Archive for the ‘ஊழலுக்கு ஊழல்’ Category
நவம்பர் 1, 2017
ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)

பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.

10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.
முதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].
போலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன
வக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.
மோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.
ரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.

ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]: இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© வேதபிரகாஷ்
31-10-2017
[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM
[2]http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=609207
[3] Monday, 24 Jul, 5.46 am
https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/boli+sanrithazh+moolam+kootturavuthuraiyil+baniburibavar+meethu+nadavadikkai+edukkappaduma-newsid-70773309
[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்… கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]
[5] https://tamil.oneindia.com/news/tamilnadu/shanmugasundari-issued-bogus-law-certificate-within-three-months-224653-pg1.html
குறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அரிசியும் அரசியலும் ஊழலும், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஒழுக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 1, 2017
ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)

ஊழல் எதிர்ப்பும், தமிழகமும்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆணையம் விடுத்துள்ள அழைப்பில், “ஊழல் ஒழிப்பிலும், ஒருமைப்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டாடவும், மேலும் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு, ஊழல் ஒழிப்பு வாரமும் கொண்டாடி வருகிறது. அந்நிலையில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தால், எவ்வாறு அனைவரும் போலித்தனமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள் என்பதை கவனிக்கும் போது திடுக்கிட வைப்பதாக உள்ளது. லஞ்சம் கொடுக்காதவனே தமிழகத்திலில்லை என்ற நிலைதான் உள்ளது. லஞ்சம் கொடுக்காதே, வாங்காதே என்று எந்த திராவிடத் தலைவனையாவது முன்னிலைப் படுத்தி விளம்பரம் கொடுக்க முடியுமா? ஜாதி வாரியாக, மதரீதியில், குறிப்பிட்டத் தலைவர்களை மையப்படுத்தி, அரசு செலவில் லட்சங்களை செலவழித்து விளம்பரங்கள் கொடுத்து சாதிப்பது என்னவென்று தெரியவில்லை. நேர்மறையான விளம்பரம், கொள்கை பரப்பு மற்றும் பிரச்சாரம் முதலியவை இல்லாதது தான், தமிழகத்தை ஊழல் சீரழித்து விட்ட நிலையாக இருக்கிறது. இனி இப்பிரச்சினைப் பற்றி சில உதாரணங்களுடன் அலசப்படுகிறது. தமிழகத்து மக்கள் சிறப்படைய வேண்டுமானால், நிச்சயமாக அரசு அலுவலக ஊழல் ஒழிக்கப் பட வேண்டும்.

திராவிடத்துடன் கலந்து விட்ட ஊழலின் தாக்கம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் என்பது எல்லா துறைகளிலும் புறையோடி, அரித்து வருகிறது. ஆரம்பத்தில் கோதுமை ஊழல், அரிசி ஊழல் என்றெல்லாம் இருந்து, பிறகு ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்யும் கலை அறிந்த தலைமைப் பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர் முதல் அமைச்சர் வரை “காசு / லஞ்சம் கொடுக்க, காசு / லஞ்சம் வாங்கு” என்பது சித்தாந்தமாகி விட்டது. இதைப் பற்றியெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. எவ்வளவு கிடைக்கிறது, பிரித்துக் கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசுவதும் சகஜமாகி விட்டது. பிறப்பிலிருந்து, இறப்பு வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் அது உண்மையாகவே இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் காசு வாங்குவது, அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கு காசு கேட்பது-வாங்குவது-கொடுப்பது என்பதை இவர்கள் வழக்கமாக்கி விட்டனர். மேலும் காசு கொடுக்கவில்லை என்றால் கால தாமதம் செய்வது, வரும்போது ஆள் இல்லாமல் சென்று விடுவது, ஏதோ ரொம்ப பிசியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வது, அலைக்கழிப்பது, கொடுத்த விண்ணப்பங்கள் காணவில்லை என்பது, என்ற யுக்திகளில் ஈடுபடுவதும் அவர்களுக்கு கை வந்த கலையாகி விட்டது. கூட்டாக கொள்ளையடித்து பிழைத்துக் கொண்இருப்பதால், சக ஊழியர், உயர் அதிகாரி, தாசில்தார் என்ற எல்லா நிலைகளிலும், இத்தகைய போக்கு காணப்படுகிறது.

போலி ஜாதி சான்றிதழ் விற்பனை நவம்பர் 2017: வேலூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் அருகே பாலமதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பானுமதி தனது 10 வயது மகளின் ஜாதி சான்றிதழை பள்ளியில் அண்மையில் சமர்ப்பித்தார். இதன்[1] மீது சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர், அதை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது[2]. இதையடுத்து, பச்சையம்மாளிடம், வட்டாட்சியர் பாலாஜி நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகம் வந்த போது, பெண் ஒருவர் சான்றிதழ் பெற்றுத் தர உதவுவதாகக் கூறி பணம் பெற்று, சான்றிதழ் கொடுத்ததாகத் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நடத்திய விசாரணையில்,
- சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58),
- சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுமதி (36),
- சூரியகுளத்தைச் சேர்ந்த மேரி (32),
- வெட்டுவாணத்தைச் சேர்ந்த கவிதா,
- ஓல்டு டவுனைச் சேர்ந்த சரவணன் (45)
ஆகியோர் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாந்தி, சுமதி, மேரி ஆகியோரை ஊழியர்கள் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதாவது அவர்கள் அங்கு ரொம்பவே பிரபலமானவர்கள் என்று தெரிகிறது, புரோக்கர் என்றும் சொல்லலாம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, போலிச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கவிதா, சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனுஷ் வழக்கில் போலி சான்றிதழ் – அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. புகார்[3]: தனது மகன் என உரிமை கோரி கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு பராமரிப்பு செலவு கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்நிலையில், கதிரேசன், உயர் நீதிமன்ற கிளை பதிவாளரிடம் மனு அளித்தார். அதில், ‘மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம், உயர் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் தாக்கலான வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பில் தாக்கலான பிறப்பு, பள்ளி மாற்று மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்கள், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. தெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது திகைப்படைய செய்வதாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க’ கோரியுள்ளார்[4]. இது ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால், படித்தவன் – படிக்காதவன்; ஏழை – பணக்காரன்; அதிகாரம் உள்ளவன் – இல்லாதவன் என்ற நிலைளில் இப்பிரச்சினை தீவிரமாக, பொது மக்களின் வாழ்க்கையினை பல்வேறு வகைகளில் பாதித்து வருவதாலும், ஊழலை மேன்மேலும் பெருக்கி வளர்த்து வருவதாலும், இதனை உடனடியாகக் கட்டுப் படுத்தி, ஒழிக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்..

போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை பிப்ரவரி 2017: போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாம்பலம் வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ஆனந்த் மகாராஜன். இவரிடம் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஒரு இறப்புச் சான்றிதழ் அசோக்நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சில நாள்களுக்கு முன்பு வந்தது. அந்த இறப்புச் சான்றிதழ் குறித்து ஆனந்த் மகாராஜன் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்[5]. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது –
- சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42),
- ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (52)
ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்[6]. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: சுப்பிரமணி ஈக்காட்டுதாங்கலில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்[7]. அங்கேயே அவரும் ஆனந்தும் சேர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து இருக்கின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு ஆனந்தை அணுகியுள்ளார். அவரிடம், ஆனந்த் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இறப்புச் சான்றிதழை பெற்றது போன்று, தாங்கள் தயாரித்த போலி இறப்புச் சான்றிதழை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்தச் சான்றிதழை, அசோக் நகர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அந்த இறப்புச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. கைது செய்யப்பட்ட இருவரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து போலீஸார், சுமார் 100 போலி முத்திரைகள், 33 போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
31-10-2017

[1] தினமணி, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை: 3 பெண்கள் கைது, By DIN | Published on : 01st November 2017 12:31 AM |
[2] http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/nov/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2799193.html
[3] தி.இந்து, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நீதிமன்றத்தில் புகார், பதிவு செய்த நாள். செப்டம்பர்…04, 2017. 10.48; மாற்றம் செய்தது. செப்டப்மர். 04, 2017, 09. 11 IST;
[4] http://tamil.thehindu.com/tamilnadu/article19618717.ece
[5] தி.இந்து, போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி.23, 2017. 10.48; மாற்றம் செய்தது. ஜூன். 16, 2017. 12.50;
[6] தினமணி, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விற்பனை: இருவர் கைது, By DIN | Published on : 23rd February 2017 01:56 AM
[7] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9556722.ece
[8]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/23/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2654421.html
குறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் அரிசி ஊழல், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அரசு ஆஸ்பத்திரி, அரசு ஊழியர், அரிசியும் அரசியலும் ஊழலும், உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கருணாநிதி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 12, 2016
சுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்!

பணக்காரர்களுக்கு என்றால் சட்டம் வளையும் போலிருக்கிறது: இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடத்துவதற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்[1]. ரூ. 500 கோடி செலவில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங்களை எடுத்த விவகாரத்தில் சிபிஐயினால் 2011ல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015ல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், ஆனால், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற சரத்துடன் பெயிலில் வெளிவந்தார். இப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றுள்ளார்[3]. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[4]. ஏழைகளும், சாதாரண மக்களும் தான், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
சுரங்க மோசடியில் சிக்கியவர் மகளுக்கும், சுரங்க அதிபரின் மகனுக்கு திருமணம்: சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது[5]. இதனை “சுரங்கப் பொருத்தம்மென்பதா, மணப்பொருத்தம் என்பதா என்று தெரியவில்லை. நவம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன[6]. லோக் சபா உறுப்பினர் பி. ஶ்ரீராமுலு இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். ரெட்டிகள் முன்னர் இப்படி வசதியாக இல்லையா என்று தெரியவில்லை.
ரூ. 50,000/-க்கு திரைப்பட பாணியில் வீடியோ அழைப்பிதழ்: திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும், அதாவது ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.50,000/- ஆகும்[7]. ஏதோ அன்பளிப்பு பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனைத் திறந்தவுடன், சிறிய எல்.சி.டி டிவி வெடெலை செய்ய ஆரம்பிக்கின்றது. பெண்-மகன் பெற்றோர் மணமக்களை அறிமுகப்படுத்தி, “அதிதி தேவோ பவ” என்று சொல்லி பாட்டு பாடுகிறது. அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப் பட்டிருந்தது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்[8]. திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது[9]. இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று கேட்கவா முடியும்?
பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்![10]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[12]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[13]. நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[14]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள்.
ஊடகக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர உபசரிப்பு: ஊடகக்காரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் வந்திறங்கியதும், கார்கள் தயாராக இருக்கும்; அவரவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்; நன்றாக உனவு கொடுக்கப் படும். நிகழ்ச்சி பற்றி செய்திகளை வெளியிட இவ்வாறு அவர்கள் கவனிக்கப்படுவார்கள். இதைத்தவிர, அவர்களே தனியாக, புகைப்படங்கள், வீடியோ, விளக்கு அமைப்பு முதலியவற்றை பிரத்யேகமாக செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு, அங்கு எல்லோருக்கும் செம ஜாலிதான், எல்லாமே கிடைக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, ஊடகங்களும் தங்களது நன்றியை இப்பொழுதே தெரிவிக்க ஆரம்பித்து விட்டன. என் டி டிவி, அந்த அழைப்பிதழ் வீடியோவை வெளியிட்டுள்ளது[15]. “இந்தியா டிவியும்” போட்டிப் போட்டுக் கொண்டு விவரத்துடன் வெளியிட்டுள்ளது[16]. பிறகென்ன ஊழல்-வெங்காயம்-வெள்லப்பூண்டு எல்லாம்! ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா? இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா? தெரியவில்லை, ஆனால், அனைவற்றையும் மறந்து, ஆடம்பரமாக திருமணம் நடக்கப் போகிறது. இதில், எந்தெந்த பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்
12-11-2016
[1] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா ?, By: Karthikeyan, Published: Friday, November 11, 2016, 19:45 [IST]
[3] Reddy was arrested by the CBI in 2011 on charges of large-scale illegal mining and the Supreme Court granted him bail in January 2015, on the condition that he shall not visit Ballari. However, following a plea by Reddy, the SC allowed him to visit Ballari for 21 days from November 1 in connection with the rituals relating to his
daughter’s wedding.http://www.deccanherald.com/content/580621/four-day-star-nite-wedding.html
[4] http://tamil.oneindia.com/news/india/a-rs-500-crore-wedding-demonetise-that-266983.html
[5] http://tamil.oneindia.com/news/india/a-rs-500-crore-wedding-demonetise-that-266983.html
[6] Deecan Herald, Four-day star nite for wedding of Janardhana Reddy’s daughter, Saturday 12 November 2016, News updated at 5:40 PM IST.
[7] http://cinema.dinamalar.com/tamil-news/53007/cinema/Kollywood/Jannarthana-Reddy-house-function—Tamil-actress-dance.htm
[8] firstpost.com, Ex-Karnataka Janardhan Reddy’s daughter’s wedding invitate is a true multimedia experience, FP Staff Updated: Oct 20, 2016 09:58 IST.
[9] http://www.firstpost.com/politics/this-wedding-invitation-of-karnataka-ex-minister-janardhan-reddys-daughter-has-lcd-screen-3060928.html
[10] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்!
November 12, 2016, Chennai
[11]http://m.chennaionline.com/article/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=258297
[13] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.
[14] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.
[15] http://www.ndtv.com/karnataka-news/now-the-big-fat-wedding-invite-produced-by-ex-minister-janardhan-reddy-1476128
[16] http://www.indiatvnews.com/buzz/life-video-elaborate-wedding-invite-for-ex-minister-janardhan-reddy-s-daughter-has-lcd-screen-352952
குறிச்சொற்கள்:அழைப்பிதழ், ஆட்டம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஊழல்காரன், எடியூரப்பா, கொண்டாட்டம், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்த்தன் ரெட்டி, திருமணம், நடிகைகள், நலுங்கு, பாஜக, பாட்டம், பிஜேபி, பெல்லாரி, ரெட்டி, ரெட்டி சகோதரர்
அத்தாட்சி, அவமானம், இழுக்கு, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கருப்புப் பணம், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்தன் ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி, தனிமனித ஒழுக்கம், பாஜக, பிஜேபி, பெல்லாரி, மகன், ரூபாய், ரெட்டி, ரெட்டி சகோதரர், ரெட்டி சகோதரர்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 15, 2014
ஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன?

கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்
அதிரடி ஆம்ஆத்மிகட்சியும், பிரபலங்களும்: ஆம் ஆத்மி கட்சி ஏதோ கொள்கை, ஊழல்-எதிப்பு, தூய்மை, நியாயம், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைத்துள்ளது. அதனால், திடீரென்று ஏகபட்ட மௌசும் கூடியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக ஊடகங்களில் தினமும் ஏகப்பட்ட தயாரிக்கப் பட்ட, திரிக்கப் பட்ட கிசுகிசுக்கள், யூகங்கள் எல்லாம் ஏதோ “செய்திகள்” நாளிதழ்கள் தாராளமாக “செய்திகள்” போல வெளியிட்டு வருகின்றன. நடிகர்-நடிகைகள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் கட்சியில் சேரப்போகிறார்கள், சேர்ந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். விஷால் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[1]; நமீதா சேரப் போகிறார்[2], சேர்ந்து விட்டார்; விஜய் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[3]; இப்படி வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன.

TN AAP complaints, fraudulent accusations
தொடங்கிய சில நாட்களிலேயே கோஷ்டி சண்டை: டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 30,000 பேர் சேர்ந்து விட்டனர், 42,000 சேர்ந்து விட்டனர்[4], என்று அதிரடியாக செய்திகள். இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் 07-01-2014 அன்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார். தொடங்கிய சில நாட்களிலேயே இப்படி திராவிடக் கட்சிகளை மிஞ்சும் வகையில் கோஷ்டி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது போலும்!

TN AAP complaints, fraudulent accusations- expelled members
போட்டி பேட்டிகள் ஆரம்பித்து புகார்களில் முடிந்த கதை: இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது[5]: “இன்று காலை பத்திரிகையில் “எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்”, இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார். கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].
இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார்: அக்கட்சிக் காரர்கள் திடீரென்று ஒருவர் மீது ஒருவர் மோசடி புகார் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இரண்டு அணியினர் செயல்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அக்கட்சியில் ஒரு தரப்பினர் மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார்[7]. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடம் கிறிஸ்டினா நன்கொடை கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[8]. புகார்கள் குறித்து கேள்வி எழுப்புவர்களை கட்சியில் இருந்து கிறிஸ்டினா நீக்கி விடுவதாகவும் நிர்வாகிகள் கூறினார். கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வலியுறுத்தினர். வருகின்றனர்[9].

TN AAP complaints, fraudulent accusations.galore
பதிலுக்கு கிறிஸ்டீனா சாமி புகார்: இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்[10]. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்[11]. எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது. அமைந்தகரை பகுதியில் அலுவலம் திறக்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் கீழ்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாராயணன் உட்பட பலர், அமைந்தகரையில் முன்பு செயல்பட்ட அலுவலகத்தை மீண்டும் திறந்து, ஆம் ஆத்மி கட்சி என்று கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்[12]. இதற்காக பணமும் வசூலிக்கின்றனர். போஸ்டர்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றனர். தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை. அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர்[13]. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்[14]. எங்களது புகார் குறித்து விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்[15].
பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்: கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, பெயர் தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர் என்றால் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி போன்ற கட்சிகள் சுவரொட்ர்டிகள் கூட ஒட்டுவதற்கு பணம் இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அந்நிலையில் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கில் நிதியை அளிப்பர் என்று தெரியவில்லை. அவர்களது பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்:
- ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் [அந்த அளவிற்க்ய் டெக்னிகலாக வசூல் செய்கின்றனரா?].
- மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம் [அதாவது வசூலித்தது வரை விட்டுவிடுவோம் என்கின்றனர் போலும்].
- ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார் [யார் இந்த கிறிஸ்டினா சாமி, எப்படி உடனடியாக இரண்டு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி இருக்க முடியும், எப்படி பணம் வந்திருக்க முடியும் என்றெல்லாம் மர்மமாக இருக்கின்றன].
- கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் [அந்த அளவிற்கு கோடிகளைக் கொட்டியவர்கள் யார்?].
- அவர்கள் (நாராயணன் முதலியோர்) போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர் [கிறிஸ்டினா சாமி, இப்படி சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.].
வேதபிரகாஷ்
© 13-01-2014
[6] மாலைமலர், சென்னையில் தொடங்கிய தமிழக ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2:11 PM IST.
[8] தினகரன், கட்சி நிர்வாகிகள்புகாரால்ஆம்ஆத்மியிலும்கோஷ்டிபூசல்வெடித்தது?, மாற்றம் செய்த நேரம்:1/11/2014 5:08:01 PM
[9] தினத்தந்தி, ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : Jan 13 | 09:56 pm
[11] தினகரன், ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார், 14-01-2014
[15] மாலை மலர், ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 15, 8:49 AM IST.
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கோடி, டெலிகாம் ஊழல், நமீதா, பணம், பிரஷாந்த் பூஷண், புகார், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், முறைகேடு, வசூல், விஜய், விஷால், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அமைச்சர் அந்தஸ்து, அமைதி, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், நமீதா, பிரஷாந்த் பூஷண், மத்திய ஊழல் ஒழிப்பு, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வருமானம், விஜய், விஷால் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 13, 2012
பெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்!

பெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்!: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிகளில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

மத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்படி கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.

பெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).

அளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது அரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.

சி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.

சி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].
வேதபிரகாஷ்
13-05-2012
குறிச்சொற்கள்:அதிகாரி, இறக்குமதி, உயர் அதிகாரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏற்றுமதி, கமிஷன் பணம், கலால், சதவீதம், சுங்கம், சேவை வரி, டேரிப், பொருட்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், லஞ்சம், வரி விதிப்பு, வரி விலக்கு, வரியேய்ப்பு, வருமான வரி, வருமானம், வருவாய்துறை, வாட், விற்பனை வரி
அடையாளம், அத்தாட்சி, அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமரியாதை, அவமானம், ஆடிட்டர், ஆதாரம், இனாம், இழுக்கு, உணவு பங்கீடு, உபதேசம், உள்துறை, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், தனி சட்டம், தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், நன்னடத்தை, நாணயம், நிதி, நிதித்துறை, நேர்மை, மாமூல், ரெய்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
திசெம்பர் 16, 2011
சிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….
சிதம்பரத்திற்கு தெரிந்த ரகசியம் – வழக்கறிஞர் வெர்சஸ் உள்துறை அமைச்சர்: திரு அரவிந்த ரே என்ற தில்லி கமிஷனை மற்றும் முதன்மை காரியதரிசிக்கு எழுதப்பட்டுள்ள 09-05-2011 தேதியிட்ட கடிதத்தில், “இந்த விஷயம் உள்துறை விவகார அமைச்சகம் நன்றாக பரிசோதிக்கப்பட்டது. சட்ட விச்வகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தின் பரிந்துரை / ஆலோசனையின் படி, முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 மற்றும் 148/2002 முதலியவை மறு-பரிசீலினை செய்யப்பட்டு, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தேசித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உள்துறை அமைச்சர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்படுகிறது”, என்றுள்ளது.

வழக்கறிஞராக உதவும் சிதம்பரம்: திரு எஸ்.பி.குப்தா, சேர்மேன், சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களின் முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 (கன்னாட் பிலேஸ் போலீஸ் ஸ்டேஷன்) மற்றும் 148/2002 (டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷன்) மீதான மனுவின் பரிசீலினை என்பதப் பற்றி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சிதம்பரத்தின் “கிளையன்ட்” நேரிடையாகவே மனு செய்துள்ளார். உடனே அவரது பழைய வழக்கறிஞர், இப்பொழுது உள்துறை அமைச்சராக உதவி செய்ய முனைந்து விட்டார் என்ரு தான் உறுதியாகிறது.

எம்.பி எழுப்பியுள்ள கேள்விகள் – சிங் வெர்சஸ் சிங்: 10-12-2011 அன்று யஷ்வீர் சிங் என்ற எம்.பி, மன்மோஹன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழ் கண்ட வினாக்களை எழுப்ப்பியுள்ளார்:
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மேன், எஸ்.பி.குப்தா இவர்களுக்கிடையில் இருந்த / உள்ள சம்பந்தம் / தொயர்பு என்ன? [Was / Is there any connection between the Home Minister and S.P. Gupta of Sunair Hotels?]
- சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டபோது, உள்துறை அமைச்சகம் தவறான விஷங்களை / உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கொடுத்து கருத்து கேட்டதா? [While asking for the opinion of the Law Ministry, did the Home Ministry give wrong facts?]
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.குப்தாவிற்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினாரா? [Did the Home Minister represent the accused S.P. Gupta in litigation with VLS Finance Limited?]
- அப்படியென்றால், உள்துறை அமைச்சர் கடந்த எட்டு வருடங்களாக கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் வரை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள புலன் விசாரணை செய்யும், விசாரிக்கும், தண்டிக்கப் பரிந்துரை செய்த அதிகாரிகள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று தீர்மனிக்கிறாரா? , [Did the Home Ministry conclude in eight years that all the investigating and prosecuting officials in the trial court, high court and the Supreme Court were corrupt? ]
- அதெப்படி எஸ்.பி.குப்தா தமது மிரட்டல் கடிதங்களில் எழுதப்பட்டுள்ள அதே பாஷயை உபயோகித்து, உள்துறை அமைச்சகம் தில்லி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது? [What was the conspiracy hatched between S. P. Gupta and Home Minister……language used in their aggressive letters to Delhi Police, Delhu State, …………………..Ministry used the same langusge, which was previously used by the accused……………….].
வேதபிரகாஷ்
16-12-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆலோசகர், உள்துறை அமைச்சர், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கலால், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சட்டம், சிதம்பரத்தின் அவதாரங்கள், சுங்கம், நிதியமைச்சர், நீரா ராடியா, நேர்முக வரி, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மறைமுக வரி, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், வக்கீல், வரி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
அத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், இழுக்கு, உள்துறை, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், கனிமொழி, கபில், கபில் சிபல், கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கலாநிதி மாறன், கலால், கூட்டணி, கூட்டணி ஊழல், சட்ட நுணுக்கம், சட்டம், சி.பி.ஐ, சுங்கம், டாடா நிறுவனம், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நிதி, நிதித்துறை, நீதி, நீரா ராடியா, நேர்மை, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், போஃபோர்ஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராம் லீலா, ராம்தேவ், லஞ்சம், வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 31, 2011
கபில் சிபலுக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்: செக்காக அனுப்பி வைக்கப்பட்டது!
கபிலுக்கு ஒரு லட்சம் லஞ்சம் செக் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது: மத்திய மனித மேம்பாட்டு வள அமைச்சர், பேச்சில் பெலே கில்லாடி, ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிப்பார். அவரது மகன் – அகில் சிபலோ, தீவிரவாதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துபவர்[1] (நிர்வாண ஓவியர் ஹுஸைனுக்கும் வக்கீல் இந்த அகில் தான்). இந்நிலையில், ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் தாளாளராக / துணை-தாளாளராக[2], ஒருவருக்கு நியமனம் செய்ததற்கு, ராஞ்சியிலிருந்து ஓம் பிரகாஷ்[3] / உமேஷ்[4] என்பவரின் பெயரில் ரூ. ஒரு லட்சத்தை தில்லியிலுள்ள கனரா வங்கியில் பெறுவதற்கு வசதியாக செக் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செக் எண்.361296, ஆகஸ்ட் 26, 2011 தேதியிட்டது. அச்செக், ஒரு கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[5]. உண்மையில் அக்கடிதத்தில் தம்மை நியமனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இது வேடிக்கைக்கு செய்யப்பட்டதா அல்லது அத்துறையில் உள்ளவர்களுக்கு தூண்டில் போட மேற்கொண்ட முயற்சியா என்று தெரியவில்லை[6].
வேவு பார்த்தவருக்கே வேவு பார்த்த ஆசாமி: கபில் சிபல் ஒரு அழுத்தமான ஆள், சிரித்துக் கொண்டே மனத்தில் வஞ்சத்தை வைத்துள்ள பேர்வழி. இவ்விஷயத்தில் சிதம்பரத்தையும் மிஞ்சக்கூடியவர். சமீபத்தில் அன்னா ஹசாரே விஷயத்தில் அக்னிவேஷை ஒற்றரைப் போல உபயோகப் படுத்தியவர். அதாவது, அக்னிவேஷ், கபிலுக்கு போன் மூலம் நடப்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். பாபா ராம்தேவ் விஷயத்திலும், அக்னிவேஷ், சிபலுடன் பேசிக்கொண்டிருந்தார் என்பது நினைவு கூர்தல் வேண்டும். ஊழல் ஒழிப்பு மசோதா விஷயத்தில், அன்னா ஹசாரே குழுவிற்கு எதிராகக் கருத்துகளை கூறியுள்ளார்.
தப்பித்துக் கொள்ள போலீஸாரிடம் புகார் செய்துள்ள கபில்[7]: மற்ற விஷயங்களில் வீராப்பாக பேசும் கபில், இந்த விஷயத்தில் தன்னுடைய அந்தஸ்த்தையும் விடுத்து, போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். அதிலும் தன்னுடைய அலுவலக அதிகாரிகள் மூலம் தில்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. “ஆதாயத்தை பெறும் வகையில் தான் அந்த கடிதம் மற்றும் செக் அனுப்பி வைக்கப்பட்டுள்ள்ன. அமைச்சரகத்தில் இப்பிரச்சினை தீவிரமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது”, என்று அமைச்சரக தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி அமித் காரே கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்:அகில், அகில் சிபல், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஒரு லட்சம், கபில், கபில் சிபல், செக், செக் மூலம் லஞ்சம், ஜார்கண்ட், தாளாளர், பல்கலைக்கழகம், மாமூல், லஞ்சம், ஹுஸைன்
அகில், அரசு ஊழியர், ஊழலுக்கு ஊழல், ஊழல், கபில், கபில் சிபல், செக், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஓகஸ்ட் 31, 2011
லஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்!
வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].
ஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள்? மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா? லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.
எவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].
இங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான். |
இதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.
பணம் மாற்றம் எதற்காக? சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது. அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
மினி பாரும், மருந்துக் கடையும்! ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.
இப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்! |
அடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.
யாரந்த உத்தம்சந்த்? வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.
பெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன! |
அவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.
புண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா?
வேதபிரகாஷ்
31-08-2011
[7] Mr. P. Kishore – Managing Director – A first-generation entrepreneur and pioneer in building a business model around computer education at schools, Mr. Kishore has promoted IT-enabled education since 1987 and founded Everonn in 2000. Mr. Kishore is a visionary by nature with a passion to excel, a zeal he imparts to every Everonn employee. http://www.everonn.com/board_of_directors.html
[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.
[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.
குறிச்சொற்கள்:உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், எஜுகேஷனல், எவரான், எவ்ரான், கைது, கையூட்டு, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சிபிஐ, தரகர், தார்மீக மதிப்புகள், தார்மீகம், திரிபுவாதங்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், லஞ்சம் கொடுத்தவர், வருமான வரி, வாங்கியவர்
அமைதி, ஆடிட்டர், இழுக்கு, உந்து சக்தி, உபதேசம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஒழுக்கம், கற்பு, கவர், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், தாக்கீது, நடிப்பு, நன்னடத்தை, பங்கீடு, ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 15, 2011
நீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்!
ந
நீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.

பால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
மணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.
கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.
கனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.
சுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.
வேதபிரகாஷ்
15-04-2011
[2] Controversial corporate lobbyist Niira Radia in her statement recorded under Section 161 of the Criminal Procedure Code has linked Union Agriculture Minister Sharad Pawar to DB Realty but adds that she did not have any evidence to prove that Mr. Pawar or his family members had any stake in Swan Telecom. “I state that as per the general perception in Mumbai as well as outside, DB Realty is directly or indirectly controlled by Mr. Sharad Pawar and his family members,” Ms. Radia’s statement said.
http://www.hindu.com/2011/04/15/stories/2011041565401600.htm
[3] “I am not associated with Swan Telecom in any way. Neither had I recommended anybody for issuance of license. I deal with agriculture ministry and have nothing to do with other departments,” Pawar told HT on phone from Baramati. But Pawar acknowledged close family ties with KM Goenka, father of Vinod Goenka, who is a partner of Shahid Balwa, a director of DB Realty and a promoter of Swan Telecom.
http://www.hindustantimes.com/Pawar-denies-DB-Realty-link/Article1-685089.aspx
[4] Supriya is now the Lok Sabha MP from Baramati. Supriya and Kanimozhi’s long chats — in their leisure time, or even in Parliament’s Central Hall — have now acquired an ominous subtext, with their friendship now being seen in the context of the spectrum scam: specifically, the Baramati-based DB Realty’s money channel leading to Kalaignar TV.
http://expressbuzz.com/magazine/friends-in-need/253041.html
குறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 6, 2011
அண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்!
அண்ணதுரை என்றால், தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தெரியும் ஆனால், அண்ணா ஹஸாரே என்றால், எப்படித் தெரியும்? ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள்! அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில்! போதாகுறைக்கு, இன்றைய தம்பியின் மகளே அந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். இன்றைய ஊழலுக்கு பிரதம மந்திரி மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்திதான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதைப் பொறுக்காத, சோனியா கங்கிரஸ் தலைவர் ஒருவர், அண்ண ஹஸாரே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லியிருக்கிறார்[1].
மன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்[2]. உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
சமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
லோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது[3]. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்[4]. மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.
.
வேதபிரகாஷ்,
06-04-2011
குறிச்சொற்கள்:அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, உண்ணாவிரதம், காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சக்தி, சத்தியாகிரகம், சாகும் வரை, சாகும் வரை உண்ணாவிரதம், சாகும்வரை, சாத்வீகம், சாந்தம், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, மனித சக்தி
அடையாளம், அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, அறப்போர், ஆதாரம், உண்ணாவிரதம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சக்தி, சத்தியாகிரகம், தம்பி, தம்பிதுரை, பட்டுவாடா, மனித சக்தி, யுனிடெக், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, வினோபா பாவே, வைராக்யம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »