்படி கடந்த 15 ஆண்டுகளாக பாதிக்கப் படுகின்றனர் என்று எடுத்துக் காட்டியுள்ளனர். எந்த பொருள் அல்லது மக்களுக்கு அதிகமாகத் தேவைப் படும் என்று அறிந்து, அந்த பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது மத்திய-மாநில அரசாங்கங்களிடமிருந்து மாறி-மாறி டென்டர்கள் வாங்கி விநியோகிப்பது / அதேமாதிரி சேவையை அறிந்து அந்த சேவை நிறுவனங்களை தொடங்குவது அதற்கான அனுமதிகள், சான்றிதழ்கள், ஒப்புதல்கள் முதலியனவற்றை சுபமாக வாங்குவது என்று இந்த அரசியல்-முதலாளிகள் தங்களது சுழற்ச்சிக்கொள்ளை முறையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதரற்கேற்ற முறையில் அவர்களது ஊடங்கங்கள் வீருகொண்டு எழுந்து யதேச்சதிகாரமான-அட்டகாசமான தாக்குதல் விளம்பரங்கள், பிரசார ரீதியில் செயல்படுகின்றன. அதற்கக நடிகைகள் / மாடல்கள் தேவையானதால், நடிகைகள் / மாடல்கள் உருவாக்கப் படுகிறார்கள். இப்படி ஒன்றொக்கொன்று இணக்கப் பட்டு, சுழற்ச்சியில் இயங்கி வருவதாலும், அதனால் சீர்கேடுகள் இருந்தும் பணம், வசதியான வாழ்க்கை, அரசியல்-அதிகாரிகள் ஆதரவு-நட்பு முதலியன கிடைப்பதாலும் அமைதியாக, ஆனந்தமாக வியாபாரம் தொடர்கிறது. மக்களின் பணம்தான் உறிஞப்பட்டு அவர்களிடம் செல்கின்றது.

வியாபார சங்கங்களின் கூட்டுக் கொள்ளை: குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையை கடந்த ஐந்தாண்டுகளாக ஆராயும் ஒரு குழுவின்படி, எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு மேற்கண்ட முறைகள் அரசியல்-குடும்பங்களால் தாராளமாக செயல்படுத்தி வருகின்றன என்பதனை எடுத்துக் காட்டுகிறது. பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  இவற்றின் முக்கியமான வேலை என்றால் அங்கத்தினர்களிடமிருந்து வசூல் செய்து மொத்தமாக ஆளும் மற்ற அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு அதன்படியே செய்து வருகின்றனர். பிரதியுபகாரமாக அரசு அவர்களை எதிவும் கேட்காது, எந்த நடிவடிக்கை யும் எடுக்காது, மாறாக வரிசலுகைகள், புதியதாகக் கட்டப் படும் அரசு-வணிக-வளாகங்களில் இடம், குத்தகை முதலிய பலன்கள் கிடைக்கும். இவ்விதமாக வியாபார சங்கங்களும், தொழிலதிபர்களும் மற்றவர்களும் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், விலைவாசி ஏற்றம் அல்லது பண்டிகை நேரங்களில் விலையேற்றி அடிக்கும் கொள்ளையை யாரும் தடுக்க வருவதில்லை.

“உருளைக்கிழங்கு-வெங்காயம்-தக்காளி” கூட்டு! நேற்று தக்காளி கிலோ ரூ. 5/- இன்றோ ரூ40/- ஏன் என்று கேட்டால், லாரி ஸ்டிரைக், சரக்கு வரவில்லை, அதிக மழை என்று காராணங்கள் சொல்லப் படுகின்றன. இப்படி நாலைந்து நாட்கள் விற்று கொள்ளையடித்து பிறகு மறுபடியும் ரூ.10/-ல் கொண்டு வைத்துவிடுவர்! வெங்காயம், உருளைக் கிழங்கும் இப்படிதான். அரசியல்வாதிகள்-வியாபாரிகள்தாம் குட்டாக இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம், அதற்காக காற்கறிகூட்டும் ஏற்படுத்தியுள்ளனர். அதுதான் “உருளைக்கிழங்கு-வெங்காயம்-தக்காளி” கூட்டு! மூன்றில் ஒன்று விலை இறங்fகினால் மற்ற இரண்டில் விலைக் கூட்டி சரி செய்துவிடுவர். ஆகவே இந்த கூட்டுவிலை சராசரியாக ரூ.30 முதல் 70 வரை இருக்கும்.

நாத்திகர்களின் பண்டிகைக் கொள்ளைகள்: இப்பொழுதெல்லாம், நம்பிக்கையாளர்களுக்கு பௌர்ணமி-அமாவாசை, பண்டிகைகள் முதலியன தெரியுமோ, நினைவிற்கு வருமோ இல்லையோ, பகுத்தறிவு பகலவன்கள், பகுத்தறிவி-மேதாவிகள், ரத்தத்தின் ரத்தங்கள், உடன் பிறவா சகோதர்கள் இவர்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கிறது! மைலாப்பூர்-மாம்பலம்-நங்கநல்லூர்-அடையாறு போன்ற இடங்களில், மார்க்கெட்டுகளில், குறிப்பாக ஸ்டேசன் ரோடுகளில், பண்டிகைகளில் இவர்கள் ரோட்டில் கடைகள் வைத்து, எல்லோரையும் “ஐய்யரே வாங்க, மாமி வாங்க” என்று கூவி அழைத்து, ஒரு புதிய சமத்துவத்தையேப் படைக்கிறார்கள். களிமண்ணால் செய்யப் படும் பிள்ளையார், அதிலும் அவர்களால் மிகவும் அதிகமாக வெறுக்கப் படும் பொருள், அதுதான் அவர்களின் முக்கிய வியாபாரம், ரூ. 50/- வரை விற்று வரலாறு படைக்கிறார்கள் பெரியார் பாசறை வீரர்கள்! என்ன இந்த விலைக்கு விற்கிறாயே என்று கேட்டால், “கொடை இலவசம், எருக்கம் பூமாலை இலவசம்” என்ற யுக்திகள், இல்லையென்றால், “வருடத்திற்கு ஒருமுறைதானே அத்ற்கு போய் கணக்கு பார்க்கிறீர்களே”, ரொம்ப போனால், இருக்கவே இருக்கிறது, “யோவ், இஷ்டம் இருந்தா வாங்கு, இல்லீனா………….போ………” என்று வசவு-மழை!

கொழுக்கும் நாத்திகர்களும், இளைக்கும் ஆத்திகர்களும்: இதே மாதிரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என வருடங்கள் உருளுகின்றன…………………பூ, வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், வாசனைப்பொருட்கள், வாழையிலை, முதலியவற்றை கண்டபடி விற்கிறார்கள் [ஒரு கிலோ வேர்கடலை ரூ.70/- அதாவது முன்பு –சர்க்கரை, கடலைமாவு விலை ஏறுவத்ற்கு முன்பு-ன்ஒரு கிலோ ஸ்வீட்/காரம் விலையும் வேர்கடலை விலையும் ஒன்று. இதே மாதிரி முன்பு ஒரு லிட்டல் தண்ணிர் ரூ.10/- ஆனால், ஒரு லிட்டர் பால் ரூ.8/- என விற்றது ஞாபகம் இருக்கலாம்!]. அவற்றை விற்றவர்கள், விற்று வருபவர்கள் இரண்டு ஃபிளாட்டுகள், மூன்று ஆட்டோக்கள், வேன் இத்யாதி வாங்கிவிட்டனர். ஆனால், பூஜை செய்யும் கோஷ்டிகள், ஆத்திக குழுமங்கள் அப்படியே பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்! இதில் வேடிக்கை என்னவென்றால் சில குறிப்பிட்ட பொருட்களில் ஆதிக்கம் செல்லுத்துவது முஸ்லீம்களும், கிருத்துவர்கள்தாம். குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம். அவர்கள் நினைத்தால் அப்பொருட்கள் மார்க்கெட்டில் வராது அல்லது வராமலே செய்து விடலாம்! அவர்கள் வைத்ததுதான் சட்டம். அத்தகைய “ஹிட்லர்-வியாபாரமும்” நடக்கிறது!

ஆயுத பூஜை அடாவடியும், கொள்ளையும்: ஆயுத பூஜை கொண்டாடுவதை திருவாளர் வீரமணி “விடுதலையில்” சுதந்திரமாக வசவு பேசுவார், தூற்றூவார்! ஆனால், பகுத்தறிவு பாசரைகள் முக்கியமாக கொள்லையெடிப்பதே இந்த பூஜையில்தான். சாதாரண கூலியாள் [ஆட்டோ-பட்டரை அனைவரும், அனைத்து தொழிலாளர்களும் அடங்குவர்] முதல் “பெரியாள்”-முதலாளி [பணம் கொடுத்து நடத்துபவர்கள்] வரை கொண்டாடும் விழா, உண்மையிலேயே சமத்துவ விழா. சொல்லபோனால் அதுதான் உண்மையன “தொழிலாளர் விழா”. அரசாங்க / தனியார் அலுவகங்கல்ளிலலம் நடைபெறும். எல்லோரும் காசு போட்டு, அரிசிபொறி, கடலை, பழங்கள், இனிப்புகள் வாங்கி கொண்டாடுவர். ‘மைக்-ஸ்பீக்கர்-செட்டுகளுக்கு” கடுன்மையான கிராக்கி இருக்கும்! அப்பொழுதும், சில கிருத்துவர்கள்-முஸ்லீம்கள் அதனை எதிர்ப்பர். ஒன்று காசு கொடுக்கமாட்டார்கள் அல்லது தனது மேஜை-பீரோக்களுக்கு பூஜைபோடுவதை மறுப்பார்கள். சந்தனபொட்டு வைப்பதைக் கூட எதிர்ப்பார்கள்! அனால், இத்தகைய ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கு புழலும் பணம் கோடிகள்! பூஜை முடிந்ததும் லாபங்களை அடைவது பொறி, கடலை, இனிப்பு விற்பவர்கள்தாம்!

அரசியல்: “நீயா, நானா?” தா, பாண்டியனின் மீது எடுத்த நடவடிக்கயின் போது, பல விஷயங்கள் வெளிவந்தன. ஆனால், அவை எந்த அரசியல்வாதியும் தேர்தலுக்கு நிற்கும்போது தனது “அஃபிடேவிட்”டில் தனது சொத்துகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, முரசொலி மாறன், தயாநிதி மாறன் முதலியோர் கொடுத்திருந்தாலும் தமிழக நாளிதழ்கள் / பத்திரிக்கைகள் மௌனமாகவே இருந்தன. அதுபட்டுமல்லாது, நூற்றுக் கணக்கான நிறுவனங்களில் / கம்பெனிகளில் முதலாளி, கூட்டு-முதலாளி, நடத்தும்-முதலாளி, பங்குதாரர் என இருக்கும்போது அந்தந்த சட்ட-திட்டங்களுக்கு ஏற்ப பல விண்ணப்பங்களில், தஸ்ஜாவேஜுகளில் தம்மைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதும் வெளிப்படையானவையே. ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி பேசாதது ஆச்சரியம்தான். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்டு பேசினால் மக்கள் அவற்றை ஏதோ எதிர் கட்சிகள் சொல்கின்றன, இல்லை “கருணாநிதி-ஜெயலலிதா சண்டை” போன்றது என்று யாரும் கண்டு கொள்வதில்லை.

ஊழல் என்பது வியாதி, லஞ்சம் என்பது வெளிப்பாடு: எப்படி ஒரு பெண் துணிந்து அல்லது வலுக்கட்டாயமாக விபசாரியாகிறாளோ, அதுமாதிரிதான் ஊழலும் மனதில் உருவாகி வெளிப்படுகிறது. என்ன காரணங்கள் சொல்லி நியாயப் படுத்தினாலும் இப்பாவங்களை ஒப்புக் கொள்ள முடியாது. சமூக நினைவு, உணர்வு, தொடு-உணர்ச்சி மரத்து போகும்போது, தனி மனிதன் தன்னுடைய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மறக்கப் படும்போது, மனிதாபிமானத்தையே மறைத்துக் கொள்ளும்போது ஊழல் ஊற்றெடுக்கிறது. எப்படி விபசாரி முதன் முதலில் தயங்கி, பிறகு பழகி தொழிலில் இறங்கி விடுகிறானோ ஊழல் செய்கின்றவனும் அப்படியே. முதன் முதலில் உணவில் உணவுப் பொருட்களில், கலப்படம் செய்கின்றவனும், போலிமருந்து உற்பத்தி செய்பவனும், உணர்ந்து பிறகு மரத்துப் போயிருப்பான்.

எப்படி தீவிரவாதி குண்டுவைத்தால் பல மனிதர்கள் கொல்லப் படுவார்கள் என்று அறிந்தும் குண்டு வைத்துக் கொல்கிறானோ, அதுபோலத் தான், ஊழல் செய்பவனும். எனவே, முதலில் அவன் தவறு செய்வதை நியாயப் படுத்திக் கொள்ள யாதாவது ஒரு சித்தாந்தர்த்தை ஏற்றுக் கொள்கின்றான்.

“கொன்றால் பாவம், தின்னால் போச்சு”நிலை அடைந்ததும், கொல்வதைப் பற்றியும், தின்பதைப் பற்றியும் மறந்து, எப்படி லாவகமாகக் கொல்லலாம், கொன்ற உடல்களை இதமாகப் பதப்படுத்தலாம், அழகாக மாமிசத்தை உபயோகப் படுத்தலாம், சுசியாகச் சமைக்கலாம், எப்படி உண்ணலாம் என்றுதான் நினைப்பானேத் தவிர, உயிரைவிடும் நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான். அதுமாதிரியே, ஊழல்காரனும்.

ஊழல்காரனை மாற்ற, ஊழல்காரன் முதலில் மாற வேண்டும்: ஊழல்காரன் மாறவேண்டுமானல், அவன் திருந்த வேண்டுமானால், அவனே மாற வேண்டும். இருப்பினும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளி தண்டனைக்குட் படுத்தும்பொது, அவனையும் உட்படுத்தலாம். இன்றைய நிலையில் அது அவசியமாகிறது. புற்றுநோய் மாதிரி சமூகத்தையே புரையோடச் செய்யத் துணியும் அவர்கள் நிச்சயமாக, சமூகத்தினின்று அகற்றப் படவேண்டியவரே. ஊழல் தடுப்பு சட்டங்கள், நிறுவனங்கள் ஊழல் செய்பவர்கள் மீதான வழக்குகள் பதிவு செய்யப் படுதல், தண்டனை பரிந்துரைத்தல், இந்த விவரங்களை இணைதளத்தில் வெளியிடுதல் முதலியனவற்றை செய்து வருகின்றன. இருப்பினும், அந்தந்த துறையினர் ஊழல் செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டியுள்ளது. இங்கு மறுபடியும் ஊழல் வவலை செய்தால், தண்டனை மட்டுமல்லாது, எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் காலந்தடள்ளப் படுகிறது, பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள், மறுபடியும் அதே பதவிகளில் அமர்ந்து கொள்கிறார்கள். “பார்த்தாயா, என்னை ஒன்றும் ஆட்ட முடியாது, ஒன்றும்…………………………….முடியாது” என்று ஆணவத்துடன் இருப்பான். மறுபடியும் அவனது ஊழல், இன்னும் அதிகமாக-வேகமாக தொடங்கும், இருக்கும்.

லஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பால் மக்கள் திருப்தி

அக்டோபர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5326

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வேட்டையில் இதுவரை 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர் பொறுப்பில் இருந்து ஊழல், முறைகேடு செய்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

“லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம்’ என்ற வாசகம், அரசுத்துறைகள் இயங்கிய காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், “காசு இல்லையென்றால் காரியம் நடக்காது’ என்ற நிலைதான் அரசுத்துறைகளில் தொடரும் அவலம். போலீஸ் துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. அரசை சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களது தேவைகளுக்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சாதாரண ரேஷன் கார்டு முதல், பெரிய அளவிலான தொழிற்சாலை அனுமதி வரை அனைத்து பைல்களும் தடையின்றி செல்ல லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில அதிகாரிகளால், அத்துறை சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. லஞ்சத்தைத் தடுப்பதற்கு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இந்த துறை நடத்திய வேட்டையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை தவிர, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல், முறைகேடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி உள்ளன. அவை தவிர ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுகிறது. “அரசு ஊழியர்கள் காட்டில் மழை’ என்று பொதுமக்கள் மூக்கு மீது விரல் வைத்தாலும், இது போதாது எனக் கூறி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிலர் மறைமுக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, லஞ்சம் கேட்கும் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிடும் பக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிக்கு கொடுத்த லஞ்சத்தை, மக்களிடம் இருந்து வசூல் செய்து விடலாம் என்ற நோக்கில் கையை நீட்டி மாட்டிக் கொள்வதும், அரசுக்கு வரும் வருவாயை தன் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாலும் போலீசாரால் கைவிலங்கு பூட்டும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆரம்பத்தில் இருந்ததை விட, லஞ்சம் வாங்குவது தற்போது குறைந்துள்ளது. எங்கள் துறையை பொறுத்தமட்டில் லஞ்சம் வாங்கக்கூடாது என அனைத்து ஊழியர்களிடமும் கூறி வருகிறோம். புரோக்கர்கள் சிலர் வாங்கிக் கொண்டு அதிகாரிகளை சிக்கலில் மாட்டி வைக்கின்றனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப் புகார் தொடர்பான அறிவிப்பு பலகைகளை வைக்குமாறும் வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகள் கேட்டாலும், மக்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும், அவ்வாறு இருந்தால் லஞ்சம் வாங்குவது விரைவில் நின்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு வேட்டையில் அரசு தீவிரமாக உள்ளதால், அரசு அலுவலகங்களில் சமீப நாட்களாக லஞ்சம் ஓரளவு குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலை தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

வேதபிரகாஷ்

18-10-2009

கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி!

ஜூன் 2, 2010

கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி!

செம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம்.

செம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர்.

அன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க வைத்தது.

இனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

பல்கலை துனைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….

திருச்சி ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் ரகளை : தே.மு.தி.க., புகாரை வாங்க போலீசார் மறுப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10767

திருச்சி : திருச்சி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், தி.மு.க., – தே.மு.தி.க., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து, தே.மு.தி.க., கவுன்சிலர் கொடுத்த புகாரை, போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.

வெட்கமேயில்லாத கவுன்சிலர்கள்: திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கீதா(தி.மு.க.,) தலைமை வகித்தார். துணைத் தலைவர் சகுந்தலா சின்னையன் (காங்கிரஸ்) மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது, தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ், மின்வெட்டை கண்டிக்கும் வகையில் கையில் லாந்தர் விளக்கு, மின்விசிறி, குழாய் மாலை அணிந்து வந்தார். அப்போது, பேசிய ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் ஆவேசமடைந்து, லாந்தர் விளக்கை தூக்கி போட்டு உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., கவுன்சிலர் சிங்காரம், தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜை தாக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படத்தை போஸ்டர் அடித்த, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், திருச்சி முழுதும் ஒட்டினர். நேற்று நடந்த கூட்டத்தில், அந்த போஸ்டரை காட்டி சிங்காரம் பேசுகையில், “”சங்கீதாவின் சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த போஸ்டரில், கடந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள் ம.தி.மு.க., சேரன், தே.மு.தி.க., கனகராஜ் ஆகியோரை நான் தாக்கியது போல் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றார்.

கவுன்சிலர்களின்.நாற்காலி.சண்டை

கவுன்சிலர்களின்.நாற்காலி.சண்டை

கழகங்களின் உண்மையான உருவம்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நெடுமாறன், “”கடந்த கூட்டத்துக்கு நான் வரவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த நிலையிலும், எங்கள் சம்மதத்துடன் தான் தீர்மானம் நிறைவேறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது; இதை கண்டிக்கிறேன்,” என்றார். “”போஸ்டர் ஒட்டியதற்கு முதலில் எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பிறகு மற்ற பொருள் பற்றி பேசலாம்,” என்று, தலைவர் கூறினார். இதைத் தொடர்ந்து தி.மு.க., – அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிங்காரம், தனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த சேரன், கனகராஜ் ஆகிய இருவரையும் தாக்கினார். அப்போது அவர்களது மேஜை, நாற்காலிகள் கீழே விழுந்தன. அடி பலமாக விழுந்ததால், அலறிய சேரன், கூட்டத்தை விட்டு வெளியேறினார். கனகராஜின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. பின், தான் கொண்டு வந்த, “ஹெல்மெட்’டை தலையில் மாட்டிக் கொண்டார். சபியுல்லா என்ற கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு தாக்கத் துவங்கினார்.

திராவிடத்தின்-அருமை-பெருமை

திராவிடத்தின்-அருமை-பெருமை

கலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்: கவுன்சிலரிடையே மோதல் முற்றியதில் மேஜை, நாற்காலிகள் பறந்தன. மற்ற கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். மோதல் முற்றியதால், தலைவர் சங்கீதா, வெளியே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை உள்ளே அழைத்தார். போலீஸ் உதவி கமிஷனர்கள் ராஜசேகரன், பழனிசாமி மற்றும் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில், போலீசார் உள்ளே சென்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நெடுமாறன், ராஜ்மோகன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். “கலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்’ எனக் கூறி, அவர்களை திருப்பியனுப்பினர்.

கலெக்டரின் மழுப்பல்: கலெக்டர் சவுண்டையாவை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சந்தித்த பிறகு ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் கூறியதாவது: கவுன்சில் கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து கலெக்டரிடம் முறையிட்டோம். “அவர்கள் மீது தவறு இருப்பது நன்றாக தெரிகிறது. இதில், நான் எதுவும் செய்ய முடியாது. தலைவர் தான் முடிவெடுக்க முடியும். இதுபற்றி தலைவரிடம் பேசுகிறேன்’ என்று கூறினார். தொடர்ந்து கட்சித் தலைமையைக் கேட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்க உள்ளோம். இவ்வாறு சேரன் கூறினார்.

அரிசியும், அரசியலும், ஊழலும் – II

ஜனவரி 26, 2010

அரிசியும், அரசியலும், ஊழலும் – II

© வேதபிரகாஷ்

ரேஷன் அரிசியும், ஊழலும், ஏற்றுமதியும்: முன்னமே, இத்தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளேன்[1]. ஆனால், இது விஷயம் இந்த அளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை, அதாவது, ரேஷன் அரிசியை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தமிழர்களின் தார்மீகம் வளர்ந்திருப்பது, பெருமைப்ப்டக்கூடிய விஷயமா என்று பொறுப்புள்ள தமிழரஞர்கள், வித்தகர்கள், வார்த்தை சித்தர்கள், மறவன்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர்தாம் பதில் சொல்லவேண்டும், ஏனெனில், நமக்குத் தகுதி இல்லை. இப்பொழுதெல்லாம், இப்படி சொன்னாலே, பல நண்பர்களுக்குக் கோபம் வருகின்றது.

கேரளாவில் பெரிய வியாபாரம்: 100 முதல் 1000% லாபம்[2]: தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், கன்யாகுமரி, சிவகங்கை, திண்டுகல் முதலிய மாவட்டங்களிலிருந்து, குமுளி, கம்பம், போடிமேட்டு முதலிய (செக்-போஸ்டுகள்?) வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது சகஜமான விஷயமாக உள்ளது போலும். இடுக்கி மாவட்டத்திலுள்ள அரிசி மில் முதலாளிகள் ரூ.8-9/- கொடுத்து இந்த அரிசியை வாங்குகின்றனர். இதற்கென மொத்தவிலை ஏஜென்டுக்கள் இருக்கிறார்கள். ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கமிஷன் கொடுத்து அரிசி வாங்கப்படுகிறது – அதாவது விற்பவருக்கு 100% லாபம்! இதை மனிதர்கள் தாமாகவோ, சைக்கிள், இருசக்கர வாகனம், அட்டோ, வேன் என்று வைத்துக் கொண்டு கடத்துகின்றனர். ரேஷன்கடைக்காரர்களே இதில் ஈடுபட்டுள்ளார்கள். கேரள மில் சொந்தக்காரர்கள் அதை கொஞ்சம் சுத்தப்படுத்தி (பாலிஸ் செய்து) 75, 50 மற்றும் 25 கில்ப்ப் மூட்டைகளாகக் கட்டி சில்லரை வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு இதில் 100 முதல் 1000% லாபம் கிடைப்பதால், எல்லொரும் மகிழ்ச்சியாக கொள்ளையடிக்கின்றனர். இதெல்லாம் அரசுக்குத் தெரியாமல் போகாது, இருக்காது.

ஆந்திரப் பெண்களை வைத்துக் கொண்டு அரிசி கடத்தல்: ஆந்திர பெண்களை இதற்காகவே அழைத்துக் கொண்டு வந்து அரிசி கடத்தல் வேலையில் மில்-முதலாளிகள் பயன்படுத்துகின்றனர். கைது செய்யப்படுவது என்கத்தம்மா, ஏகத்தம்மா, கிருஷ்ணம்மா, பொன்னம்மா என்றுதான் உள்ளனர்! அந்த பெண்கள் யார், எவ்வாறு தமிழகத்திற்லு வரவழைக்கப்படுகின்றனர், யார் அழைத்துவருவது, இந்த அரிசி கடத்தலில் ஈடுபடுத்துவது? இதையெல்லாம் “நிஜங்கள்”, “பூத கண்ணாடிகள்” முதலியன பார்க்காது போலும். மில்லதிபர்கள் ஒரு ரூபாய் அரிசி அறிமுகப்படுத்தியதிலிருந்து சுலபமாக தமது லாபம் நான்கு மடங்கு ஏறியுள்ளதாக ஒப்புக்கொள்கின்றனர்[3]. மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் பேசும் எல்லொரும் இதனைப் பற்றி பேசுவதில்லை, எழுதுவதில்ல, ஏனனில் அரசியல்வாதிகளின் சம்பந்தம் தொடர்பு உள்ளதால். கேவலம், சில இடங்களில் தமது நண்பர்களே அதில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளபோது, மௌனம்தான் சாதிக்கின்றனர்!

திமுகவினரின் தொடர்பு: 2005லிருந்து நூற்றுக்கணக்கான பிடிபட்டவர்களின் வாக்குமூலங்கள், விசாரணைகள் முதலியன மூலம் தெரியவந்துள்ளது, திமுகவினர் இதை ஒரு கவர்ச்சிகர-நவீன-லாபகரமான ரீதியில் மிக நுட்பத்துடன் செயல்படுத்திவருவது தெரிகின்றது. நாளுக்கு நாள் புகார்கள் குவிய-குவிய தகவல் அறியும் சட்டத்தில் வேறு விண்ணப்பங்கள் வருவது கண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2008ல்தான், கீழ்கண்ட தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டன[4].

Complaints cell: Regarding procurement of paddy, complaints, if any, can be lodged by farmers in the following telephone numbers:

E. V. Velu – Food Minister’s office fax: 044-25670204,

K. Shanmugham, Secretary, Food Department, Tamil Nadu Government,

Head Office control room: 044-26424512,

Managing Director of TNCSC: 044-26421662,

K. Phanindra Reddy, Managing Director of Tamil Nadu Civil Supplies Corporation,

Vigilance office: 94440 84560,

Rajaram, Commissioner of Civil Supplies,

Senior Manager, Quality control: 94440 23119, and

Senior Manager control room: 044-26424512.

அரிசி கடத்துபவர்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பப்போது கலெக்டர்கள், அதிகாரிகள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பர். அரிசி கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்படும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் கோஷம் இருக்கும். முன்பு திண்டுக்கல் கலெக்டர் ஆர். வாசுகி அவ்வாறு குறியிருந்தார்[5]. திருப்பத்தூரில் ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த அரிசி பறிமுதல்[6]; அரிசி கடத்திய ஆறு பேர் கைது[7]; ஒரு ரூபாய் அரிசி கேரளவில் ரூ.17-18ற்கு விற்கப்படுகிறது[8];……………….இப்படி எங்கப்பன் குதிருக்குள் இல்லை பாணியில் செயல்படவேந்திய அவசியம் இல்லை. நியாயமாக உள்லனர் என்றால், ஒரே நாளில் எல்லாவற்ரையும் அடக்கிவிடலாம். ஆனால், திசைத் திருப்பதான், எதைப் பற்றியெல்லாம் பேசுகின்றனர் போலும்!

“சுங்க தினத்தில்” ரூபாய் நான்கு கோடி மதிப்புள்ள 22,12,000 கிலோ அரிசி பறிமுதல்[9]: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவிற்கு கப்பலில் கடத்தவிருந்த, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு செல்ல இருந்த எம்.வி.போந்தே 2 என்ற கப்பலில், தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அந்த கப்பலில் ஏற்றப்பட்ட 1,750 டன் அரிசியும், தூத்துக்குடி சத்யாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவன குடோனில் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் கடத்த இருந்த ரேஷன் அரிசி 2,212 டன் ஆகும். ரேஷன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டாலும் அதன் வெளிச்சந்தை மதிப்பு ஒரு கிலோ 18 ரூபாய். எனவே கடத்தப்பட இருந்த அரிசின் மதிப்பு  நான்கு கோடி ரூபாய். தமிழக அத்தியாவசிய பொருட்களை கடத்திய குற்றத்திற்காக அரிசி ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.

Important incidents and happenings in and around the world

மாலத்திவு அதிபர் வரும்போது மாலத்தீவுக்கு அரிசி கடத்தல்! கடத்தல் தடுப்பு குறித்து, சென்னை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் கூறியதாவது: தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம், இதை ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஐ.ஆர்.64 அரிசி (“IR64 boiled non-basmati sortex rice,” valued at Rs.3.89 crore, in 44,240 bags) எனக்கூறி, மாலத்தீவின் மாநில வணிக கார்ப்பரேஷன் என்ற அமைப்பிற்கு (the State Trading Organisation, Maldives), எம்.வி.போந்தே 2 (M.V. Bonthi II) என்ற கப்பலில் அனுப்ப இருந்தனர். கப்பலில் அரிசி ஏற்ற பயன்படுத்தப்பட்ட 19 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சிவில் சப்ளை அதிகாரிகள், கடத்தல் அரிசியை சோதித்ததில் அவை, தமிழக ரேஷன் அரிசிதான் என்பதை உறுதி செய்தனர். ஏற்றுமதி நிறுவனம் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராஜன் தெரிவித்தார்[10]. சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது[11].

Swine Flu

மாலத்தீவுக்கு கடத்தப்படவிருந்த 250 டன் அரிசி பிடிபட்டது! : தூத்துக்குடியில் உள்ள தனியார் கொடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[12].  தூத்துக்குடி சத்யா நகரில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை அதிகாரிகள் அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷிப்பிங் ஏஜன்சி கொடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு 250 டன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கொடோனில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அரிசி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து இந்த அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். டி.ஆர்.ஓ. துரை ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலமாக மாலத்தீவுக்கு கடத்துவற்காக அரிசி, கொடோனில் வைக்கப்பட்டிருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து பறக்கும் படை உயர்திகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர். துறைமுகத்திற்கு அரிசி ஏற்றி செல்லும் லாரிகளில் அவர்கள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள் அங்குள்ள கொடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதை மாபெரும் ஊழல் என்றே சொல்லலாம்: செய்யப்பட்ட காரியங்கள் விவரமாகச் செய்யப்பட்டுள்ளன. முனியம்மா, ராமம்ம, கிருஷ்ணம்மா முதலியோரை வௌத்துக் கொண்டு கடத்திய விவகாரம், இப்பொழுது ஆயிர டன் கணக்கில் “மாலத்தீவின் மாநில வணிக கார்ப்பரேஷன் என்ற அமைப்பிற்கு (the State Trading Organisation, Maldives)”, என்று அரசாங்க நிறுவனத்திற்கே அனுப்பும் அளவிற்கு இந்த ஊழல், சீர்கேடு, மனிதவிரோத-அக்கிரமம் அதிநவீன சாதனங்கள்-நூதனங்களுடன் அரங்கேறியிருப்பது சாதாரணமான நிகழ்ச்சியல்ல! சுங்கத்துறையைப் பொறுத்தவரைக்கும் தவறான அறிவிப்புடன் ஏற்றுமதி ஆவணங்கள் சமர்பிப்பு என்று சுருக்கி எதோ ஒரு அபராதம் என்று போட்டு வழக்கை அமுக்கிவிடலாம். ஆனால் அவ்வாறு 22,12,000 கிலோ அரிசி கட்டப்பட்டு 44,240 மூட்டைகள் வந்தன என்பதன் பின்னணியில்தான் அந்த ஊழல் அகப்பட்டுள்ளது. “ஆண்டவனே வந்தாலும் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்றா முடியாது”!

26-01-2010 செவ்வாய்கிழமை: இந்தி எதிர்க்கும் தமிழ் மொழிப்போராளிகளுக்கு இந்நாள் ஒரு துக்கத்தினம், கருப்புநாள்! கருணாநிதி நேற்றே ஞாபகப்படுத்திவிட்டார். இந்நாள் அனைத்துலக சுங்கதினமாகவும் கொண்டாடப் படுகிறது! அதனால் போலும், நேற்றே சுங்கத்துறையினர் இந்த ஒரு ரூபாய் அரிசியைப் பிடித்துவிட்டார்கள் போலும்! எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று இன்னுமோர் விடுமுறை, டிவிக்களில் தாராளமாக திரைப்படங்கள். பாவம், விஜய் டிவிதான் “காந்தி படம்” காட்டிக்கொண்டிருக்கிறது!

© வேதபிரகாஷ்

26-01-2010


[1]வேதபிரகாஷ், அரிசியும், அரசியலும், ஊழலும், விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்,  https://corruptioninindia.wordpress.com/2009/11/14/20/

[2] Business standard dated May 8, 2005

http://www.business-standard.com/india/news/pds-rice-smuggled-at-rs-17-18kg/36832/on

[3]Times of India dated  18 September 2008

http://timesofindia.indiatimes.com/city/chennai/Re-1-rice-get-smugglers-going/articleshow/3496136.cms

[4] The Hinu dated Thursday, Jan 10, 2008,

http://www.hinduonnet.com/2008/01/10/stories/2008011055350600.htm

[5] The Hindu, Stern action against ration rice smuggling, dated  Wednesday, Jan 07, 2009, for details, see at:  http://www.thehindu.com/2009/01/07/stories/2009010756290200.htm

[6] The Hindu, Ration rice seized, Monday, Sep 21, 2009

http://www.hindu.com/2009/09/21/stories/2009092153290300.htm

[7] The Hindu, Six arrested for rice smmugling, Wednesday, Jul 20, 2005

http://www.hindu.com/2005/07/20/stories/2005072003370300.htm

[8] http://www.business-standard.com/india/news/pds-rice-smuggled-at-rs-17-18kg/36832/on

[9] தினமலர், மாலத்தீவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ. 4 கோடி ரேஷன் அரிசி பறிமுதல், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15694

[10] http://www.hindu.com/2010/01/26/stories/2010012653170400.htm

[11] http://www.ptinews.com/news/485594_PDS-rice-about-to-be-exported-to-Maldives-seized மற்றும்

http://indiatoday.intoday.in/site/Story/80971/LATEST%20HEADLINES/PDS+rice+about+to+be+exported+to+Maldives+seized.html

[12] தினகரன், தூத்துக்குடி குடோனில் பதுக்கிய 250 டன் அரிசி பறிமுதல் , பதிவு செய்த நாள் 1/25/2010 1:00:48 AM  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=4514 . இதே செய்தி, இங்கேயும்:

http://www.inneram.com/201001246238/maldives-rice-sized-by-officers

லஞ்சக் கைதுகள் தொடர்கின்றன!

நவம்பர் 14, 2009
ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட இருவர் கைது
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14022

Important incidents and happenings in and around the world

கள்ளக்குறிச்சி : அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற, விவசாயிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி தாசில்தாரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது நிலம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை அகற்றக்கோரி சிவபாலன் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டில் உத்தரவானது.

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கள்ளக்குறிச்சி தாசில்தார் அன்பரசனிடம் சிவபாலன் மனு அளித்தார். இதற்காக, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதுடன், முன் பணமாக 25 ஆயிரம் தருமாறு தாசில்தார் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு சிவபாலன் தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுரையின்படி, தாசில்தார் குடியிருப்புக்கு நேற்று காலை சென்ற சிவபாலன், அவரது உதவியாளர் வில்லிஸ் என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். வில்லிஸ் அப்பணத்தை தாசில்தாரிடம் தர முயன்றபோது, அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர் கைது
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14027

Important incidents and happenings in and around the world

திருமங்கலம் : மதுரை அருகே முகவரி மாற்ற மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் (27). மின்சாதன பொருட்கள் ஏஜன்சி நடத்தி வருகிறார். அதே தெருவில் வேறொரு இடத்திற்கு ஏஜன்சியை மாற்றவும், டி.கல்லுப்பட்டி மெயின் ரோடு மற்றும் மம்சாபுரத்தில் கிளைகளை திறக்க முடிவு செய்தார். இதற்காக அனுமதி எண் (டின் எண்) பயன்படுத்த அனுமதி கேட்டு வணிகவரித்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக 1,000 ரூபாயை வாங்கிக் கொண்டார். நேற்று காலை வணிக வரித்துறை அலுவலகத்திற்கு வந்த அரவிந்தன், சான்றிதழ்களை கேட்டார். அதற்கு துரைராஜ், மீதிப்பணம் ரூ. நான்காயிரத்தை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என கூறியுள்ளார். பின், மூன்றாயிரம் ரூபாய்க்கு துரைராஜ் சம்மதித்துள்ளார்.

இது குறித்து அரவிந்தன், மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை அரவிந்தனிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் வைத்து துரைராஜிடம் கொடுத்தார். அதை வாங்கிய துரைராஜை போலீசார் கைது செய்தனர்.

அரிசியும், அரசியலும், ஊழலும்!

நவம்பர் 14, 2009

சினிமா ஸ்டைலில் அரசியல், ஆய்வுகள், திட்டங்கள்!

சினிமா ஸ்டைலில் அரசியல், ஆய்வுகள், திட்டங்கள்! சினிமாவிற்கு வசனமெழுதி, பாடல்கள்பாடி, சினிமா எடுத்து, தயாரித்து, பழைய சினிமா படங்கள் வாங்கிச் சேர்த்து, சினிமா தொலைக்காட்சி செனல்கள் ஆரம்பித்து, மகன், பேரன்களை சினிமாக்களில் நடிக்கவைத்து, சினிமாக்கள் வாங்குவது-விற்பது, நடிக-நடிகையரைக் கட்டு படுத்துதல்..  ..  ..   இவ்வாறு இன்று வரை சினிமாவை, சினிமாத் துறையையே ஆட்டிப்படக்கும் மாபெரும் அசுர சக்தியாக வளர்ந்துள்ளது, திமுக, கருணாநிதி, அவரது மூன்றுதலைமுறை வம்சாவளிகள். அத்தகைய கவர்ச்சிகர ஆட்டங்களில், அரசாட்சியும் சினிமா பாணியில் நடந்து வருகிறது. வேலை நடக்கிறதோ இல்லையோ, “முட்டாள் பெட்டியில்” தினம்-தினம் 300 கோடி ஒதுக்கப்பட்டது, திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது, தில்லிக்கு / பிரதம மந்திரிக்கு கடிதங்கள் எழுதப்பட்டன, வேலைக்குச் சேர பணிஆணைகள் விநியோகம் செய்யப்பட்டது என்று படம் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த பணம் என்னவாகிறது, மக்களுக்காக செலவழிக்கப்படுகிறதா, துவக்கிய திட்டங்கள் கல்வெட்டுகளுடன் நின்று விடாமல் செயல்படுத்தப் பட்டனவா, எழுதிய கடிதங்கள் வேடிக்கையான கவிதைகள் ஆயினவா அல்லது படிக்கப்பட்டனவா, அதனால் பிரயோஜனமாக ஏதாவது மக்களுக்கு நல்லது நடந்ததா, வேலைக்கு அமர்த்தப்பட்டவர் அவ்வேலைகளுக்கு தகுதியானவர்களா அல்லது பணம் கொடுத்து, பணம் எடுக்கவாண்டும் என்ற ரீதியில் அமர்த்தப்பட்டவர்களா என்றெல்லாம் யாருக்குத் தெரியும்?

சினிமா பாணியில் திடீர் ஆய்வுகள்: “லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது” என்ற கதைகளை அடுத்து இப்பொழுது, ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீரென்று ஆய்வு – எடையைப் பார்த்தார், அதைப் பார்த்தார், இதைப் பார்த்தார் என்றெல்லாம் செய்திகள்! என்ன இது “முதல்வன்” பாணியில் புறப்பட்டு விட்டனர்? உண்மையில் நியாயமாக, தர்மமாக வேலை செய்யும் தமிழக அரசாங்க ஊழியர்கள் மிகவும் குறைவு. ஆகவே, அத்தகைய நிலை மாற வேண்டுமானால், அமைச்சர் தினம்-தினம் சோதனை செய்யவேண்டும். அல்லது தூமைப்படுத்துவது வீட்டிலிருந்து வரவேண்டும் என்றால் முதலில் அவர், அவர் கட்சி, அவர் மக்கள், அவர் மாநிலம் அவ்வாறு சுத்தமாக இருக்கிறார்களா என்ரு பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ரெஷன்கடைகளின் ஊழல் மக்களுக்கு நன்றாகத் தெரிந்ததே.

ரேஷன்கடை ஊழல் பிரசித்திப் பெற்றதே: தினம்-தினம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கால்கடுக்க நின்று, இன்று என்ன கொடுப்பர் என்று கிடைப்பதை வாங்கி செல்லும் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்ன நடக்கிறது என்று. இன்று பாமாயில் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தால் பெண்கல் ஓடோடிச் சென்று வரிசையில் நிற்பர்! ஆனால் ஒரே மணிநேரத்தில் ‘ஸ்டாக்” தீர்ந்துவிட்டது என்று “பில்” போடுவது நிறுத்தப்படும்! ஓட்டொடி வந்த பெண்கள் பாவம், வெறும் பை-கார்டுகளுடன் ரேழன் கடை ஊழியர்களை சபித்துக் கொண்டு வீடு திரும்புவர்.

“முதல்வர்” ஸ்டாலின் திடீர் ஆய்வு: தஞ்சாவூர் ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்[1]. தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின், எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென ஆய்வுக்கு புறப்பட்டார். தஞ்சை அடுத்த மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள ரேஷன் கடை ஆய்வின் போது, அங்கிருந்த மக்கள், “ரேஷனில் பச்சரிசி வழங்க வேண்டும்; மற்ற பொருட்கள் தரமாக கிடைக்கின்றன’ என்றனர். “பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ஸ்டாலின் உறுதியளித்தார்.

“ஸ்டாலின், முதல்வர்’: பின், மாதாக்கோட்டை தூய மைக்கேல் உயர் நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளி சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளிடம், “என்னை யார் என்று தெரியுமா?’ என கேட்டதற்கு, “ஸ்டாலின், முதல்வர்’ என குழந்தைகள் கூறினர். [தான் முதல்வர் இல்லை என்று குழந்தைகளிடம் தெரியப் படுத்திக் கொண்டாரா?]. ஞாபகம் இருக்கிறதா[2]தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பேச்சு”!

பள்ளி முதல்வர் லூயிஸ், “இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும்; இங்குள்ள எட்டு ஆசிரியர்களை நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும்; பள்ளி அங்கீகாரத்தை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பதை மாற்றி, நிரந்தரமாக அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்றார். துணை முதல்வர், கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். மாதாக்கோட்டை பாலர் பள்ளியின் ஆய்வில், “பாலர் பள்ளிக்கு போதுமான இடவசதி இல்லை; புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்’ என, அவர்களின் கோரிக்கைக்கு, விரைவில் கட்டட வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அவர் வருகையை அறிந்து கூடிய பொதுமக்களிடம் இருந்தும், கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திடீர் ஆய்வின் போது, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

ஒருரூபாய் அரிசி ஊழலினால் ரேஷன் விநியோகம் படும்பாடு: “ஒருரூபாய் அரிசி திட்டம்”, ஏதோ எல்லா மக்களுக்கும் கொடுக்கிறமாதிரி லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, விளம்பரங்கள் செய்து ஆரம்பிக்கப்பட்டது! ஆனால் படங்களில் பார்த்ததோ பட்டுப்புடவைகள், நகைகள் அணிந்த பெண்கள் போஸ் கொடுத்துக் கொண்டு அரிசியை வாங்கிச் சென்றனர்! இருரூபாய் அர்சி பையில் கொடுக்க செலவிட்ட பணம் ரூ. 50க்கு மேல்! அத்தகைய கவர்ச்சிகர பிரச்சார விநியோகம் ஆரம்பித்தது. பிறகு எப்பொழுது பார்த்தாலும் மூட்டை முட்டைகளாக ரேஷன் அரிசி கடத்தல் – லாரிகளில், வேன்களில் ஏன் ரயில்களில்! விமானத்தில்தான் கடத்தவில்லை. அப்படியென்றால், அதில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும். தமக்கு வேண்டும் – அதாவது சாப்பாட்டிற்கு வேண்டும் என்று அரிசி கடத்துகிறார்களா அல்லது இதுவே ஒரு “கொள்ளையடுப்பு தந்திரமா?” ஆமாம், தமிநாடு-ஆந்திரா-கேரளா எல்லைகளில் கூலிக்கு ஆட்கள் நியமித்து அரிசி மூட்டைகளை கடத்தி, ஒரு இடத்தில் குவித்து, பிறகு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. போலி ரேஷன்கார்ட் மற்றும் அரிசிகடத்தல் இவற்றிற்குள்ள சம்பந்தமும்[3] வெட்டவெளிச்சமாகியது!

ரேஷனில் பொங்கல் பொருட்கள் விநியோகம்: கவர்ச்சிகர ரேஷன் அத்தோடு நின்றுவிடவில்லை. மக்களைத் திசைத் திருப்ப, பிரச்சார ரீதியில் ரூ.50ற்கு “பொங்கல் பொருட்கள்” விநியோகம் நடந்தது! என்ன பொங்கல் இந்தாண்டுதான் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றதா? 60 ஆண்டு கழகங்களின் ஆட்சிகளில் எப்போதொமே கொண்டாடப் படவில்லையா? இல்லை, எல்லாமே சிமா ஸிஐல் அரசியலுக்கு முன்னோடி, ஏர்கெனவே “தமிழ் புத்தாண்டை” மாற்றியாகிவிட்டது!  இனி மற்ற பண்டிகைகளின் மீது தாக்குதல் நடத்தவேண்டும். அப்பொழுதுதான் வியாபாரம் ஜாஸ்தியாகும், லாபங்கள் பெருகும். அதன்விளைவுதான் “தீபாவலி” பிரச்சாரம்[4]! அதுவும், ஸ்ரீலங்க-தமிழர்களும் செரெது கொண்டு அதிரடியாக இறங்கினர். அரிசிமூட்டை ஊழலைப் போல, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர். விவேகாநந்தரே இப்படி சொல்லிவிட்டார் என்றெல்லாம் கூசாமல் தமிழ்-அறிவுஜீவிகள் பிதற்றின. உண்மையை எடுத்துக் காட்டியதும் மௌனிகளாகின!

பருப்புவிலை ஏறியதும் பருப்பு விநியோகம்: எப்பொழுதும் இல்லாமல், பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன[5] [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  பருப்புவிலை ஏறியது. ரேழனுக்கு வந்தது! பிறகு ரேஷனிலும் எகிறியது விலை!

வியாபார சங்கங்களின் கூட்டுக் கொள்ளை: குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையை கடந்த ஐந்தாண்டுகளாக ஆராயும் ஒரு குழுவின்படி, எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு மேற்கண்ட முறைகள் அரசியல்-குடும்பங்களால் தாராளமாக செயல்படுத்தி வருகின்றன என்பதனை எடுத்துக் காட்டுகிறது. பருப்பு விற்பனையாளர்கள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் என நூறுக்கும் மேலாக புதிய சங்கங்கள் முளைத்துள்ளன [தமிழ் நாளிதழ்கள்/ பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் மூலம் கருணாநிதிக்கு நன்றி சொல்லியதை நினைவு கூரவும்].  இவற்றின் முக்கியமான வேலை என்றால் அங்கத்தினர்களிடமிருந்து வசூல் செய்து மொத்தமாக ஆளும் மற்ற அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு அதன்படியே செய்து வருகின்றனர். பிரதியுபகாரமாக அரசு அவர்களை எதிவும் கேட்காது, எந்த நடிவடிக்கை யும் எடுக்காது, மாறாக வரிசலுகைகள், புதியதாகக் கட்டப் படும் அரசு-வணிக-வளாகங்களில் இடம், குத்தகை முதலிய பலன்கள் கிடைக்கும். இவ்விதமாக வியாபார சங்கங்களும், தொழிலதிபர்களும் மற்றவர்களும் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், விலைவாசி ஏற்றம் அல்லது பண்டிகை நேரங்களில் விலையேற்றி அடிக்கும் கொள்ளையை யாரும் தடுக்க வருவதில்லை.

டன்டனாடன்! “தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு”! ஆஹா, இதைவிட தமிழகத்திற்கு வேறென்ன வேண்டும்? இவர் டிவி கொடுப்பார்! இவர் தந்தை – கருணாநிதி- டிவி கொடுக்க மக்கள் பணம் அள்ளிக் கொடுப்பார்; தயாநிதி மாறனோ எஸ்.சி.வி மூலம் கன்க்ஸென் கொடுப்பார், அல்லது சன் – டைரக்ட் கனெக்ஸன் கொடுப்பார்! சன் பிக்சர்ஸ் படங்கள் எடுக்கும், ஓளிபரப்பும், குடிமகன்கள் சினிமா பார்த்துகொண்டே காலம் கழிப்பர்! கோடிக்கணக்கான மக்களின் பணம் இப்படி விரயம் செய்வதை யாரும் கண்டுகொள்வதில்லையே? இதற்கும் அடிப்படை, ரேஷன் கார்டு!

ரேஷன்கார்ட் ஊழல்: தமிழகத்தில் போலி ரேஷன்கார்டுகள், அதிகாரிகள் சோதனை என்றெல்லாம் செய்திகள் வருகின்ரன. அரசு அதிகாஅரிகள் துணையின்றி எவ்வாறு அத்தகைய கார்டுகள் வழங்கமுடியும்?

 • தமிழகத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 290 போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு, அவை ரத்து செய்யப்பட்டுள்ளன[6].தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டறிய, வீடு, வீடாக ரேஷன் கார்டு தணிக்கை நடத்த, உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு[7]
 • விருதுநகர் மாவட்டத்தில் 77649 போலி ரேஷன் கார்டுகள்[8]
 • ராமநாதபுரம்: போலி ரேஷன் கார்டுகள் மற்றும் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள 20 பேர் கொண்ட[9]
 • 21 Sep 2009 திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.[10]
 • 13 Sep 2009 சேலத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அளவில் போலி ரேஷன் கார்டு தொடர்பான தணிக்கை நான்கு கட்டமாக ஆய்வு[11]
 • சென்னை : போலி ரேஷன் கார்டு வழங்க உடந்தையாக இருந்த, சென்னை ஆயிரம் விளக்கு, உதவி ஆணைய அலுவலக ஊழியர்கள் மூன்று பேர் தற்காலிக பணி[12]
 • சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் [13]
 • 19 Mar 2009 போலி ரேஷன் கார்டு ஆய்வு ஒத்திவைப்பு: தேர்தலை முன்னிட்டு
 • போலி ரேஷன் கார்டு ஆய்வில் நடந்த குளறுபடியால் பொதுமக்கள்[14]
 • சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் கார்டுகள்[15]
 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தணிக்கை மேற்கொண்டு அதிகாரிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போலி ரேஷன் கார்டுகள் குறித்து மேல்[16]
 • சிதம்பரம் பகுதியில் இதுவரை 100 போலி ரேஷன் கார்டுகள் இருப்பது[17]
 • போலி கார்டு பின்னணி அதிகாரிகள் ரேஷனில் துணிகர வசூல்வேட்டை. ஜூன் 06,2008,00:00 IST. சிவகங்கை: போலி ரேஷன் கார்டு கண்டு பிடிக்கப்பட்டால்[18]
 • போலி ரேஷன் கார்டு பதிவு : இணை ஆணையர் திடீர் ஆய்வு. பொது. 1.போலி ரேஷன் கார்டு ஆய்வு பணி : அரவக்குறிச்சியில் மெத்தனம்[19]
 • போலி ரேஷன் கார்டுகள் உலவினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் : உணவு போலி ரேஷன் கார்டுகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் இனி[20]

இவ்வாறு நீண்டுகொண்டே செல்கிறது! அதுமட்டுமல்லது, மற்ற வேடிக்கைகளும் உள்ளன:

·
ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி … போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் நோக்கத்துடன் தமிழகத்தில் அரைகுறையாக நடத்தப் பட்ட தணிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க[21]

·         ஐதராபாத்: ஆந்திராவில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் போலி ரேஷன் கார்டு கண்டுபிடிக்கப் பட்டுள் ளது[22]. …

ரேஷன்அரிசி கடத்தல்-போலிரேஷன்கார்டுகள்-அரசியல்வாதிகள் சம்பந்தம்: மேற்கண்ட மாதிரி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், கைதுகள் முதலியன பல உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன:

 • கடந்த ஆண்டில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கொண்டு வரப்பட்ட சில நாட்களில், ரேஷன் அரிசி கடத்தல் கட்டுக்கடங்காமல் போனது[23].
 • தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு மட்டும், 1.12 கோடி கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு 10.95 கோடிரூபாய்[24].
 • திண்டுக்கல்: கேரளாவிற்கு கடத்தவிருந்த 200 மூடை ரேஷன் அரிசியை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழநி அருகே லாரியுடன்[25]
 • தேவாரம்: தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தினமும் 10 டன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது[26]….
 • கோழித்தீவனம் போலி பில் படி ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்[27]. ஜூலை 22,2008,00:00 IST
 • ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்:விற்பனையாளர் உட்பட இருவர் கைது. நவம்பர் 08,2009,00:00 IST. ஏர்வாடி: ஏர்வாடியில் ரேஷன் அரிசி கடத்திய[28]
 • போலீசார் ஒத்துழைப்புடன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ஜோர்! அக்டோபர் 28,2009,00:00 IST[29]
 • தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : கண்டுகொள்ளாத ‘சிவில் சப்ளை’ ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை நம்பி இன்றும் பல குடும்பங்கள்[30]
 • மின்சார ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது[31]. இதை கண்டும் காணாமல் போலீசார் மற்றும் வருவாய்த்
 • ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரேஷன் கடையிலிருந்து 90 மூட்டை ரேஷன் அரிசி, 2 மூட்டை சர்க்கரை கடத்திய மினி லாரியை[32]
 • ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: எட்டு டன் சிக்கியது; 19 பேர் கைது. ஜூன் 21,2009,00:00 IST. கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் இருந்து ரயில்[33] இரண்டு ரூபாய் ரேஷன் அரிசியை, நான்கு ரூபாய்க்கு தருகின்றனர். அதிலும் ஒரு ரூபாயை அரசு குறைத்திருப்பதால், கடத்தல் பிசினஸில் லாபம்[34]
 • புதுச்சேரியிலிருந்து கேரளாவுக்கு 36 டன் ரேஷன் அரிசி கடத்தல். ஏப்ரல் 28,2008,00:00 IST. கள்ளக்குறிச்சி : புதுச்சேரியிலிருந்து[35] சில மாதங்களுக்கு முன் வரை, கோவை வழியாக, ரேஷன் அரிசி கடத்தல் அதிகம் நடந்தது. இதையடுத்து, 13 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, போலீசார்[36]
 • 210 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல். செப்டம்பர் 19,2008,00:00 IST. நெய்வேலி : கடத்தப்பட்ட 210 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார்[37], 29 Jun 2008
 • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் மினிடோர் வேன் மதுரை உணவு கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம்[38] 5 May 2008
 • இவர்கள் கடத்தி செல்லும் ரேஷன் அரிசியை குமுளியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் ரூ. 8.50 க்கு விற்பனை செய்கின்றனர்[39]. மணலால் மூடி ரேஷன் அரிசி கடத்தல். மே 07,2008,00:00 IST.
 • நாகர்கோவில் : மணலால் மூடி கடத்தப்பட்ட 100 மூடை[40]
 • 11 கோடி ரூபாய் ரேஷன் அரிசி கடத்தல் : ஜெயலலிதா புகார். மே 25,2008,00:00 IST. சென்னை : “தமிழகத்தில் தொடர்ந்து[41] காரைக்குடி : புதுவயல் அரிசி ஆலைக்கு 80 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்த டிரைவரை லாரியுடன் போலீசார் கைது செய்தனர்[42].

இவ்வாறாகவும் ஆயிரக்கணக்கான செய்திகள்! பிறகு என்னததன் தமிழகத்தில் நடக்கிறது?


[1] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14982

[2]http://dravidianatheism.wordpress.com/2009/10/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/

[3] 8 Sep 2008 ஒழிக்க முடியாத போலிகள்: அரிசிக் கடத்தலுக்கு மற்றொரு முக்கியக் காரணமாக இருப்பது போலி ரேஷன் கார்டுகள். தி.மு.க
www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=4564

[4] மிரட்டலா? [விடுதலை, தலையங்கம், 20-10-2009] http://www.viduthalai.com/

வேதபிரகாஷ், தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

, மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

[5] வேதபிரகாஷ், லஞ்சக்கைதுகள்: தூய்மைபடுத்தவா, பழிவாங்கவா, பிரசாரத்திற்காகவா?, மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

[6] www.dinamalar.com/new/Political_detail.asp?News_id=1194

[7] www.dinamalar.com/new/Incident_detail.asp?News_id=2509

[8] www.dinamalar.com/district_main.asp?ncat=Virudhunagar

[9] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=11295&cls…TN

[10] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=17200

[11] www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16960

[12] www.dinamalar.com/new/Incident_detail.asp?News_id=1586

[13] www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=13462

[14] www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=11801

[15] www.dinamalar.com/New/Political_detail.asp?News_id=13462

[16] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Krishnagiri…2/27/

[17] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Cuddalore…11/2/

[18] www.dinamalar.com/Tnspl_detail.asp?news_id=464&ncat…1

[19] www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Karur&showfrom

[20] www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=1194

[21] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=9130&cls

[22] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=11213

[23] www.dinamalar.com/Political_detail.asp?news_id=8087

[24] www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=811&ncat…1

[25] www.dinamalar.com/tnsplnewsdetail.asp?News_id=1423

[26] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4226

[27] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=3390

[28] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13867

[29] www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5436

[30] www.dinamalar.com/Tnsplnewsdetail.asp?News_id=4040&cls=row3

[31] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12284

[32] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8726&cls

[33] www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=10942

[34] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4564&cls

[35] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=1538&ncat

[36] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=12506

[37] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4828

[38] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2834&ncat

[39] www.dinamalar.com/Incident_detail.asp?news_id=1662&ncat

[40] www.dinamalar.com/New/Incident_detail.asp?News_id=1712

[41] www.dinamalar.com/Political_detail.asp?news_id=1639&ncat

[42] www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=5878&ncat