Archive for the ‘அவமரியாதை’ Category

பெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்!

மே 13, 2012

பெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்!

பெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்!: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிகளில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

மத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்படி கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.

பெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம்  உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).

அளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார்.  சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு  ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது அரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.

சி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.

சி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].

வேதபிரகாஷ்

13-05-2012


ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?

திசெம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை?

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].

ராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.

அப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.

கோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி? ராஜா குறிப்பாக, “எங்கப்பா? எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா?” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமாக, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. மனதில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.

நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.

வழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.

கருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].

சி.பி.., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே? இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே…
இந்த சோதனையை தி.மு..,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா? அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
ராஜாவிற்கு, சி.பி.., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே? 

அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ்தி.மு.., உறவு எப்படி உள்ளது? உங்களால் வெட்ட முடியாது[8].
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி? 

இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே? அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.

ராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.

நேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார்.  தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..


[5] தினமலர், சி.பி..,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:06 IST

மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:26 IST;  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149695